பத்தினிப் பெண்
பத்தினிப்பெண் (Pathini Penn) 1993 ஆம் ஆண்டு ஆர். சி. சக்தி இயக்கத்தில் வெளிவந்த தமிழ் நாடகத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் ரூபினி, லிவிங்ஸ்டன் முக்கிய வேடங்களிலும் நிழல்கள் ரவி, வி. கோபாலகிருஷ்ணன் துணை வேடங்களிலும் நடித்திருந்தனர்.[2] இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். இந்தியக் காவல் பணி அதிகாரி ஜி. திலகவதி எழுதிய இதே பெயரிலுள்ள புதினத்தின் தழுவலான இப்படம் 1993 சூன் மாதம் வெளியிடப்பட்டது.
பத்தினிப் பெண் | |
---|---|
இயக்கம் | ஆர். சி. சக்தி |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | ரூபினி லிவிங்ஸ்டன் நிழல்கள் ரவி வி. கோபாலகிருஷ்ணன் ஜனகராஜ் |
ஒளிப்பதிவு | விஸ்வம் நடராஜ் |
கலையகம் | பெஸ்ட் பிரண்ட்ஸ் கிரியேசன்ஸ் |
வெளியீடு | சூன் 25, 1993[1] |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகுபாடல்கள்
தொகுகவிஞர் புலமைப்பித்தன் வரிகளுக்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.[3]
- "பாண்டிய நாட்டுச் சீமை" - எஸ். பி. பாலசுப்பிரமணியம் , வாணி ஜெயராம்
- "உலகம் நம்ம வீடு" - வாணி ஜெயராம்
- "தொட்டில் ஒன்னு இல்லைனு"- எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
- "என்னம்மா வருத்தம்"- எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
விருதுகள்
தொகுஇப்படம் திரைப்படத்திற்கான தமிழக அரசின் திரைப்பட விருதை (இரண்டாம் பரிசு) வென்றது. ஆர். சி. சக்தி சிறந்த வசன எழுத்தாளருக்கான தமிழக அரசின் திரைப்பட விருதை வென்றார்.[4] ரூபினி சிறந்த நடிகைக்கான தமிழக அரசின் சிறப்பு திரைப்பட விருதை வென்றார். புலமைப்பித்தன் சிறந்த பாடலாசிரியருக்கான தமிழக அரசின் திரைப்பட விருதை வென்றார்.
வரவேற்பு
தொகுபத்தினி பென் 1993 சூன் 25 அன்று வெளியிடப்பட்டது. தி இந்தியன் எக்சுபிரசின் மாலினி மன்னத், "சக்தி உணர்ச்சிகரமான விடயத்தைக் கையாண்டது, கவனமாக பதிவுசெய்யப்பட்ட காட்சிகள், அவரது கடினமான உரையாடல்கள், நடிகர்களிடமிருந்து சிறந்த நடிப்பை பெற்றது ஆகியவற்றை மேற்கோள் காட்டி திரைப்படத்தைப் பாராட்டினார்.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Pathini Penn – Tamil Movies Database". Tamil Movies Database. பார்க்கப்பட்ட நாள் 24 December 2019.
- ↑ "Pathini Penn". Valai Tamil. பார்க்கப்பட்ட நாள் 24 December 2019.
- ↑ "Amaithi Padai / Pathini Penn / Kathal Viduthalai – Pyramid". Greenhives Audio. Archived from the original on 24 டிசம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 24 December 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ James, Anu (2015-02-23). "Kamal Haasan's Mentor Director RC Sakthi Dies at 76 [PHOTOS]". International Business Times. பார்க்கப்பட்ட நாள் 2019-12-24.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ Mannath, Malini (18 June 1993). "Though-provoking". The Indian Express: p. 6. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19930618&printsec=frontpage&hl=en.