பத்து பெரிங்கி
பத்து பெரிங்கி (ஆங்கிலம்: Batu Ferringhi; மலாய் Batu Ferringhi;) என்பது மலேசியா, பினாங்கு, வடகிழக்கு பினாங்கு தீவு மாவட்டத்தில்; பினாங்குத் தீவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.
பினாங்கு | |
வேறு மொழிகள் transcription(s) | |
• மலாய் | Batu Ferringhi |
• ஜாவி | باتو فيرريڠهي |
• சீனம் | 峇都丁宜 |
தீபகற்ப மலேசியாவில் பத்து பெரிங்கி அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 5°21′N 100°14′E / 5.350°N 100.233°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | பினாங்கு |
மாவட்டம் | வடகிழக்கு பினாங்கு தீவு |
தோற்றம் | 1794 |
அரசு | |
• நகராண்மை | பினாங்கு தீவு நகராண்மைக் கழகம் |
• மேயர் | இவ் துங் சியாங் |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 11100 |
தொலைபேசி எண் | +6048 |
போக்குவரத்துப் பதிவெண் | P |
இணையதளம் | www |
ஜார்ஜ் டவுன் நகர மையத்தில் இருந்து சுமார் 11 கி.மீ. (6.8 மைல்) வடமேற்கில் உள்ளது. உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகளுக்கு பினாங்கின் முதன்மையான கடற்கரை இடமாக விளங்குகிறது. மேகமூட்டம் இல்லாத நாளில், அந்தமான் கடல்; மற்றும் அண்டை மாநிலமான கெடாவில் அமைந்துள்ள ஜெராய் மலையின் அழகிய காட்சிகளைப் பார்க்கலாம்.
சுற்றுலாப் பயணிகளின் வருகையைக் கருத்தில் கொண்டு, 4 கி.மீ. (2.5 மைல்) நீளமுள்ள கடற்கரைகளில் பல பெரிய உயரமான தங்கும் விடுதிகள் கட்டப்பட்டு உள்ளன.
பொது
தொகுபத்து பெரிங்கி, அதன் இரவு சந்தைக்குப் பிரபலமானது. பல்வேறு வகையான வணிகப் பொருட்கள் சில்லறையாகவும் மொத்தமாகவும் இங்கு கிடைக்கின்றன. தவிர சாலையோர உணவுக் கடைகளும் இங்கு அதிகமாக உள்ளன. விருப்பப்பட்ட உணவுகளைத் தேர்வு செய்து பெற்றுக் கொள்ளலாம்.
பத்து பெரிங்கியில், 1592-ஆம் ஆண்டில் இருந்து மனிதக் குடியேற்றங்கள் நடைபெற்று வந்துள்ளன. ஜேம்ஸ் லான்காஸ்டர் (James Lancaster) எனும் ஓர் ஆங்கிலேயர், அந்த ஆண்டில் பினாங்கு தீவிற்கு வந்து இருக்கிறார். அவர்தான் பினாங்கிற்கு வந்த முதல் ஐரோப்பியர்.
பினாங்கிற்கு வந்த முதல் ஐரோப்பியர்
தொகுஅவர் பயன்படுத்திய கப்பலின் பெயர் எட்வர்ட் போனாவென்சர் (Edward Bonaventure). அவரும் அவரின் குழுவினரும் நான்கு மாதங்களுக்குப் பினாங்குத் தீவில் தங்கி, அவர்கள் சந்தித்த ஒவ்வொரு கப்பலையும் கொள்ளை அடித்து இருக்கிறார்கள். வரலாற்றுப் பதிவுகள் உள்ளன.[1][2])[3]
1970-களில் பினாங்கில் நகரமயமாக்கல் தொடங்கும் வரையில், பத்து பெரிங்கி ஓர் அமைதியான கிராமமாகவே பயணித்து வந்துள்ளது. இருப்பினும், அண்மையில் ஒரு பாதிப்பு.
பத்து பெரிங்கி, பினாங்குத் தீவின் வடக்குக் கடற்கரையில் அமைந்து இருப்பதால், 2004-ஆம் ஆண்டு இந்தியப் பெருங்கடல் சுனாமியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. 52 மனித உயிர் இழப்புகள்.[4]
சுற்றுலா தலங்கள்
தொகு- மியாமி கடற்கரை (Miami Beach)
- காதலர்களின் தீவு (Lovers' Isle)
- பத்து பெரிங்கி இரவுச் சந்தை (Batu Ferringhi Night Market)
- ஹார்ட் ராக் ஹோட்டல் (Hard Rock Hotel Penang)
- பினாங்கு பட்டாம்பூச்சி பண்ணை (Penang Butterfly Farm)
பத்து பெரிங்கி காட்சியகம்
தொகு-
பத்து பெரிங்கியில் சூரிய மறைவு
-
பத்து பெரிங்கி காதலர்களின் தீவு
-
பத்து பெரிங்கி கடற்கரை
-
கோல்டன் சாண்ட்ஸ் தங்கும் விடுதி
-
மற்றும் ஒரு கடற்கரைக் காட்சி
மேற்கோள்கள்
தொகு- ↑ Staff, ExpatGo (2014-06-24). "Sailing Around Penang with Three Expats in a Small Boat" (in en-US). ExpatGo. http://www.expatgo.com/my/2014/06/24/sailing-around-penang-with-three-expats-in-a-small-boat/.
- ↑ East India Company (1897). List of factory records of the late East India Company : preserved in the Record Department of the India Office, London. p. iv.
- ↑ Herbert, William (1836). The History of the Twelve Great Livery Companies of London. London: self-published. pp. 361–363.
- ↑ "Boxing Day tsunami, 10 years on: 'The water came – my family is gone'". Telegraph.co.uk. https://www.telegraph.co.uk/news/worldnews/asia/indonesia/11310578/Boxing-Day-tsunami-10-years-on-The-water-came-my-family-is-gone.html.