பத்மாவதி ( மத்தியப் பிரதேசம் )
பத்மாவதி (Padmavati) என்பது மத்தியப் பிரதேசத்தில் உள்ள நவீன பவாயாவுடன் அடையாளம் காணப்பட்ட ஒரு பண்டைய இந்திய நகரமாகும். இது எட்டாம் நூற்றாண்டின் சமசுகிருத மொழி நாடகங்கள் மற்றும் கவிதைகளால் நன்கறியப்பட்ட அறிஞரான பவபூதியின் மாலதிமாதவன் (மாலதி – மாதவனின் காதல் கதை)[1] பாணபட்டரின் ஹர்ஷசரிதம்,[2] போஜ மன்னனின் சரசுவதிகண்டபாரணம் போன்ற பல சமசுகிருத நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாரா மற்றும் சிந்து நதிகளுக்கிடையில் அமைந்துள்ள சிகரங்கள் மற்றும் வாயில்கள் கொண்ட உயரமான மாளிகைகள் மற்றும் கோயில்கள் கொண்ட நகரத்தை பவபூதி விவரிக்கிறார்.
பத்மாவதி (பவாயா) | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 25°46′N 78°15′E / 25.77°N 78.25°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
மாவட்டம் | குவாலியர் |
ஏற்றம் | 305 m (1,001 ft) |
மொழிகள் | |
• அலுவல் | இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
கஜுராஹோவின் கொக்கலா கிரகபதி கல்வெட்டு போன்ற கல்வெட்டுகளிலும் இது குறிப்பிடப்பட்டுள்ளது. [3] இந்நகரில் பலம் வாய்ந்த குதிரைகள் ஓடுவதால் புழுதி எழுந்ததாகவும், உயரமான மாளிகைகள் வரிசையாக இருந்ததாகவும் கல்வெட்டு குறிப்பிடுகிறது.[4]
அடையாளம்
தொகுஅலெக்சாண்டர் கன்னிங்காம் பத்மாவதியை குவாலியர் அருகே தற்போதைய நார்வாருடன் அடையாளம் காட்டினார். [5] எம்.பி கார்டே 1924-25, 1933-34 மற்றும் 1941 இல் பவாயாவில் அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டார். அவர் பவாயாவை பண்டைய பத்மாவதியுடன் அடையாளப்படுத்துகிறார். கன்னிங்காமின் நார்வாருடனான அடையாளத்தை நிராகரித்தார். [6] [7] கி.பி 210-340 க்கு இடைப்பட்ட காலகட்டம் கொண்ட பல நாக மன்னர்களின் நாணயங்கள் பவாயாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பழங்காலப் பொருட்கள்
தொகுபவாயாவில் கிடைத்த பழங்காலப் பொருட்களில் இயட்சனான மணிபத்ரனின் உருவமும் உள்ளது. [8] இது சிவனந்தி மன்னனின் நான்காம் ஆட்சியாண்டில் நிறுவப்பட்டதாகவும், கோஸ்தர்கள் அல்லது வணிகர்களால் வழிபட்டதாகவும் குறிப்பிடும் கல்வெட்டும் உள்ளது.
இதனையும் பார்க்கவும்
தொகுசான்றுகள்
தொகு- ↑ Bhavabhūti: His Date, Life, and Works By V. V. Mirashi, p. 74, The History of Padmavati
- ↑ Rise And Fall Of The Imperial Guptas, Ashvini Agrawal, Motilal Banarsidass Publ., Jan 1, 1989 p. 54
- ↑ Khajuraho, Kanhaiyalal Agrawal, Macmillan India, 1980 (in Hindi)
- ↑ Padmavati Purval Digambar Jain Jati ka Udbhav aur Vikas, Ramjit Jain, Pragatishil Padmavati Purval Digambar Jain Sangathan Panjikrut, 2005, p. 15
- ↑ Cunningham, Alexander (1872). Four Reports Made During the Years 1862-63-64-65 (Vol II). Archaeological Survey of India. New Delhi.
- ↑ INDIAN ARCHAEOLOGY 1955-56 EDITED BY A. GHOSH, Director General of Archaeology in India, DEPARTMENT OF ARCHAEOLOGY, GOVERNMENT OF INDIA, NEW DELHI, 1956.
- ↑ Costumes & Ornaments As Depicted in the Early Sculpture of Gwalior Museum By Sulochana Ayyar, p. 20-21
- ↑ Jaina-Rupa-Mandana, Volume 1, Umakant P. Shah, 1987, Page 205
வெளிப்புற ஆதாரங்கள்
தொகு- Pawaya – Glamour of the Ancient Padmavati, http://puratattva.in/2011/07/11/pawaya-glamour-of-the-ancient-padmavati-159.html பரணிடப்பட்டது 2014-05-29 at the வந்தவழி இயந்திரம்