பன்காலா (Panhala) என்பது ஒரு நகரமும் ஒரு மலை வாழிடமும் ஆகும். (கடல் மட்டத்திலிருந்து 3177 அடி) இது இந்திய மாநிலமான மகாராட்டிராவில் கோல்காப்பூர் மாவட்டத்தில் கோல்காப்பூருக்கு வடமேற்கே 18 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மேலும் நகராட்சி மன்றமாக இருப்பதால் நகரம் வேகமாக வளர்ந்து வருகிறது. இங்குள்ள முக்கிய வரலாற்று ஈர்ப்பு பன்காலா கோட்டையாகும். கோட்டையில் பரவியுள்ள இந்த நகரம் கீழே உள்ள பள்ளத்தாக்கின் பரந்த காட்சியைக் காட்டுகிறது. இங்கு மேலும், பல ஆர்வமுள்ள இடங்களும் உள்ளன.

பன்காலா
நகரம்
பன்காலாவின் குளம்
பன்காலாவின் குளம்
பன்காலா is located in மகாராட்டிரம்
பன்காலா
பன்காலா
ஆள்கூறுகள்: 16°49′N 74°07′E / 16.82°N 74.12°E / 16.82; 74.12
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்கோல்காப்பூர்
ஏற்றம்754 m (2,474 ft)
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்3,450
மொழி
 • அலுவல்மராத்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
வாகனப் பதிவுஎம்ஹெச்-09

வரலாறு தொகு

பன்காலாவின் வரலாறு மராட்டிய பேரரசின் வரலாற்றுடனும், அதன் நிறுவனர் சத்ரபதி சிவாஜியுடனும் நெருக்கமாக தொடர்புடையது. சத்ரபதி சிவாஜி தனது குழந்தை பருவத்தில் தனது வீடுகளைத் தவிர 500 நாட்களுக்கு மேல் கழித்த ஒரே கோட்டை இதுவாகும். இது 1782 வரை மராத்தா மாநிலத் தலைநகராக இருந்தது. 1827இல் இது பிரித்தானியப் பேரரசின் ஒரு பகுதியாக மாறியது.

கோட்டையினுள் மற்றொரு சிறிய கோட்டை ஒன்று உள்ளது. படையினரை குணப்படுத்த நெய்யுடன் கிணறுகள் நிரம்பியிருந்ததாகக் கூறப்படுகிறது. பிரபல கவிஞர் மொரோபந்த் இங்கே தங்கினார். அருகிலேயே சம்பாஜி கோயில், சோமேசுவர் கோயில்,தீன் தர்வாசா, மற்றும் ராஜ் திண்டி, சஜ்ஜா கோதி, அம்பாபாய் கோயில் ஆகியவை உள்ளன. இங்கு சிவாஜி போர்களுக்குச் செல்வதற்கு முன்பு ஆசீர்வாதம் பெற்றுச் சென்றார். சிவாஜியின் அமைச்சரும், படைத்தலைவருமான பாஜி பிரபு தேஷ்பாண்டே போரின் போது மன்னர் சிவாஜியை, எதிரிகளிடமிருந்து பன்காலா கோட்டையிலிருந்து காப்பாற்றி, தனது இன்னுயிரை துறந்தார்.[1][2]

பராசரர் குகைகள் தொகு

பன்காலா பாரம்பரியமாக மகரிஷி பராசரரின் இல்லமாக கருதப்பட்டது. நவீன (1730) தொகுப்பான கார்வீர் அல்லது கோலாப்பூர் புராணம், பன்காலாவை பன்னகலே (பாம்புகளின் வீடு) என்று குறிப்பிடுகிறது. பழைய கல்வெட்டுகளில் இதன் பெயர் பிரன்லக் மற்றும் பத்மனல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பராசரர் முனிவர் வாழ்ந்த குகைகளாக இவை இருக்க வேண்டும். 18 ஆம் நூற்றாண்டின் மராத்தி கவிஞரான மோரோபந்த் தனது பெரும்பாலான படைப்புகளை இந்த குகைகளில் எழுதினார். மோரோபந்தின் பிறப்பிடமாகும். [3] இந்த குகைகள் கார்விர் புராணத்தில் தீர்த்தம் (புனித நீர்) என்று குறிப்பிடப்பட்டுள்ளன. [4]

நிலவியல் தொகு

பன்காலா 16 ° 49′12 ″ வடக்கிலும் 74 ° 7′12 ″ கிழக்கிலும் அமைந்துள்ளது . [5] இதன் சராசரி உயரம் 754 மீட்டர் (2473 அடி). பன்காலா தொடர் வண்டி மற்றும் பேருந்து வழியாக கோலாப்பூர் மற்றும் சாங்லியுடன் இணைக்கப்பட்டுள்ளது. கோலாப்பூர் சுமார் 20 கி.மீ தூரத்திலும், சாங்லி 55 கி.மீ தூரத்திலும் உள்ளது. கோலாப்பூர் சத்ரபதி சாகாஜி மகராஜ் தொடர்வண்டி முனையம் 20 கி.மீ தூரத்தில் உள்ளது. மீரஜ் 55 கி.மீ. தொலைவில் உள்ளது.

புள்ளிவிவரங்கள் தொகு

2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்புப்படி]],[6] பன்காலாவில் ஆண்கள் 57% மற்றும் பெண்கள் 43% என 3450 பேர் இருக்கின்றனர். நகரின் சராசரி கல்வியறிவு விகிதம் 83% ஆகும். இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகமாகும்: ஆண் கல்வியறிவு 88%. மக்கள் தொகையில் 10% 6 வயதுக்குட்பட்டவர்கள்.

பன்காலா தாவரவியல் பூங்கா தொகு

பன்காலா நகராட்சி மன்றம், வனத்துறை மற்றும் சமூக வனவியல் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக 2.56 ஹெக்டேர் பரப்பளவில் ஒன்று தாவரங்களின் தோட்டம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு பூக்கும் தாவரங்களில் 3000க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. நடப்பட்ட இனங்களில் மரங்கள் (158 இனங்கள்), புதர்கள் (87 இனங்கள்), புல் (7 இனங்கள்), மூலிகைகள் (19 இனங்கள்), மூங்கில் (6 இனங்கள்), மல்லிகை (3 இனங்கள்) போன்றவை. இந்த செயல்பாடு மகாராட்டிராவில் ஒரு தனித்துவமான செயல்பாடாகும்.

மேற்கோள்கள் தொகு

  1. Kantak, M. R. (1978). "The Political Role of Different Hindu Castes and Communities in Maharashtra in the Foundation of the Shivaji's Swarajya". Bulletin of the Deccan College Research Institute 38 (1): 46. 
  2. Balkrishna Govind Gokhale (1988). Poona in the eighteenth century: an urban history. Oxford University Press. பக். 112. ""The early great hero of the CKP community was Baji Prabhu Deshpande, who sacrificed his own life in 1660 to enable Shivaji to escape the Mughals at Vishalgad."" 
  3. Gunaji (2010). Offbeat Tracks in Maharashtra. Popular Prakashan. பக். 30–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7991-578-3. https://books.google.com/books?id=KHA9SzLMj3EC&pg=PA30&dq=mahalaxmi+kolhapur&hl=en&sa=X&ei=l9GpUam-M8ilkQXMwYDYAg&ved=0CFMQ6AEwBg#v=onepage&q=mahalaxmi%20kolhapur&f=false. பார்த்த நாள்: 1 June 2013. 
  4. Gazetteer of the Bombay Presidency. Govt Central Press. 1866. பக். 314–315. https://archive.org/details/gazetteerbombay19enthgoog. பார்த்த நாள்: 14 March 2009. 
  5. Falling Rain Genomics, Inc - Panhala
  6. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
பன்காலா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பன்காலா&oldid=3219696" இலிருந்து மீள்விக்கப்பட்டது