Bseshadri
பத்ரி சேஷாத்ரி. (பிறப்பு: ஜூன் 30, 1970; கும்பகோணம்) தமிழ் பதிப்பாளர், எழுத்தாளர் ஆவார்.
வாழ்க்கைக் குறிப்பு
தொகுநாகப்பட்டினத்தில் தன் பள்ளிப்படிப்பை முடித்த இவர், 1991 ஆம் ஆண்டில் சென்னை ஐஐடியில் இயந்திரவியலில் இளநிலைப் பட்டமும் 1996 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் கோர்னெல் பல்கலைக்கழகத்தில் அதே துறையில் முனைவர் பட்டமும் பெற்றவர். கிரிக்கின்போ என்ற கிரிக்கெட் விளையாட்டுக்கான இணையத்தள தகவல் நிறுவனத்தை உருவாக்கிய முன்னோடிகளில் ஒருவர். 2004 ஆம் ஆண்டில் நியூ ஒரைசன் மீடியா என்ற தமிழ்ப் புத்தகப் பதிப்பு நிறுவனத்தை உருவாக்கி, தற்போது அதன் பதிப்பாசிரியராகவும் பதிப்பாளராகவும் இருக்கிறார்.
சிறுவர்களுக்காகச் சில அறிவியல் புத்தகங்களை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ள இவர், சில ஆங்கிலப் புத்தகங்களைத் தமிழில் மொழிபெயர்த்தும் இருக்கிறார். அம்ருதா பத்திரிகையில் தொடர்ந்து அறிவியல், கணிதம் ஆகிய துறைகளில் கட்டுரைகள் எழுதிவருகிறார். புதிய தலைமுறை தொலைக்காட்சியில் அரசியல், சமூகம், பொருளாதாரம் தொடர்பான நண்பேன்டா என்ற வாராந்திர விவாத நிகழ்ச்சியில் பங்கெடுக்கிறார்.
படைப்புகள்
தொகுதமிழ்ப் புத்தகங்கள்
தொகு- உலகம் எப்படி தோன்றியது?
- உயிர்கள் எப்படி தோன்றின?
- நான் எஞ்சினியர் ஆவேன்
- கணித மேதை ராமானுஜன்
- ஐன்ஸ்டைன்
- 123: இந்தியா - அமெரிக்கா அணு சக்தி ஒப்பந்தம்
- ஸ்பெக்ட்ரம் சர்ச்சை
மொழிபெயர்ப்புப் புத்தகங்கள்
தொகு- கேண்டீட் (பிரெஞ்சில் வோல்ட்டயர் எழுதிய Candide, ஆங்கிலம் வழியாக)
- ஒரு மோதிரம் இரு கொலைகள் (ஆர்தர் கொனன் டொயில் எழுதிய ஷெர்லாக் ஹோம்ஸ் அறிமுகமாகும் A Study in Scarlet)
- ஒரு பைசா கூடாமல் ஒரு பைசா குறையாமல் (ஜெஃப்ரி ஆர்ச்சர் எழுதிய Not a Penny More, Not a Penny Less)
- இலங்கை இறுதி யுத்தம் (நித்தின் கோகலே எழுதிய Sri Lanka: From War to Peace)
ஆங்கிலப் புத்தகங்கள்
தொகு- The Universe
- Life