ஏற்காடு
வாருங்கள்!
வாருங்கள், ஏற்காடு, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
வருக
தொகுநன்றி. ஏற்காட்டைப் பற்றி எழுத நிறைய தகவல்கள் உள்ளன. அடிக்கடி பகிர்ந்து கொள்கிறேன். நான் ஆங்கில விக்கி பீடியாவை நான் அதிகம் உபயோகிப்பது உண்டு. தமிழில் எழுத வேண்டும் என்று நீண்ட நாள் அவா. இதோ தொடங்கி விட்டேன். இன்று கூட "பைசன்" என்று அழைக்கப்படும் காட்டு எருமைகளைப் பற்றி எழுதவுள்ளேன். இராசலட்சுமி
வணக்கம், இராசலட்சுமி. ஏற்காட்டைப் பற்றிய உங்கள் பயனர் பக்கக் குறிப்பே நீங்கள் வாழ்க்கையை நோக்கும் விதத்தை அழகாக எடுத்துரைக்கிறது. உங்களின் பங்களிப்புகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். தமிழ் விக்கிப்பீடியா உங்களுக்கு எப்படி அறிமுகமானது, எது உங்களை இங்கு எழுதத் தூண்டுகிறது என்று தெரிவித்தால் உங்களைப் போல் இன்னும் பலரை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. --இரவி (பேச்சு) 17:36, 15 சூன் 2013 (UTC)
ஏற்காடு பைசன்
தொகுவணக்கம், ஏற்காடு பைசன் பற்றிய உங்கள் கட்டுரை விக்கிப்பீடியா போன்ற கலைக்களஞ்சியங்களுக்கு உகந்ததல்ல என்ற காரணத்தால் நீக்கப்பட்டுள்ளது. உங்கள் கட்டுரை வலைப்பதிவுக் கட்டுரை போல உங்கள் அனுபவங்களைக் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது. விக்கிப்பீடியா கட்டுரைகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை அறிய மேலேயுள்ள உதவிப்பக்கங்களை அணுகலாம். பைசன் பற்றிய கட்டுரை ஒன்று விக்கிப்பீடியாவில் உள்ளது. அக்கட்டுரையில் ஏற்காடு பைசனைப் பற்றிய குறிப்பைத் தரலாம். நன்றி.--Kanags \உரையாடுக 08:17, 18 சூன் 2013 (UTC)