வாருங்கள், கீதாசாம்பசிவம்!

வாருங்கள் கீதாசாம்பசிவம், உங்களை வரவேற்கிறோம் ! :D
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

வருக! --செல்வா 03:32, 27 ஜூலை 2009 (UTC)

தேன்சிட்டு

தொகு
  • விக்கிப்பீடியாவில் பங்களிப்பைத் துவங்கியது குறித்து மகிழ்ச்சி! தேன்சிட்டு பற்றி நீங்கள் எழுதியதைக் கண்டேன். நான் வசிக்கும் இடத்திலும் தற்போது கருப்புத் தேன்சிட்டு அதிகளவில் ஒலி எழுப்பியவாறு உள்ளது. (’என்னைப் பற்றி எழுது! எழுது!’ என்று கூறுவது போல் இருக்கும்!) அருமையானதொரு குருவியைப் பற்றி ஆர்வமாக எழுதியுள்ளீர்கள். மென்மேலும் பல குருவி/பறவைகளைப் பற்றி எழுத வேண்டுகிறேன்.
  • இருப்பினும், உங்கள் எழுத்தைப் பற்றிய குறையாக இதை எடுத்துக்கொள்ள வேண்டாம். உங்கள் எழுத்து-நடை சற்று கவித்துவமாக உள்ளது -- கலைக்களஞ்சியத்திற்குரிய நடையில், கட்டுரையை மேற்கோள்களுடன் வடித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். நீங்கள் எழுதிய கட்டுரைகளில் சிற்சில மாற்றங்கள் செய்தாலே அவை சிறப்புற விளங்கும். பரிதிமதி 10:20 ஆகஸ்ட் 16 2009 [UTC]

நேற்று நான் கொடுத்த ஞானமலை, மற்றும் இரண்டு கட்டுரைகள் ஏற்றுக் கொள்ளப் பட்டதா என்பதை எப்படி அறிவது?? தொகு தத்தலை அமுக்கித் தொகுத்தால் சரியாகப் போவதில்லை. எழுத்து நடையை மாற்ற முயல்கிறேன். நன்றி பரிதிமதி உங்கள் ஆலோசனைக்கு. மேலும் பக்கத்தைச் சேமித்தால் போதுமா? அல்லது விடு அமுக்க வேண்டுமா என்பதும் புரியவில்லை. இப்போதைக்குப் பக்கத்தைச் சேமித்து வைக்கிறேன்.

ஞானமலை" அமுக்கிப் பாரத்தேன். கட்டுரையைச் செம்மைப் படுத்த வேண்டும் என்று சொல்லி இருக்கின்றனர். இன்னும் என்ன தேவை என்பது புரியவில்லை. கட்டுரை சாதாரண நடையிலேயே கொடுத்திருக்கிறேன். வேண்டிய மாற்றங்கள் என்ன என்பது புரியவில்லை.

புதுப்பயனர் பக்கத்தில் என்னுடைய பயனர் பேச்சும், பயனர் குறிப்பும் இடம்பெறவில்லை. அதற்கு என்ன செய்யவேண்டும்??

கேள்விகளுக்கான விடை

தொகு

கீதா அவர்களே, ஞானமலை என்னும் உங்கள் கட்டுரை பதிவாகி உள்ளது.

  • உங்கள் பயனர் பக்கத்திலும் நீங்கள் இட்ட குறிப்புகள் பதிவாகி உள்ளனவே (உங்கள் பயனர் பக்கத்தைப் பாருங்கள்!).
  • எக்கட்டுரையையும் யாரும் "ஏற்பது" என்பதெல்லாம் ஏதும் இல்லை. நீங்களே கட்டுரைகளை பதிவேற்றுகின்றீர்கள். ஆனால் தேவை என்று நினைக்கும் திருத்தங்கள் செய்யப்பெற்று கட்டுரை அளவில் வளரும் அல்லது சுருங்கும், பொதுவாக மேன்மையுறும். அதுவே நோக்கம்.
  • தமிழ் விக்கிப்பீடியாவின் முதல் பக்கத்தில் "விக்கிப்பீடியாவிற்கு வருக !" என்று கொட்டை எழுத்துக்களில் உள்ள வரவேற்புப் பட்டையின் கீழே சிறிய எழுத்துக்ளிலே கட்டுரைகள் :அகர வரிசை - துறை வரிசை - புதியன என்று ஒரு வரி இருப்பதைப் பார்க்கலாம். அங்கே உள்ள "புதியன" என்பதைச் சொடுக்கினால் கடந்த ஒரு மாதத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட கட்டுரைகள் யாவை என்று காட்டும் (அவற்றின் பை'ட் அளவும் காட்டும், யார் தொடங்கினார்கள் என்றும் காட்டும்). புதிய பக்கங்கள் என்னும் பக்கத்தில் ஆகஸ்ட் 18 அன்று திருப்புகழ்த் தலங்கள் -1 ஞானமலை (வரலாறு) ‎[11,129 பைட்டுகள்] ‎கீதாசாம்பசிவம் என்னும் குறிப்பு இருப்பதைப் பார்க்கலாம். எந்த மணித்துளியில் பதிவு செய்தீர்கள் என்பதும் துல்லியமாய்ப் பதிவாகி இருக்கும். இக்குறிப்புகள் தானியங்கியாய் பதிவாவது. யாரும் மாற்ற இயலாது. அது வரலாறு.
  • அங்கே நீங்கள் எழுதிய கட்டுரையின் தலைப்பைச் சொடுக்கினீர்கள் என்றால், அது இப்பொழுது "ஞானமலை" என்னும் தலைப்பில் வழிமாற்று பெற்று உள்ளது என்பதும் தெளிவாகத் தெரியும். தேடும்பொழுது "திருப்புகழ்த் தலங்கள் -1 ஞானமலை" என்று தேடினாலும் இதே கட்டுரைக்கு அழைத்து வந்துவிடும். தலைப்புகளை இடும்பொழுது கூடியமட்டிலும் சுருக்கமாகவும், தலைப்பாகத் தேட வசதி கொண்டதாகவும் இருப்பது நல்லது.
  • ஒவ்வொரு நாளும் தமிழ் விக்கிப்பீடியாவில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன, யார் செய்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதை அறிய தமிழ் விக்கிப்பீடியாவின் இடப்பக்கம் உள்ள நெடுக்கு வாட்டில் அமைந்த பட்டியில் அண்மைய மாற்றங்கள் என்று ஒரு மீசுட்டு (hyperlink, சுட்டிக்கான தொடர்) இருப்பதைப் பாருங்கள். அதனைச் சொடுக்கிப் பார்த்தால் மணித்துளிக்கு மணித்துளி தமிழ் விக்கிப்பீடியாவில் என்னென்ன நடக்கின்றது என்று அறியலாம்.
  • நீங்கள் இக்கேள்விகளைக் கேட்டீர்கள் என்று எப்படி எனக்கோ மற்றவர்களுக்கோ தெரியும் என்றால், அவர்கள் இந்த "அண்மைய மாற்றங்கள்" என்னும் பக்கத்தைப் பார்த்ததால் என்றும் புரிந்து கொள்ளலாம். சில நாட்கள் நடவடிக்கைகள் மிக விறுவிறுப்பாக இருக்கும், சில நாட்கள் 10-30 மாற்றங்கள்தான் நடக்கும்.
  • விக்கி நடையைப் பற்றிப் பின்னர் எழுதுகிறேன். பொதுவாக கருத்துகளை சான்றுகோள்களுடன் பொது நடையில் இருக்க வேண்டும். செய்தித்தாள் நடையிலோ, கதை நடையிலோ, வலைப்பதிவு நடையிலோ இருக்கலாகாது. அதாவது கருத்துகளை மையமாக வைத்து, தனி மனிதர் உயர்வு நவிற்சிகளைத் தவிர்த்து, அத்தலைப்பை அறியாதவரும், நடுநிலையாக புரிந்து கொள்ளுமாறு எழுதுதல் வேண்டும். கூற்ருகளில் உண்மை இருக்க வேண்டும், அதுவோ அவையோ போதிய சான்றுகளுடன் நிறுவப்பட்டதாக இருக்க வேண்டும். ஒன்று நம்பிக்கை என்றால், அதனை நம்பிக்கை என்று இன்னார் கருதுகிறார்கள் என்று கூறலாம் (ஆனால் அப்படியான கருத்து இருப்பதற்கும் சான்றுகோள் தருவது முக்கியம்). விக்கிப்பீடியாவை யார் வேண்டுமானாலும் தொகுக்கலாம், யார் வேண்டுமானாலும் கட்டுரைகள் எழுதலாம், என்பதால் இவை மிக மிக முக்கியம். அறிஞர்கள் மட்டுமே தங்களுக்குள் கருத்தாடி, "ஏற்புடையது" என்று முடிவு செய்து எழுதுவது வேறு வகை (அதிலும் பல்வேறு சாய்வுகள், தவறுகள் இருக்கலாம், ஆனால் அது வேறு ஓர் இடத்தில் பேச வேண்டிய ஒன்று).
  • நீங்கள் இந்தி மொழியில் பட்டம் பெற்றவர்கள் என்பதாலும், நெடுங்கால அனுபவம் உள்ளவர் என்பதாலும், மிக அருமையாக நல்லாக்கங்கள் தர இயலும். உங்களைப்போல் இன்னும் பலர், சீதா அம்மா முதலானோர் மிக அருமையாக பங்களிக்கலாம். ஏதும் உதவிகள் வேண்டின் தயங்காமல் இங்கேயே கேளுங்கள், அல்லது தனி மடலிலும் கேளுங்கள்.

--செல்வா 12:58, 20 ஆகஸ்ட் 2009 (UTC)

பங்களிப்பு வேண்டுகோள்

தொகு

தமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 04:00, 21 சூலை 2011 (UTC)Reply

இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011

 

வணக்கம் கீதாசாம்பசிவம்,

முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது.

மாநாட்டு உரலிகள்: மாநாட்டு இணையபக்கம், ஃபேசுபுக் நிகழ்ச்சி பக்கம் , உதவித் தொகை விண்ணப்பம்(கடைசி : ஆகஸ்ட் 15) மற்றும் ஆய்வுக் கட்டுரை சமர்பிக்க (கடைசி : ஆகஸ்ட் 30).

மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது.

நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி.

உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.