முனைவர் பி கி சிவராமன்
வாருங்கள்!
வாருங்கள், முனைவர் பி கி சிவராமன், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
இராமலிங்க அடிகளாரின் - "வடலூர் ஜோதி தரிசனம்"
தொகுதைப்பூசத்திருநாள். பவுர்ணமி நிலவும் பூச நட்சத்திரமும் ஒன்று சேரும் நாள். நமது ஆன்மசக்தியும், ஆழ் மனமும் உயர் நிலையை அடையும் நாள். தமிழ் கூறும் நல்லுலகின் ஒளிவழி பாட்டு கார்த்திகை, பூசம், விசாகம், கார்த்திகை தீபம், தைப்பூசம், வைகாசி விசாகம் இவை நட்சத்திர பவுர்ணமி நாட்கள், முருகனது விழா நாட்கள். அதே தைப்பூசத்தன்று லட்சோப லட்ச மக்கள் வடலூரில் கூடி ராமலிங்க அடிகள் என்னும் திரு அருட்பிரகாச வள்ளலார் கண்ட ஜோதியைத் தரிசித்து மகிழ்கிறார்கள். மாலையில் ஜோதியைத் தரிசிக்கும் மக்களின் வலப்புறம் முழு நிலவும், இடப்புறம் சூரியனும், எதிரே ஜோதியும் தோன்றி முக்கண்ணனாகிய சிவபெருமானை நினைவு படுத்தி நிற்கும், வள்ளலார் சத்திய ஞானசபையில் இந்த முச்சுடர்களையும் அருட்பெருஞ்ஜோதியாகக் கண்டார்.
ஜோதி தரிசனத்தின் தத்துவம் :
ஒவ்வொரு மனிதருக்குள்ளும் மனிதத் தன்மை என்ற ஒப்பற்ற ஜோதிபிரகாசம் இருக்கிறது. அதை ஆசை, கோபம், அகங்காரம், காமம், மதம், மாச்சரியம், பொய்மை போன்ற தீக்குணங்கள் மறைக்கின்றன. தீக்குணங்கள் விலக்கிய மனிதனின் மனசு மாசு மருவற்றுத் தூசு நீக்கிய கண்ணாடியாய்ப் பளிச்சிடுகிறது.
அப்பொழுது மனிதன் தனக்குள் இருக்கும் தெய்வத்தைத் தரிசிக்கிறான். இதை மக்களுக்கு உணர்த்தவே வள்ளலார் கருப்பு, நீலம், பச்சை, சிவப்பு, பொன்னிறம், வெண்மை, கலப்பு என ஏழு திரைகளை ஜோதிக்கு முன் வைத்தார். அத்திரைகளுக்குப் பின் ஆறே முக்கால் அடி உயரமும், நாலே முக்கால் அடி அகலமும் கொண்ட ஒரு கண்ணாடியை அமைத்தார். அவர் நிறுவிய சத்திய ஞான சபையில் ஓர் அகல் விளக்கை ஏற்றினார். அந்தத் தீபம் எதிரே உள்ள கண்ணாடியில் பிரதிபலித்த ஜோதியாக நமக்குத் தெரியும்.
நாம் அவனை நோக்கி ஓரடி எடுத்து வைத்தால் அவன் பத்தடி நம்மைத் தேடி ஓடோடி வருவான். ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல். அன்னதானமே கடவுள் வழிபாடு. தருமாச்சாலை தான் வள்ளலாரிடம் இறைவனை அழைத்து வந்தது. எனவே அணையா அடுப்பே அருட்பெருஞ்சோதியைக் காட்டிற்று என்பது உண்மை.
வள்ளலார் கண்ட ஜோதியை "உணர்த்தக்கரிய ஜோதி" என்று திருணாவுக்கரசரும், "அறிவரிய ஜோதியான்" எனத் திருஞான சம்பந்தரும் "ஜோதி எம்மானை" எனச் சுந்தரரும். "ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதி" என மாணிக்க வாசகரும் "நந்தா ஜோதி" எனப் பட்டினத்தாரும் பாடினானர்கள். இன்றைக்கும் இசுலாமியத்தையும், இந்து மதத்தையும் இணைத்த சீரடி சாயிபாபா ஆலயங்களில் "துமி" என்ற நெருப்பு ஓயாது எரியும். வருவோரது தூயரத்துக்குக் காரணமாக அவர்களது வினைக்குப்பையைப் பாபா எரிக்க எடுத்த முயற்சி இது. வல்லலாரே "அருளாளர் வருகின்ற தருணமிது தோழி ஆயிரம் ஆயிரம் கோடி அணிவிளக்கேற்றிடுக" என விளக்கேற்றி உயிர் விளக்காக இறையொழியை வரவேற்கச் சொன்னார். பரமாத்மா என்கிற கடவுள் பெருஞ்சோதி. நாமெல்லாம் சிறு, சிறு ஜோதிகள் என்ற உணர்வோடு நாம் கடவுளை வழிபட வேண்டும்.
வள்ளலார் விஞஞான வழிநின்ற மெய்ஞானி ஆவார். முருகனையும், சக்தியையும், நடராசாரையும், வழிபட்டு தன் அனுபவ ஞானத்தின் உச்ச நிலையில் அனைத்து மதங்களும் ஏற்கும் சமரச சன்மார்க்க ஜோதியைக் காட்டினார்.
ஜோதி அளவிட முடியாத ஒளி. வள்ளலார் வணங்கிய ஒளி அருளை அளவிடற்கரிய அன்பை அடிப்படையாகக் கொண்டது. மனித நேயத்தையும், ஆன்மநேயத்தையும், சகோதரத்துவத்தையும் வளர்ப்பது.
அருட்பெருஞ்ஜோதி என்பது வெண்மை ஒளி. சத்திய ஞான சபையில் ஓர் அகல் விளக்கை ஏற்றினார். அந்தத் தீபம் எதிரே உள்ள கண்ணாடியில் பத்து எதிரொளிப்பதே ஜோதி தரிசனம். மாயசக்தி, கிரியாசக்தி, பராசக்தி, இச்சாசக்தி, ஆதிசக்தி, சித்தசக்தி என ஏழு விதமான சக்திகளையும் கடந்தால் சக்தி வடிவான இறைவனைத் தரிசிக்கலாம். மரணமில்லாப் பெருவாழ்வைப் பெறலாம். இதுவே ஜோதி தரிசனத் தத்துவமாகும்.
மாதந்தோறும் பூச நாட்களில் ஆறு திரைகளை மட்டுமே அகற்றி ஜோதி தரிசனம் நிகழும். தைப்பூசத் தினத்தன்று மட்டும் ஏழு திரைகளை அகற்றி ஜோதி தரிசனம் நிகழும். "திருந்தும் என் உள்ளம் திருக்கோயில்
ஞான சித்திபுரம் எனும் சத்தியம் கண்டேன்"
"சத்திய ஞான சபை என்னுள் கண்டேன்
சன்மார்க்க சித்தியை நான் பெற்றுக் கொண்டேன்"
என்னும் வள்ளலாரின் வாய் மொழியால் இதனை அறியலாம்.
சத்திய ஞான சபையில் 1872-ம் ஆண்டு ஜனவரி 25-ம் தேதி தைப்பூச நாளில் வள்ளலார் ஏற்றிய விளக்கு கடந்த 149 ஆண்டுகளாக அனையாது எரிகிறது. வள்ளலார் தெய்வத்தை ஒளிவிளக்காகக் புருவ மத்தியில் கண்டார். அச்ஜோதி எல்லா மதங்களுக்கும் பொதுவான ஜோதி, அருள் நிறைந்த ஜோதி, சித்திய ஜோதி, நமது உடம்பின் ஆறு ஆதாரங்களில் ஆறாவது ஆதாரமாகிய ஆக்கசக்கரத்தில் உதயாமான ஜோதி, ஆக்ஞா என்றால் ஆக்கினை, கட்டளையிடுதல் என்று பொருள். ஆக்ஞா ஜோதி சத்தியவழி (சன்மார்க்கம்) ஆணையிடுகிறது. ஆகவே மனசாட்சி, தெய்வத்தின் குரல், மனிதனை நெறிப்படுத்தும் சத்தியக்குறல், இதை அணையாமல் காக்க வள்ளலார் ஆணையிட்டார்.
அவர் அகத்தில் கனடா சத்தியஜோதியைப் புறத்தில் சத்தியஞான சபையில் அருட்பெருஞ்ஜோதியாக்கி மக்களுக்குக் காட்டினார். வின்ஞான முறையில் பார்த்தால் புருவமத்தி நேர்க்கோட்டில் பீனியல் சுரப்பி, பிட்யூட்டரி சுரப்பி, இருதயத்தையும், நுரையீரலையும் இயக்கும் முகுளம் அனைத்தும் இங்கு தான் உள்ளன. இம்மூளையே உயிரின் உறைவிடம். அறிவிடம், நெற்றிக்கண், சிற்சபை, மகாமேரு, லாடம், விந்துஸ்தானம், மூச்சுடரிடம் இவை அதன் மாறுபெயர்கள், சரியை, கியை, யோகா ஞானத்தால் தேடும் தெய்வத்தைக் கருணையால் ஆன்ம நெகிழ்ச்சியால் அன்னதானத்தால் ஆன்மநேயத்தால் சகோதரத்துவத்தால் கண்டடைவது.
அருட்பெருஞ்ஜோதி என்பது வெண்மை ஒளி, இது ஏழு நிறங்களின் கலவை, நிறங்கள் போல மதங்கள் பிரிந்தாலும் அவை இணைந்து போதிக்கும் உண்மை "ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதே" ஜோதி வழிபாடாகிய உருவ வழிபாடு எல்லா மதங்களும் ஏற்றுக் கொண்ட ஒன்று.
வெண்மை ஒளி (அருட்பெருஞ்ஜோதி) வெண்புறா உலக சமாதானச் சின்னமாகும். வள்ளலாரின் வெண்மை ஒளி, வெண்மையும் மஞ்சளும் கலந்த கொடி, வெண்மை உடை, ஆன்மீக சமரசத்தையும், மனத்தூய்மையையும் போதிக்கிறது.
வள்ளலாரின் மார்க்கம் சன்மார்க்கம், அதாவது சத்தியமார்க்கம் ஞான மார்க்கம் அறிவாகிய ஞான ஒளியில் அறியாமையாகிய அக இருளை அகற்றும் மார்க்கம்.
ஒளியில்லையேல் மானுடத்திற்க்கும் (வெப்பம்) தாவரங்களுக்கும் (குளோரோபில்) உயிரில்லை. ஒளி உயிரின் உயிர். ஜீவாத்மா.
ஒளி உலகுக்கு உணவைச் சமைக்கும். உலகின் கண்ணைத் திறக்கும். ஒளிகுவியல் - லேசர் - நோயகற்றம்.
ஒளிவழிபாடு பண்டைய தமிழரின் வழிபாடு. இது இயற்கை வழிபாடு அனைத்து மதங்களையும் அரவணைக்கும் வழிபாடு. நிலவின் காலடி வைத்து விட்ட மனிதனால் இன்னும் மரணத்தை வெல்ல முடியவில்லை. பூமியை அணுகுண்டால் மனிதன் தாகரக்கிறான். பூமி சீறுகிறது. கடல் கொந்தளிக்கிறது. இயற்கையின் சீற்றங்கள் பூகம்பமாய், புயலாய், சுனாமியாய் மாறி மானுடத்தை அழிக்கிறது. இந்த நிலையில் இயற்கையோடு இயைந்த வாழ்வே சிறந்த வாழ்வாகும். அறிவுபூர்வமான வாழ்வாகும். இயற்கை வழிபாடே மனித இனத்தை இணைக்கும். மானுடம் மரணத்தை வெல்ல வழி வகுக்கும். மரணமில்லாப் பெருவாழ்வைத் தரும். இதுவே வள்ளலார் காட்டும் தைப்பூச ஜோதி தரிசனத் தத்துவமாகும்.
"அருட்ஜோதி ஆனேன் என்று அறையப்பா முரசு அருளாட்சி பெற்றேன் என்று அறையப்பா முரசு மருட்சார்பு அற்றேன் என்று அறையப்பா முரசு மரணம் தவிர்த்தேன் என்று அறையப்பா முரசு" - திருவருட்பிரகாச வள்ளலார்.
தொகுப்பு : பேராசிரியர் முனைவர் மருத்துவர். பி கி சிவராமன் (தஞ்சை) G Mail: jothisiva011@gmail.com Cell Number : 9442276734
முனைவர் பி கி சிவராமன் (பேச்சு) 13:55, 3 பெப்ரவரி 2023 (UTC)
- இதுபோன்ற கருத்துக்களை பேச்சுப் பக்கத்தில் எழுதுவதைத் தவிர்த்து கட்டுரைப் பக்கத்தில் எழுதி மேம்படுத்தலாமே! --சத்திரத்தான் (பேச்சு) 13:29, 4 பெப்ரவரி 2023 (UTC)
இராமலிங்க அடிகளார்
தொகுஇராமலிங்க அடிகளாரின் "வடலூர் ஜோதி தரிசனம்" முனைவர் பி கி சிவராமன் (பேச்சு) 12:30, 4 பெப்ரவரி 2023 (UTC)
திருவருட்பிரகாச வள்ளலாரும் தெய்வத்தமிழும்
தொகுவணக்கம், இந்தக் கட்டுரையானது கலைக்களஞ்சியக் கட்டுரையாக இல்லை என்பதால் நீக்கியுள்ளேன். களஞ்சியக் கட்டுரை என்பது ஏதேனும் ஒரு முதன்மைத் தலைப்பில் உயர்வு நவிழ்ச்சி இன்றித் தகவல்களைச் சொல்வதாக அமைய வேண்டும். தமிழ் குறித்து இங்கே மேற்கோளுடன் எழுதலாம் அல்லது வள்ளலார் குறித்து இங்கே மேற்கோளுடன் எழுதலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 11:43, 13 பெப்ரவரி 2023 (UTC)
- அதற்காக கட்டுரையை ஏன் நீக்கினீர்கள் ! முனைவர் பி கி சிவராமன் (பேச்சு) 12:23, 13 பெப்ரவரி 2023 (UTC)
- கலைக்களஞ்சிய கட்டுரைகள் என்றால் எப்படி எதிரபார்க்கிறீர்கள் ? முனைவர் பி கி சிவராமன் (பேச்சு) 13:17, 25 பெப்ரவரி 2023 (UTC)
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சாரம்
தொகுவணக்கம், முனைவர் பி கி சிவராமன்!
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது அன்று என்பதால் நீக்கியுள்ளோம். குறிப்பாக, விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டைப் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் தரலாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரை, சொந்த அனுபவம் போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது.
தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளைக் கண்டீர்கள் என்றால், என்ன வகையான கட்டுரைகளை எழுதலாம் என்பது புலப்படும். தங்களுக்குத் தேவைப்படும் தகவலை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்து தமிழில் மொழிபெயர்த்து எழுதலாம். ஒரு கட்டுரையை முதல் எடுப்பிலேயே முழுமையாக எழுத வேண்டியதில்லை. மூன்று வரிகள் இருந்தால் போதும். பிறகு, சிறுகச் சிறுக வளர்த்து எழுதலாம். மற்ற விக்கிப்பீடியா பயனர்களும் உங்களுக்கு உதவுவர். தகுந்த ஆதாரங்களுடன் நடுநிலையான தகவலை மட்டும் எழுதுங்கள். இவை வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள்.
புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.
ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.
ஸ்ரீதர். ஞா (✉) 18:19, 24 பெப்ரவரி 2023 (UTC)
- கலைக்களஞ்சிய கட்டுரைகள் என்றால் எப்படி எதிரபார்க்கிறீர்கள் ! முனைவர் பி கி சிவராமன் (பேச்சு) 13:21, 25 பெப்ரவரி 2023 (UTC)
- வணக்கம், விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று இங்குள்ள தகவல்கள் உங்களுக்கு உதவலாம். ஸ்ரீதர். ஞா (✉) 14:35, 25 பெப்ரவரி 2023 (UTC)
- வணக்கம் ஸ்ரீதர் ஐயா. தயவு கூர்ந்து விக்கிபீடியாவில் கட்டுரைகள் எப்படி பட்டதாக இருக்க வேண்டும் என்ற, தகவலைச் சொல்லுங்கள் முனைவர் பி கி சிவராமன் (பேச்சு) 12:47, 27 பெப்ரவரி 2023 (UTC)
- வணக்கம், விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று இங்குள்ள தகவல்கள் உங்களுக்கு உதவலாம். ஸ்ரீதர். ஞா (✉) 14:35, 25 பெப்ரவரி 2023 (UTC)