வாருங்கள்!

வாருங்கள், மு.மயூரன், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


தங்கள் வலைப்பதிவில் விக்கிப்பீடியா குறித்த தங்கள் கருத்துக்களை படித்து மகிழ்ந்தேன். உங்களை பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்திற்கு நகர்த்தியுள்ளேன்--ரவி (பேச்சு) 15:43, 8 ஆகஸ்ட் 2005 (UTC)

வாருங்கள் மயூரன்: உங்களின் உற்சாகம் தமிழ் விக்கிப்பீடியாவிற்க்கு உந்து சக்தியாக விளங்கும். --Natkeeran 16:21, 8 ஆகஸ்ட் 2005 (UTC)

மயூரன்,

விக்கிப்பீடியாவுக்கு உங்களை வரவேற்கிறேன். உங்கள் வலைப்பதிவையும் பார்த்தேன். உங்கள் வரவு விக்கிப்பீடியாவுக்கு மேலும் பலம் சேர்க்கும் என்பது எனது நம்பிக்கை. Mayooranathan 16:33, 8 ஆகஸ்ட் 2005 (UTC)

நன்றி ரவி, நற்கீரன், மயூரநாதன் உங்கள் தோழமை மகிழ்ச்சியளிக்கிறது. இந்த குழும உணர்வு தரும் மகிழ்ச்சிக்காகவே விக்கிப்பீடியாவோடு தொடர்ந்து உறவாடலாம்.... --மு.மயூரன் 07:53, 11 ஆகஸ்ட் 2005 (UTC)

மயூரன் உங்களுக்கு உதவக்கூடிய சில சுட்டிகள் கொண்ட எனது குறிப்பு ஒன்றை இட்டுள்ளேன். தமிழ் தளையறு மென்கலன்கள்

english wikipedia articles

தொகு

Mayuran, thank you very much for taking the time to edit the wikipedia project related pages. we get very few contributors only to do that. do not hesitate to copy articles from en wikipedia pages whenever needed. we can translate them togethere when we get time. No explanation in talk pages is needed to say that u will translate it in future. It is understood. u may include the template {{translate}} at the bottom of the article. But please take care to remove the category names in English at the bottom before pasting the en wiki article. Thanks.--ரவி (பேச்சு) 10:21, 12 ஆகஸ்ட் 2005 (UTC)

தொகு

விக்கிப்பீடியா:வழு நிலவரங்கள் பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ள வழுக்களின் இணைப்புகளை பின்பற்றி பக்சில்லா தளத்தில் சென்று ஓட்டளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ஓட்டளிப்பதின் மூலம் இந்த வழுக்களை பக்சில்லா காரர்கள் முன்னுரிமை கொடுத்து சரி செய்வர். அது தமிழ் விக்கிப்பீடியா திட்ட வளர்ச்சிக்கு உதவும். இவ்வாறு ஓட்டளிப்பதற்கு ஒரு மின்னஞ்சல் முகவரி கொடுத்து நீங்கள் அத்தளத்தில் பயனர் கணக்கு உருவாக்க வேண்டியிருக்கும். இந்த வழுக்களின் நிலவரம் குறித்த தொடர் மின்மடல்களை நீங்கள் பெற விரும்பவில்லை என்றால், நீங்கள் அதிகம் பயன்படுத்தாத மின் மடல் முகவரியைக்கொடுத்து பயனர் கணக்கு உருவாக்கலாம். மேற்கொண்டு விளக்கம் தேவைப்பட்டால் தயவு செய்து என் பேச்சுப்பக்கத்தில் கேளுங்கள். நன்றி--ரவி (பேச்சு) 10:36, 12 ஆகஸ்ட் 2005 (UTC)

நன்றி, பாராட்டு

தொகு

மயூரன், கட்டுரைகள் எழுதுவது தவிர்த்து விக்கிப்பீடியா உதவிப்பக்கங்களிலும் கொள்கைப்பக்கங்களிலும் நீங்கள் பங்களிப்பது கண்டு மகிழ்கிறேன். பல உதவிப் பக்கங்களை மேம்படுத்துவது நம் முன் உள்ள தலையாய பணியாகும்--ரவி (பேச்சு) 18:47, 11 அக்டோபர் 2005 (UTC)Reply

மயூரன், TSCII பற்றிய கட்டுரையை செம்மைப்படுத்தியதற்கு நன்றி. :-) -- Sundar \பேச்சு 07:16, 13 அக்டோபர் 2005 (UTC)Reply

கணினியியல் வகை பிரித்தல், துணை வகை ஏற்படுத்தல்

தொகு

கணினி, மென்பொருள் சம்பந்தமாக நீங்கள் பல கட்டுரைகள் எழுதிவருவதி வருவது மகிழ்ச்சியழிக்கின்றது. கணினியியல் உட் பிரிவுகளை ஆய்ந்து அதற்க்குகேற்ற மாதிரி துணை வகைகளை வகுப்பதே நன்று. (உ+ம்: அவ்வாறு இயற்பியலுக்கு செய்துள்ளேன்.) எனினும், தற்சமயம் தகவல்கள் சிதறாமல் குறைந்த பட்சம் உங்கள் கட்டுரைகளை கணினியியல் பகுப்பில் சேர்தீர்களானால் நன்று. நீங்கள் சமீபத்தில் எழுதியவற்றை சேற்க்க முயன்றுள்ளேன். கணினியல் வகை செய்வது தொடர்பாக உங்களின் கருத்தையும் வேண்டி நிற்கின்றேன். நன்றி. --Natkeeran 20:17, 17 அக்டோபர் 2005 (UTC)Reply

நன்றி நற்கீரன், உண்மையில் வகை பிரிப்பது தொடர்பான நடைமுறைகளில் நான் இன்னும் தெளிவுபெறவில்லை என்பதுதான் இதற்கு காரணம். உங்கள் உதவிக்கு மிகவும் நன்றி.

நீங்கள் சொன்னபடி இனி சேர்க்கும் கட்டுரைகளை கணினியியல் தலைப்பில் சேர்த்துவிடுகிறேன். வகைப்பிரிப்புக்கு நாங்கள் ஆங்கில விக்கிப்பீடியாவை பின்பற்றலாம்.. அடுத்து ஒரு சின்ன சந்தேகம். ஆங்கில விக்கிப்பீடியாவில் ஒவ்வொரு உப தலைப்புக்கும் -தொகு- வருகிறமாதிரி செய்கிறார்களே அது எப்படி? --மு.மயூரன் 20:24, 17 அக்டோபர் 2005 (UTC)Reply

உங்களின் கேள்வி எனக்கு சரிவர புரியவில்லையோ தெரியவில்லை. தமிழிலும் ஒவ்வொரு உப தலைப்புக்கும் -தொகு- வருகின்றது.

வகை பிரிப்பது தொடர்பாக எதுவும் சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள். ஆரம்பத்தில் சற்று குழப்பமாக இருக்கும், ஆனால் சற்று பரிச்சியப்பட்டபின் இலகுவாகிவிடும். --Natkeeran 21:37, 17 அக்டோபர் 2005 (UTC)Reply

தொகுப்பு பெட்டிக்கு மேல் உள்ள பொத்தான்களில் A என்ற பொத்தானை பயன்படுத்தினால் == தலைப்பு எழுத்துக்கள் == என்று வரும். தலைப்பு எழுத்துக்கள் என்பதற்கு பதில் உங்கள் துணைத்தலைப்பை தாருங்கள். இப்படி செய்வதின் மூலம் உங்கள் துணைத்தலைப்புக்கு அருகிலும் தொகு இணைப்பு வரும். === இரண்டாம் நிலை தலைப்பு=== என்று தந்தால் இரண்டாம் நிலை தலைப்பு வரும்..ஆக = குறிநின் எண்ணிக்கைக்கு ஏற்ப அடுத்தடுத்த நிலை தலைப்புகள் வரும். இது போன்ற ஐயங்களை ஒத்தாசைப் பக்கத்தில் கேட்டால் அனைவரும் எளிதில் கவனித்து விரைந்து பதில் தர ஏதுவாக இருக்கும். --ரவி (பேச்சு) 11:29, 19 அக்டோபர் 2005 (UTC)Reply

உங்கள் முன்னுரிமைகளில் உரைகட்ட அளவுகள் பகுதியில் முதல் optionஆன இணைப்பு வழி தொகுப்பை செயற்படுத்து தெரிந்தெடுக்கப்பட்டிருக்கிறதா என்று சோதியுங்கள். இல்லாவிடில் ஒவ்வொரு துணைத்தலைப்பு அருகிலும் தொகு இணைப்பைக் காண உங்களால் இயலாது.--ரவி (பேச்சு) 07:03, 20 அக்டோபர் 2005 (UTC)Reply

நூலகம் திட்டம்

தொகு

மயூரன், உங்கள் பயனர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள புது எண்ணம் நன்று. தமிழ் கணினி, இணையம் சார்ந்த பற்பல முயற்சிகள் ஒருங்கிணைப்பு இல்லாததால் ஒரே வேலையை திரும்பத்திரும்ப பலர் செய்வது மாதிரி ஆகிவிடுகிறது. விக்கிப்பீடியா போன்று தகவல் சேகரிப்பு பணி உள்ள எந்த projectக்கும் விக்கிப்பீடியாவை பயன்படுத்திக் கொள்ளலாம். இணைப்பு மட்டுமல்லாமல் உள்ளடக்கத்தையே கூட நீங்கள் அப்படியே நூலகம் திட்டத்தில் இடலாம். அங்கு வரும் பயனர்களுக்கு இவ்வாறு வாசிப்பது எளிமையாக இருக்கும். ஆனால், கட்டுரையின் முடிவில், இக்கட்டுரை விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்தாளப்படுகிறது என்பது போன்ற வாக்கியத்தை தந்து இங்குள்ள கட்டுரைக்கு இணைப்பு தருவது அவசியம்.--ரவி (பேச்சு) 07:28, 22 அக்டோபர் 2005 (UTC)Reply

நன்றி. கட்டுரையை அப்படியே அங்கே எடுத்தாளும்போது, அங்கே அதனை பார்ப்பவர்கள் கட்டுரையி மேம்படுத்த வழியில்லாமற்போய்விடுகிறது. உண்மையில் இந்த யோசனை விக்கிப்பீடியாவுக்கு பங்களிப்பை அதிகரிக்கச்செய்வதற்காகவே பயன்படுத்தப்படவேண்டும். மற்றது தகவல் ஒருங்கிணைப்பு என்பது விக்கிப்பீடியா மூலம் மட்டுமே சாத்தியப்படும் என்பது என் கருத்து. --மு.மயூரன் 11:13, 22 அக்டோபர் 2005 (UTC)Reply

ஆம், வெறும் இணைப்பு மட்டும் தருவது பலப் புதுப் பயனர்களை இங்கு ஈர்த்து அக்கட்டுரைகளை மேம்படுத்த உதவும் என்பது உண்மை தான். இந்த மாதிரி எனக்கு தோன்றாமல் போய்விட்டது. இந்த நல்ல முயற்சியை தொடருங்கள். அப்புறம், yahoo, google எல்லாம் toolbar தருவது போல விக்கிப்பீடியாவுக்கும் இருந்தால் நன்றாக இருக்கம் என்று நினைத்தது உண்டு. அது குறித்து மிகப் பயனுள்ள தகவலை தந்ததற்கு நன்றி. --ரவி (பேச்சு) 14:24, 22 அக்டோபர் 2005 (UTC)Reply

கலம்

தொகு

கலம் நல்ல சொல். பாராட்டுக்கள். ஒரு சிறு ஆலோசனை. கட்டுரைகளுக்கு மேலே உள்ள நகர்த்து என்ற இணைப்பைப் பயன்படுத்துங்கள். இதைப் பயன்படுத்தியிருந்தால் திசுள் கட்டுரையின் பக்க வரலாறு கலம் கட்டுரையைச் சென்றடைந்திருக்கும். உங்களுக்கும் பல வேலைகள் மின்சியிருக்கும். -- Sundar \பேச்சு

want to become administrator?

தொகு

Mauran, if you are interested in becoming administrator in tamil wikipedia, please let me know. It will be my pleasure to nominate u formally. With the increasing growth of activities in this site, we need experienced and trusted people like u to take care of the maintenance here. Thanks--ரவி 15:36, 3 டிசம்பர் 2005 (UTC)

என் மீதான நம்பிக்கைக்கு மிகவும் நன்றி. இந்த பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம், பக்குவம் இன்னும் வரவில்லை என்று நம்புகிறேன். சாதாரண பயனராக என்னால் முடிந்தளவு பங்களிப்பை விக்கிப்பீடியாவுக்கு செய்தவண்ணமிருப்பேன். மறுத்தலுக்கு மன்னிக்கவும்.--மு.மயூரன் 18:16, 30 டிசம்பர் 2005 (UTC)

Hi mayuran

தொகு

Hi! mayuran. Hope you are busy with noolagam project. Its really nice to see you around here also. I think you settled in Colombo. did you ever go to Trinco?. Hope you are doing well. HOw is your studies?.--ஜெ.மயூரேசன் 11:51, 10 ஏப்ரல் 2006 (UTC)

Hi mayuran, good to see u back. could u please read computing related articles by umapathy and improve them by adding tamil terms at appropriate places. thanks--ரவி 17:39, 10 ஏப்ரல் 2006 (UTC)
ரவி,

உமாபதியின் கட்டுரைகளில் தேவையான மாற்றங்களை செய்தே வருகிறேன். இரண்டொரு நாட்களில் முழுமையாக விக்கிப்பீடியாவுக்கு திரும்பிவிடுவேன். (என்னுடைய இயங்குதளத்தில் தற்போது தமிழ் உள்ளீட்டு வசதிகள் உண்டு ;-)) --மு.மயூரன் 08:49, 11 ஏப்ரல் 2006 (UTC)

மு.மயூரன், என்னால் ஆரம்பிக்கப் பட்ட கட்டுரைகளை வேண்டிய மாற்றங்கள் மற்றும் மேம்படுத்தல்கள் குறித்து மிகவும் மகிழ்ச்சி. திறந்த ஆவண வடிவம் கட்டுரை மிகவும் நன்றாக இருக்கின்றது. உங்கள் இயங்குதளத்தில் தமிழை உள்ளீடு செய்யமுடிவது மகிழ்ச்சியை அளிக்கின்றது. நீங்கள் லினக்ஸ் இயங்குதளத்தில் மிகவும் ஆர்வமுடையவர். இது பற்றிய கட்டுரைகள் எடுத்துக்காட்டாக லினக்ஸ் ஐ நிறுவுவது பற்றித் தமிழில் எழுதினால் பலரிற்கும் பயன்படும்.--Umapathy 15:06, 12 ஏப்ரல் 2006 (UTC)

திறந்த மூல, திறமூல, தளையறு

தொகு

Do the terms திறந்த மூல மென்பொருள் (திறமூல மென்பொருள்) (Open Source Software), and தளையறு மென்பொருள் (Free Software) refer to the same thing, or are theere any fundamental differences (ex: legal, licence, approach etc)?

தளையறு/திறந்த மூல மென்பொருள் என்று ஒருங்கே குறிக்கலாமா?

--Natkeeran 15:34, 4 ஏப்ரல் 2006 (UTC)

அதிசயமாக இருக்கிறது, சற்று முன்னர்தான் இதுபற்றி உங்களுக்கு தனிப்பட எழுத இருந்தேன். GNU இயக்க தூய்மையாளர்கள் தளையறு மற்றும் திறந்த ஆணைமூல மென்பொருட்கள் (FOSS) என்று குறிப்பிடுவதையே விரும்புகிறார்கள். பொதுமக்கள் உரிமப்படி அப்படித்தான் சொல்ல வேண்டும். slashdot தளம் வெறுமனே opensource என்று பயன்படுத்துவது இப்பொழுது சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.

நீங்கள் திறந்த ஆணைமூலம் என்பதை திறந்த மூலம் என்று பயன்படுத்துகிறீர்கள். இது நல்ல பிரயோகம் போல் படுகிறது. திறந்த ஆணி மூலம் எனும்போது அது மென்பொருட்களை மட்டுமே குறிக்கும். இருய் வியாபகமான தத்துவம் சார்ந்த சொல்லாக இருப்பதால் திறந்த மூலம் என்று பயன்படுத்துவதே பொருத்தமானதாக தோன்றுகிறது.

தளையறு மற்றும் திறந்த மூல மென்பொருட்கள் என நாம் பயன்படுத்தலாம் என்பது எனது கருத்து. பார்க்க: http://www.gnu.org/ http://www.fsf.org/

--மு.மயூரன் 20:08, 12 ஏப்ரல் 2006 (UTC)

தமிழ் விக்கிப்பீடியாவில் தற்போது திறந்த மூல மென்பொருள் என்றும் தளையறு மென்பொருள் என்றும் இரு பகுப்புக்கள் இருக்கின்றன. உங்கள் பரிந்துரை நன்று என்றாலும் சற்று நீண்டுவிட்டது போல தெரிகின்றது. இதை சுருக்கமாகவும், அழகாகவும் சொல்ல குறிக்க ஒரு நல்ல சொல் தேடவேண்டும். மேலும், திறந்த மூலத்தை திறமூலம் என்று சுருக்குவது அவ்வளவு சரியல்ல என்று நினைக்கின்றேன். நீங்கள் என்ன நினக்கின்றீர்கள்?

திறந்த மூலம் என்று தமிழில் சொல்லும் பொழுது ஆங்கில சொற்களில் எழும் தத்துவ பிரச்சினைகள் எழுவதில்லை என்றே தெரிகின்றது.

சுதந்திர செயலிகள், சுதந்திர மென்பொருள்கள், பகிர்வறை, பரிவறை, கட்டற்ற போன்று மேலும் பல சொல்லாடல்களும் இருக்கின்றன.

தளையறு என்ற சொல் எனக்கு சற்று பரிச்சியம் இல்லாதாலோ தெரியவில்லை, அதனால் கட்டற்ற சற்று நன்று போன்று தெரிகின்றது.

பொதுவாக பொது வழக்கோடு ஒத்துபோகவே விரும்புகின்றேன். ஆனால், எது பொது வழக்கு என்று தமிழில் கண்டுபிடிப்பதே ஒரு தொழிலாகிவிட்டது...

தமிழில் தத்துவ ரீதியில் திறந்த மூலம் என்பதை கட்டற்ற என்பதோடு இணைத்தே நான் சில வேளைகளில் பார்பதுண்டு, ஆனால் நாம் ஆங்கில எண்ண உலகில் இருந்து பல தத்துவங்களை இங்கு தத்தெடுப்பதால் இரு வேறு சொற்களை பிரயோகிப்பதே நன்று என்றும் தோன்றுகின்றது.

திறந்த மூலம் என்ற கோட்பாடு பல செயல்பாடுகளுக்கு ஏற்ற ஒரு அணுகுமுறையா என பல பரிசோதனைகள் தற்சமயம் மேற்கொள்ளப்படுகின்றன. தற் சமயம் இந்த அணுகுமுறை பட்டை தீட்டப்பட்டு வருகின்றதெனலாம்.

--Natkeeran 20:27, 12 ஏப்ரல் 2006 (UTC)

கட்டற்ற என்ற சொல் பொருத்தமானதாகத்தான் இருக்கிறது. கட்டற்ற திறந்த மூல மென்பொருள் என்று பயன்படுத்தலாம் அழகாக. இதை ஒரு முறை பொதுவில் அறிவித்து கலந்துரையாடிவிட்டு செய்வோம். வலைப்பதிவை பயன்படுத்தலாம். அங்கே வெங்கட் போன்றவர்கள் ஆலோசனை சொல்ல வாய்ப்பு உள்ளது.அத்தோடு இப்போது எமக்கு மிக மிக அவசியமாக தேவைப்படும் ஒன்றாக நான் திறந்த கலைச்சொல் அகரமுதலியையே சொவேன். இது பற்றி ஏற்கனவே உங்களுடன் உரையாடியிருக்கிறேன். ஆங்கில விக்கிப்பீடியாவில் கலைச்சொல் அகரமுதலிகள் உண்டு. அவர்கள் செய்திருப்பதைப்போன்றோ அல்லது வேறு விதமாகவோ நாம் இதனை செய்யலாம். மிக மிக அவசரமாக திறந்த கலைச்சொல் அகரமுதலி தேவைப்படுவதை உணர்கிறேன். இதற்கு என்ன செய்யலாம்?

விக்கி பீடியாவை பயன்படுத்தலாமா? ஆல்லது விக்கி புத்தகம் ஒன்றினை செய்யலாமா?

--மு.மயூரன் 20:48, 12 ஏப்ரல் 2006 (UTC)

விக்சனரி http://ta.wiktionary.org/wiki இதை நீங்கள் அறியாமல் இருக்க முடியாதே?

--Natkeeran 21:00, 12 ஏப்ரல் 2006 (UTC)

ம்ம்ம்.. ஏற்கனவே அறிந்தது தான் ஆனால் கலைச்சொல் அகரமுதலியாக அதனை பயன்படுத்தும் சாத்தியம் பற்றி தெரியாமலிருந்தது. விக்கிசனரியை ஒருமுறை பார்வையிட்டுவிட்டு சொல்கிறேன். --மு.மயூரன் 21:11, 12 ஏப்ரல் 2006 (UTC)

மயூரன், தமிழ் விக்கிப்பீடியாவில் எண்னக்கரு பட்டியல், கலைச்சொ பட்டியல், நுட்பியல்சொல் பட்டியல் தாயரிப்பது வழமை. தேவைக்கேற்ப, வளர்ச்சிக்கேற்ப, ஈட்பாடுகளை பொறுத்து இது நடைபெறுகின்றது. பல பகுப்புக்களில் இப்படியல்களை நீங்கள் காணலாம்.

--Natkeeran 21:19, 12 ஏப்ரல் 2006 (UTC)

வேறெந்த விக்கித் திட்டத்தையும் விட, கலைச்சொல் அகரமுதலிக்குப் பொருத்தமான இடம் விக்சனரிதான். விக்சனரியின் தொடக்க காலத்திலிருந்தே அங்கே ஒரு கலைச்சொல் அகரமுதலிக்கான விதை உள்ளது. கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு முன்னர் யாஹூ மடற்குழு ஒன்றில் இது பற்றி எடுத்துக்கூறி அதை வளர்க்க வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி எடுத்துக் கூறியிருந்தேன். பலரும் இதற்கு ஆதரவாகக் கருத்து வெளியிட்டிருந்தபோதும்,என்னிடமிருந்து இதற்கான ஒரு திட்டத்தை எதிர்பார்த்தார்கள் போல் தெரிகிறது. நானும் விக்கிப்பீடியாவில் கூடிய நேரத்தைச் செலவு செய்தபடியால் இதுபற்றி அதிகம் கவனம் செலுத்தவில்லை. எனவே அது அதிகம் வளராமல் அப்படியே உள்ளது. இதை நிச்சயம் வளர்த்தெடுக்கமுடியும். இது மிகவும் அவசியமானதும் கூட. இது விக்கிப்பீடியாவுக்கும், அதன் பங்களிப்பாளர்களுக்கும் மிகவும் உதவியாகவும் அமையும். யாரும் அணுகிப் பயன்படுத்தக்கூடியதாக இப்பொழுது உள்ள சிறப்பான கலைச்சொல் தொகுதி, தமிழ் இணையப் பல்கலைக்கழகத் தளத்தில் உள்ளதுதான். அதிலும் சில குறைபாடுகள் உள்ளன. முக்கியமாக, இதிலேயுள்ள பட்டியல்கள் பழையவை. புதிய சொற்கள் பல அதில் இல்லை. அத்துடன் இது பயன்படுத்துவதற்குச் சற்றுச் சிரமமானது (not user friendly). புதிய சொற்களை உடனுக்குடன் சேர்ப்பது போன்றவற்றுக்கு விக்சனரி மிகவும் வசதியானது. அத்துடன் குறிப்பிட்ட கலைச்சொற்கள் பற்றிய கலந்துரையாடல்களும் விக்சனரியில் இடம்பெறமுடியுமாதலால், அது விக்சனரிக்கு ஒரு மேலதிக பெறுமதியை வழங்கும். பல கலைச்சொல் அகரமுதலிகளைப் போல் இலங்கை, இந்தியா என்று குறிப்பிட்ட வட்டத்துக்குள் நிற்காமல், ஒரு உண்மையான தமிழ் உலகம் தழுவியமுறையில் விக்சனரியை வளர்த்தெடுப்பது இலகு.
கட்டற்ற, திறந்த மூலம் ஆகிய கருத்துருக்கள் அடிப்படையில் வேறானவை என்றுதான் நான் நினைக்கிறேன். கட்டற்ற என்பது எதுவித கட்டுப்பாடுமின்றிப் பயன்படுத்தக்கூடிய என்ற பொருளிலேயே பயன்படுத்தப்படுகின்றது. இது நூல்கள், ஓவியம், வடிவமைப்பு என்று எல்லாவற்றுக்கும் பொருந்தக்கூடியது. திறந்தமூலம் என்பது பொதுவாக கணினித் துறைக்கு மட்டுப்படுத்தப்பட்டது போல் தெரிகிறது.

--Mayooranathan 11:58, 13 ஏப்ரல் 2006 (UTC)

அற்றம் (சஞ்சிகை)

தொகு

I had an issue, I just could not find it now :)--Natkeeran 07:07, 15 ஏப்ரல் 2006 (UTC)

பிரதீபாவுக்கு தொடுப்பை அனுப்பியிருக்கிறேன். அவர் நேரடியாக விக்கிப்பீடியாவில் அல்லது தனிப்பட எனக்கு மின்னஞ்சலில் கட்டுரைக்கான மேலதிக விபரங்களை தருவார் என நம்புகிறேன் --மு.மயூரன் 07:09, 15 ஏப்ரல் 2006 (UTC)

ழ கோப்பு ஏற்கனவே உள்ளது.

தொகு

ழ வை உசரிக்கும் முறையை விளக்கும் கோப்பு ஒன்று ஏற்கனவே தமிழ் விக்கிபீட்யாவில் "தமிழ்" கட்டுரையில் உள்ளது. இதை அறிந்திராதபடியால் நானும் ஒரு கோப்பை பதிவேற்றி இருக்கிறேன். ஏற்கனவே உள்ள கோப்பு மிக தரமாகவே இருக்கிறது.

ஏற்கனவே எற்றப்பட கோப்பை பயன்படுத்தியிருப்பவர்கள் எந்த மாற்றங்களையும் செய்ய வேண்டாம். --மு.மயூரன் 17:43, 15 ஏப்ரல் 2006 (UTC)

The Photo - Copy Rights

தொகு

மயூரன், தமிழ் விக்கிப்பீடியாவில் படிம copy right தொடர்பாக சரியான விளக்கம் இன்னும் இல்லை. ஆயினும், தெளிவாக copy righted pictures சேர்க்காமல் இருப்பது நன்று.

http://nitharsanam.com/?art=16458
 

--Natkeeran 20:31, 15 ஏப்ரல் 2006 (UTC)

நற்கீரன், இப்படிமத்தை பொதுமக்கள் உரிமத்தின் அடிப்படையில் தரும்படி நிதர்சனத்தை கேட்டு எழுதியிருக்கிறேன். பதில் கிடைத்ததும் படிமத்தை பிரசுரிக்கலாம். --மு.மயூரன் 21:07, 15 ஏப்ரல் 2006 (UTC)

உதவி

தொகு

மயுரன்,தனிநபர் ஆறிமுகம் செய்வது தொடர்பான வார்ப்புருக்கள் ஏதேனும் உள்ளதா? அது பற்றி அறியதர முடியுமா? வார்ப்புரு தொடர்பான விளக்கத்தினையும் தந்து உதவமுடியுமா?--கலாநிதி 17:19, 20 ஏப்ரல் 2006 (UTC) kalanithe

மயுரன் மட்டக்களப்பிலேதான் வசிக்கிறேன்.kalanithe

For your reflection!--Natkeeran 02:42, 21 ஏப்ரல் 2006 (UTC)

Free Software and Open Source by Venkat

தொகு

சமீபகாலத்தில் பலரும் பரிவூற்று, திறவூற்று போன்ற சொற்களை Free Software, Open Source இவற்றைக்குறிக்கப் பயன்படுத்தி வருகிறார்கள். ரிச்சர்ட் ஸ்டால்மான் (Free Software), மற்றும் எரிக் ரேமண்ட் (Eric Reymond) இவர்களின் வரையறைகளைப்படித்தவர்களுக்கு இந்த மொழியாக்கங்கள் சரியில்லை என்பது எளிதில் தெரியும்.

தளையறு மென்கலன், திறந்த ஆணைமூலம் இரண்டு வார்த்தைகளும் என்னால் உருவாக்கப்பட்டவை. நான் கடந்த ஐந்து வருடங்களாக என்னுடைய கட்டுரைகள், தொழில்நுட்ப விளக்கங்கள், பயனுதவிக் கட்டுரைகள் எல்லாவற்றிலும் இவற்றைத்தான் நான் பயன்படுத்தி வருகிறேன். பரிவூற்று, திறவூற்று போன்ற வார்த்தைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. வலைப்பூக்களைப் போல கவித்துவம்தான் மிஞ்சி நிற்கிறது. தொழில்நுட்பப் பயன் நேரடியாக இல்லை. காரணம்,

Source என்பதை ஊற்று என்று கொண்டால், Source Code Error - என்பதை எப்படி மொழியாக்கம் செய்வது? ஊற்றுப்பிழை?? Source debugging?? Code point?? இப்படியாகப் பல குழப்பங்கள் வரும். தமிழில் செய்யப்பட்ட நல்ல மொழியாக்கத்தின் உதாரணம் ware - கலன்

hardware, software, shareware - முறையே வன்கலன், மென்கலன், பகிர்கலன், என்று அழகாக நீட்டிக்கிறது. இதே போல disk=வட்டு

harddisk, floppydisk, compace disc, minidisc, magnotooptic disk - முறையே கடினவட்டு, நெகிழ்வட்டு, குறுவட்டு, நுண்வட்டு, காந்தஒளிவட்டு, என்று அழகாக நீட்டிக்கும். இப்படித்தான் ஆதாரச் சொற்களைப் பார்க்கவேண்டும். Source code என்பதில் இருக்கும் இரண்டு வார்த்தைகளும் இப்படி ஆதார வார்த்தைகள், இவற்றைக் கொண்டு பல சொற்களை உருவாக்க முடியும். Source - மூலம், இங்கே ஆணைமூலத்தைக் குறிக்கிறது, Open - திறந்த, எனவே திறந்த ஆணைமூலம் என்று தொடுத்தேன். முதலில் இதைத் திறவாணைமூலம் என்றுதான் எழுத நினைத்தேன். பிறகு அதன் பொருள் Command to open, திறப்பதற்காகக் கொடுக்கப்படும் ஆணைமூலம் என்ற குழப்பத்திற்கு இடமிருப்பதால் திறந்த ஆணைமூலம் என்று எழுதினேன். இதை வைத்துக் கொண்டு எளிதாக நீட்டிக்க முடியும். Source code error - ஆணைமூலப் பிழை, (இது புழகத்தில் மூலப்பிழையாக மாறிச் சுருங்க முடியும்). Source debugging - மூலப் பிழைநீக்கம், இதை ஊற்றுப்பிழை நீக்கம் என்று சொல்வது பொருத்தமல்ல. Code point - ஆணை இடம்.... ஊற்று என்று கொண்டால் பல சிக்கல்கள் வரும். தொழில்நுட்ப ரீதியாக ஆணைமூலம் என்பதுதான் பொருத்தமாகப்படுகிறது.

திறந்த குழுமங்கள், திறந்த தரங்கள் என்பவை, திறந்த ஆணைமூலத்தின் 'திறந்த' - என்பதும் கொள்கை ரீதியாக ஒரே கருத்தைத்தான் சொல்கின்றன. இதில் இராம.கி ஐயா சொல்வதைப்போல் எந்தக் குழப்பமும் இல்லை.

இதை திறந்த நிரல் என்று சொல்வது கூடத்தவறுதான். திறந்த நிரல் என்பது - Open Program என்றுதான் ஆகும். தொழில்நுட்பத்தில் Source, Program, Software இவை எல்லாவற்றுக்கும் வெவ்வேறு பொருள்கள் உண்டு. ஒன்றுடன் ஒன்றைக்குழப்பமுடியாது.

திறந்த ஆணைமூலம் என்பதைச் சுருக்கமாக திறமூலம் என்று சொல்லலாம். திற என்பது வினைத்தொகையாக வருகிறது. ஆணைமூலம் என்று ஒவ்வொருமுறையும் நீட்டிமுழக்கிக்கொண்டிருக்க அவசியம் இல்லை. இங்கே மூலம் என்றாலே ஆணைமூலம்தான் என்று பொருள்படும்.

  • * *

Free software - இதற்கு விடுதலைச் செயலிகள் (முழுப்பிழை), சுதந்திரச் செயலிகள் (இன்னும் பிழை) என்று பலர் எழுதுவதற்கு முன்பே நான் இதற்குத் தளையறு மென்கலன் என்று பெயர் முன் வைத்தேன். Free - தளையறு (இந்த இடத்தில் இலவசம் என்பது பொருளில்லை), அதாவது மென்கலனுக்கு எந்தவிதமானக் கட்டுப்பாடும் இல்லை. இது எழுதி வெளியிடும்போதே தளையற்று (தளையறுத்த) மென்கலன், இப்பொழுது தளையற்றுக் கிடைப்பது, எப்பொழுதும் தளையற்று இருக்கும் என்று வினைத்தொகையாக நிற்கும். இது Software = மென்கலன் என்பதன் நேரடி நீட்சியாக இருப்பதால் குழப்பம் ஏற்படாது. பரிவூற்று என்பதில் வரும் ஊற்று = Source மாத்திரம்தான் குறிக்கும், முழு மென்கலனையும் குறிக்காது. ஆனால் ஸ்டால்மானின் சித்தாந்தப்படி இது முழு மென்கலனையும் குறித்தாக வேண்டும், ஆணைமூலம் அதன் ஒரு பகுதிதான். எனவே, free software என்பதில் software என்ற இடத்தில் மென்கலன் வந்தாக வேண்டும், (எப்படி எல்லா disk களையும் வட்டு என்று அழைக்கிறோமோ அதேபோல்).

பரிவூற்று, திறவூற்று என்பவை நீட்டிக்க முடியாதா குழப்பம் தரக்கூடும் மொழியாக்கங்கள் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. இதை தமிழ் உலகம் குழுமத்திலோ, வேறு இடங்களிலோ முன்னெடுத்துச் செல்லமுடியாதா நிலையில் இருக்கிறேன் (வேலைப்பளு ஒரளவுக்கு மேல் கடிதங்களைப் படிக்க இடம்தருவதில்லை). எனவே, இதை யாராவு முற்செலுத்தவும். ஆர்வமுள்ளவர்கள் இங்கோ, என்னுடைய வலைபபதிவிலோ எழுதினால் நன்றியுடையவனாக இருப்பேன்.

இறுதியாக, என்னுடைய நீண்ட (பலவருடச்) சிந்தனைக்குப்பிறகு

Open Source - திறமூலம் (திறந்த ஆணைமூலம்)

Free Software - தளையறு மென்கலன்.



I like for Free and Open Source Software - கட்டற்ற திறமூல மென்பொருள் நீங்கள் பல இடங்களில் திறந்த மூலம் என்ற பொது எண்ணக்கருவை குறிக்க திறந்த ஆணைமூலம் என்று குறிப்பிடுவது அவ்வளவு சரியல்ல. திறந்த ஆணைமூலம் மென்பொருளுக்கு மட்டுமே. --Natkeeran 18:03, 26 ஏப்ரல் 2006 (UTC)

expert contributors

தொகு

mayuran, do u have personal intro / rapport with people like venkat, raama.ki? I wonder how nice it would be if people like them could write articles in wiki in their fields of knowledge and expertise? I am sure that people like them should be aware of the tamil wiki projects but donno why they are coming forward. If u could bring them to tamil wikipedia, it would be something along the lines sundar suggested at Wikipedia:ஆலமரத்தடி#சிறப்பு கட்டுரைப் படைப்பாளர். Is it possible? --ரவி 09:21, 1 மே 2006 (UTC)Reply

உண்மைதான் ரவி, துறை சார் விற்பன்னர்கள் விக்கிப்பீடியாவுக்கு பங்களித்தல் நல்லதுதான். ஆனால் அவர்கள் இங்கெ வருவதற்கு ஏதோ தடை இருக்கிறது. அதனை நாம் முதலில் கண்டுபிடிக்க வேண்டும். நீங்கள் சொன்ன இருவருடனும் சொல்லும் படியான தனிப்பட்ட நெருக்கம் எதுவும் கிடையாது. முத்து நெடுமாறனுடன் அப்படியான நெருக்கம் உண்டு. ஆனால் அவருக்கு நேரமில்லை. வெங்கட் தமிழ் லினக்சுக்கென தனியான விக்கி ஒன்று வைத்திருக்கிறார் (மீடியா விக்கி தான்). அது தோல்வி கண்டுவிட்டது. அங்கே செய்யத்தக்க பணிகளை இங்கேயே செய்யலாம். இதில் அவர் கவனமெடுத்தால் நல்லது. இப்போது எங்கள் நூலகம் திட்டத்தில் நான் பயன்படுத்திய உத்தி காரணமாக சில வரவுகள் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு கிடைத்திருக்கிறது. இப்படியான உத்திகளையே நாம் கையாளவேண்டியுள்ளது.

முடிந்தால் ஒன்று செய்யலாம் மேலே நீங்கள் கூறியவர்களது ஏற்கனவே எழுதப்பட்ட கட்டுரைகளை அவர்கள் அனுமதியுடன் விக்கி பீடியாவுக்கு பயன்படுத்தலாம். --மு.மயூரன் 10:58, 1 மே 2006 (UTC)Reply

I think that the main block for any expert to write here is that u cannot have any credit for the article, or u cannot create a image/brand for urself as u do in blogs, personal websites. Also, they might like to have complete control over the article and may not find time or like to answer criticisms in the talk pages. But these are my straight guesses for any expert and not for the names mentioned above. And if we are going to get permission from them to borrow part or full of their articles, they should be clearly informed that there will be no mention or credit given to them for the content in wikipedia and also that the content is open for modification. Will this work? Donno. I think the best would be to get themselves involved here, understand the wiki philosophy and then start writing articles or atleast give their comments on articles related to their expertise. The first thing we could do is to list out experts (or te so-called !) and let them know formally or informally about wiki and how they could contribute and why we need them. The rest in their hands !!!

Then its true and I am glad that there have been a good number of people from noolakam project to wikipedia. We have to think about more such ideas to link and make wiki work together with other projects --ரவி 11:13, 1 மே 2006 (UTC)Reply

I invited number of "experts" at Tamilzmanam to contribute to TWpedia. Most are very positive, and have suggested that they would do so at some future point. There exist number of barriers to contributing to TWpedia.

Barriers to TWpedia for Experts

  1. Some experts simply do not have sufficient know - how about how to edit TWpedia, and/or how TWpedia works or whether it works.
  2. Some consider contributing to TWpedia as a formal exercise, and are not aware of how articles evolve in TWpedia.
  3. Some experts find it difficult to express their expertise in Tamil.
  4. Many are time constrains.
  5. Experts from some fields such as Medicine and Law are not well represented at Tamilzmanam, and probably would have to be approached using different methods.

Solutions:

  1. I think implementing Sundars idea would certainly be the starting point. Experts who may not want to tie themselves to TWpedia activities for long term can be invited, reconized, and enabled to share their thoughts.--Natkeeran 13:51, 1 மே 2006 (UTC)Reply

தனது கட்டுரைகளை பயன்படுத்த வெங்கட் அனுமதித்துள்ளார்...!

தொகு

mayuran,

A quick note. I guess I was not clear in my previous reply.

I do not have any objection to make my articles available at Wikipedia or even write one as necessary. The suggestion of rebuilding thamizhlinux.org is addition to writing general articles for wikipedia. More technical articles (such as installing keyboard drivers for various distros like ubuntu, mandriva, fedora are better suited for a dedicated site) - while general article about enablign tamil can also be there at wiki. Hope I am clear now.

anpudan Venkat

That's cool. Mayuran, i hope u can transfer appropriate articles and text from his collection to wikipedia. IF I can can help in wikifying, i will :) He was correct that manual like stuff will not be suitable for wikipedia. But even such things can be included in wikibooks where we can write manuals. May be we can give links from the thamizlinux site to wikibooks site like u have done from noolakam site. so tamil wikibooks can have a good colletion of manuals on enabling tamil online. How about this idea :)? Guess, not bad :) !--ரவி 19:53, 4 மே 2006 (UTC)Reply

Linux only computer store in Canada. Not that many around. The only one I know! I thought you might be curious. --Natkeeran 16:47, 4 மே 2006 (UTC)Reply

பாராட்டு

தொகு

முழுவீச்சில் பங்களிக்கத் துவங்கிவிட்டீர்கள் போலிருக்கிறது. நன்று. :-) -- Sundar \பேச்சு 06:38, 26 ஜூன் 2006 (UTC)

விலை

தொகு

விலை விரைவில் காலத்துக்கும் இடத்துக்கும் ஏற்ப மாறக்கூடியது. அப்படிப்பட்ட தகவல் விக்கிப்பீடியாவில் தேவையற்றது. கருத்தில் எடுக்க. நன்றி. --Natkeeran 04:15, 28 ஜூன் 2006 (UTC)

Capital Letters

தொகு

மயூரன் விக்சனரியில் words are not capitalized, unless they are nouns that need to be capitalized.

mother correct
Mother incorrect
run correct
Run incorrect
Tamil correct

--Natkeeran 17:06, 30 ஜூன் 2006 (UTC)

பயனர்:நற்கீரன் பேச்சு பக்கத்தில் உங்கள் தகவலுக்கு நன்றி. - வைகுண்ட ராஜா 20:14, 30 ஜூன் 2006 (UTC)

கட்டுரை உருவாக்க வேண்டுதல்

தொகு

மயூரன், ஃபிடல் காஸ்ட்ரோ, கார்ல் மார்க்ஸ் குறித்த கட்டுரைகளை இயன்றால் உருவாக்கித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்--ரவி 19:06, 23 ஜூலை 2006 (UTC)

என்னடாப்பா இது ஏதாவது திட்டம்போட்டு தாக்குதல் நடத்துகிறீர்களா? ;-) இன்றைக்கு அதிகாலைதான் தூக்ககலக்கத்தோடு என்னை எழுப்பி கோபி தொலைபேசியில் இதே விஷயத்தை கேட்டான். மார்க்சிய மெய்யியலாளர்கள் பற்றிய கட்டுரைகளை உருவாக்க ஆசைதான். கட்டாயம் செய்கிறேன். நன்றி ---மு.மயூரன் 19:29, 23 ஜூலை 2006 (UTC)

திட்டமெல்லாம் இல்லை, மயூரன். இவ்விரு முக்கிய மனிதர் பற்றிய கட்டுரைகளும் என் விருப்பக்கட்டுரைகளாக நீண்ட நாட்களாக என் பயனர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளேன். யாரும் உருவாக்கின பாடில்லை. மார்க்சிய ஈடுபாடு கொண்ட நீங்கள் இதை எழுதினால் நன்றாக வரும் என்று ஒரு ஆசை..கோபிக்கும் எனக்கும் ஏதும் waves ஓடும் போல..ஆனால், காலங்காத்தால எழுப்புறது எல்லாம் 2 much தான் ;)--ரவி 20:24, 23 ஜூலை 2006 (UTC)

ஆர்குட் (Orkut) பற்றிய விரிவான கட்டுரை எழுதித் தர முடியுமா? இப்பொழுது உலகம் முழுக்க இந்தப் பித்து தான் பிடித்து ஆட்டுகிறது போலும் !--ரவி 16:16, 16 ஆகஸ்ட் 2006 (UTC)

எளிய முறையில் விக்கிப்பீடியாவை அறிமுகம் செய்தல்

தொகு

எளிமையான முறையில் விக்கிப்பீடியாவை அறிமுகம் செய்யும் நோக்கோடு எனது வலைப்பதிவில் கட்டுரைத்தொடர் ஒன்றினை எழுத உத்தேசித்துள்ளேன். அந்த கட்டுரைகளை பார்த்து, செய்யவேண்டிய திருத்தங்கள், சேர்க்கவேண்டிய தகவல்கள் போன்ற ஆலோசனைகளை வழங்கி கட்டுரையை முழுமைப்படுத்த உதவுமாறு வேண்டுகிறேன். --மு.மயூரன் 16:03, 28 ஜூலை 2006 (UTC)

நல்ல முயற்சி. உங்களுக்கு பின்வரும் பக்கத்தில் உள்ள தகவல்கள் பயன்படலாம் Wikipedia:தமிழ் விக்கிப்பீடியா அறிமுகப்படுத்தல். மேலும், உங்கள் வலைப்பூவையையும் அங்கு சேர்துவிடுங்கள். நன்றி. --Natkeeran 16:45, 28 ஜூலை 2006 (UTC)

நல்ல கட்டுரை மயூரன். தொடர்ந்து எழுதுங்கள். தேவைப்படும்போது எனது கருத்துக்களைத் தெரிவிக்கிறேன். Mayooranathan 17:30, 28 ஜூலை 2006 (UTC)

மயூரன், இன்று உங்கள் வலைப்பதிவின் பல பக்கங்களை படித்தேன். மிக கனமான விஷயங்களைத் தெளிவுடன் எழுதி இருக்கிறீர்கள். நன்று. விக்கிப்பீடியா தொடரின் அடுத்த பாகத்தை எதிர்ப்பார்க்கிறேன். தொடர் முடிவில் பிற விக்கி தமிழ் திட்டங்கள் குறித்தும் நீங்கள் சிறிதளவாவது தெரிவித்தால் நன்றாக இருக்கும். முன்பொருமுறை, ற ர ட பயன்பாடு உங்கள் வலைப்பதிவில் படித்ததாக ஞாபகம். இப்பொழுது அப்பதிவை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. இயன்றால், அதற்கான இணைப்பை Wikipedia பேச்சு:நடைக் கையேடு (எழுத்துப்பெயர்ப்பு) பக்கத்தில் இருந்து தரவும். நன்றி--ரவி 13:33, 16 ஆகஸ்ட் 2006 (UTC)

நன்றி ரவி, சற்றே நேர, மனநிலை நெருக்கடிகளுக்குள் இருக்கிறேன். உங்கள் மடலும் கிடைத்தது. இரண்டொரு நாட்களில் பதிலளிக்கிறேன். --மு.மயூரன் 18:25, 17 ஆகஸ்ட் 2006 (UTC)

வாக்குச் சேகரிப்பு :)

தொகு

மயூரன்,

  • ஏப்ரல் 2006லேயே தமிழ் விக்கி செய்திகள் தளத்தை தொடங்குவது குறித்த வேண்டுதலை உமாபதி இங்கு விடுத்துள்ளார். எனினும் உரிய கவனம் பெறாததால் இன்னும் போதுமான ஆதரவு வாக்குகள் பெறாமல் இருக்கிறது. அங்கு சென்று வாக்களிக்குமாறு வேண்டுகிறேன்.

மேற்கண்ட தளங்களில் பயனர் பக்கங்களை உருவாக்கும் போது மறக்காமல் உங்கள் விக்கிப்பீடியா பயனர் பக்கங்களுக்கான இணைப்புகளை தாருங்கள். --ரவி 10:09, 2 ஆகஸ்ட் 2006 (UTC)

firefox நீட்சி

தொகு

விக்கி பக்கத்தை html வடிவத்துக்கு மாற்ற நீட்சி அல்லது வலைப்பக்க சேவை ஏதும் உள்ளதா? இதன் மூலம் பல விக்கிப்பீடியா கட்டுரைகளை வலைப்பதிவுகளில் எளிதில் பதிக்கலாம்--ரவி 20:34, 24 ஆகஸ்ட் 2006 (UTC)

எமது பாடசாலை

தொகு

எமது பாடசாலையான கோணேஸ்வரா இந்துக்கல்லூரிக்கு ஒரு கட்டுரை ஆரம்பித்துள்ளேன். இயலுமானால் கட்டுரையை விரிவாக்குவதுடன் படம் ஒன்றும் போடவும்.--ஜெ.மயூரேசன் 11:05, 31 ஆகஸ்ட் 2006 (UTC)

Return to the user page of "மு.மயூரன்/தொகுப்பு 1".