வாருங்கள், Babauever! உங்களை வரவேற்கிறோம்.

வாருங்கள் Babauever, உங்களை வரவேற்கிறோம்!
வாருங்கள் Babauever, உங்களை வரவேற்கிறோம்!
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். கட்டுரைப் பக்கங்களில் உங்கள் தொடர்ச்சியான பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். நன்றி.

--Theni.M.Subramani 08:19, 4 மே 2010 (UTC)Reply

சோடாபாட்டில்/குறும்பன்,

உங்கள் பதில்களுக்கு நன்றி. நான் கூகுள் டூல்கிட்டைப் பயன்படுத்தினாலும், நேரடியாக 'ஷேர்' செய்தோ அல்லது காப்பி செய்து நோட் பேட்டில் போட்டு பின்னர் அதிலிருந்து காப்பி செய்து பதிவேற்றுகிறேன். இரண்டில் எது குறைவான தொழில்நுட்ப பிரசினையைக் கொடுக்கும்? அது தவிர நேரடியாக தட்டச்சு செய்வதையும் பரிசோதிக்கிறேன். மூன்றாவதாக எம் எஸ் டூல்கிட்டையும் முயற்சி செய்தேன். தாங்க முடியல! விட்டுட்டேன்.

நேரடியாக தட்டச்சு செய்து மொழிபெயர்ப்பது எனது இயல்பான வேகத்தினை மட்டுப்படுத்துகிறது என்று கருதுகிறேன். நான் இ-கலப்பை யூனிகோடையே தட்டச்சு செய்யப் பயன்படுத்துகிறேன். எனவே கூகிள் டூல்கிட் எனக்கு அதிக வசதியாக உள்ளது.

மேலும் நான் கூறிய இரு பங்களிப்பு யோசனைகள் பற்றி நீங்கள் எதுவும் கூறவில்லை. ஏதேனும் பதில் உண்டா?

எனது அலுவல் பெயர் ராம். எனவே ராம் என்று அழைக்கவும். பாபு என்பது வீட்டுப் பெயர். தயவு செய்து அதனைத் தவிர்க்கவும்.

உங்கள் பதில் எதிர்பார்க்கும்.

ராம்.

இராம், கூகுள் டூல்கிட்டைப் (எந்த டூல்கிட்டாக இருந்தாலும்) பயன்படுத்தி மொழிபெயர்ப்பதில் தவறில்லை, ஆனால் கட்டுரையை விக்கியில் பதிவேற்றும் முன் படித்து திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும். மீண்டும் படித்து திருத்துவதன் மூலம் ஜூனூன் தமிழை தடுக்கலாம். ஆங்கில சொற்றொடர்களை தமிழுக்கு ஏற்றவாறு மாற்றி எழுதினால் தான் மற்றவர் எளிதாக படித்து புரிந்து கொள்ளமுடியும்.

நீங்கள் தேடும் கட்டுரை இங்கு இல்லையெனில் அதை நீங்களே தொடங்கலாம். --குறும்பன் 21:22, 29 நவம்பர் 2010 (UTC)Reply

மொழிமாற்றம்

தொகு

நீங்கள் உருவாக்கும் கட்டுரைகள் கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி கொண்டு உருவாக்குகிறீர்களா? இங்கே த. விக்கியில் கூகுள் நிறுவனம் ஒரு மொழிபெயர்ப்புத்திட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. நீங்கள் அதனைச் சார்ந்த மொழிபெயர்ப்பாளரா. உங்கள் முதல் கட்டுரை டூல்கிட் மூலம் உருவாக்கப்பட்டதால் இந்த ஐயம். அருள் கூர்ந்து இந்த ஐயங்களை தெளிவு படுத்துங்கள்--சோடாபாட்டில் 17:14, 25 நவம்பர் 2010 (UTC)Reply

நான் கூகுள் மொ.க மூலம் மொழிபெயர்ப்புச் செய்கிறேன். 2 மாதங்களுக்கு முன்னால் கூகுள் கருவி சரியாக இயங்கவில்லை. தற்போது சரியாகிவிட்டது போல் தோன்றுகிறது. தொழில் நுட்ப பிரச்சினைகள் இருப்பதை அறிவேன், தேவையென்றால் நீக்கி விடு மீண்டும் பதிவேற்றம் செய்யட்டுமா?. நான் தனித்தியங்கும் மொழிபெயர்ப்பாளன். கூகுள் திட்டத்தில் பங்கேற்க விருப்பம். உங்கள் தரக்கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு, கூகுளும் விரும்பினால் பணியாற்றுகிறேன். பிற பணிகளும் இருப்பதால் மாதம் 10,000 சொற்களுக்கு மேல் மொழிபெயர்க்க தற்போது இயலாது. இது சாத்தியமா? எனக்குத் தெரிவியுங்கள். எனது மின்னஞ்சல் முகவரி babu.ever@hotmail.com ஆகும். மொழிபெயர்க்கவும் பதிவேற்றவும் மட்டுமே கூகுள் மின்னஞ்சலைப் பயன்படுத்துகிறேன்.

என்னால் தமிழ் விக்கிபீடியாவிற்கு சிறிதளவு உதவ முடியும்.

நிதியுதவி; நான் இணை சினிமா சங்க உறுப்பினன். சென்னையைச் சேர்ந்த ஐ சி எ எஃப் சங்கம் வருடந்தோறும் உலக திரைப்பட விழா நடத்தி வருவதை நீங்கள் அறிந்திருக்கலாம். இவ்வருடமும் நடக்க உள்ளது. அங்கு நீங்கள் அரங்கம் அமைக்கலாம். அதற்கு முன்னால் உலகளவில் அல்லது இந்தியாவில் புகழ் பெற்ற இயக்குநர்கள், கலைஞர்களைப் பற்றி தமிழ் விக்கியிலுள்ள கட்டுரைகளைத் தொகுத்து பட்டியலிடவும். நான் திரைப்பட விழா அமைப்பாளரின் செல்பேசியின் எண்ணைக் கொடுக்கிறேன். நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.

கட்டுரைப்பட்டியல்; நான் சிறிது நாட்களுக்கு முன்னால் சில தேடல்களைச் செய்தப்போது பல நபர்கள், நிகழ்வுகள் பற்றிய கட்டுரைகளை தமிழில் காணாமல் ஏமாற்றமடைந்தேன். என்னிடம் ஒரு பட்டியல் உள்ளது. உங்கள் மின்னஞ்சலைக் கொடுத்தால் அதனை அனுப்பி வைக்கிறேன்.

எனது கட்டுரைத் தரம் பற்றியும் தெரிவிக்க வேண்டுகிறேன்.

இப்படிக்கு அன்புடன் babauever

babu,
கூகுள் மொழிபெயர்ப்புக்கு மொ. பெயர்ப்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதை விக்கி சமுதாயம் தனித்து செய்வதில்லை. கூகுள் கொடுக்கும் மொ. பெ. பட்டியலில் இருந்து தரமானவர்களை மட்டும் கணித்து அனுமதிக்கிறோம். கூகுளின் சார்பாக இதற்கு நியமிக்கப்பட்டிருக்கும் ஒருங்கிணைப்பாளர் பயனர்:Maheswari. கூகுள் மொழிபெயர்ப்பாளராக வேண்டுமெனில் பணிமுறையில் நீங்கள் கூகுளைத் அணுக வேண்டும். அவர்கள் உங்களை பணிக்கமர்த்தினால், பின் நாங்கள் உங்கள் மொழி பெயர்ப்புத் திறனை மதிப்பிட்டு அனுமதிக்கலாமா வேண்டாமா என்று முடிவெடுப்போம். தொழில்முறையில் பணிக்கமர்த்துவதை விக்கிப்பீடியா செய்வதில்லை. நீங்களாக தனித்து கட்டுரைகளை உருவாக்குவதில் (கூகுள் அமைப்பு சார்பன்றி) எங்களுக்கு மறுப்பில்லை. ஆனால் மொ.பெ கருவி இன்னும் செம்மைப்படுத்தப்படுவதில்லை என்பதால், அப்படியே டூல்கிட்டை பயன்படுத்தி மொழிபெயர்க்கப்படும் கட்டுரைகள் ஆங்கில தொடர் வாக்கியங்களை கொண்டு அமைகின்றன. இதனால் பெரும்பாலும் அதனை நாங்கள் அனுமதிப்பதில்லை. நீங்கள் பதிவேற்றிய அண்டார்டிக் திட்டம் கட்டுரை அது போன்று தான் இருந்தது. ஆனால் அர்த்தசாஸ்திரம் கட்டுரை தரமாக இருந்ததால், முன்னதை நீக்கி விட்டு பின்னதை மட்டும் வைத்துள்ளேன்.
சுருக்கமாக - 1) விக்கிப்பீடியா மொ.பெ தொழில்முறையாக யாரையும் பணிக்கமர்த்துவதில்லை. கூகுள் தரும் மொ. பெயர்ப்பாளர்கள் பட்டியலிலிருந்து தெரிவு மட்டும் செய்கிறது. அதிலும் பல கட்டுப்பாடுகள் உள்ளன 2) தனிப்பட்ட முறையில் நீங்கள் தன்னார்வலராக கட்டுரைகள் உருவாக்குவதில் எங்களுக்கு மறுப்பு கிடையாது. ஆனால் டூல்கிட் செம்மைப்பட இன்னும் பல காலம் ஆகுமென்று கருதுவதால், அது வரை அதனைப் பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
--சோடாபாட்டில் 18:05, 27 நவம்பர் 2010 (UTC)Reply
வணக்கம் babauever, கூகுள் டூல்கிட் கொண்டு இப்போதைக்கு கட்டுரை வேண்டாம் ஏனெனில் அது செம்மைப்பட இன்னும் பல காலம் ஆகுமென்று கருதுவதால் தான். தங்களின் சரஸ்வதி நதி கட்டுரையை கண்டதால் இக்கோரிக்கை. --குறும்பன் 19:12, 27 நவம்பர் 2010 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Babauever&oldid=639728" இலிருந்து மீள்விக்கப்பட்டது