--Musanage (பேச்சு) 09:42, 7 திசம்பர் 2012 (UTC)== வாருங்கள்! == வாருங்கள், Musanage, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!Reply

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--Kanags \உரையாடுக 12:20, 15 நவம்பர் 2012 (UTC)Reply

மேற்கோள்கள்

தொகு

வணக்கம், மேற்கோள்களும் குறிப்புகளும் தொடர்பாக நான் செய்த மாற்றங்களை நான்மணிக்கடிகை பக்கத்தில் பாருங்கள். மேலும் சந்தேகம் இருந்தால் தயங்காது கேளுங்கள். உரையாடல் பக்கங்களில் உங்கள் e-கையொப்பத்தை இடுவதற்கு ~~~~ என எழுதினால் போதும். உங்கள் கையொப்பம் தேதி, நேரத்துடன் பதிந்து விடும்.--Kanags \உரையாடுக 07:49, 7 திசம்பர் 2012 (UTC)Reply

அன்புடைய கனெகஸ் அவர்களே தங்களின் உதவிக்கு நன்றி. நான்மணிக்கடிக்கையின் மேற்கோள்களை சீர் செய்ய உங்கள் ஆலோசனயும் உதவியும் தக்க நேரத்தில் கிடைத்தன. மிக்க மகிழ்ச்சி. தங்களின் ஆலோசன்ப்படி மேலும் முயற்சி செய்து மேற்கோள் காட்டிடும் உக்திகளைப் பயன் படுத்துவேன். உங்களின் ஆலோசனைப்படி என்னைப் பற்றிய ஒரு சில செய்திகளை எனது பயனர் பக்கத்திலே கொடுத்திருக்கிறேன். மற்றும் தமிழ் விக்கிக் கட்டுரைகள் தரமுயருவதற்கு உக்திகள் வகுக்கப்பட்டிருக்கின்றனவா? Particularly, owing to the collaborative editing system followed, readability of content will suffer. Is there any way of overcoming problems arising as a result of collaborative editing in use. How can we bridge the gap between stylistic differences found in the language used by collaborative editors of the Tamil wikipedia. If you have any information on the above kindly send me for reference. மூசனேஞ்

உங்கள் கேள்வியை ஆலமரத்தடியில் சேர்த்திருக்கிறேன். வேறு பயனர்களும் தமது கருத்தைக் கூறுவர். நீங்கள் கூறிய கருத்து ஏற்றுக் கொள்ளக்கூடியதே. பலர் ஒரு கட்டுரையைத் தொகுக்கும் போது கட்டுரை நடை ஒரே கட்டுரையில் வேறுபடலாம். உதாரணத்திற்கு நான்மணிக்கடிகை கட்டுரையும் அவ்வாறே உள்ளது போல் எனக்குத் தெரிகிறது. அனுபவமுள்ள விக்கிப் பயனர்கள் இக்கட்டுரைகளைக் கவனித்து விக்கி நடைக்கு மாற்ற வேண்டும். அதுவே விக்கியில் கடைப்பிடிக்கப்படும் பொதுவான நடைமுறை. ஆனால் எவ்வளவு தூரம் அது சாத்தியமானது என்பது கேள்விக்குரியதே. மேலும், உங்கள் கையொப்பத்தை இடுவதற்கு ~ என்பதை நான்கு தடவை தொடர்ந்து எழுதினால் போதும். தங்களைப் பற்றிய தகவல்களைத் தந்தமைக்கு நன்றி.--Kanags \உரையாடுக 11:15, 7 திசம்பர் 2012 (UTC)Reply

--Musanage (பேச்சு) 06:11, 10 திசம்பர் 2012 (UTC)--Musanage (பேச்சு) 06:11, 10 திசம்பர் 2012 (UTC)--Musanage (பேச்சு) 06:11, 10 திசம்பர் 2012 (UTC)--Musanage (பேச்சு) 06:11, 10 திசம்பர் 2012 (UTC)அன்புடைய கனெகஸ் அவர்களே. நான் குறிப்பிட்டிருந்த கருத்தை பலரின் கவனத்திற்கு கொண்டு வந்தது குறித்து மகிழ்ச்சி. கட்டுரை தொகுப்பாளர்களுக்கு நடைச்சீரமைப்பு குறித்து ஒரு சில உதவிக்குறிப்புகள் (guidance) வழங்கிடலாம். ஒரு கட்டுரைக்கு தேவையான கருத்துகள் வழங்குவது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அக்கட்டுரைக்கு ஏற்ற கட்டுரை முழுவதிலும் ஒத்து வரத்தக்க ஒரே மாதிரி நடையைக் கொண்ட கட்டுரையை வழங்குவது. கட்டுரையை தொடங்குவார் கருத்தை வைத்துக்கொண்டு அவரின் எழுத்துநடையை மொத்த கட்டுரையின் எழுத்து நடையோடு முடிந்த அளவுக்கு ஒத்து வரச் செய்யலாம். இது எல்லோராலும் செய்வது இயலாத காரியம் என்றால் நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல அனுபவம் உள்ளவர் மட்டும் இதைச் செய்திடலாம். இதற்கு ஏற்றவர் என்று தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு தனிச் சிறப்புப் பயிற்சியும் அளித்திடலாம். ஒரு கட்டுரையின் அங்கங்கள் யாவை? அவற்றைப்பற்றிய குறிப்பு வழங்கி இருக்கிறோமா என்பதையும் ஒருவரால் எழுதப்படும் கட்டுரைக்கும், பலரின் சீராக்கும் முயற்சிகளால் உருவாகும் கட்டுரைகளுக்கு இடையில் உள்ள வேறுபாடுகளை வெளிக்கொணர்வதுவும் நலமாக இருக்கும். தமிழ் விக்கி கட்டுரைகள் தரமானவையாக ஆக்க இது போன்ற முயற்சிகள் நல்ல பலனை அளித்திடலாம். அன்புடன் மூசனேஜ்Reply

பகுப்புகள்

தொகு

பகுப்புகளில் கட்டுரைகளை இணைப்பதற்கு அந்தந்தக் கட்டுரைகளின் அடியில் பகுப்பின் பெயரைச் சேருங்கள். எ+கா: பதிற்றுப்பத்து கட்டுரையின் அடியில் [[பகுப்பு:13 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள்]] என எழுதிச் சேமிக்க வேண்டும். மேலும், பதிற்றுப்பத்து 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த நூல் என்பதற்கு உங்களிடம் ஆதாரம் உள்ளதா? குறிப்பிட்ட கட்டுரையில் அதற்கான குறிப்புகள் எதுவும் காணப்படவில்லையே.--Kanags \உரையாடுக 07:40, 13 திசம்பர் 2012 (UTC)Reply

--Musanage (பேச்சு) 11:54, 13 திசம்பர் 2012 (UTC)--Musanage (பேச்சு) 11:54, 13 திசம்பர் 2012 (UTC)--Musanage (பேச்சு) 11:54, 13 திசம்பர் 2012 (UTC)--Musanage (பேச்சு) 11:54, 13 திசம்பர் 2012 (UTC) அன்புள்ள கனெக்ஸ் அவர்களே பதிற்றுப்பத்து 13 நூற்றாண்டு காலத்தது என்று பதிற்றுப்பத்து கட்டுரையில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. இது கடைச்சங்க காலத்தைசேர்ந்ததாக இருக்கலாம் என்றே குறிக்கப்பட்டிருக்கிறது. இதன் காலம் மேலும் ஆராய்ச்சிக்குரியது. இது தொடர்பான கருத்துக்கள் ஏதும் கிடைத்தால் தக்க பதிவு பின்னர் செய்திடலாம். அன்புடன் முயூசனேஜ்Reply

--Musanage (பேச்சு) 04:50, 1 ஏப்ரல் 2013 (UTC)அன்புடைய கனெக்ஸ் அவர்களே உங்களின் அன்பான கவனத்தை பதிற்றுப்பத்து கட்டுரைக்கு ஈர்க்க விரும்புகிறேன். அக்கட்டுரையில் கட்டுரைக்கு சிறப்பு நல்கும் ஆதாரத்துடன் நிறுவப்பட்டுள்ள பகுதியை ஏற்புடைமை அற்ற காரணத்துக்காக நீக்கப்பட்டுள்ளது. அக்கட்டுரையின் விவாதப்பகுதியைப் படித்து உங்கள் கருத்தை வழங்கினால் நலமாக இருக்கும் என்று உங்களை அன்புடன் வேண்டிக்கொள்கிறேன். அன்புடன் --Musanage (பேச்சு) 04:50, 1 ஏப்ரல் 2013 (UTC)

முதல் கட்டுரைக்கு நன்றி

தொகு

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவதற்கு நன்றி

வணக்கம், Musanage!

 
உங்கள் கட்டுரையை பயிர் போல் வளர்ப்போம், காப்போம்! வித்திட்டதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள்.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 61ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் கட்டுரைகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

--இரவி (பேச்சு) 08:26, 2 பெப்ரவரி 2013 (UTC) --Musanage (பேச்சு) 07:55, 5 பெப்ரவரி 2013 (UTC) அன்புடைய இரவி டிரீம்ஸ் அவர்களே. எனது முதல் கட்டுரையை ஏற்று செய்தி அனுப்பியமை குறித்து நன்றி. தமிழ் விக்கி கட்டுரை பங்களிப்பு குறித்த செய்திகளை எங்கு அளித்திட்டால் உங்கள் பதில் கிடைக்கும் என்பதை தெரிவிக்க வேண்டுகிறேன். அன்புடன் மூசனேஜ்--Musanage (பேச்சு) 07:55, 5 பெப்ரவரி 2013 (UTC)

தமிழ் விக்கப்பீடியர் சமூகத்துடன் பொதுவான கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள ஆலமரத்தடி என்ற பக்கத்துக்கு வரலாம். விக்கியில் எப்படி எழுதுவது என்பது குறித்து உதவி கோர, ஒத்தாசைப் பக்கத்துக்கு வரலாம். குறிப்பாக, ஏதேனும் ஒரு பயனரிடம் தகவல் தெரிவிக்க அவரது பேச்சு (உரையாடல்) பக்கத்துக்கு வரலாம். இதே போல் ஒவ்வொரு கட்டுரைக்கும் ஒரு பேச்சுப் பக்கம் உண்டு. அங்கு, தனிப்பட்ட கட்டுரையைப் பற்றிய தகவலைத் தரலாம். பொதுவாக, எங்கு இட்டாலும் கவனித்து உரிய பதிலை அளித்துவிடுவோம் :)--இரவி (பேச்சு) 14:16, 5 பெப்ரவரி 2013 (UTC)
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னையில் முதன்மை ஆய்வு வளமையராக நீங்கள் பணிபுரிவது அறிந்து மகிழ்ச்சி. இது போன்ற அனுபவம் வாய்ந்தவர்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பது கண்டு மகிழ்கிறோம். தொடர்க உங்கள் ஆக்கப்பணி--இரவி (பேச்சு) 14:17, 5 பெப்ரவரி 2013 (UTC)

--117.216.36.219 17:03, 5 பெப்ரவரி 2013 (UTC)--117.216.36.219 17:03, 5 பெப்ரவரி 2013 (UTC) அன்புடைய இரவி டிரீம்ஸ் அவர்களே தங்களின் துரிதமான பதில் கண்டு மிக்க மகிழ்ச்சி. நீங்கள் அளித்துள்ள தகவல்கள் என்க்கு மிகவும் பலனுள்ளவனவாக இருக்கும். தேவைக்கேற்ப தங்களுடன் மீண்டும் தொடர்பு கொள்ள விழைகிறேன். மற்றும் உலகளவில் தமிழ் சார்ந்த தகவல்களை பெரிய அளவில் எடுத்துச் செல்ல நமக்குக்கிடைத்துள்ள அரிய சாதனம் நமது ஆங்கிலம் மற்றும் தமிழ் விக்கிகளே. அவை வளர வாழ்த்தும் தங்களன்புள்ள முயூசனேஜ் --117.216.36.219 17:03, 5 பெப்ரவரி 2013 (UTC)--117.216.36.219 17:03, 5 பெப்ரவரி 2013 (UTC)

--Musanage (பேச்சு) 04:50, 1 ஏப்ரல் 2013 (UTC)அன்புடைய இரவி டிரீம்ஸ் அவர்களே உங்களின் அன்பான கவனத்தை பதிற்றுப்பத்து கட்டுரைக்கு ஈர்க்க விரும்புகிறேன். அக்கட்டுரையில் கட்டுரைக்கு சிறப்பு நல்கும் ஆதாரத்துடன் நிறுவப்பட்டுள்ள பகுதியை ஏற்புடைமை அற்ற காரணத்துக்காக நீக்கப்பட்டுள்ளது. அக்கட்டுரையின் விவாதப்பகுதியைப் படித்து உங்கள் கருத்தை வழங்கினால் நலமாக இருக்கும் என்று உங்களை அன்புடன் வேண்டிக்கொள்கிறேன். அன்புடன் --Musanage (பேச்சு) 04:50, 1 ஏப்ரல் 2013 (UTC)

யார் முந்தியவர்?

தொகு

ஐயா. நீங்கள் பதிற்றுப்பத்தின் பேச்சுப்பக்கத்தில் சேரரே மூவேந்தரில் முன்னோர் என குறிப்பிட்டிருந்தீர்கள்.அதன்பிறகு நான் அங்கிட்ட கருத்துகள் உங்களுக்கு எட்டவில்லை என நினைக்கிறேன். உங்களுக்கு எந்த கட்டுரையில் அதிக ஆர்வமிருந்தாலும் அதைப்பற்றி அதிகம் விடயங்கள் தெரிந்திருந்தாலும் அப்பக்கத்தின் மேலுள்ள வரலாற்றைக் காட்டவும் பகுதியின் அருகில் இருக்கும் விண்மீனை அழுத்தி உங்களது கவனிப்புப் பட்டியலில் சேர்த்திடுங்கள். நீங்கள் எந்தெந்த கட்டுரையில் எல்லாம் அப்படிச் செய்தீர்களொ அது தொடர்பாக யார் என்ன மாற்றம் செய்திருந்தாலும் உங்களின் கவனிப்புப் பட்டியலில் வந்து விடும்.

சேரர் தான் முன்னோர் என்பது நிறுவப்பட்ட கருத்தா? எவ்வாறு என்று இப்பகுதியில் தெரிவிக்கவும். பதிற்றுப்பத்தில் குறிப்பிடப்படும் சேரர் வம்சமே புகழூர்க் கல்வெட்டிலும் வரும். புகழூர்க் கல்வெட்டில் வரும் சேரர் தலைமுறை மாங்குளம் கல்வெட்டுகளில் வரும் பாண்டியர் தலைமுறைக்கு மூன்று தலைமுறைகள் பிற்பட்டவரே.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 09:44, 21 ஏப்ரல் 2013 (UTC)

--Musanage (பேச்சு) 10:55, 22 ஏப்ரல் 2013 (UTC) அன்புடையீர் என் கவனத்தை ஈர்த்து மூவேந்தர்களில் முந்தியவர் யார் என்ற வினாவை மறு படியும் எழுப்பியது குறித்து மகிழ்ச்சி. என்னுடைய நோக்கம் சேரரின் தொன்மையை சேரர்களைபற்றிய தனித்தன்மை வாய்ந்த கட்டுரையில் அளித்திடுதல் நலம் என்பதே. நீக்கப்பட்டுள்ள காலம் குறித்த பகுதியில் சேரர்கள் கடைச்சங்க காலத்தவர் என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. அடுத்த பத்தியில் சேரர்கள் காலத்தால் முந்தியவர்களாக இருக்கலாம் என்பதற்கு ஏற்ற ஆதாரங்களுடன் நிறுவி இருந்தேன். இதற்கு ஏற்ற திருத்தங்களைச்செய்து நீங்கள் எழுப்பியுள்ள கருத்தை மனதில் கொண்டு திருத்தங்கள் செய்து அப்பகுதியை செம்மையாக்கி விடலாம் என்று நினைக்கிறேன். காலம் குறித்த கல்வெட்டு ஆராய்ச்சி செய்திகளை தக்க இடத்தில் நாம் பயன்படுத்திக்கொள்ளலாம். அன்புடன்--Musanage (பேச்சு) 10:55, 22 ஏப்ரல் 2013 (UTC)
//சேரமன்னர்கள் காலத்தால் சோழமன்னர்களைக் காட்டிலும் பாண்டியர்களை காட்டிலும் முந்தியவர்கள் என்று கருத கீழ்க்காணும் செய்திகள் வாய்ப்பளிக்கின்றன. சோழர்கள் சூரிய குலத்தவராகவும், பாண்டியர்கள் சந்திரகுலத்தவராகவும் கருதப்படும்போது, சேரர்களின் தொடக்கம் அக்னிக்கு எடுத்துச்செல்லப்படுகிறது. மூவேந்தர்களை குறிக்கும் சொற்றொடர் முதலில் சேரர்களையே இடும் வழக்கத்தைப் பெற்றிருக்கிறது. சேர, சோழ பாண்டியர் என்றே குறிப்படப்படுகிறது. மூவேந்தரை குறிக்கும் மற்றொருசொற்றொடரிலும் சேரரை முன்னே வைக்கும் பழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது. சேரரை குறிக்கும் மற்றொரு சொல் குட்டுவன் என்பதாகும். சோழரை குறிக்க செழியன் என்ற சொல்லும் பாண்டியரைக் குறிக்க செம்பியன் என்ற சொல்லும் பயன்பாட்டில் இருந்துவருகின்றன. குட்டுவன், செழியன், செம்பியன் என்ற வரிசையே ப்யன்பாட்டில் இருந்து வருகின்றது. பத்துப்பாட்டு நூல்களுல் ஒன்றாகிய சிறுபாணாற்றுப்படை என்ற நூலில் அடி 47 ல் சேரனை குட்டுவன் என்றும், அடி 63ல் சோழனை செழியன் என்றும் அடி 81ல் பாண்டியனை செம்பியன் என்றும் நூலாசிரியர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் குறிப்பிடுகிறார். </ref> சேரர்களைப்பற்றிய வரலாற்றையும், சங்க கால சமுதாய வரலாற்றையும் அளித்திடும் தனிச்சிறப்புப்பெற்றுள்ள இந்நூலின் பாட்டுடைத்தலைவர்களின் சிறப்பை அறிந்திட மேற்கண்ட செய்திகள் உதவிடும். //

மீண்டும் ஐயாவுக்கு வணக்கம். நான் மேர்குறித்த செய்தியை பத்துப்பாட்டு kaட்டுரையில் இருந்து நீக்கி சேரர் கட்டுரையிலேயே சேர்த்தuவிடுங்கள். பத்துப்பாட்டில் சேரர் தான் முன்னோர் என்னும் வாதங்களும் சிறுபாணாற்றுப்படை செய்திகளும் theவையில்லை என நினைக்கிறேன். 8ஆம் நூற்றாண்டில் குறிக்கப்பட்ட குலம் (அக்னி, சூரிய, சந்திர) சங்ககால்த்தில் எழுதப்பட்ட பதிற்றுப்பத்தில் சேர்பது தேவையில்லை. சேரர் பற்றி நீங்கள் மேற்குறித்த செய்திகள்ai தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்#காலம் பகுதியில் உள்ளது போல் சேர்த்துவிடுங்கள். அதிலுள்ள மூன்றாம் மேற்கோலில் காணப்படும் நூலில் முனைவர் வ.குருநாதன் நீங்கள் கூறிய கருத்துக்களை அப்படியே கூறியிருப்பார்.

விக்கிப்பீடியா மூன்றாம் நிலை தரவுதளம் என்பதால் ஏதேனும் நூல்களில் உள்ளதையே நாம் பதிய முடியும். அதனால் பதிற்றுப்பத்தில் நான் மேற்கூறியவற்றை வெட்டி அதை சேரர் கட்டுரையில் சேர்த்து அதற்கு மேற்கோளாக நான் கூரிய நூலையும் சேர்த்துவிடுங்கள். அப்போது அது விக்கிக்கு ஏற்ப வடிவ மாற்ரம் செய்யப்பட்டு விடும். நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:33, 22 ஏப்ரல் 2013 (UTC)

மேலும் ஒரு குழப்பம் நிங்கள் சோழரை செழியன் என்றும் பாண்டியரை செம்பியர் என்ரும் மாற்றி தட்டச்சிட்டு இருக்கிறீர்கள் என நினைக்கிறேன். அதை தவிர்த்து சோழரை செம்பியர் என்றும் பாண்டியரை செழியன் என்றும் தட்டச்சிடுவதே சரி என்பதை நினைவுருத்துகிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:38, 22 ஏப்ரல் 2013 (UTC)

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters

தொகு

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:35, 30 சூன் 2021 (UTC)Reply

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Musanage&oldid=3184518" இலிருந்து மீள்விக்கப்பட்டது