பேச்சு:பதிற்றுப்பத்து

Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Sengai Podhuvan in topic நன்றி
பதிற்றுப்பத்து என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள் தொகு

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 01:51, 14 மே 2007 (UTC)Reply

பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள் தொகு

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 01:51, 14 மே 2007 (UTC)Reply

இவற்றையும் பார்க்கவும் தொகு

இவற்றையும் பார்க்கவும் தலைப்பில் கடைசியாகத் தொகுக்கப்பட்டுள்ள உள்ளடக்கங்களைச் சரிபார்க்க வேண்டும். தமிழறிந்த யாரேனும் இதைச் செய்யவும்.--பரிதிமதி 07:08, 17 ஜூலை 2010 (UTC)

கடைசியாகச் சேர்க்கப்பட்டவை மூலப்பாடல்களும் அவற்றுக்கான உரையும் ஆகும். இவை பொதுவாக விக்கிப்பீடியாக் கட்டுரைகளில் இடப்படுவதில்லை. இணைப்பு வேண்டுமானால் கொடுக்கலாம். அதனால் அவற்றை நீக்கியுள்ளேன். --மயூரநாதன் 09:44, 17 ஜூலை 2010 (UTC)
இங்கு செய்திச்சுருக்கங்கள் என்ற தலைப்புகளில் மூல உரைகளை பயனர் சென்கை பொதுவன் அவர்கள் சேர்த்து வருகிறார். இவை இங்கு இடம்பெறலாமா அல்லது அவை விக்கிமூலத்தில் இடலாமா?--Kanags \உரையாடுக 11:02, 25 ஜூலை 2010 (UTC)

முழு பாடல் / உரை விக்கிமூலத்துக்கு நகர்த்தப்பட வேண்டும்--ரவி 14:56, 25 ஜூலை 2010 (UTC)

நன்றி தொகு

  • அட்டவணை செய்து அழகு படுத்திய பெருமகனாருக்கு நன்றி.
  • பாட்டின் பெயர்களுக்கும், அடிகளுக்கும் தலைப்பாக்கக் குறிகள் இடப்பட்டிருந்தன. அவை வேண்டாதவை. எனவே அவற்றை நீக்கிக் கட்டுரையை ஒருவாறு சரிசெய்துள்ளேன். மேலும் அறிஞர்களின் குறிப்புக்கு ஏற்பச் செயல்படுவேன்.
  • விக்கியில் நுழைந்த தொடக்கத்தில் செய்திச் சுருக்கங்கள் சேர்க்கப்பட்டன. அவை இங்கு இருத்தல் அழகன்று. விரைவில் அவற்றைத் தக்கவாறு நானே மாற்றிவிடுகிறேன். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 19:24, 3 திசம்பர் 2012 (UTC)Reply
  • அறிஞர் முசங்கியின் சேர்க்கை எளிமையும் தெளிவும் மிக்கதாக உள்ளது. வாழ்த்துக்கள். மெருகூட்டி மகிழ்ந்துள்ளேன். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 11:43, 5 திசம்பர் 2012 (UTC)Reply
  • அன்புள்ள கனகசீர்! 13ஆம் நூற்றாண்டு பகுப்பிணைப்பு பிழை. எனவே நீக்கப்பட்டது. அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 07:33, 13 திசம்பர் 2012 (UTC)Reply

பட்டியல்களில் மரபு வழி வரிசை தொகு

--Musanage (பேச்சு) 09:36, 21 மார்ச் 2013 (UTC) சங்க இலக்கிய நூல்களைக் பட்டியலிட்டுக்குறிக்கும் போது இதுவரை பின்பற்றப்பட்டு வந்த மரபைக் காப்பது முறையாகும். தமிழ்விடு தூதின் ஆசிரியர் கூற்றான ‘மூத்தோர்கள் பாடியருள் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் கேடுஇல் பதினெட்டு கீழ்க்கணக்கும்’ என்ற வரிசையில் குறிப்பிடுவதே நலன் பயக்கும். சங்க இலக்கியத்தை அறிமுகம் செய்யும் போது மரபில் மாற்றம் ஏற்படுத்துவது தமிழ் இலக்கியத்தை புதிதாக அறிய விரும்புவார்க்கு எளிதாக இருக்காது.எதிர்பாராத சிரமங்கள் சிலவற்றைக்கொடுக்கும். எனவே மரபு வழிப் பட்டியல் வழங்குவது இன்றியமையாதது. மற்றும் பத்துப் பாட்டு நூல்கள் வரிசையை மாற்றுவது தேவையற்ற சிரமத்தை இலக்கிய ஆர்வலர்களுக்கு ஏற்படுத்தும். இதற்காகவே அமைக்கப்பட்டுள்ள வெண்பாக்களை மனதில் கொண்டே பட்டியல்கள் அமைப்பது இலக்கியம் கற்பாருக்கு ஏதுவாக இருக்கும். எடுத்துக்காட்டாக மூன்றவது நூலாகிய சிறுபாணாற்றுப்படை பட்டியலில் பின்னரும் கடைசியாக பல்வேறு பதிப்புகளிலும் காணப்படும் மலை படு கடாம் முன்னரும் கொடுப்பது தேவையற்ற தொல்லைகளை கொடுக்கும் என்பதை கருத்தில் கொள்ளுதல் நலம் பயக்கும். இது தொடர்பான கீழ்க்கண்ட எடுத்துக்காட்டை (பத்துப்பாட்டின் வ.உ.சா பதிப்பில் இருந்து) தமிழ் விக்கி பயணர்கள் பார்வைக்கு அளித்திட விழைகிறேன்.

’பத்துப் பாட்டின் ஏட்டுப் பிரதிகளில் குறிக்கப்பெற்றுள்ள பாடல் ஒன்று இத் தொகுதியில் (பத்துப்பாட்டு) அடங்கிய பாடல்களை முறைப்படுத்திக் கூறுகின்றது. அப்பாட்டு வருமாறு:

முருகு, பொருநாறு, பாண் இரண்டு, முல்லை, பெருகு வள மதுரைக் காஞ்சி, - மருவினிய கோல நெடுநல்வாடை, கோல் குறிஞ்சி, பட்டினப் பாலை, கடாத்தொடும், பத்து.

இப் பாடலில் குறித்த வரிசையிலேயே பல பிரதிகளிலும் பாடல்கள் அமைந்திருந்தன. அன்றியும், முதலாவது, இரண்டாவது, என எண்ணுப் பெயராலும் இவை குறிக்கப்பெற்றுள்ளன’.

எனவே அழகிய பட்டியலில் மரபு வழி முறையான வரிசையை நாம் ஏன் தமிழ் விக்கியில் ஏற்படுத்தக்கூடாது என்ற வினாவை நான் எழுப்ப விரும்புகிறேன். அருள் கூர்ந்து உரையாடுக அன்புடன் முயூசனேஜ் --Musanage (பேச்சு) 09:36, 21 மார்ச் 2013 (UTC)

காலம் தொகு

இந்நூலின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு எனக் கருதப்படுகின்றது.அனைவராலும் இது கடைச்சங்ககால நூல் என்பது ஏற்றுக்கொள்ளப்படுகிறது. கபிலர், பரணர் ஆகிய கடைச்சங்க புலவர்களால் இந்நூல் பாடப்பட்டுள்ளதால் இந்நூல் கடைச்சங்க கால நூல் என்று கூறுவதில் எந்த மாறுபாடும் இருக்கவாய்ப்பில்லை.

சேரமன்னர்கள் காலத்தால் சோழமன்னர்களைக் காட்டிலும் பாண்டியர்களை காட்டிலும் முந்தியவர்கள். சோழர்கள் சூரிய குலத்தவராகவும், பாண்டியர்கள் சந்திரகுலத்தவராகவும் கருதப்படும்போது, சேரர்களின் தொடக்கம் அக்னிக்கு எடுத்துச்செல்லப்படுகிறது. மூவேந்தர்களை குறிக்கும் சொற்றொடர் முதலில் சேரர்களையே இடும் வழக்கத்தைப் பெற்றிருக்கிறது. சேர, சோழ பாண்டியர் என்றே குறிப்படப்படுகிறது. மூவேந்தரை குறிக்கும் மற்றொருசொற்றொடரிலும் சேரரை முன்னே வைக்கும் பழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது. சேரரை குறிக்கும் மற்றொரு சொல் குட்டுவன் என்பதாகும். சோழரை குறிக்க செழியன் என்ற சொல்லும் பாண்டியரைக் குறிக்க செம்பியன் என்ற சொல்லும் பயன்பாட்டில் இருந்துவருகின்றன. குட்டுவன், செழியன், செம்பியன் என்ற வரிசையே ப்யன்பாட்டில் இருந்து வருகின்றது பத்துப்பாட்டு நூல்களுல் ஒன்றாகிய சிறுபாணாற்றுப்படை என்ற நூலில் அடி 47 ல் சேரனை குட்டுவன் என்றும், அடி 63ல் சோழனை செழியன் என்றும் அடி 81ல் பாண்டியனை செம்பியன் என்றும் நூலாசிரியர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் குறிப்பிடுகிறார்.

தொல்காப்பியத்தில் போந்தை வேம்பு ஆர் என்று மூவேந்தர் குடிப்பூ முறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் சேரர் காலத்தால் முந்தியவர் எனக் கழுதுவாரும் உண்டு. பாண்டியருக்குச் சேரரை விட பழமையான வரலாறு உண்டு. எனவே இப்பகுதி இங்கு நீக்கப்பட்டு உரையாடல் பகுதியில் வைக்கப்படுகிறது.

வரலாறு எழுதுவோருக்கு விருப்பு வெறுப்பு கூடாது. கூடியவரை அனைத்தையும் சேர்த்துப் பார்த்து எழுதுதல் வேண்டும். --Sengai Podhuvan (பேச்சு) 22:41, 21 மார்ச் 2013 (UTC)


மூசனேஜ் 23-8-2013 பேச்சு அன்புடைய செங்கைப்பொதுவனார் அவர்களே, பதிற்றுப்பத்து சேரர்களைப்பற்றிய நூல். மற்ற மூவேந்தர்களான பாண்டியர்களைப்பற்றியோ அல்லது சோழர்களைப்பற்றியோ இது போன்ற நூல் ஒன்றும் தமிழில் இல்லை. சேரரைப்பற்றிய நூலின் கட்டுரையிலே சேரர்களின் தொன்மையை தக்க ஆதரங்களுடனேயே நிறுவப்பட்டுள்ளது.நீங்கள் கொடுத்துள்ள தொல்காப்பிய எடுத்துக்காட்டில்கூட முதலாவதாக வரும் போந்தை என்பது பனம்பூ சேரர்களுடையதே. தக்க ஆதாரங்களுடன் நிறுவப்பட்டுள்ள கருத்தை எடுப்பது ஏற்புடையதன்று. சரித்திரம் எழுதுவோருக்கு விருப்பு வெறுப்பு கூடாது என்ற அறிவுரை இலக்கிய நூல் ஒன்றுக்கு தரமான கட்டுரை வரைவதே நமது நோக்கமாக கொண்டுள்ள முயற்சிக்கு தொடர்பற்றது மட்டுமல்ல, பொருத்தமற்றதும் கூட. பொருந்தாத காரணம் ஒன்றைக்கூறி கட்டுரைக்கு வ்லுவளிக்கும் ஆதாரத்துடன் நிறுவப்பட்டுள்ள பகுதியை நீக்குவது யாராலும் ஏற்க இயலாததாகையால் நீங்கள் ஏற்படுத்தியுள்ள மார்க்கம் இல்லை என்று ஆக்கப்பட்டுள்ளது.

அன்புடன் மூசனேஜ் 28-03-2013

முனைவர் முருகையன் அவர்களுக்கு தொகு

பதிற்றுப்பத்து நூலின் காலத்தைத் தனித்துச் சான்றுகளுடன் கணித்துக் காட்டுங்கள். பயன் அளிக்கும். சங்க இலக்கியம் பற்றிய பொதுவான கருத்துகளை இதில் வளர்த்தாதீர்கள். தங்களின் பெருமைக்கு இது உகந்ததாகாது. --Sengai Podhuvan (பேச்சு) 20:45, 28 மார்ச் 2013 (UTC)

  • தங்களின் சேர்க்கை இதுதான்
    • காலம்

இந்நூலின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு எனக் கருதப்படுகின்றது.அனைவராலும் இது கடைச்சங்ககால நூல் என்பது ஏற்றுக்கொள்ளப்படுகிறது. கபிலர், பரணர் ஆகிய கடைச்சங்க புலவர்களால் இந்நூல் பாடப்பட்டுள்ளதால் இந்நூல் கடைச்சங்க கால நூல் என்று கூறுவதில் எந்த மாறுபாடும் இருக்கவாய்ப்பில்லை.

சேரமன்னர்கள் காலத்தால் சோழமன்னர்களைக் காட்டிலும் பாண்டியர்களை காட்டிலும் முந்தியவர்கள். சோழர்கள் சூரிய குலத்தவராகவும், பாண்டியர்கள் சந்திரகுலத்தவராகவும் கருதப்படும்போது, சேரர்களின் தொடக்கம் அக்னிக்கு எடுத்துச்செல்லப்படுகிறது. மூவேந்தர்களை குறிக்கும் சொற்றொடர் முதலில் சேரர்களையே இடும் வழக்கத்தைப் பெற்றிருக்கிறது. சேர, சோழ பாண்டியர் என்றே குறிப்படப்படுகிறது. மூவேந்தரை குறிக்கும் மற்றொருசொற்றொடரிலும் சேரரை முன்னே வைக்கும் பழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது. சேரரை குறிக்கும் மற்றொரு சொல் குட்டுவன் என்பதாகும். சோழரை குறிக்க செழியன் என்ற சொல்லும் பாண்டியரைக் குறிக்க செம்பியன் என்ற சொல்லும் பயன்பாட்டில் இருந்துவருகின்றன. குட்டுவன், செழியன், செம்பியன் என்ற வரிசையே ப்யன்பாட்டில் இருந்து வருகின்றது[1] .

  • இது பொதுக்கருத்து அல்லவா
  • இது முன்பே சேரர் கட்டுரையில் உள்ளதே
  • கயவாகு காலம்காட்டியில் மேலும் தெளிவாக உள்ளதே
  • பதிற்றுப்பத்தோடு தொடர்பில்லாத குலம் பற்றிய செய்திகள் இங்கு வரலாமா? குலம் பற்றிய கருத்து புகழேந்திப் புலவர் வாழ்ந்த பதினைந்தாம் நூற்றாண்டில் தோன்றியது
  • இமயவரம்பன, அவன் தந்தை உதியன் போன்றோர் காலம் கி.மு. அல்லவா
  • கடையெழு வள்ளல்களில் காலத்துக்குப் பிற்பட்டது சிறுபாணாற்றுப்படை

வேண்டுகோள்

  • எதையும் எழுதத் தொடங்குவதற்கு முன்னர் விக்கியில் வலப்புறம் உள்ள கட்டத்தில் தட்டச்சு செய்து தேடுங்கள். பின்னர் எழுதுங்கள். திறமைசாலி நீங்கள் என்பதை அறிவேன். செவ்வையாக எழுதுவீர்கள்.
  • விக்கிப்பீடியா கட்டுரைகளின் தரம் வளரட்டும். உதவுங்கள். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 21:06, 28 மார்ச் 2013 (UTC)
  • தங்களின் சேர்க்கையில் உள்ள பகுதியின் அடிக்குறிப்பு
  1. பத்துப்பாட்டு நூல்களுல் ஒன்றாகிய சிறுபாணாற்றுப்படை என்ற நூலில் அடி 47 ல் சேரனை குட்டுவன் என்றும், அடி 63ல் சோழனை செழியன் என்றும் அடி 81ல் பாண்டியனை செம்பியன் என்றும் நூலாசிரியர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் குறிப்பிடுகிறார்.

யார் முந்தியவர்? தொகு

இலக்கியச் சான்றுகளை நோக்கினாலும் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்னும் மன்னனே முன்னோனாவான். பதிற்றுப்பத்து மற்றும் கயவாகு காலம்காட்டி முறைமை கொண்டு சேர வம்சத்தை கிபி. முதலிரண்டு நூற்றாண்டுகளுக்குள் அடக்குவது பொருந்தாது. காரணம் புகழூர் கல்வெட்டு மற்றும் சங்ககாலச் சேரர்களின் நாணயங்களான குட்டுவன் கோதை மற்றும் மாக்கோதை நாணயங்கள் கி.மு. 200ஆம் ஆண்டு அளவுக்கு பழமையானவை. அதனால் சங்ககாலச் சேரர் கி.மு. 300 தொட்டே இருக்கின்றனர். இதற்கு அசோகர் மற்றும் காரவேலன் கல்வெட்டுகளும் சான்று பகரும்.

ஆனால் இங்கு உள்ள கையெழுத்தெழுதிடாத பயனர் கூறுவது போல் இப்பழமை சேரருக்கு மட்டும் கிடையாது. அசோகர் மற்றும் காரவேலன் கல்வெட்டுகள் சோழர் மற்றும் பாண்டியரை சேர்த்தே கூறுகின்றன.

பாண்டியர் தான் பழமையானவர்.

இலக்கிய மற்றும் வட இந்திய கல்வெட்டுகளை நோக்குங்கால் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் தொடங்கியே மூவேந்தர் பற்றிய குறிப்புகல் கிடைக்கின்றன. தொல்லியல் சார்ந்த விடயங்களை ஆராய்ந்தோம் எனில் மாங்குளம் கல்வேட்டு கூறும் செழியன் பரம்பரையே மிகவும் முற்பட்ட வம்சமாகும். இக்கல்வெட்டுகளில் உள்ள எழுத்துகள் அசோகருக்கும் முந்தியது. பெருவழுதி நாணயம் தமிழகத்தில் மன்னர் பெயர் பொறிக்கப்பட்டதுள் பழமையான நாணயம். மேலும் பாண்டியர் கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே முத்திரைக்காசுகளை வெளியிட்டனர். ஆனால் அவற்றில் பெயரில்லை. அதனால் தமிழகத்தில் கிடைக்கும் தொல்லியல் சான்றுகளை வைத்து பார்த்தால் பாண்டியரே முன்னோராவர். ஆனால் சேரர் கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன் இருந்ததாக சான்றில்லை. தொன்மங்கள் வேண்டுமானால் இருக்கலாம்.

தொன்மவியலை வரலாறாக எடுத்துக்கொள்ளாவிடாலும் இதையும் கூறித்தான் ஆக வேண்டும். மகாபாரதத்தில் மூன்று பாண்டியர்களும், இராமாயணத்தில் ஒரு பாண்டியனும் குறிப்பிடப்படுகின்றனர். பாண்டியர் செப்பேடுகள் தரும் தொன்மங்களை ஆராய்ந்தால் அவர்களே உலகம் தொடங்கிய காலம் முதலே இருக்கின்றனர் என்று வரும். குமரிக்கண்டம் என்ற ஒரு தொன்மம் இருப்பதையும் நினைவுக்கூர்கிறேன்.

தொன்மவியல் பாண்டியர்கள் பகுப்பிலுள்ள நற்குடி வேளாளர் நூல், ஐவேந்தர் மூவேந்தர் கதை அனைத்தையும் பார்க்கவும்--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:16, 29 மார்ச் 2013 (UTC)

நா. முருகையன் அவர்களுக்கு தொகு

//சேரமன்னர்கள் காலத்தால் சோழமன்னர்களைக் காட்டிலும் பாண்டியர்களை காட்டிலும் முந்தியவர்கள் என்று கருத கீழ்க்காணும் செய்திகள் வாய்ப்பளிக்கின்றன. சோழர்கள் சூரிய குலத்தவராகவும், பாண்டியர்கள் சந்திரகுலத்தவராகவும் கருதப்படும்போது, சேரர்களின் தொடக்கம் அக்னிக்கு எடுத்துச்செல்லப்படுகிறது. மூவேந்தர்களை குறிக்கும் சொற்றொடர் முதலில் சேரர்களையே இடும் வழக்கத்தைப் பெற்றிருக்கிறது. சேர, சோழ பாண்டியர் என்றே குறிப்பிடப்படுகிறது. மூவேந்தரை குறிக்கும் மற்றொருசொற்றொடரிலும் சேரரை முன்னே வைக்கும் பழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது. சேரரை குறிக்கும் மற்றொரு சொல் குட்டுவன் என்பதாகும். சோழரை குறிக்க செம்பியன் என்ற சொல்லும் பாண்டியரைக் குறிக்க செழியன் என்ற சொல்லும் பயன்பாட்டில் இருந்துவருகின்றன. குட்டுவன், செம்பியன், செழியன் என்ற வரிசையே பயன்பாட்டில் இருந்து வருகின்றது. [1] சேரர்களைப்பற்றிய வரலாற்றையும், சங்க கால சமுதாய வரலாற்றையும் அளித்திடும் தனிச்சிறப்புப்பெற்றுள்ள இந்நூலின் பாட்டுடைத்தலைவர்களின் சிறப்பை அறிந்திட மேற்கண்ட செய்திகள் உதவிடும்.//

மேலுள்ள உள்ளடக்கங்கள் சேரர் கட்டுரையில் இருப்பதே சிறந்தது. நான் இதை அங்கே வெட்டி ஒட்டினால் இது என்னுடைய பங்களிப்பு போல் ஆகிடும் அதனால் நீங்களே இதை சேரர் கட்டுரையில் சேர்த்து விடுங்கள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:57, 23 ஏப்ரல் 2013 (UTC)

சுருக்கக் குறிப்புக் கொடுத்து நீங்களே மாற்றி விடலாமே.--Kanags \உரையாடுக 21:19, 23 ஏப்ரல் 2013 (UTC)

சேரர் கட்டுரையின் அளவு குறுகியது. அதனால் இதை அப்ப்டியே அங்கு கொடுப்பது சிறந்தது. மேலும் முனைவர் சேரர் தொன்மை பால் அதிக ஆர்வம் கொண்டவர் என்பதால் மேலதிக உள்ளடகங்கள் சேர்க்கப்படலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 03:42, 24 ஏப்ரல் 2013 (UTC)

நான் குறிப்பிடுவது வேறு. பொதுவாக தொகுக்கும் போது கீழே வரும் சிறு பெட்டியில் சிலர் தொகுப்புக்கான காரணமும் தருவார்கள். அதில் நீங்கள் இக்கருத்தை எங்கிருந்து எடுத்தீர்கள் என்று ஒரு சிறு குறிப்பு எழுதிவிடலாம் தானே.--Kanags \உரையாடுக 08:53, 24 ஏப்ரல் 2013 (UTC)

நாளை சேரர் கட்டுரையில் முதற்பக்க பங்களிப்புகள் தொடர்பான பதக்கங்கள்/விண்மீன்கள் வரும் போது சிக்கல் வரும். எனக்கு அக்கட்டுரை பற்றி அதிகம் தெரியாது என்பதால் எனக்கு அவ்விண்மீன் எனக்கு வருவது சரியானதல்ல. மேலும் இரண்டு-மூன்று நாட்கள் பொருக்கலாம். சேர்க்கப்படவில்லை எனில் நம்மில் ஒருவர் ஒட்டிவிடலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:10, 24 ஏப்ரல் 2013 (UTC)

  • அடிக்குறிப்பு
  1. பத்துப்பாட்டு நூல்களுல் ஒன்றாகிய சிறுபாணாற்றுப்படை என்ற நூலில் அடி 49 ல் சேரனை குட்டுவன் என்றும், அடி 65 ல் பாண்டியனை செழியன் என்றும் அடி 82ல் சோழனை செம்பியன் என்றும் நூலாசிரியர் நல்லூர் நத்தத்தனார் குறிப்பிடுகிறார்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பதிற்றுப்பத்து&oldid=3787208" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பதிற்றுப்பத்து" page.