Pkayu
வாருங்கள்!
வாருங்கள், Pkayu, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
--பாஹிம் 02:57, 23 நவம்பர் 2011 (UTC)
நீங்கள் கட்டுரைகளை ஆக்க முன், விக்கிப்பீடியா நடைக்கையேட்டைப் பார்த்து அதன்படி கட்டுரைகளை அமைக்க வேண்டுகிறேன்.--பாஹிம் 02:57, 23 நவம்பர் 2011 (UTC)
நல்ல முதல் முயற்சி pkayu. பவர்புக் 100 கட்டுரையில் விக்கி நடைக்கேற்ப சில மாற்றங்கள் செய்துள்ளேன். --சோடாபாட்டில்உரையாடுக 04:32, 23 நவம்பர் 2011 (UTC)
கையொப்பம்
தொகுவணக்கம் pkayu,
விக்கிப்பீடியாவில் கட்டுரைகளில் கையெழுத்தினை இடுவதில்லை. எழுதியவர் பெயர் கட்டுரையில் வரலாற்றுப் பக்கத்தில் தானாகப் பதிவாகிவிடும். எனவே கட்டுரைகளில் கையெழுத்திட வேண்டாமென வேண்டிக் கொள்கிறேன். மேலும் ஆங்கில விக்கியில் இருந்து மொழி பெயர்க்கும் போது சற்று கூடுதல் கவனத்துடன் மொழி பெயருங்கள் பவர்புக் 100 கட்டுரையில் சில தகவல்பிழைகள் இருந்தன, அவற்றை இப்போது திருத்தியுள்ளேன்.--சோடாபாட்டில்உரையாடுக 04:30, 24 நவம்பர் 2011 (UTC)
- மீண்டும் நினைவு படுத்துகிறேன். கட்டுரைகளில் கையொப்ப்ம இட வேண்டாம். எழுதியவர் நீங்கள் என்பது கட்டுரையின் வரலாற்றுப்பக்கத்தில் தானாகப் பதிவாகிவிடும்.--சோடாபாட்டில்உரையாடுக 16:26, 28 நவம்பர் 2011 (UTC)
தவறுகள்
தொகுஆங்கில மாதங்களையும் தமிழ் மாதங்களையும் தவறாக எழுதி வருகிறீர்கள். May 28 என்பது வைகாசி 28 ஆகாது. அதே போல் ஜூன் 1 - ஆணி 1 ஆகாது. தமிழ் மாதங்களின் பெயர்கள் அப்படியே ஆங்கில மாதங்களின் பெயர்களின் மொழிபெயர்ப்பல்ல. தமிழ் நாட்காட்டி வேறு வகையாக இயங்குகிறது. இப்படி தவறாக எழுதுவதற்கு பதிலாக ஆங்கில மாதங்களின் பெயரையே பயன்படுத்துங்கள்.--சோடாபாட்டில்உரையாடுக 05:36, 29 நவம்பர் 2011 (UTC)
உதவி
தொகுஆங்கில சஞ்சிகைகளுக்கு எவ்வாறு இணைப்பை ஏற்ப்படுத்தல் ???
- எந்த இணைப்பு என்று இங்கு தாருங்கள். நிரல் எப்படி உருவாக்குவது என்று செய்து காட்டுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 07:27, 29 நவம்பர் 2011 (UTC)
தானியங்கி தமிழாக்கம்
தொகுவிக்கிப்பீடியாவின் தானியங்கி மொழிபெயர்ப்பிகளைக் கொண்டு தமிழாக்கம் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது. அவ்வாறு உருவாக்கப்படும் கட்டுரைகள் நீக்கப்படும். இது தொடர்பான கொள்கை - விக்கிப்பீடியா:தானியங்கித் தமிழாக்கம்--சோடாபாட்டில்உரையாடுக 16:24, 31 திசம்பர் 2011 (UTC)