Rajtyaginewsalai
வாருங்கள்!
வாருங்கள், Rajtyaginewsalai, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
--இராஜ்குமார் (பேச்சு) 14:51, 5 மே 2013 (UTC)
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவதற்கு நன்றி
வணக்கம், Rajtyaginewsalai!
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள்.
மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 61ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் கட்டுரைகள் உதவும்.
பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:
- நீங்கள் உருவாக்கிய கட்டுரையை விரிவாக எழுதலாம். மேலும் பல கட்டுரைகளைத் தொடங்கலாம்.
- ஏற்கனவே உள்ள கட்டுரைகளில் பிழை திருத்தலாம். அவற்றை விரிவாக்கலாம்.
- விக்கிமீடியா காமன்சு தளத்தில் கட்டுரைகளுக்குப் பொருத்தமான படிமங்களைப் பதிவேற்றலாம்
ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.
-தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:22, 7 மே 2013 (UTC)
படங்கள் சேர்க்க, நீக்க
தொகுவணக்கம் கட்டுரை தொடர்பான படங்களை சேர்க்க
தாங்கள் படங்களை தெரிவு மூலம் முதலில் உங்கள் கணினியில் சேமியுங்கள். விக்கியில் பதிவேற்ற இப்பக்கத்தில் இடப்பக்கம் கருவிப் பெட்டியில் “கோப்பைப் பதிவேற்று” என்றொரு இணைப்பு உள்ளது. அதில் choose file என்பதனை சொடுக்கி தாங்கள் கணினியில் சேமித்த படத்தை இணையுங்கள். பின்னர் அப்பக்கத்தின் கீழுள்ள அணுமதிகளுள் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து கோப்பைப் பதிவேற்று எனற பொத்தானை அழுத்தினால் தங்கள் படம் சேமிக்கப்பட்டுவிடும். நீங்கள் படத்தை எப்பெயரில் சேமித்தீர்களோ அப்பெயரிலே இருக்கும். அதனை தகுந்த கட்டுரைகளில் இணைத்து விடலாம். அதன் மூலம் பதிவேற்றலாம்.
பிற படங்களைப் பதிவேற்றுவதும் இவ்வாறே செய்யலாம். (படங்கள் உங்கள் சொந்த ஆக்கமாக இருக்க வேண்டும். பிற தளங்களில் வெளியான படங்களை உரிய அனுமதியின்றி இங்கு மறு பயன்பாடு செய்ய இயலாது.)
கட்டுரைகளில் படகங்களை இணைக்க
தொகுஎடுத்துக்காட்டாக:
தங்களின் படம்- File:Water above the Hogenakkal falls.jpg என வைத்துக்கொள்வோம்.
[[File:Water above the Hogenakkal falls.jpg|right|thumb|250px|காவேரி]] என்ற நிரல் துண்டை கட்டுரையில் இடுங்கள் இவ்வாறு செய்தால் வலப்புறம் தெரியும் படம் இணையும்.
இந்த நிரல் துண்டில் "Water above the Hogenakkal falls" என்பது இணைக்கும் படிமத்தின் பெயர்;
right என்பது படம் வலப்புறம் அமைய வேண்டும் என்பதைக் குறிக்கிறது. left என மாற்றினால் கட்டுரை இடப்பக்கம் அமையும்.
250px என்பது படத்தின் அளவைக் குறிக்கிறது.
" ஒகேனக்கல் அருவி" என்பது படத்தின் கீழ் இடப்படும் குறிப்பு.
விக்கிப்பீடியா:படிமம் பயிற்சி என்ற பக்கத்தில் விவரமான செய்முறை விளக்கம் உள்ளது.
இங்கு உள்ள படிமுறை விளக்கத்தின் மூலம் செய்ய முயலுங்கள்.
படத்தைப் பதிவேற்றிவிட்டு முயற்சி செய்து பாருங்கள். சிக்கல் ஏற்படின் நான் உதவுகிறேன்.
படத்தை நீக்க
தொகுபடிமத்தின் உரையாடல் பக்கத்தில் நீக்கக் கோரினால் நிர்வாகிகள் அதனை நீக்கிவிடுவர்கள்
-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:18, 7 மே 2013 (UTC)
தங்கள் உதவிக்கு நன்றி பார்வதிஸ்ரீ. இப்போது புரிந்துகொண்டேன். --ராஜ்தியாகி அலை செய்திகள் குழுமம். (www.newsalai.com) (பேச்சு) 15:00, 7 மே 2013 (UTC)
பயனர் பக்கம்
தொகுபயனர்:Rajtyaginewsalai என்பது உங்கள் பயனர் பக்கம்(user page/profile page), இணைப்பு சிவப்பாகத் தெரிகிறதா? அப்படி என்றால் இன்னும் உருவாக்கப்படவில்லை என்று பொருள். இந்த பயனர் பக்கம் உங்களுக்குச் சொந்தமானது. உங்க்ளைப் பற்றி புகழ்ந்தும் எழுதிக் கொள்ளலாம். நீங்கள் விரும்பும் பொருட்கள், உங்கள் நாடு, தாய்மொழி, படிப்பு, பிற விவரங்கள் ஆகியவற்றை இங்கே குறிப்பிடலாம். ஒவ்வொருவரும் தங்களை தங்கள் பயனர் பக்கம் மூலமே அறிமுகப்படுத்திக் கொள்கின்றனர். எடுத்துக்காட்டுக்கு, என் பக்கத்தைப் பாருங்கள். உங்களைப் பற்றிய அறிமுகத்தைத் தந்தால், பிறரும் அறிந்து கொள்ள வசதியாயிருக்கும். சிலர் பயனர் பக்கத்தை அலங்கரித்தும் வைத்துள்ளனர்.
- இன்னொரு விசயம், ~~~~ என்ற குறியீட்டை கருத்தின் முடிவில் இடுவது அவசியம். இது பின்னர் உங்கள் கையொப்பமாகப் பதிவாகும். நன்றி-தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:44, 10 மே 2013 (UTC)
கவனிக்க
தொகுவணக்கம். மு.சூரக்குடி - மு. சூரக்குடி என்னும் தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது. தலைப்பில் முற்றுப்புள்ளிக்கு பின் இடைவெளி வரவேண்டும்--நந்தகுமார் (பேச்சு) 13:54, 24 நவம்பர் 2013 (UTC)
நந்தகுமாருக்கு
தொகுவணக்கம், நந்தகுமார். இனிமேல் கவனிக்கிறேன்... ஊரில் உள்ள கோயில் தொடர்பான கட்டுரைகளிலும் ஊர் பெயர் வரும் இடங்களில் இடைவெளியை சேர்த்து விடுகிறேன். நன்றி.