கட்டுரை பட்டியல்

தொகு

sodabottle, நான் தொடங்கிய கட்டுரைகளின் பட்டியலை என் பயனர் பக்கத்தில் எவ்வாறு கொடுப்பது. கட்டுரை பட்டியல் பெறுவதில் ஏதேனும் பிரச்சனை உள்ளதா?--தென்காசி சுப்பிரமணியன் 17:06, 4 ஆகத்து 2011 (UTC)Reply

இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011

 

வணக்கம் Sodabottle,

முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது.

மாநாட்டு உரலிகள்: மாநாட்டு இணையபக்கம், ஃபேசுபுக் நிகழ்ச்சி பக்கம் , உதவித் தொகை விண்ணப்பம்(கடைசி : ஆகஸ்ட் 15) மற்றும் ஆய்வுக் கட்டுரை சமர்பிக்க (கடைசி : ஆகஸ்ட் 30).

மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது.

நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி.

உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

கருடன்

தொகு

நீங்கள் வேரொருவர் எழுதிய கருடன் கட்டுரையை நீக்கி விட்டீர்கள். அதை நான் தொடங்கலாமா?--தென்காசி சுப்பிரமணியன் 14:24, 8 ஆகத்து 2011 (UTC)Reply

கலைக்களஞ்சியக் கொள்கைகளுடன் ஒத்துப் போகும் கட்டுரையை யார் வேண்டுமானாலும் துவக்கலாம். தவறில்லை! --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 15:33, 8 ஆகத்து 2011 (UTC)Reply

பிரச்சினை

தொகு

ஆயக்கலைகள் 64 என்ற கட்டுரையை விக்கியில் தேடும் போது இல்லை. ஆனால் கலைகள் என்ற பகுப்பில் அது உள்ளது. அதை பார்க்கும் முன்பு கட்டுரை எழுதி அளிக்க வேண்டியதாயிற்று. இதை போன்று பிரச்சினை வரும் போது என்ன செய்வது?--தென்காசி சுப்பிரமணியன் 08:21, 9 ஆகத்து 2011 (UTC)Reply

இரு கட்டுரைகளை இணைக்கப் பரிந்துரைத்து {{mergeto|article name}} இட்டுவிடுங்கள். நிருவாகிகள் இணைத்து விடுவோம். இது அனைவருக்கும் அடிக்கடி நிகழும் ஒரு விசயம் தான் (நானும் பல முறை இருக்கும் கட்டுரையை மீண்டும் எழுதியிருக்கிறேன் :-)). எனவே வார்ப்புருவை இட்டு விடுங்கள் எழுதியவர் வரலாறுகளையும் கட்டுரையையும் இணைத்து விடுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 08:29, 9 ஆகத்து 2011 (UTC)Reply

நன்றி

தொகு

sodabottle, அசத்தும் புதிய பயனர் பதக்கத்திற்கு நன்றி.இதுபோலவே நீங்கள் புதிய பயனர்களை இனங்கண்டு அவர்களை மென்மேலும் ஊக்கப்படுத்தி பாராட்டி எழுத தூண்டவேண்டும் என்பதே என் விருப்பம் ஆகும். இதை போன்ற பதக்கங்களை யார் உருவாக்குகிறார்? விக்கி அன்பில் யார்? யார்? இருக்கிறார்கள்.--தென்காசி சுப்பிரமணியன் 14:54, 10 ஆகத்து 2011 (UTC)Reply

பதக்கம்/விக்கியன்புக்கு தனியே அதிகாரப்பூர்வ தகுதி குழு என்று எதுவுமில்லை. ஒரு பயனரது பணி மற்றொருவரை ஈர்த்தால்/வியக்க வைத்தால், பாராட்ட உருவாக்கப்பட்டவை பதக்கங்கள். அவற்றை வழங்க உருவாக்கப்பட்ட கருவி விக்கியன்பு. இவற்றை எந்த ஒரு பயனரும், இன்னொருவருக்கு வழங்கலாம். விக்கி அன்பு கருவி “என் விருப்பத் தேர்வுகள்” பக்கத்தில் “கருவிகள்” என்ற உட்பிரிவின் கீழ் இருக்கிறது. அதைத் தேர்வு செய்து சேமித்துக் கொண்டால், நீங்களும் பிறரைப் பாராட்டலாம். நீங்கள் சொன்ன ”புதிய பயனர்களை இனங்கண்டு அவர்களை மென்மேலும் ஊக்கப்படுத்தி பாராட்டி எழுத தூண்டுவது” விக்கியின் வளர்ச்சிக்கு மிக மிக இன்றியமையாதது. நானும் பிற பயனர்களும் முடிந்தவரை இதைச் செய்து வருகிறோம். நீங்களும் நன்றாகப் பங்களிக்கும் புதியவர்களைக் கண்டால் பாராட்டி ஊக்குவியுங்கள்.--சோடாபாட்டில்உரையாடுக 15:12, 10 ஆகத்து 2011 (UTC)Reply


நன்றி

தொகு

அன்பு நண்பரே, எனக்கு பதக்கம் தந்து ஊக்குவித்தமைக்கு நன்றி. இது எனது முதல் பதக்கம். இப்பதக்கம் என் தமிழ் பணி தொடர ஒரு தூண்டுதலாக இருக்கும். மிக்க நன்றி.--Jenakarthik 15:30, 10 ஆகத்து 2011 (UTC)Reply

லக்சுமிபதி பாலாஜி கட்டுரையை நீக்கிவிடவும்

தொகு

லக்சுமிபதி பாலாஜி கட்டுரையை லட்சுமிபதி பாலாஜி கட்டுரையுடன் இணைத்துவிட்டேன். எனவே அந்த கட்டுரையை நீக்கிவிடவும். --கிருஷ்ணபிரசாத் 08:47, 15 ஆகத்து 2011 (UTC)Reply

வழிமாற்றாக ஆக்கி விட்டேன். இணைத்தமைக்கு நன்றி :-)--சோடாபாட்டில்உரையாடுக 08:49, 15 ஆகத்து 2011 (UTC)Reply

நன்றி

தொகு

பதக்கம் தந்து பாராட்டியமைக்கு நன்றி. அகலக்கால் வைப்பதிலும், ஆழக்கால் வைப்பதே சிறந்ததல்லவா. எனவே எழுதப்பட்ட கட்டுரைகளின் குறை களைவதே சிறந்தது என எண்ணுகிறேன். - --Prash 04:11, 16 ஆகத்து 2011 (UTC)Reply

பார்செக்.png

தொகு

கோப்புகளின் பழய பதிப்புகளை எவ்வாறு அகற்றுவது? கோப்புகளின் அதிகபட்ச பிக்சல்கள் எவ்வளவு இருக்க வேண்டும்?--தென்காசி சுப்பிரமணியன் 08:15, 16 ஆகத்து 2011 (UTC)Reply

1) நான் நீக்கிவிடுகிறேன் (நிருவாகிகளால் மட்டும் நீக்க முடியும்) 2) எவ்வளவு வெண்டுமானாலும் இருக்கலாம். கோப்பு அளவு 100 MB என்பது அதிகபட்ச வரம்பு.--சோடாபாட்டில்உரையாடுக 08:17, 16 ஆகத்து 2011 (UTC)Reply

info box

தொகு

பொதுவாக info boxல் உள்ள மொழி மாற்றம் எவ்வாறு செயல்படுகிறது? பினாகா கட்டுரையில் info boxல் caliber என்ற வார்த்தை தமிழில் மொழி மாற்றம் ஆகவில்லை. ஆனால் விக்சனரியில் உள்ளது. அதை மாற்ற விக்சனரியில் இருந்து இணைப்பு கொடுக்கலாமா? அல்லது வேறேனும் எளிய வழி உள்ளதா?--தென்காசி சுப்பிரமணியன் 19:54, 21 ஆகத்து 2011 (UTC)Reply

infobox கள் “வார்ப்புரு” என்ற முன்னொட்டுடன் இருக்கும். எ.கா பினாகா வில் பயன்படுத்தப்பட்டுள்ள தகவல்பெட்டி பின்வரும் இணைப்பில் உள்ளது: வார்ப்புரு:Infobox Weapon. இதனைத் தொகுத்து மொழிமாற்றம் செய்து விடலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 04:14, 22 ஆகத்து 2011 (UTC)Reply
இந்த வார்ப்புருக்கள் பல கட்டுரைகளுக்குப் பொது என்பதாலும் சில சிக்கலான வார்ப்புருக்கள் விக்கி செயலாக்கத்தையே பாதிக்கும் என்பதாலும் இவற்றைத் தொகுக்கும்போது கூடுதல் கவனம் தேவை.எனினும் எந்த மாற்றத்தையும் மீள்விக்கலாம் என்பதால் தயக்கப்படவும் தேவையில்லை :) --மணியன் 04:20, 22 ஆகத்து 2011 (UTC)Reply

படம்

தொகு

கருஞ்சொண்டுக் கூரலகி கட்டுரையிற் படம் சரிவரத் தெரியவில்லை. ஆங்கிலத்திலிருந்து பதிவேற்ற முயன்றேன், எச்சரிக்கை வருகிறது. அதைச் சரிக்கட்ட முடியுமா?--பாஹிம் 08:39, 22 ஆகத்து 2011 (UTC)Reply

கட்டுரையில் சரி செய்திருக்கிறேன். "image_width" காலியாக விட்டால் படம் தெரிவதில்லை. எனவே கட்டுரையிலிருந்து அதனை நீக்கியிருக்கிறேன். எனினும் இது வார்ப்புரு:taxobox இல் சரி செய்ய வேண்டியது - முயற்சிக்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 08:47, 22 ஆகத்து 2011 (UTC)Reply

பெருவால் எழிற்புள் கட்டுரையில் மீண்டும் இதே குறை ஏற்பட்டுள்ளது. சீராக்க முடியுமா?--பாஹிம் 19:44, 22 ஆகத்து 2011 (UTC) Y ஆயிற்றுReply

கர்த்தூம் கட்டுரையின் தகவற் சட்டம் சரிவரவில்லை. சீராக்க வேண்டுகிறேன்.--பாஹிம் 10:30, 23 ஆகத்து 2011 (UTC) Y ஆயிற்றுReply

convert வார்புருவை தமிழாக்கம் செய்வது குறித்து

தொகு

ஐயா, convert வார்புருவை {{convert|39.6|m|ft}} என பயன்படுத்தினால், ஆங்கிலத்தில் 39.6 மீட்டர்கள் (130 அடி) என வருகின்றது. அதை தயவு செய்து தமிழாக்கம் செய்ய இயலுமா? நன்றி. --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 19:42, 24 ஆகத்து 2011 (UTC)Reply

 Y ஆயிற்று--சோடாபாட்டில்உரையாடுக 20:26, 24 ஆகத்து 2011 (UTC)Reply

மிக்க நன்றி ஐயா.. --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 02:31, 25 ஆகத்து 2011 (UTC)Reply

பன்னீர் மலேசியா

தொகு

தங்களின் வழிகாட்டுக்கு மிக்க நன்றி நன்பரே! - பயனர்:பன்னீர் மலேசியா

நாடார்

தொகு

hey it me.. jus correcting the article.. forgot to sign in--Mayan302 04:45, 29 ஆகத்து 2011 (UTC)Reply

oops sorry. That was a mistaken revert. I was about to self revert, when you messaged. please continue your good work :-)--சோடாபாட்டில்உரையாடுக 04:47, 29 ஆகத்து 2011 (UTC)Reply

எனது பங்களிப்பைக் காத்திட...

தொகு

கணனி பக்கவடிவமைப்பாளர் என்ற கட்டுரை எனது பங்களிப்பாகும். ஆயினும், அது புகுபதிகை செய்யாமையினால் குறியீட்டெண்ணுடனேயே காணப்படுகிறது. எனவேதான் மீளவும் நான் கணனிப் பக்கவடிவமைப்பாளர் எனத் தலைப்பிட்டு அதனை மீளவமைத்தேன். (ஆயினும் நீக்கப்பட்டுவிட்டது.) --கலைமகன் பைரூஸ் 18:26, 29 ஆகத்து 2011 (UTC)

இவ்வாறு ஒரே உள்ளடக்கத்தை இருவேறு தலைப்புகளில் இட இயலாது. நீங்கள் பங்களித்தது என்று சுட்ட/காத்திட உங்கள் பயனர் பக்கத்தில் குறிப்பிட்டுக் கொள்ளுங்கள். அந்த கட்டுரையைத் தொடங்கிய ஐபி எண் நீங்கள் தான் என்றும் உங்கள் பயனர் பக்கத்தில் குறித்துக் கொள்ளலாம். இதன் மூலம், கட்டுரையை ஆக்கியது தாங்கள் தான் என்பதை வெளிப்படுத்தலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 19:01, 29 ஆகத்து 2011 (UTC)Reply
நீங்கள் புகுபதிகை செய்யாது இட்ட கட்டுரையை நீக்க {{Delete}} முதல்வரியில் இட்டு அக்கட்டுரையின் பேசுப் பக்கத்தில் காரணத்தை இடவும். அப்போது ஒரே உள்ளடக்கத்தைக் கொண்ட இரு கட்டுரைகளில் எதை நீக்குவது என்பது நிர்வாகிகளுக்கு தெளிவாகும். இல்லையேல் விக்கி கொள்கைப்படி இரண்டாவது இட்ட கட்டுரையே நீக்கப்படும். (ஐபி,பதிகையானவர் வேறுபாடில்லை :) ) நீங்கள் சுதாரிக்கும் முன்னர் வேறொருவர் தொகுத்திருந்தால் வரலாற்றைத் தக்க வைக்க நீக்குதல் இயலாது போய்விடும்.அப்போது மேலே சோடாபாட்டில் கூறியதுபோல உங்கள் பயனர் பக்கத்திலோ கட்டுரையின் பேச்சுப் பக்கத்திலோ நீங்கள்தான் துவக்கினீர்கள் என்று பதிந்து கொள்ளலாம்.--மணியன் 04:40, 30 ஆகத்து 2011 (UTC)Reply
வரலாறு சிக்கல் தான் இங்கு. கலைமகன் பைரூஸ் 2010 இல் பல கட்டுரைகளை ஐபியாக உருவாக்கி உள்ளார். அவற்றில் இப்போது வேறு பயனர்களும் தொகுத்து விட்டனர். எனவே அவற்றை நீக்க முடியாதபடி ஆகிவிட்டது :-)--சோடாபாட்டில்உரையாடுக 04:43, 30 ஆகத்து 2011 (UTC)Reply

இணைப்பை நீக்க வேண்டுகோள்

தொகு

சோடாபாட்டில், அண்மையில் "ஆலமரத்தடி" பக்கத்தில் "ஆன்மிகம்" பற்றி இடுகை செய்யும்போது தவறுதலாக என் மின்னஞ்சல் பக்கத்தின் இணைப்பை கூகுள் மொழிபெயர்ப்பு கொடுக்கும்போது இணைத்துவிட்டேன். பின்னர் அதை அகற்றினேன். அதை "வரலாற்றைக் காட்டவும்" பக்கத்திலிருந்தும் விக்கியிலிருந்தும் முற்றிலுமாக அகற்றிவிடுங்கள். நன்றி!--பவுல்-Paul 08:43, 30 ஆகத்து 2011 (UTC)Reply

நீக்கியிருக்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 10:10, 30 ஆகத்து 2011 (UTC)Reply

விக்கிநூல்கள்

தொகு

சோடாபாட்டில், சமீர் இப்போது விக்கிநூல்கள் திட்டத்தில் முனைப்புடன் செயலாற்றி வருகிறார். அவருடைய பேச்சுப் பக்கத்தில் [1] தந்துள்ள பிரச்சினை குறித்து உங்களால் உதவ முடியுமா?--Kanags \உரையாடுக 10:48, 30 ஆகத்து 2011 (UTC)Reply

படம்

தொகு

நான் சங்ககிரி கட்டுரையில் படத்தை பதிவேற்றும் போது File extension does not match MIME type என்ற பிரச்சினை வருகிறது. என்ன செய்வது? உதவுங்கள்.. --Shanmugamp7 06:22, 1 செப்டெம்பர் 2011 (UTC)சண்முகம் உங்கள் பதிலுக்கு நன்றி... http://tnmaps.tn.nic.in/tamil/district_t.php?dcode=08 இது படத்திற்கான link.நான் photoshop , paint ல் முயற்சி செய்து விட்டேன்.. again the same error.Reply

கட்டுரையை நீட்டிட அனுமதிக்க வேண்டாம்

தொகு

எனது பங்களிப்பிலுள்ள கலீல் அவ்ன் மெளலான எனும் கட்டுரை பக்கச்சார்பின்றி நடுநிலையாக எழுதப்பட்ட கட்டுரை. மெளலானா தற்போது ஆன்மீகத் தலைவர் என்று ஒருசிலர் வாதம்புரிகின்றனர். எனவே, அவர் பற்றி ஐ.பீ.எண்ணில் நிறையத் தகவல்கள் வந்துசேரலாம். தயவுசெய்து நிர்வாகத்தினர் எனது பங்களிப்பல்லாமல் வரும் எழுத்துக்களை முடக்குமாறு விநயமாக வேண்டுகிறேன். எனது மின்னஞ்சல் முகவரிக்கு அவரது புதிய நிழற்படத்தை இணைக்குமாறு படம் ஒன்று வந்துள்ளது. அது பிரச்சினைகள் உருவாக்கும் படம். விக்கிப்பீடியாவுக்கு வேண்டாத வேலை. நான் இணைத்துள்ள நிழற்படம் ஒன்றே போதுமானது. தயவுசெய்து கவனத்திற் கொள்ளவும். அந்த கட்டுரை அவ்வளவாக இருந்தாலே போதும். நீட்டிட அனுமதிக்க வேண்டாம். நன்றி--கலைமகன் பைரூஸ் 11:28, 1 செப்டெம்பர் 2011 (UTC)

என் கவனிப்புப் பட்டியலில் சேர்த்துள்ளேன். நடுநிலை பிறழ்ந்து அவதூறான செய்திகள் சேருமெனில் காத்து விடுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 13:00, 1 செப்டெம்பர் 2011 (UTC)Reply
Return to the user page of "Sodabottle/தொகுப்பு08".