பயனர் பேச்சு:Sodabottle/தொகுப்பு11

Active discussions

மயன், மயாசுரன்தொகு

மயன், மயாசுரன் இருவர் பற்றியுள்ள francias கட்டுரைகளிலும் குழப்பம் நடந்து கொண்டிருக்கிறது. எனக்கு அரைகுறை ஆங்கில பிரச்சினை இருப்பதால் நீங்கள் தீர்த்து வைக்க வேண்டுகிறேன்.

http://fr.wikipedia.org/wiki/Discussion_utilisateur:%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D

http://fr.wikipedia.org/wiki/Discussion:Mahamuni_Mayan--தென்காசி சுப்பிரமணியன் 08:33, 1 நவம்பர் 2011 (UTC)

தற்போது francias katturaiyil குழப்பம் தீர்ந்தது. இருந்தாலும் இருவரும் ஒருவரா என்பதை சில expertகளை கொண்டு உறுதியாக்க வேண்டும்.--தென்காசி சுப்பிரமணியன் 08:37, 1 நவம்பர் 2011 (UTC)


என் பதிகையை நீக்கக்கோரிதொகு

திரு சோடாபாட்டில்,

நான் தொடங்கி, தொகுத்த சில கட்டுரைகள், தகுந்த காரணமின்றி, கட்டுரை அமைப்பில் இருந்து, பத்தி அமைப்புக்கு மாற்றப்பட்டுள்ளன. நீங்களும் எனது சொந்த ஆக்கங்களான சில கோப்புகளை (மற்றவை இணையதள கோப்புகள்) விக்கியில் இருந்து நீக்கிவிட்டீர்கள். இத்தகைய செயல்கள், விக்கியில் பங்களிப்பு வழங்கும் எனது ஆர்வத்துக்கு தடையாக உள்ளன. எனவே, நான் விக்கியில் தொடர்ந்து பங்கேற்க விரும்பவில்லை; எனது பதிகையை நீக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். - பயனர்:Agnel

ஆக்னெல், விக்கியில் ஒருவரது பங்களிப்பு பிறரால் மாற்றப்படும். அதுவே விக்கி செயல்படும் முறை. விக்கிப்பீடியா ஒரு கூட்டு முயற்சி. இதில் ஒருவர் தான் எழுதியதைப் பிறர் மாற்றக்கூடாது என்று எதிர்பார்க்க முடியாது. “தகுந்த காரணமின்றி” என்று நீங்கள் சொல்வது எதுவென்று புரியவில்லை. அதிகபட்சம் உங்கள் கட்டுரைகளில் சிறு சிறு மாற்றங்களே - அதுவும் விக்கி நிரல் முறைக்கேற்ற மாற்றங்களே செய்யப்பட்டுள்ளன. கட்டுரை அமைப்பில் இருந்து பத்தி அமைப்புக்கு மாற்றம் என நீங்கள் சொல்வது எதுவென்று புரியவில்லை. நீங்களும் பிறர் செய்த கட்டுரைகளின் தலைப்பினையும் உள்ளடக்கங்களையும் மாற்றியுள்ளீர்கள். அது போலவே பிறரும் மாற்றுவர். அப்படி பிறர் செய்யும் மாற்றங்களில் உடன்பாடு இல்லையெனில் கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் உரையாடி இணக்க முடிவு எடுப்பதே விக்கி மரபு.
படிமக் கொள்கையினை உங்களுக்குத் தெளிவாக விளக்கியுள்ளேன். நீங்கள் “சொந்த ஆக்கம்” என்ற பெயரில் பதிவேற்றியவை வேறு எந்த தளங்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிடப்பட்ட பின்னரே நீக்கப்பட்டன. அல்லது எங்கிருந்து எடுக்கப்பட்டன என்ற குறிப்பின்றி பயன்படுத்தப்படாது இருந்த கோப்புகளை மட்டுமே நீக்கியுள்ளேன். முடிந்தவரை அவற்று மாற்றாக காமன்சிலிருந்து தகுந்த பதிப்புரிமை உள்ள படங்களை இணைத்துள்ளேன். விக்கியின் பதிப்புரிமை விதிகளையும் பிற இணையதளங்களைப் போன்று இங்கு பதிப்புரிமை மீறும் கோப்புகளைப் பதிவேற்ற இயலாது என்றும் விளக்கி விட்டேன். இதற்கு மேலும் ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டாலும் தர விக்கி சமூகம் தயாராகவே உள்ளது.
உங்கள் பதிகையை நீக்க இயலாது. அதிலுள்ள உள்ளடக்கங்களை மட்டும் அழித்து விடலாம். நீங்கள் பங்கேற்க விருப்பமின்றி விலகுவது எனக்கு மன வருத்தமே. உங்கள் முடிவை மாற்றிக் கொள்வீர்கள் என நம்புகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 09:10, 1 நவம்பர் 2011 (UTC)

தமிழ் விக்கி ஊடகப் போட்டி கையேடுதொகு

நடைபெறவிருக்கும் ஊடகப் போட்டிக்கான கையேடொன்றை, ஊடகப் போட்டி வலைவாசலில் இருக்கின்ற தகவல்களைக் கொண்டு வடிவமைத்துள்ளேன். குறித்த கையேட்டின் PDF கோப்பை எனது பயனர் பக்கத்தின் ஊடகப் போட்டி உபபக்கத்தில் இணைத்துள்ளேன். ஊடகப் போட்டி பேச்சு பக்கத்தில் கையேடு சம்மந்தமான தலைப்புகள் இல்லாததால் அங்கு இணைக்கவில்லை. குறித்த கையேட்டின் PDF கோப்பிற்கான நேரடி இணைப்பு இது. நன்றிகள் பல. --Tharique 03:56, 2 நவம்பர் 2011 (UTC)

அருமை!. அருமை!. தாரிக் :-). ஊடகப் போட்டி பேச்சுப் பக்கத்தில் ஒரு தலைப்பு உருவாக்கி அதில் சேர்த்துள்ளேன். கையேட்டைப் பற்றி ஒருங்கிணப்பாளர்கள் யோசிக்கத் துவங்கும் முன்னர் உருவாகியே விட்டது :-). இத்துடன் ஒரு ஒரு பக்க கையேடு ஒன்றும் வேண்டும் - சுருக்கமாக சின்னம், தேதிகள், தேவைப்படும் கோப்புகள், கோப்பு முறைகள், பரிசுகள் மட்டும் கொண்டதாக இருக்க வேண்டும் (மின்னஞ்சலில் தொடர் அஞ்சலாக அனுப்பும் வண்ணம்). இன்னொரு மாற்றம் குறுஞ்சுட்டியைத் தருவதுடன் http://ta.wikipedia.org/wiki/contest என்ற சுட்டியினையும் தரலாம் (குறுஞ்சுட்டி சற்று சிக்கலாக உள்ளதெனக் கருதுவோருக்காக இந்த வழிமாற்றை உருவாக்கியுள்ளேன்--சோடாபாட்டில்உரையாடுக 05:26, 2 நவம்பர் 2011 (UTC)
நன்றி சோடாபாட்டில். ஒரு பக்கக் கையேட்டையும் வடிவமைத்து கையேட்டுக் கோப்பை விரைவில் பதிவேற்றுகிறேன். சுட்டிகள் தொடர்பில் நீங்கள் உருவாக்கியுள்ள வழிமாற்று இலகுவான சுட்டியாகவும் ஞாபகப்படுத்திக் கொள்ள இலகுவாகவும் இருப்பதனால், குறுஞ்சுட்டியைத் தவிர்த்து, http://ta.wikipedia.org/wiki/contest என்ற விஷேடித்த சுட்டியை சேர்ப்பது பொருத்தமாய் தோன்றுகிறது. இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இந்த விஷேட வழிமாற்றைப் பற்றி அறிந்திராததாலேயே, நான் குறுஞ்சுட்டியை இணைத்தேன். :) நன்றி. --Tharique 09:50, 2 நவம்பர் 2011 (UTC)
குறுஞ்சுட்டியை நீக்கிவிடுங்கள். http://ta.wikipedia.org/wiki/contest இதுவே போதுமானது :-)--சோடாபாட்டில்உரையாடுக 09:57, 2 நவம்பர் 2011 (UTC)
நன்றி சோடாபாட்டில். :) அப்படியே செய்துவிடுகிறேன். --Tharique 10:53, 2 நவம்பர் 2011 (UTC)
ஊடகப் போட்டிக்கான விபரங்கள் அடங்கிய வகையில், நான் வடிவமைத்த ஒரு பக்கக் கையேட்டை, ஊடகப் போட்டி பேச்சுப் பக்கத்தில் இணைத்துள்ளேன். PDF கோப்பிற்கான இணைப்பு படிமம்:OnePageContestGuide.pdf நன்றி. --Tharique 22:35, 7 நவம்பர் 2011 (UTC)
மிக அருமையான வடிவமைப்புத் தாரிக். மிக்க நன்றி. :-). இன்னும் ஒரு உதவி நீங்கள் செய்ய வேண்டும் -- இதில் பயன்படுத்திய படங்களின் பெயர் / இணைப்பை படிமப் பக்கத்தில் இணைத்து விடுங்கள் - காமன்சுக்கு நகர்த்த வேண்டும், அப்போது பதிப்புரிமைக்காக, பயன்படுத்தப்பட்ட படங்களின் பெயர்களும் இணைப்புகளும் தேவைப்படுகின்றன.--சோடாபாட்டில்உரையாடுக 04:33, 8 நவம்பர் 2011 (UTC)
நன்றி சோடாபாட்டில். ஒருபக்கக் கையேட்டின் படிமப் பக்கத்தில், அதன் வடிவமைப்பில் பயன்படுத்திய நிழற்படங்களுக்கான இணைப்புகளை இணைத்துள்ளேன். நன்றி. --Tharique 14:14, 8 நவம்பர் 2011 (UTC)

'புளியங்குடி' பிரச்சினையை தீர்க்க உதவுங்கள்!தொகு

ஆங்கில விக்கிபீடியாவில் Puliyankudi 'யும் உள்ளது. Puliangudi 'யும் உள்ளது. Puliangudi என்பதே சரியானதாகும் (தமிழக அரசு கோப்புகளின்படி). மேலும் Puliangudi என்ற கட்டுரையில்தான் நிறைய தகவல்கள் உள்ளன. மிக முக்கிய பிரச்சினை என்ன என்றால்... புளியங்குடி என்ற தமிழ் கட்டுரைக்கும் Puliyankudi எனும் ஆங்கில கட்டுரைக்கும்தான் தற்போது தொடர்பு தரப்பட்டுள்ளது. நீங்கள் இரண்டு உதவிகளை செய்யவேண்டும்.

1) புளியங்குடி என்ற தமிழ் கட்டுரைக்கும் Puliangudi 'க்கும் இணைப்பு தரவேண்டும்.  Y ஆயிற்று

2) Puliyankudi 'யை முறைப்படி ஆங்கில விக்கிபீடியாவிலிருந்து நீக்க வேண்டும். (தமிழைத் தவிர இன்னும் 4 மொழிகள் Puliyankudi 'யுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன.)

ஆங்கில விக்கியில் எனக்கு நிருவாக அணுக்கம் கிடையாது. அதனால் உடனடியாக நீக்கமுடியவில்லை. இரு கட்டுரைகளையும் ஒன்றிணைத்துவிட்டேன். கட்டுரைகளைத் தொகுத்தவர்களின் வரலாறுகளை ஒன்றிணைத்து Puliyankudi என்பதை Puliangudi என்னும் கட்டுரைக்கு வழிமாற்றாக்கும்படி பரிந்துரைத்துள்ளேன். ஆங்கில விக்கி நிருவாகியொருவர் இதைச் செய்வார். விக்கி இடை இணைப்புகளை அனைத்து விக்கிகளிலும் சரி செய்துள்ளேன்.--சோடாபாட்டில்உரையாடுக 19:39, 3 நவம்பர் 2011 (UTC)

மிக்க நன்றி!தொகு

உங்களுடைய பொன்னான நேரத்தின் ஒரு பகுதியை எனக்காக செலவிட்டு உதவிய உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். இனிவரும் நாட்களில் இயந்திரப் பொறியியல் மற்றும் மேலாண்மை குறித்த கட்டுரைகளையும் எழுத முனைகிறேன்.

ஏழாம் அறிவு திரைப்படம்தொகு

ஏழாம் அறிவு திரைப்படம் பற்றிய கட்டுரையில் அவரது வாழ்க்கை வரலாறு பற்றிய சீனமொழித் திரைப்படத்துக்கான இணைப்பைக் கொடுத்திருந்தேன். அதை ஏன் நீக்கினீர்கள்? அதுவும் போதி தருமர் பற்றிய மற்றுமொரு திரைப்படம் அல்லவா?--பாஹிம் 07:33, 5 நவம்பர் 2011 (UTC)

விமர்சனப் பகுதியை முழுதும் நீக்கியதால் அதன் கீழிருந்த அவ்விணைப்பும் சேர்ந்து போய்விட்டது. இப்போது வெளி இணைப்பாக மீண்டும் சேர்த்திருக்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 07:36, 5 நவம்பர் 2011 (UTC)

போதி தருமரின் பிறப்பிடம் பற்றிப் பெரும்பாலான அறிஞர்கள் அவர் காஞ்சிபுரத்திற் பிறந்ததாகக் கூறுவதாகத்தான் நீங்கள் சுட்டிய ஆதாரம் உள்ளது. இந்நிலையில் அவரது பிறப்பிடம் பற்றி வெவ்வேறு கருத்துக்களும் உள்ளதை மறுப்பதற்கில்லை. அவரது சமகாலத்தவர் ஒருவரே அவரைப் பாரசீகர் என்கிறார். இந்நிலையில் நீங்கள் நான் சேர்த்த பகுதியை நீக்கிவிட்டு, போதி தருமரின் பிறப்பிடம் குறித்து ஒருமித்த கருத்து (consensus) வரலாற்றாசிரியர்களிடம் இருப்பதாகக் கூறியுள்ளீர்கள். அது சரியா?--பாஹிம் 13:03, 5 நவம்பர் 2011 (UTC)

மாற்றுக் கருத்தினை சேர்த்துக் கொண்டிருக்கும் போதே செய்தி இட்டு விட்டீர்கள் :-). நீங்கள் சேர்த்து நான் நீக்கிய வரிக்கு பதிலாக பாரசீக பிறப்பு நோக்கு பற்றிய ஒரு வரியை சான்றுகளுடன் சேர்த்துள்ளேன். இந்த மாற்றம் செயததற்கு காரணம் இது தான் : ”அவரது பிறப்பிடம் பற்றி நிறையவே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. ” என்ற வரி போதிதருமருக்கு நிறைய பிறப்பிடங்கள் ஊகிக்கப்படுகின்றன என்று பொருள் தருமாறு எடுத்துக்கொள்ளக்கூடும். ஆனால் இருப்பன இரு முக்கிய நோக்குகள் - தென்னிந்தியா மாற்றும் பாரசீகம். எனவே உங்கள் வரியினை நீக்கி விட்டு, பாரசீகமும் அவரது பிறப்பிடம் என்று கூறும் குறிப்புகள் உள்ளன என்று சேர்த்துள்ளேன்.
சுருக்கமாக - ”நிறையவே வேறுபாடுகள்” என்பது பல பிறப்பிடங்கள் என்று பொருள் கொள்ளக் கூடிய வரியாகையால், அதற்கு பதிலாக மாற்று நோக்கான “பாரசீகத்தைச் சேர்ந்தவர்” என்பதைச் சேர்த்துள்ளேன்.--சோடாபாட்டில்உரையாடுக 13:15, 5 நவம்பர் 2011 (UTC)

அவரது பிறப்பிடம் பற்றிப் பல்வேறு கருத்துக்கள் நிலவுவதாக ஆங்கில விக்கிப்பீடியாக் கட்டுரையிற் கண்டேன். அதனைத்தான் அப்படியே பதிவு செய்திருந்தேன். எனினும் பின்னர் நீங்கள் சேர்த்த வரிகள் எனக்கு ஏற்புடையதே.--பாஹிம் 13:21, 5 நவம்பர் 2011 (UTC)

ஏழாம் அறிவு வெளியானதிலிருந்து ஆங்கில விக்கியில் தினம் தொகுத்தல் போர் நடந்து வருகிறது. எனவே இப்போதுள்ள பதிப்புகளைப் பார்க்க வேண்டாம். ஒரு ஆறுமாத காலத்துக்கு முந்தைய அமைதியாக இருந்த பதிப்பினை மூலமாகக் கொண்டு மொழிபெயர்க்கலாம். இப்போது நடக்கும் தமிழ்ப் பெருமையாளர்கள் எதிர் போதி தருமருக்கு உரிமை கோரும் பிற தென்னிந்தியர்கள் எதிர் உரிமை கொண்டாடும் பிராமண/சத்திரியர்கள் என நடக்கும் பலமுனை அடிதடியில் அடிக்கடி பதிப்பு மாறிக் கொண்டிருக்கும் (ஏனோ ஈரானியர்கள் மட்டும் இன்னும் களத்தில் இறங்கவில்லை). படம் திரையரங்குகளை விட்டு போனபின்னர் இது நிற்கும். அப்போது அதனை மாற்றியெழுதலாம் என நினைத்துள்ளேன்.--சோடாபாட்டில்உரையாடுக 13:37, 5 நவம்பர் 2011 (UTC)
இப்போது தான் படம் பார்த்து விட்டு வந்தேன். அருமையான படம். போதிதர்மன் பற்றி இன்னும் நிறைய அறிய வேண்டியுள்ளது.--Kanags \உரையாடுக 13:46, 5 நவம்பர் 2011 (UTC)

இந்நிலையைப் பார்க்கச் சிரிப்புத்தான் வருகிறது. ஏன் வீண் பெருமை கொள்கிறார்களோ தெரியவில்லை. நான் முன்னர் தொடுப்பிட்டிருந்த விமர்சனக் கட்டுரையும் ஒரு பக்கத்தில் இதனைத் தகர்க்கிறது. முருகதாஸை வரலாற்றாசிரியராகக் கொண்டு ஏழாம் அறிவு போன்றவற்றை வரலாற்றாவணமாகக் கொள்ளும் நிலை பற்றிய உங்கள் வசனத்தை ஆதரிக்கிறேன். மக்களை அவ்வளவு எளிதாக ஏமாற்றி விடுகிறார்களா? பல ஆண்டுகளுக்கு முன்னர் குங்பூ பயிலப் போய், நானும் போதி தருமரை ஓரளவு அறிந்திருந்தேன். என்னுடைய தம்பி சீனாவின் பெய்ஜிங் நகரில் உள்ள பெய்ஹாங் பல்கலைக்கழகத்திற்றான் சீனமொழி மூலம் கல்வி பயின்றான். ஷாஓலின் ஆலயத்துக்கும் போயிருக்கிறான். இங்கு சீனமொழி பற்றிய செய்திகள் எங்காவது தென்படும் போதெல்லாம் அவனிடம்தான் கேட்கிறேன். ஏராளமான குறைகள் தமிழ் எழுத்துலகில் உள்ளன. அண்மையில் இலங்கையின் தினகரன் பத்திரிகையில் மருதூர் ஏ மஜீத் என்னும் ஒருவர் தமிழாராய்ச்சி என்று போய், சீனமொழி பற்றி ஏராளமான பொய்க் கூற்றுக்களைக் கூறியிருந்ததைக் கண்டேன். தமிழர்களை ஏய்ப்பதென்றே ஒரு சிலர் முடிவெடுத்து விட்டனர் போலும்.--பாஹிம் 13:51, 5 நவம்பர் 2011 (UTC)

பெருமை கொள்வது வீண் என்று நான் சொல்ல மாட்டேன். சிலருக்கு வீணாக இருக்கலாம், சிலருக்குத் தேவையாக இருக்கலாம். மொழி, தேசிய, சமய, கொள்கை நம்பிக்கைகளைப் போலவே இதுவும் ஒன்று. இப்படி புகழ்பெற்றவரை “எங்கள் ஆள்” என்று கொண்டாடுவது உலகம் முழுக்க உள்ள ஒரு வழக்கமே. விக்கிப்பீடியாவில் அதனைக் காட்டாதிருத்தல் போதும் (ஆங்கில விக்கியில் இது போல பல அடிதடிகள் பலகாலமாக நடந்து வருகின்றன.) தமிழ் பரவலர் ஊடகங்களில் fact checking /editorial control என்பது குறைவு. எனவே நடப்பு நிகழ்வுகளைத் தவிர வேறு விசயங்களுக்கு அவற்றை சான்றாக கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.--சோடாபாட்டில்உரையாடுக 18:16, 5 நவம்பர் 2011 (UTC)

நன்றி!தொகு

மிகவும் நன்றி! புறநானூறைப் படித்துக் கொண்டிருந்தேன், அதில் இருந்து, விக்கியில் இல்லாதவற்றை சேர்த்தேன். இவ்வாறு இலக்கிய நூற்களைப் படித்து சொற்களைச் சேர்த்தால் தமிழ் அகராதி மிகவும் விரிவு அடையும் என்று நம்புகிறேன்.

நீங்கள் தமிழ்ப் புலவரா? நான் பொறியில் வல்லுநராகப் பணிபுரிகிறேன் :)

போதி தர்மர் பற்றிய ஆதார புத்தகம்தொகு

வணக்கம் இவ் புத்தக தகவலை போதிதர்மர் ஆங்கில பக்கத்தில் உங்களால் இணைக்க முடியுமா?

புத்தகம் இணையத்தில் Bodhidharma’s Teaching Author : Ven. Eshin Godfrey, Ven. Guren Martin Ven. Sik Yin Tak, Susan Kong http://www.buddhistdoor.com/download/data.html Book

நன்றி ஹரி

மன்னிக்கவும் ஏழாம் அறிவு தியேட்டர்களை விட்டு தூக்கப்படும் வரை அந்தப்பக்கம் வரப்போவதில்லை என முடிவு செய்துள்ளேன்.. அனைத்துத் தரப்பினரின் உணர்ச்சிப்பூர்வமான அணுகுமுறையும் விக்கியின் விதிகள் தெரியாத புதுப்பயனர்களும் அங்கு தொகுப்பதை கடினமான வேலையாக்கியுள்ளன.

மறைமாவட்ட பகுப்புகள்தொகு

பகுப்புகளை நகர்த்த முடியாதா? மறைவட்ட பகுப்பகளிலுள்ள கட்டுரைகள் அனைத்தும் கத்தோலிக கிறுத்துவம் மட்டும் இருப்பதாக தோன்றுகிறது. மறைமாவட்ட்ம் என்பது கத்தோலிக கிறுத்துவத்துக்கு மட்டும் ஊரியதா? அல்ல்து பொதுவா?

அதனால் பகுப்பு தமிழக ம.மா. என்பதை பகுப்பு த. கத்தோலிக ம.மா. தலைப்புக்கும், இ.ம.மா. பகுப்பினை இந்திய கத்தோ ம.மா. பகுப்புக்கும் மாற்ற வேண்டுகிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் 15:51, 7 நவம்பர் 2011 (UTC)

மறைமாவட்டம் பல கிறித்தவப் பிரிவுகளுக்கும் பொதுவானதே. நீங்கள் சொல்வது போல மாற்ற வேண்டும். பகுப்புகளை நகர்த்த முடியாது. ஒவ்வொன்றாக மாற்ற வேண்டும். அடுத்த முறை awb ஓட்டும் போது செய்து விடுகிறேன். --சோடாபாட்டில்உரையாடுக 16:21, 7 நவம்பர் 2011 (UTC)

வேண்டுகோள்தொகு

சோடாபாட்டில், நான் கட்டுரையாக்கம் செய்த போதெல்லாம் என்னுடன் ஒத்துழைத்தமைக்காக உங்களுக்கு என் நன்றிகள். அருள் கூர்ந்து, என்னுடைய பயனர் பக்கத்தை நீக்கிவிடுமாறு வேண்டிக்கொள்கிறேன். நான் தமிழ் விக்கிப்பீடியாவில் இனிப் பங்களிக்க விரும்பவில்லை.--பாஹிம் 09:30, 8 நவம்பர் 2011 (UTC)

சோடா, புனித கஃபா என்ற ஒரு வழிமாற்றுக் கட்டுரை பிழையாக உள்ளது. அதனை நீக்க வேண்டும். பின்னர் கஃபா என்ற பெயரில் வேறு கட்டுரை அமைக்கலாம்.--பாஹிம் 09:07, 10 நவம்பர் 2011 (UTC)

 Y ஆயிற்று--சோடாபாட்டில்உரையாடுக 09:18, 10 நவம்பர் 2011 (UTC)

இன்னுமொன்று. கலிபா என்பது பிழை. கலீபா என்பதே சரியானது. எனவே, பகுப்பைக் கலீபாக்கள் என்று மாற்ற வேண்டும்.--பாஹிம் 09:10, 10 நவம்பர் 2011 (UTC)

 Y ஆயிற்று--சோடாபாட்டில்உரையாடுக 09:18, 10 நவம்பர் 2011 (UTC)

கொய்யாப் பழம் கட்டுரையை கொய்யா என நகர்த்த வேண்டும். தாவரத்தின் பெயருக்குத்தான் முதலிடம் கொடுக்க வேண்டுமல்லவா.--பாஹிம் 17:40, 10 நவம்பர் 2011 (UTC)

 Y ஆயிற்று---சோடாபாட்டில்உரையாடுக 16:36, 11 நவம்பர் 2011 (UTC)

ஆங்கிலத்தைப் பார்த்து அப்படியே தமிழில் மொழிபெயர்ப்பதால் ஏராளமான சொற்கள் பிழையாகவே தமிழில் வழங்கப்படுவது பெரும் குறையாக உள்ளது. அபுதாபி என்று பலரும் தமிழில் எழுதுவதைக் காண்கிறேன். அதன் சரியான அரபுச் சொல் அபூ ழபீ என்பதாகும். அதற்கு என்ன செய்யலாம்?--பாஹிம் 16:36, 11 நவம்பர் 2011 (UTC)

இதைக் கையாள உறுதியான விதி என்றில்லை. பிழையான எழுத்துப்பெயர்ப்பு / ஒலிப்பு என்றாலும் பரவலான பயன்பாட்டால் ஒருவித ஏற்பு பெற்று விட்டதெனில் (அபுதாபி போல) அனைவரையும் திருப்தி படுத்த இயலுவோம். சரியான எழுத்துப்பெயர்ப்பையும்/ஒலிப்பையும் காட்ட வேண்டும். அதே நேரம் பரவலான பயன்பாட்டை வழிமாற்றாகவும், முதல் வரியில் அடைப்பிலும் தருவோம். இதன் மூலம் சரியான முறை எது என்பதை வாசிப்பவருக்கு உணர்த்தலாம். பரவலான பயன்பாட்டைக் கொண்டு தேடி வருபவரும் சரியான இடத்துக்கு வரும்படி செய்யல்லாம். (வழிமாற்றுகள் தேடு பொறிகளில் சிக்காதென்பதால், முதல் வரியில் அடைப்பினில் தருவது அவசியமாகிறது).--சோடாபாட்டில்உரையாடுக 16:42, 11 நவம்பர் 2011 (UTC)

அப்படியே செய்யலாம்.--பாஹிம் 16:44, 11 நவம்பர் 2011 (UTC)

நுணாமரம் என்றுள்ளதை நுணா என்று மாற்ற வேண்டும். அவ்வாறே, நொச்சி என்பதில் கருநொச்சி, வெண்ணொச்சி என இரு வகைகள் உள்ளன. எனவே, கட்டுரையில் உள்ளது எந்த வகை நொச்சி என்பது எனக்கு மறந்து விட்டது. அதைச் சரிபார்த்துத் திருத்த வேண்டும்.--பாஹிம் 04:12, 12 நவம்பர் 2011 (UTC)

நுணா  Y ஆயிற்று--சோடாபாட்டில்உரையாடுக 08:42, 15 நவம்பர் 2011 (UTC)

சோடாபாட்டில், நீங்கள் பேச்சு:குமாரதுங்க முனிதாச பக்கத்தில் உள்ள கருத்தாடலைத் தீர்க்க உதவுங்களேன்.--பாஹிம் 10:15, 15 நவம்பர் 2011 (UTC)

ஐபி பயனர் 203.223.189.2 பொறுப்பற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார். சற்றுக் கவனிக்கவும்.--பாஹிம் 06:59, 16 நவம்பர் 2011 (UTC)

வேங்கை மரம், புலி ஆகியவற்றுக்குப் பக்க வழி நெறிப்படுத்தல் தேவைப்படுகிறது.--பாஹிம் 07:58, 16 நவம்பர் 2011 (UTC)

அவரையினங்கள் என்ற பகுப்பு இருவித்திலைத் தாவரங்கள் என்ற பகுப்பினுள்ளேயே வர வேண்டும். அவரையினத் தாவரங்களுக்கு இருவித்திலைத் தாவரங்கள் என்றொரு பகுப்பு வேண்டியதில்லை.--பாஹிம் 08:06, 16 நவம்பர் 2011 (UTC)

பாகல், புடோல், பூசணி, வெள்ளரி ஆகிய அனைத்தையும் வெள்ளரியினங்கள் என்று புதியதொரு பகுப்பில் அமைக்க வேண்டும். அப்போது அதனைத் துணைப் பகுப்பாக இருவித்திலைத் தாவரங்கள் என்ற பகுப்பிலும் காய்கறிகள் என்ற பகுப்பிலும் அமைக்க வேண்டும்.--பாஹிம் 09:07, 16 நவம்பர் 2011 (UTC)

சோடாபாட்டில், உளுத்தம் பருப்பு என்றுள்ள கட்டுரையை மீளவும் உழுந்து என்ற தலைப்புக்கு மாற்ற வேண்டும். தாவரத்தை முதன்மையாகக் கொண்டு கட்டுரையை அமைக்க வேண்டும். அறிவியற் பெயரெதுவும் தாவரத்துக்கேயன்றிப் பருப்புக்கல்லவே.--பாஹிம் 15:50, 16 நவம்பர் 2011 (UTC)

Return to the user page of "Sodabottle/தொகுப்பு11".