விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கி ஊடகப் போட்டி

Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by சஞ்சீவி சிவகுமார் in topic பரப்புரைக்கு

கருத்துகள் தொகு

குறும்பன் தொகு

இம்முயற்சிக்கு என் ஆதரவு. . திட்ட பங்களிப்பாளர்களை தமிழ் விக்கிக்கு இழுக்க ஏதாவது முயற்சி இதில் உள்ளதா? பலருக்கு .ogg theora, ogg vorbis, .midi என்பது புதிதாக இருக்கும் அவர்கள் mp3, MPEG, 3g, ... பற்றி வேண்டுமானால் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. எப்படி மற்ற format கோப்புகளை open source oggக்கு மாற்றுவது என்றும் நாம் சொல்லிவிட்டால் அவர்களுக்கு சுலபமாக இருக்கும். நேரடியாக காமன்சில் பதிவெற்றப்பட்டால் தமிழ் விக்கி ஊடகப் போட்டிக்காக பதிவேற்றப்பட்டது என்று நமக்கு எப்படி தெரியும்? ஏதாவது குறிப்பிட்ட பகுப்பில் அவற்றை இடவேண்டுமா? அதையும் நாம் தெளிவாக சொல்ல வேண்டும். விக்கிக்கு வெளியில் இருப்பவர்களுக்கான போட்டி என்பதால் நாம் அவர்களுக்கு வேலையை சுலபமாக்கி தர முயலாம் இல்லாவிட்டால் அவர்கள் என்னடா இது அப்படின்னு பின் விக்கி பக்கம் வராமல் போகக்கூடும். (அதாவது பங்களிப்பு) --குறும்பன் 17:36, 4 அக்டோபர் 2011 (UTC)Reply

1) போட்டி முடிந்ததும் பரிசு பெற்ற + நல்ல ஆக்கங்களை விக்கியின் முதற்பக்கத்தில் காட்சி படுத்தப்படும். நல்ல + தொடர் பங்கேற்பாளர்களை இனங்கண்டு அவர்களுடன் தனிப்பட்ட முறையில் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு வந்து பாருங்கள் போன்ற பரப்புரை முயற்சிகள் மேற்கொள்வோம்.
2) இப்புதிய கோப்பு முறை (.ogg, .midi) விசயங்களுக்கான விரிவான விளக்கக் கையேடுகள், நிகழ்பட, புகைப்படத் துண்டுகள், உருவாக்கும்/மாற்றும் இலவச மென்பொருட்களுக்கான இணைப்புகள் ஆகியவை உருவாக்கப்பட்டு தரப்படும்
3) நேரடியாக காமன்சில் ஏற்றும்பொது நமக்கானது என்று அடையாளம் காண புதிய தரவேற்ற விசார்டில் வழிவகை உள்ளது. ஒரு வார்ப்புருவை உருவாக்கி போட்டி வழியாகக் காமன்சு சென்று பதிவேற்றுபவர்கள் பதிவேற்றும் கோப்புகளில் தானாக இணையும்படி செய்யலாம். அவ்வார்ப்புருவில் ஒரு மறைமுக பகுப்பை இணைத்து போட்டிப் படிமங்களை அடையாளம் காணலாம். wiki loves monuments போன்ற போட்டிகளில் ஏற்கனவே இம்முறையைக் கையாளுகின்றனர். நமக்காக கஸ்டமைஸ் செய்வது எளிது. (இதற்கு மேலும் பங்கேற்பாளர்களை அவர்கள் பங்கேற்றிய படிமத்தின் பெயரை ஒரு ஜிமெயில் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கச் சொல்லாம்)
--சோடாபாட்டில்உரையாடுக 19:06, 4 அக்டோபர் 2011 (UTC)Reply

த*உழவன் தொகு

ஆதரவு தருகிறேன். நீண்ட நாட்களுக்கு முன்னமே செய்திருக்க வேண்டியது. இதுதான் த.வியில் நடக்கும் முதல் போட்டி எனக் கருதுகிறேன். எனவே, தமிழ் விக்கியின் ஊடகப்போட்டி-1 என்று தலைப்பிடலாமே? உருவாக்கப்படும் கோப்புகளை உரிய பக்கத்தில் அனைவருக்கும் இணைக்கத் தெரியாமல் இருக்கக் கூடும். எனவே, உரிய கட்டுரையின் பேச்சுப் பக்கத்திலாவது இணைக்க வேண்டும் என்று விதி இருந்தால், தற்பொழுதுள்ள கட்டுரைகளுக்குரிய ஊடகங்கள் அதிகமாக உருவாகலாம். ஏற்கனவே, சூர்யா குறிப்பிட்டது போல, தமிழ் விக்கிப்பீடியா பக்கம் வராமல் போவதையும் தடுக்க முடியும். குறும்பன் குறிப்பிட்டது போல, ஊடகத்தின் கோப்பு வடிவ மாற்றத்தை செய்யும் முறைகளுக்கு, வழிகாட்டும் பக்கம் உருவாக்குதல் நலம். குறிப்பாக, ogv, ogg கோப்புகளை உருவாக்கும் முறைகளுக்கு வழிகாட்டல் பக்கமிருப்பின் நலம்.18:48, 4 அக்டோபர் 2011 (UTC)உழவன்+உரை..


வழிகாட்டும் முறைகள் +கையேடுகள் தெளிவாக விரிவாக உருவாக்கித் தரப்படும். ”ஊடகப்போட்டி-1” என்பது இது அடுத்தடுத்து நிகழும் போட்டி போன்று ஒரு பிம்பத்தை உருவாக்கக் கூடும். மீண்டும் இப்படி ஒரு போட்டி நடந்தால் அப்போது பெயரிடும் முறையை (பொதுவாக விக்கியில் ஆண்டைச் சேர்த்துக்கொள்வது வழக்கம்) கடைபிடிப்போம். ஊடகங்களை இணைக்கவும் வேண்டும் என்று சொல்வதில் சிக்கல் எழலாம், ஒரே கட்டுரைக்கு பல ஊடகங்கள் உருவாகி அவர்கள் இணைக்க முற்பட்டு, பராமரிப்போர் அவற்றை மீளமைத்து விட்டால், புதியவர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுவிடும். எனவே தமிழ் விக்கித் திட்டங்களுக்கு வந்து இங்கிருந்து காமன்சு சென்று பதிவேற்றச் சொல்வதோடு நிறுத்திக் கொள்ளலாம் என நினைக்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 19:11, 4 அக்டோபர் 2011 (UTC)Reply

ஸ்ரீகாந்த் தொகு

ஆதரவை முன்பே தெரிவித்ததால், திட்டவரையரை பற்றி ஓர் கருத்து.நல்கையை அமெரிக்க டாலரில் வாங்கி இந்திய ரூபாயில் பரிசு கொடுப்பது,எங்கோ இடிக்குது.நல்கை விண்ணப்பத்திலும் இக்கேள்வி வரலாம்.ஒன்று நாம் இதனை உலக தமிழர்க்கான போட்டியாக அறிவிக்கி வேண்டும் (பரிசு உட்பட அமெ.$ இல்), அல்லது இந்தியாவிற்க்கு மட்டும் சுருக்கிக்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். மேலும் ஒருமுறை படித்துவிட்டு, பிற கருத்துக்களை வைக்கிறேன். ஸ்ரீகாந்த் 18:50, 4 அக்டோபர் 2011 (UTC)Reply

உலகத் தமிழருக்கான போட்டி தான். எனது இந்திய பக்கச்சார்பு ரூபாயில் வெளி வந்து விட்டது :-). கணக்கீடு + பரிசுகள் அமெரிக்க டாலர்களில் தான் இருக்கும். நல்கை மற்றும் அறிவிப்புகள் டாலர்களில் இருக்கும்--சோடாபாட்டில்உரையாடுக 19:13, 4 அக்டோபர் 2011 (UTC)Reply

கலை தொகு

எனது ஆதரவையும் ஏற்கனவே தெரிவித்து விட்டேன். கோப்புக்களில் பதிப்புரிமை சரிபார்த்தல் போன்ற விடயங்கள் எனக்கு அவ்வளவாகத் தெரியாது. சொல்லிக் கொடுத்தால் கற்றுக்கொண்டு, இயன்றவரை உதவ முடியும்.--கலை 19:50, 4 அக்டோபர் 2011 (UTC)Reply

exif, metadata சரிபார்த்தல், www.tineye.com போன்ற வழிமுறைகள் கொண்டு பதிப்புரிமை மீறல்களை அடையாளம் காண முடியும். இது பற்றியும் விழிப்புணர்வுப் பரப்புரையின் போது இதற்கான கையேடுகளும் உருவாக்கப்படும். --சோடாபாட்டில்உரையாடுக 20:02, 4 அக்டோபர் 2011 (UTC)Reply

தேனி.எம்.சுப்பிரமணி தொகு

  • பரிசு, சான்றிதழ்கள் தவிர நினைவுப்பரிசாகக் கேடயங்களை (Shield) அளிக்கலாம். இக்கேடயம் ஒன்று தமிழ்நாட்டில் ரூ100/-க்குள் செய்து வாங்கலாம். இது பரிசு பெறுபவர்கள் வீட்டில் அலங்காரப் பொருளாக வைக்கப்பட்டாலும், அதைப் பார்வையிடுபவர்களுக்கு விக்கிப்பீடியாவை அறிமுகப்படுத்தும்.

பரிசுகளை நிகழ்வுகளின் மூலம் வழங்கலாம். இதற்காக ஏதாவது ஒரு கல்வி நிறுவனம் / சேவை அமைப்பு உதவியைக் கேட்டுப் பெறலாம். இந்நிகழ்வை விக்கிப்பீடியா பயிலரங்கு மற்றும் பரிசளிப்பு நிகழ்வாக நடத்தலாம். போட்டிகளில் அதிகம் பங்களிக்கக் கூடிய தமிழ்நாடு, இலங்கை போன்ற நாடுகளிலும் இந்நிகழ்வுகளைத் தனித்தனியாக நடத்தலாம். பிற நாட்டினர் பரிசு பெறும் நிலையில் அங்குள்ள பயனர்கள் வழியாக வழங்கலாம். (இல்லாத நிலையில் தபால் வழியாக அனுப்பலாம்) --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:53, 5 அக்டோபர் 2011 (UTC)Reply

நல்ல ஐடியாக்கள் சுப்பிரமணி. இவற்றை நடைமுறைப்படுத்துவது, வெற்றியாளர்கள் இருக்கும் இடத்தைப் பொறுத்தே முடியும். கேடயம்/நினைவுப் பொருளை இந்தியாவிலிருந்து இந்தியாவுக்கு வெளியே தபாலில் அனுப்பும் செலவு அதிகமாக இருக்கும் (சாதாரண போட் மெயில், கப்பல் சரக்கு வழியென்றாலும் கூட). பரிசு பெறுபவர்கள் எந்த ஊர்களில் அமைகிறார்கள் என்பதைப் பொறுத்து “கேடயம்/நினைவுப் பொருள்” பற்றி முடிவு செய்வோம். அது போலவே பரிசளிப்பை பயிலரங்கு/பட்டறைகளாக மாற்றுவதை, பரிசு பெறுவோர் உள்ள இடம், அங்கு நம்மால் நிகழ்வு நடத்தக் கூடியமை ஆகிவற்றைப் பொறுத்து கண்டிப்பாக ஏற்பாடு செய்யலாம். --சோடாபாட்டில்உரையாடுக 03:33, 5 அக்டோபர் 2011 (UTC)Reply
இப்போட்டி பற்றி நீண்ட நாட்களுக்கு அறிவிப்பதற்கான ஒரு முறை.எனக்கும் கேடயம் பற்றியதில் உடன்பாடே. இயன்றவரை நடைமுறை படுத்தக்கோருகிறேன்.05:14, 5 அக்டோபர் 2011 (UTC)உழவன்+உரை..


சோடாபாட்டில் சொல்வது உண்மைதான். நான் எனது விக்கிப்பீடியா புத்தகத்தை நண்பர்களுக்கு அனுப்பச் செய்த செலவு ஒரு புத்தகத்தின் விலையை விட நான்கு மடங்கு அதிகம். இந்திய தபால்துறையின் வழி அனுப்பப்பட்டதால் ஓரளவு குறைவு. இதே தபாலை தனியார் அஞ்சல் மூலம் (கூரியர்) மூலம் அனுப்பினால் 100 ரூபாய் பொருளை அனுப்ப ஆயிரம் ரூபாய் செலவு செய்ய வேண்டியிருந்திருக்கும். சான்றிதழ், கேடயத்திற்கான வடிவமைப்பை மட்டும் பொதுவாகத் தயாரித்துக் கொள்ளலாம். இதைக் கொண்டு பரிசு பெறுபவர்கள் உள்ள நாட்டிலேயே அவற்றைத் தயாரித்து வழங்க ஏற்பாடு செய்து கொள்வதே நல்லது. --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 07:25, 5 அக்டோபர் 2011 (UTC)Reply

இதழ்களிலான விளம்பர யோசனையைக் கைவிடலாம். அதற்குப் பதிலாக விளம்பர நோட்டீஸ் அச்சிட்டு கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கலாம். கல்லூரி நோட்டீஸ் போர்டுகளில் அவை ஒட்டப்படும். அதன் மூலம் சிறிதளவாவது பயனுண்டு. இணைய இதழ்கள், வலைப்பூக்கள் போன்றவற்றில் வெளியிட 728 x 90, 468 x 60, 300 x 300, 250 x 250 போன்ற முக்கியமான அளவுகளில் வெளியிடுவதற்கான html Script ஆக வெளியிடலாம். இவை இணையத்தில் வலைப்பூக்கள், இணைய இதழ்கள் போன்றவற்றில் எளிதில் இணைத்திட உதவும். --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 11:49, 6 அக்டோபர் 2011 (UTC)Reply

தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 1500 கல்லூரிகள் உள்ளன. இவை தவிர பிறநாடுகளில் ஒரு 500 எனக்கொண்டால். 2000. ஒவ்வொன்றுக்கும் துண்டுப்பிரசுரம் + தபால் அனுப்ப ஆள்பலம் + பணபலம் நம்மிடம் கிடையாது. இது நம்மால் சீராகச் செய்ய இயலாத ஒரு விசயம்.
பேனர்கள் உருவாக்கி இடுவது நல்ல ஐடியா செய்வோம்.--சோடாபாட்டில்உரையாடுக 11:55, 6 அக்டோபர் 2011 (UTC)Reply
நான் தேனி.எம்.சுப்பிரமணி. சொன்னதை வழி மொழிகிறேன். அவரின் கருத்தூன்று (அதாங்க ஐடியா'னு சொல்லுறேன்களே) மிகுந்த பலனைத் தரும். கல்லூரியையும், அல்லது ஒரு கல்லூரி மாணவனையோ நமது திட்டம் சென்று அடையுமானால் அது வாழ்நாள் திட்டமாக மாறும். உதாரணமாக ஒரு மாணவன் விகிமீடியாவிற்கு வந்தால், அவரை நாம் தக்க வைத்துக் கொள்ளப் போகிறோம், அல்லது ஒரு கல்லூரி ஆசிரியரை கொணர முடியும் எனில் அவர் தன்னிடம் படிக்கும் மாணவர்களை ஒவ்வொருவருடமும், குறைந்தது ௫௦௦ (500) மாணவர்களை விக்கிமீடியா சென்று சேர முடியும். உதாரணமாக ஒரு ஆசிரியர் குறைந்தது ஒரு நாளைக்கு சுமார் ௫௦௦ (500) மாணவர்களிடம் விக்கிமீடியா பற்றி கூறிட முடியும். ஒரு வேளை ஒரு கல்லூரி முதல்வரை நாம் அணுகினால் அக்கல்லூரியின் அனைத்து மாணவர்களையும் அடைய முடியும். ஒரு கல்லூரியை நம்முடன் இணைக்க முடியும் என்றால் அந்தக் கல்லூரியைச் சேர்ந்த அனைத்து படிக்கும் மாணவர்களையும் அடைய முடியும். இதனால் கலோரி சார் நூல்கள் அனைத்தையுமே தமிழில் பெயர்க்க முடியும். மேலும், விக்கிப்பீடியா:தமிழ் விக்கி ஊடகப் பயனர் குழுமங்கள் உருவாக்கப் பட்டு, அந்த அந்த ஊரைச் சார்ந்த குழுக்கள் கல்லூரிக்கோ, அல்லது பள்ளிகளுக்கோ நேரிடையாகச் சென்று பரப்புரை மேற்கொள்ளலாம். ஒரு விக்கிப்பீடியா:தமிழ் விக்கி ஊடகப் பயனர் குழுமங்கள் ஒவ்வொரு கல்லூரியை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாமே! பேனர்கள் என்பது குறுகிய கால திட்டம் என்பதையும், கல்லூரி முதல்வர்களுக்கு கடிதத் தொடர்பு என்பது நீண்ட காலத் தொடரும் திட்டம் என்பதை கூறிக் கொள்கிறேன். தேவைப்படின் இதற்க்கு (கடிதத் தொடர்புக்கு) ஆகும் செலவில் பயனர்களும் பங்கிட்டுக் கொள்ள முடியும். அப்படி தேவைப் படும் பட்சத்தில் எனது பெயரையும் இணைத்துக் கொள்ளுங்கள். (குறிப்பு: தேனி மாவட்டத்திற்கு உரிய ஆகும் கடித தொடர்பு செலவை நான் ஏற்றுக் கொள்கிறேன். நான் அந்த மாவட்டம் என்பதால் எந்த எந்த பள்ளிகளை எவ்வாறு அணுகலாம் என்பதைப் பற்றி நன்றாக எனக்குத் தெரியும் என்பதையும் தெரிவித்துக் கொள்கொறேன்.)
அன்புடன், --Pitchaimuthu2050 05:18, 12 அக்டோபர் 2011 (UTC)Reply

சஞ்சீவி சிவகுமார் தொகு

இணையவழி ஊடகங்களுக்கு வெளியில் வேறு ஊடகங்கள் மூலமான பரப்புரையும் செய்யப்பட்டால் அதிகம்பேரைக் கவரமுடியும். அறிவிப்புப் பிரசுரம் ஒன்றை வெளியிட்டு பன்னாடுகளிலுமுள்ள பயனர்கள் மூலம் விநியோகிக்கலாம்.--சஞ்சீவி சிவகுமார் 23:33, 5 அக்டோபர் 2011 (UTC)Reply

கட்டணத்தைப் பொருத்து இதழ்களில் விளம்பரம் தரலாம் எனத் திட்டமிட்டுள்ளோம். ஆனால் பிரசுரம் விநியோகம் எவ்வளவு தூரம் பிறரைச் சென்றடையும் என்று தெரியவில்லை. ஓரிடத்தில் 1000 விநியோகித்தால் மிகக் குறையானவையே படிக்கப்படும்/பார்க்கப்படும் என்பது என் அவதானிப்பு. ஓரிருவரைச் சென்றடைய நூற்றுக்கணக்கில் பிரசுரம் அச்சடிக்க வேண்டியிருக்கும்.--சோடாபாட்டில்உரையாடுக 04:51, 6 அக்டோபர் 2011 (UTC)Reply
ஊடகத்துறையைச் சார்ந்த பயனர்கள் மற்றும் அன்பர்கள் இப்போட்டிபற்றி செய்திக் கட்டுரைகளை எழுதலாம். அதில் போதுமான தகவல்கள் வெளிவரும் போது அறிமுகம் கிடைக்கும்.--சஞ்சீவி சிவகுமார் 11:28, 6 அக்டோபர் 2011 (UTC)Reply
நல்ல ஐடியா, சேர்த்துவிடுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 11:30, 6 அக்டோபர் 2011 (UTC)Reply

மணியன் தொகு

இன்றுதான் எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளை முழுமையாக அறிய முடிந்தது. மிகச் சிறப்பான முறையி்ல் ஒருங்கிணைத்து வரும் சோடாபாட்டில் பாராட்டுக்குரியவர். அவருடன் தோள்கொடுத்து நடத்தும் மற்ற பங்களிப்பாளர்களுக்கும் கருத்துரை தந்து ஊக்குவித்தவர்களுக்கும் எனது பாராட்டுக்கள்!! இந்தக் குழு முயற்சி மிகவும் பெருமை சேர்ப்பதாக உள்ளது. --மணியன் 00:38, 4 நவம்பர் 2011 (UTC)Reply

அகேகே தொகு

  • இதன் ஆங்கிலத் தலைப்பு என்ன?
TamilWiki Media Contest
  • அசைவுபடம் gif ஆக இருக்கலாமா? gif காப்புரிமைக்கு உட்பட்ட வடிவம் இல்லையா?
GIF கோப்பு வடிவத்துக்கு காப்புரிமம் காலாவதியாகிவிட்டது. எனவே காமன்சில் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. காமன்சில் பயன்படுத்தப்படும் கோப்பு முறைகள்- Commons:File types
  • பதிப்புரிமை அற்ற பழைய படங்களின் பிரதிகளை போட்டிக்குப் பதிவேற்றலமா?
போட்டியின் அங்கமாகப் பதிவேற்றக் கூடாது. போட்டி முழுக்க சொந்த ஆக்கங்களுக்கும் மட்டுமே
  • ஒருவர் ஆகக் கூடியது எத்தனை பரிசுகளைப் பெறலாம்?
ஒருவர் ஒன்று/இரண்டு/மூன்று/ஆறுதல் ஆகியவற்றில் ஒன்றை மட்டுமே பெறலாம். இவற்றில் ஒன்றைப் பெற்ற ஒருவர் தொடர் பங்களிப்புகள்/ பிற சிறப்புப்பிரிவுகளிலும் பரிசு பெறலாம். ஆனால் ஒரு ஆக்கத்துக்கு ஒரு பரிசு மட்டுமே. பொதுப்பிரிவுகளில் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆக்கம், சிறப்புப் பிரிவிலும் பரிசுக்கு கணக்கிலிடெடுத்துக்கொள்ளப்படாது.--சோடாபாட்டில்உரையாடுக 16:25, 22 அக்டோபர் 2011 (UTC)Reply
  • போட்டி வார்ப்புருடன் ஏற்றப்படும் எல்லாப் படங்களும்/ஆக்கங்களும் மதிப்பீடு செய்யப்படுமா, எத்தனை பேர் மதிப்பீடு செய்வர்?
ஒருவரது ஒரே போலுள்ள அல்லது ஒரே தொடரில் அமையும் கோப்புகள் (எ.கா, ஒருவர் 100 தமிழ் உச்சரிப்பு ஒலிப்பு கோப்புகளைப் பதிவேற்றினால் அவற்றுக்குப் பொதுவான ஒரே மதிப்பீடு, அல்லது ஒரே இடத்தை ஒருவர் பலமுறை படமெடுத்திருந்தால் அவை ஒரே முறை மதிப்பிடப்படும்) பொதுவில் மதிப்பீடு செய்யப்படும். மற்றவை அனைத்தும் தனித்தனியாக தற்போதுள்ள ஐந்து ஒருங்கிணைப்பாளர்களால் மதிப்பீடு செய்யப்படும்.--சோடாபாட்டில்உரையாடுக 04:30, 23 அக்டோபர் 2011 (UTC)Reply

சின்னம் / முத்திரை வெள்ளோட்ட முயற்சிகள் தொகு

--Natkeeran 23:24, 5 அக்டோபர் 2011 (UTC)Reply

இவற்றோடு எமக்கு ஒரு சதுர, நீள் சதுர banners, மற்று, திட்ட விளம்பரம் ஆகியவை தேவை. --Natkeeran 17:39, 7 அக்டோபர் 2011 (UTC)Reply

சின்னம் தொகு

வாக்களிப்பு தொகு

(ஒருங்கிணைப்பாளர்கள் மட்டும்)

  1. முதல் தெரிவு -3, இரண்டாம் தெரிவு 8 --சோடாபாட்டில்உரையாடுக 08:37, 1 நவம்பர் 2011 (UTC)Reply
  2. முதல் தெரிவு -3, இரண்டாம் தெரிவு -9 --சஞ்சீவி சிவகுமார் 08:54, 1 நவம்பர் 2011 (UTC)Reply
  3. முதல் தெரிவு -9, இரண்டாம் தெரிவு -3 --கலை 09:14, 1 நவம்பர் 2011 (UTC)Reply
  4. முதல் தெரிவு -8, இரண்டாம் தெரிவு -3 ஸ்ரீகாந்த் 10:23, 1 நவம்பர் 2011 (UTC)Reply
  5. முதல் தெரிவு -9, இரண்டாம் தெரிவு - 8 --Natkeeran 13:50, 1 நவம்பர் 2011 (UTC)Reply
3 - இரண்டு முதல் தெரிவு வாக்குகள் இரண்டு இரண்டாம் தெரிவு வாக்குகள்
9 - இரண்டு முதல் தெரிவு வாக்குகள் ஒரு இரண்டாம் தெரிவு வாக்குகள்
8 - ஒரு முதல் தெரிவு வாக்குகள் இரண்டு இரண்டாம் தெரிவு வாக்குகள்

எனவே சின்னம் 3 சின்னமாகத் (இலச்சினை/logo) தேர்வு செய்யப்படுகிறது

பதாகைகள் தொகு

(”எழுத்து மட்டும் அறிவன்று” வாசகம் ஆக்குனர் - சூர்யா)

 
1
 
2
 
3
 
4

banner சிறப்பாயுள்ளது. தமிழில் தயாரிக்கும் அறிவுரைப்புகளுக்கு மகுட வாசகம் தமிழில் இருப்பது நல்லது என்பது எனது கருத்து.--சஞ்சீவி சிவகுமார் 10:03, 11 அக்டோபர் 2011 (UTC)Reply

தமிழில் தான் வரும் சஞ்சீவி. தற்போது நான் வைத்திருக்கும் வரைகலை மென்பொருளில் தமிழில் அடிக்க முடியாமல் முழித்துக் கொண்டிருக்கிறேன். இது ஒரு வெள்ளோட்டத்துக்காக ஆங்கிலத்தில் அடித்து பார்த்தேன் (தமிழில் அடிக்கப் படித்தவுடன் மாற்றி விடுவேன் :-))--சோடாபாட்டில்உரையாடுக 10:07, 11 அக்டோபர் 2011 (UTC)Reply
நன்றி சோடாபாட்டில். முந்திக்கொண்டு குறுக்கிட்டதற்கு மன்னிக்கவும்.--சஞ்சீவி சிவகுமார் 10:16, 11 அக்டோபர் 2011 (UTC)Reply
தங்கள் வரைகலை மென் பொருளில் பாமினி போன்ற தமிழ் எழுத்துரு மட்டும் எடுத்துக் கொள்ளலாம். இதற்கு நீங்கள் nhm converter பயன்படுத்தி யுனிகோடு எழுத்துருவிலிருந்து பாமினிக்கு மாற்றி அதை பிரதி (copy) செய்து ஒட்டி (paste) பார்க்கலாம்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 14:23, 11 அக்டோபர் 2011 (UTC)Reply
மிக்க நன்றி சுப்பிரமணி. வேலை செய்கிறது!!!!... --சோடாபாட்டில்உரையாடுக 15:44, 11 அக்டோபர் 2011 (UTC)Reply

மேலும் சில பதாகைகள் தொகு

 
5
 
6
 
7

பதாகை வடிவமைப்பு: செந்தி தொகு

 
336 × 280 படவணுக்கள்
 
336 × 280 படவணுக்கள்
 
336 × 280 படவணுக்கள் (animated)
 
 
 
 
 
800 x 180 படவணுக்கள்

பதாகை வடிவமைப்பு: தாரிக் தொகு

என்னால் வடிவமைக்கப்பட்ட பதாதைகளை கீழே இணைத்துள்ளேன். நன்றி. --Tharique 01:57, 27 அக்டோபர் 2011 (UTC)Reply

 
 
 
 
 
 
 
விக்கிக்குள் தள அறிவிப்பில் இடுவதற்கான பதாகை
 
விக்கிக்குள் தள அறிவிப்பில் இடுவதற்கான பதாகை
 
விக்கிக்குள் தள அறிவிப்பில் இடுவதற்கான பதாகை

பதாகை பற்றிய கருத்துகள் தொகு

இணைய விளம்பரப் பதாகைகள் தமக்கென்று பொதுவான அளவுகளைக் கொண்டுள்ளன, எ.கா: 468 X 60 பிக்சல்கள் , ஆனால் அச்சடிக்க வேண்டுமாயின் அவற்றின் பிக்சலின் அளவு அதிகமாக இருப்பது அவசியம். இங்கு பல்மாதிரியான அளவுகள் கையாளப்பட்டுள்ளன, ஏதேனும் குறிப்பான அளவு வகை உண்டாயின் கூறுங்கள்.--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 17:19, 14 அக்டோபர் 2011 (UTC)Reply

இணைய விளம்பரமே நமது முதன்மைத் தேவை. எனவே பொதுவான இணைய விளம்பர பதாகை அளவுகளில் போதுமானவை.--சோடாபாட்டில்உரையாடுக 17:26, 14 அக்டோபர் 2011 (UTC)Reply
  • இணைய விளம்பரங்களுக்கான விளம்பரப் பதாகைகள் 300x300, 300x250, 250x250 என்கிற அளவுகளில் இருப்பது நல்லது. இதற்கடுத்து, 728x90 120x600 என்கிற அளவுகளையும் பயன்படுத்தலாம். வேறு அளவுகள் சரியாக இருக்காது என நினைக்கிறேன். --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 14:22, 31 அக்டோபர் 2011 (UTC)Reply
இவற்றின் அளவு இணைய தளங்களையும் பொறுத்து தீர்மானிக்கப்படலாம். சிலர் தமக்கு உகந்த குறிப்பிட்ட அளவை மட்டுமே கேட்கக்கூடும், எனவே எந்தந்த இணைய தளங்களில் விளம்பரம் போடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதோ அவர்களது அளவைப் பெற்றுக்கொள்ளல் நன்று என நினைக்கிறேன்.--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 11:05, 2 நவம்பர் 2011 (UTC)Reply

பதாகை வாக்களிப்பு தொகு

ஒருங்கிணைப்பாளர்களுக்கு மட்டும் - நீள பதாகைகள் தவிர்த்து ஏனையவை மட்டும்

கீழ்வருவனவற்றில் இருந்து 10 பதாகைகளைத் தேர்வு செய்யவேண்டும்.


தேர்வு செய்யப்பட்டவை - 18, 13, 12 (5 வாக்குகள்), 19, 7 (4 வாக்குகள்), 16, 15, 10, 8, 4, 2 (3 வாக்குகள்)

கையேடுகள் தொகு

மற்ற அமைப்புகள் தொகு

மற்ற அமைப்புகளின் ஆதரவைக் கேட்கலாம் என்று ஒரு பத்தி உள்ளது. எத்தகைய உதவி, எந்த நிலையிலான ஒத்துழைப்பு என்பதையும் தெளிவு படுத்த வேண்டும். திட்டத்தைப் பற்றிய செய்தியைப் பரப்புவதற்கு அத்தகைய நிறுவனங்களின் மடற்குழுக்களிலும், வலைத்தளத்திலும் உதவி கேட்கலாம். -- சுந்தர் \பேச்சு 03:24, 6 அக்டோபர் 2011 (UTC)Reply

”பரப்புரை ஆதரவு, அவர்களது தளங்களில் உறுப்பினர்களுக்கு அறிவிப்புகள், இலவச/தள்ளுபடி விளம்பரங்கள் (கட்டண சேவைகளில்).” இதை சேர்த்திருக்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 04:25, 6 அக்டோபர் 2011 (UTC)Reply
நன்றி சோடாபாட்டில். -- சுந்தர் \பேச்சு 06:09, 6 அக்டோபர் 2011 (UTC)Reply

கருத்துகள் தொகு

  • நல்கைத் தொகை இவ்வளவு சிறிதாகத் தான் கிடைக்கும் என்று வரையறை ஏதும் இல்லாவிட்டால் கூடுதல் தொகைக்கு முயலலாம். தற்போதைய பரிசுத் தொகை பலரையும் ஈர்க்கும் வண்ணம் இல்லை. 1000 பொற்காசுகள் என்றதால் தான் தருமி கிடந்து தவித்தான். இதுவே 10, 20 பொற்காசுகள் என்றால் போனால் போகிறது என்று போய் இருப்பான் :)

முதற்பரிசு குறைந்தது 200 அமெரிக்க டாலராவது இருக்க வேண்டும். நல்கைத் தொகையைக் கூட்ட வழி இல்லை என்றால், நிறைய சிறு பரிசுகள் அளிப்பதைக் காட்டிலும் பெரிய அளவிலான பரிசுகளைக் குறைவான எண்ணிக்கையில் அளிக்கலாம்.

முதற்பரிசு: 200 அமெரிக்க டாலர். இரண்டாம் பரிசு: 100 அமெரிக்க டாலர். பன்முகப் பங்களிப்புக்கான சிறப்புப் பரிசு: 100 அமெரிக்க டாலர்.

குறைந்த பரிசுகள் என்றால் தேர்ந்தெடுக்கும் பணிச்சுமை, அவற்றை வழங்குவதற்கான ஏற்பாடுகளும் குறையும்.

  • எண்மியக் காலத்தில் சான்றிதழ், கேடயம் போன்றவற்றை எல்லாம் செய்ய வேண்டும? :)
  • ஒளிப்படங்கள், ஒலிப்பதிவுகள், ஒளிப்பதிவுகள் என்று அனைத்துக்கும் ஒரே பரிசு அறிவித்தால், கடினமான பணியான ஒலி / ஒளிப்பதிவுகளை அளிக்க முனைவோருக்கு ஊக்கம் இருக்காது.
  • பரப்புரைக்கு என செலவு செய்ய வேண்டாம் என்று தோன்றுகிறது. ஒளிப்பட ஆர்வலர் சிறு பத்திரிக்கைகள், இணைய குழுமங்கள், சமூக வலைத்தளங்கள் ஆகியவற்றைக் குறி வைத்து இலவசமாகவே செய்யலாம்.
  • நல்கை நமக்கு அமெரிக்க டாலரில் கிடைத்தாலும், பரிசுத் தொகை அறிவிப்பில் ஈடான இந்தியத் தொகையை அறிவிப்பது நல்லது. பயனர் மனதில் அமெரிக்க டாலரை வைத்து என்ன செய்வது போன்ற குழப்பத்தைத் தவிர்க்க உதவும். 100 டாலர் என்று சொல்வதை விட 5000 இந்திய ரூபாய் என்று சொன்னால் தொகை பெரிதாகவும் தெரியும் :) --இரவி 06:07, 6 அக்டோபர் 2011 (UTC)Reply


ரவி,
1) நல்கைத் தொகைக்கு உச்ச வரம்பு இல்லை, குறைந்த பட்ச வரம்பே உள்ளது (500$). இதற்கு முன்னர் வழங்கப்பட்டிருக்கும் நல்கைகளைக் கொண்டு 650 என்று தீர்மானித்தேன். 1000$ வரை எளிதாக வழங்குகிறார்கள். எனவே தொகையைக் கூட்டுவதில் சிக்கல் இல்லை.
2) பரிசுகளின் தொகையை உயர்த்தும் போது, எண்ணிக்கையைக் குறைக்க வேண்டாம். இரண்டும் இருக்கட்டும். நிறைய பரிசுகள் இருந்தால் தான், ஏதாவது ஒன்றை வெல்ல முடியுமென பங்களிப்போர் வருவர். மூன்று மட்டும் பரிசுகள் என்றால் நமக்குக் கிடைக்குமா என்ற தயக்கத்தில் வராது போய்விடுவர் (இதனைப் பிறபோட்டிகளில் கண்டிருக்கிறேன்). எனவே பரிசுத் தொகையை அதிகரிக்கும் போது எண்ணிக்கையைக் குறைக்க வேண்டாமெனக் கருதுகிறேன். பின்வரும் பரிசுகள் வழங்கலாம்:
  • முதல் பரிசு: 200 US$
  • இரண்டாம் பரிசு : 100 US$
  • மூன்றாம் பரிசு : 50 US$
  • ஆறுதல் பரிசுகள்: 25 X 4 = 100 US$
  • தொடர்/பன்முகப் பங்காளிப்பாளர் பரிசுகள் : 100 X 2 = 200 US$
  • மொத்த பரிசுத் தொகை - 650$
3) கணக்கீடு டாலர்களில் இருந்தாலும் பரப்புரையின் போது, லோக்கல் நாணயங்களில் எண்ணிக்கையை காட்டிவிடலாம். எனவே விளம்பரம் பரப்புரை கண்டிப்பாக ரூபாய்களிலும் இருக்கும். :-)
4) சான்றிதழ் பெரிய வேலையாக இருக்காது (~10 சான்றிதழ்களே இருக்கப் போவதால்). கேடயம்/நினைவுப் பொருள் செய்வது தான் சிக்கல் அதனைத் தவிர்க்க முயலலாம்.
5)பரப்புரை இணையத்துக்கு வெளியேவும் கண்டிப்பாக செய்ய வேண்டுமென்று கருத்து எழுந்ததால், அதற்கு தொகை ஒதுக்கியுள்ளேன். இதழ்களில் விளம்பரம் தர, கடிதங்கள், பிரசுரங்கள் அச்சடித்து அனுப்ப ஒரு சிறு தொகை ஒதுக்க வேண்டியுள்ளது.

--சோடாபாட்டில்உரையாடுக 06:35, 6 அக்டோபர் 2011 (UTC)Reply

//பரிசுகளின் தொகையை உயர்த்தும் போது, எண்ணிக்கையைக் குறைக்க வேண்டாம். இரண்டும் இருக்கட்டும். நிறைய பரிசுகள் இருந்தால் தான், ஏதாவது ஒன்றை வெல்ல முடியுமென பங்களிப்போர் வருவர். மூன்று மட்டும் பரிசுகள் என்றால் நமக்குக் கிடைக்குமா என்ற தயக்கத்தில் வராது போய்விடுவர் //

உடன்படுகிறேன். நல்கைத் தொகையை உயர்த்தி பரிசுத் தொகையை உயர்த்த முடியுமானால் பரிசுகளின் எண்ணிக்கையைக் குறைக்கத் தேவை இல்லை. உங்களின் மற்ற விளக்கங்களையும் ஏற்றுக் கொள்கிறேன். நன்றி.--இரவி 07:21, 6 அக்டோபர் 2011 (UTC)Reply

இன்னொன்று நினைவுக்கு வருகிறது. தமிழ் அறியாத பிற மாநிலத்தவர், நாட்டவர் கூட தமிழர் குறித்த ஊடக ஆவணங்களை வைத்திருக்கலாம். பிளிக்கரில் இத்தகையோரின் படங்களையே கூடுதலாகக் கண்டிருக்கிறேன். இவர்களும் போட்டியில் பங்கு பெறும் வண்ணம், போட்டிக்கான அறிவிப்புகள், வழிகாட்டல்களை ஆங்கிலத்தில் தந்தால் கூடுதல் பங்களிப்புகளை ஈர்க்கலாம். நமது நோக்கம் தமிழர் தொடர்பான ஆவணங்களைப் பெறுவது தான் என்பதால், போட்டியாளர்களுக்குத் தமிழ் தெரியாதது ஒரு தடையாக இருக்கக்கூடாது. ஊடகங்களுக்கான விவரிப்புகளைக் கூட ஆங்கிலத்திலும் அளிக்கலாம் எனக் கூறலாம்--இரவி 07:29, 6 அக்டோபர் 2011 (UTC)Reply

நல்ல ஐடியா ரவி. போட்டி பக்கத்தை தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் செய்து விடுவோம். தமிழ் ஊடகங்களில் பரப்புரைக்கு அளிக்கும் இணைப்பு தமிழிலும், பிளிக்கர் போன்ற இடங்களில் ஆங்கில பக்க இணைப்பைத் தந்து விடலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 07:37, 6 அக்டோபர் 2011 (UTC)Reply

பரப்புரைக்கு தொகு

இப்போட்டியின் பரப்புரைக்கு எனது முத்துக்கமலம் இணைய இதழையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 17:21, 7 அக்டோபர் 2011 (UTC)Reply

மிக்க நன்றி சுப்பிரமணி.--சோடாபாட்டில்உரையாடுக 17:23, 7 அக்டோபர் 2011 (UTC)Reply

பல்கலைக்கழகம் இணையம் மூலம் ஏதேனும் பரப்புரை செய்ய விரும்புகிறேன், எவ்வாறு செய்யலாம்.. --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 15:51, 14 அக்டோபர் 2011 (UTC)Reply

மிக்க நன்றி செந்தி. போட்டிக்கான பரப்புரை கட்டம் துவங்கிய பின் தள அறிவிப்புகளை/பேனர்களை தளத்தில் வெளியிடுவது, உறுப்பினர்களுக்கு போட்டி பற்றி மின்னஞ்சல் அனுப்புவது மூலம் உதவலாம். இன்னுமொரு மாதத்தில் பரப்புரை தொடங்குமென எதிர்ப்பார்க்கிறோம்.--சோடாபாட்டில்உரையாடுக 16:06, 14 அக்டோபர் 2011 (UTC)Reply
பயனர்கள் தமது நண்பர்களுக்கும் தெரிந்தவர்களுக்கும் மின்னஞ்சல் மூலம் பரப்புரைகளை அனுப்பலாம். அவ்வாறு அஞ்சல்களைப் பெறுபவர்களை அவர்களது நண்பர்களுக்கும் இதனை அறியத்தருமாறு கேட்டுக்கொள்ளலாம். இதன் மூலம் அதிக செலவின்றிப் பலருக்கு இப்போட்டி பற்றி அறிவிக்கக் கூடியதாக இருக்கும். மின்னஞ்சலுடன் இணைத்து அனுப்பக்கூடியதாக ஒரு பக்க அளவிலான அறிவித்தல் ஒன்றையும் உருவாக்கிக் கொள்ளலாம். --- மயூரநாதன் 18:17, 24 அக்டோபர் 2011 (UTC)Reply
நன்றி மயூரநாதன். மின்னஞ்சல் மூலம் அனுப்பக்கூடிய ஒரு அறிவிப்பு அறிக்கை ஒன்றை உருவாக்கி விடுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 18:38, 24 அக்டோபர் 2011 (UTC)Reply

பத்திரிக்கை இதழ்களுக்கு விளம்பரமாக இல்லாமல் செய்தியாக அனுப்பி விடலாம். செய்திக்காக அறிவிக்கை ஒன்று தயார் செய்வதுடன் அறிக்கையை வெளியிடுபவர் குறித்த தகவல் அவசியம் என்பதால் தமிழ்நாட்டில் தமிழ் விக்கிப்பீடியா அறிக்கையை யாராவது ஒருவரை முன்னிலைப்படுத்தி அவர் வழியாக அறிவிக்க வேண்டும். இதுபோல் இலங்கையில் ஒருவரை முன்னிலைப்படுத்தி அவர் அறிக்கை வெளியிடுவதாக அறிவிக்க வேண்டும். இதுபோல் தமிழர் அதிகமுள்ள பகுதிகளில் அந்தப் பகுதியின் தமிழ் விக்கிப்பீடியா பயனர் ஒருவரை முன்னிலைப்படுத்தி அவர் மூலமாக அறிக்கைகளை செய்தி நிறுவனங்கள்/ இதழ்களுக்கு அனுப்பி வைக்கலாம்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 16:01, 3 நவம்பர் 2011 (UTC)Reply

வலைப்பதிவுகளில் இணைக்குமாறு (எப்போதும் காட்சிபடுத்துமாறு எகா - தமிழ்மணம் Widget , இண்ட்லி Widget, தமிழ்மணம் விருது, விளம்பரங்கள்...), ஏதாவது Java Scipt அல்லது Widget உள்ளதா?--குறும்பன் 19:03, 17 நவம்பர் 2011 (UTC)Reply

விக்கி ஊடகப் போட்டி படிமத்தை (பதாகையிலிருந்து சேமித்தது) வலைப்பதிவில் சேர்த்துவிட்டேன் --குறும்பன் 16:01, 19 நவம்பர் 2011 (UTC)Reply

நன்றி குறும்பன்.--சஞ்சீவி சிவகுமார் 16:18, 19 நவம்பர் 2011 (UTC)Reply

பரப்புரை ஆவணங்கள் தொகு

விக்கிப்பீடியா:தமிழ் விக்கி ஊடகப் போட்டி/பரப்புரை ஆவணங்கள்

ஆதரவு தர முன்வரும் அமைப்புகள் - இதுவரை தொகு

மொத்த பரிசுகளை விளம்பரப்படுத்தலாம் தொகு

மொத்தப் பரிசுத் தொகை, பரிசுகள் ஆகியவற்றை கூடுதல் விளம்பரப் படுத்தலாம் என்று தோன்றுகிறது. எமது முதலாம் பரிசு அசத்துவதாக இல்லாவிடினும், பங்குபற்றுபவர்களுக்கு பரிசு பெறும் வாய்புக்கள் அதிகம் உள்ளன என்பது கூடிய உந்தலாக இருக்க கூடும். --Natkeeran 15:38, 16 நவம்பர் 2011 (UTC)Reply

செய்வோம் நற்கீரன், அடுத்து வரும் பதாகைகளில் பல்வேறு வாசகங்களை இடுவோம். எனினும் 200 $ என்பது இந்திய இலங்கை பணத்தில் மிக அதிகமே எனக் குறிப்பட விரும்புகிறேன். நானறிந்து இதுவரை பத்தாயிரம் ரூபாய் முதற் பரிசுக்கு எந்த ஊடகமும் புகைப்பட போட்டியை தமிழ்நாட்டில் நடத்தியதில்லை :-). அடுத்த கட்ட பதாகைகளில் இவற்றை சேர்த்துவிடுகிறேன்--சோடாபாட்டில்உரையாடுக 15:55, 16 நவம்பர் 2011 (UTC)Reply
இன்னொரு விடயத்தைக் கருத்தில் எடுக்க வேண்டு. நமது பாதகைகளில் பல் சமயப் பிரதிபலிப்பும் தேவை. --Natkeeran 18:27, 16 நவம்பர் 2011 (UTC)Reply
நற்கீரன் இன்னொரு தொகுதி பதாகை இப்போதைக்கு இயலாது. நேர்த்தியான பதாகைகள் செய்ய இருவர் தான் உள்ளனர் நம்மிடம். அவர்களிடம் ஏற்கனவே நிறைய வேலை வாங்கிக் கொண்டிருக்கிறோம். இதற்கான ஆள்பலமோ, காலநேரமோ இப்போது நம்மிடம் கிடையாது. பதாகைகள் உருவாக்கும் கட்டத்தின் போது கருதியிருந்தால் செய்திருக்கலாம். தற்போது பரப்புரை /தொடர்புகள் மற்றும் தெரிவுக் கட்டமைப்பு உருவாக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்துவோம். இவை முடிந்த பின்னர் டிசம்பரில் இரண்டாம் சுற்று பரப்புரை துவங்க இன்னொரு பதாகைத் தொகுதி உருவாக்குவோம். அப்போது இதனைச் செய்யலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 18:43, 16 நவம்பர் 2011 (UTC)Reply


நன்றி. அவ்வாறே செய்யலாம். --Natkeeran 18:58, 16 நவம்பர் 2011 (UTC)Reply
Return to the project page "தமிழ் விக்கி ஊடகப் போட்டி".