வாருங்கள்!

வாருங்கள், TNSE PAASAPARAVAI ARY, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- Booradleyp1 (பேச்சு) 09:00, 2 மே 2017 (UTC)Reply

கலைக்களஞ்சியக் கட்டுரை தொகு

 

வணக்கம், TNSE PAASAPARAVAI ARY!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது அன்று என்பதால் நீக்கியுள்ளோம். குறிப்பாக, விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டைப் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் தரலாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரை, சொந்த அனுபவம் போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது.

தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளைக் கண்டீர்கள் என்றால், என்ன வகையான கட்டுரைகளை எழுதலாம் என்பது புலப்படும். தங்களுக்குத் தேவைப்படும் தகவலை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்து தமிழில் மொழிபெயர்த்து எழுதலாம். ஒரு கட்டுரையை முதல் எடுப்பிலேயே முழுமையாக எழுத வேண்டியதில்லை. மூன்று வரிகள் இருந்தால் போதும். பிறகு, சிறுகச் சிறுக வளர்த்து எழுதலாம். மற்ற விக்கிப்பீடியா பயனர்களும் உங்களுக்கு உதவுவர். தகுந்த ஆதாரங்களுடன் நடுநிலையான தகவலை மட்டும் எழுதுங்கள். இவை வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--AntanO 16:43, 3 மே 2017 (UTC)Reply

May 2017 தொகு

  Welcome to Wikipedia. A page you recently created may not conform to some of Wikipedia's guidelines for new pages, so it will be removed shortly (if it hasn't been already). Please use the sandbox for any tests, and consider using the Article Wizard. For more information about creating articles, you may want to read Your first article. You may also want to read our introduction page to learn more about contributing. Thank you. AntanO 03:45, 7 மே 2017 (UTC)Reply

 

வணக்கம், TNSE PAASAPARAVAI ARY!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரையில்/படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு கட்டுரையாக எழுத இயலாது. நீங்கள் எழுதும் கட்டுரைகள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.


ஒரு வேளை நீங்கள் எழுதியது உங்கள் சொந்த ஆக்கமாகவோ அதை எழுதிய இன்னொருவர் அதனை விக்கிப்பீடியாவுக்கு அளிக்க அணியமாகவோ இருந்தால், அந்த உள்ளடக்கத்தை கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தில் அளிப்பதாக அதன் மூலமான இணையத்தளத்திலோ நூலிலோ அறிவிக்கச் செய்யுங்கள். விக்கிப்பீடியா கட்டுரையின் உசாத்துணைப் பகுதியில் மூலக் கட்டுரையின் பெயரும் எழுதியவர் பெயரும் குறிப்பிடப்படும். இது குறித்த உதவிக்கு, http://en.wikipedia.org/wiki/Wikipedia:Requesting_copyright_permission , http://en.wikipedia.org/wiki/Wikipedia:Example_requests_for_permission ஆகிய பக்கங்களைப் பாருங்கள்.


இந்த உரிமத்தின் படி யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கட்டுரைகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் இடம்பெற்ற பிறகு, இன்னொரு புகழ்பெற்ற வார இதழ் அந்தக் கட்டுரையைப் பதிப்பிக்கலாம். சில திருத்தங்கள் செய்து வெளியிடலாம். அதில் மூலக் கட்டுரையை எழுதியவர் பெயரைக் குறிப்பிட வேண்டியது கட்டாயம். ஆனால், இதற்காக முன்னதாகவே ஒப்புதல் வாங்கவோ பணமாகவோ பொருளாகவோ பரிசு ஏதும் வழங்கப்படவோ தேவையில்லை. இந்தப் புரிதலுடன் ஒருவர் உரிமத்தை வழங்குவது முக்கியம்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--AntanO 03:45, 7 மே 2017 (UTC)Reply

வழிகாட்டி வேண்டுகோள் தொகு

வணக்கம் , தாங்கள் சிறப்பாக பங்களித்து வருவதில் மட்டற்ற மகிழ்ச்சி, புதுப்பயனரான தங்களுக்கு ஒருசில ஆலோசனை வழங்குவதில் தவறில்லையென்றே நினைக்கிறேன்.

  • தாங்கள் ஒரு கட்டற்ற களஞ்சியத்தில் சேவை அளிக்கிறீர்கள் என்பதில் பெருமைகொள்ளுங்கள்.
  • விக்கிபீடியா அதிகளவில் மாணவர்கள் எடுத்தாலும் தளம் என்பதை மறவாதிர்கள்.
  • நம்பத்தகுந்த ஊடகங்களிலிருந்து தகவல்களை திரட்டி எழுதுங்கள்.
  • தாங்கள் தொகுக்கும் ஒவ்வொரு வரிகளுக்கும் சான்றுகள் உள்ளதா என்பதை உறுதி செய்யுங்கள்.
  • தாங்களாகவே ஒரு தலைப்பை தேர்வுசெய்து எழுதுவது விக்கிக்கு உகந்தல்ல, மேலும் கற்பனையாகவோ, வர்ணனையாகவோ மிகைப்படுத்தப்பட்ட சொற்களாகவோ எழுதுவது நன்றல்ல என்பதை உணருங்கள்.
  • தயவுகூர்ந்து மற்ற வலைப்பதிவுகளிலிருந்து படியெடுத்து (copy) சேர்க்காமல், தட்டச்சு செய்யுங்கள் அது உங்களின் எழுதும் திறனை மேம்படுத்துவதோடு பதிப்புரிமை மீறலையும் தடுக்கும்.
  • ஆங்கில விக்கிபீடியாவிலுள்ள கட்டுரைகளை மொழிபெயர்த்து எழுதுவது சாலச்சிறந்தது.
  • அருள்கூர்ந்து தாங்களின் மணல்தொட்டி பக்கத்தைப் பயன்படுத்தி எழுதி, பின்னர் முதன்மை பக்கத்தில் சேருங்கள்.
  • தயக்கமின்றி முதல் மூன்று வரிகளை தொகுத்து பதிவிட்டு உங்கள் கணக்கில் சேர்த்திடுங்கள் பின்னர் வளர்த்தெடுத்துக்கொள்ளலாம்.
  • தாங்கள் எழுதும் கட்டுரைகளில் எண்ணிக்கை முக்கியமன்று, தரமே முக்கியமென்பதில் உறுதியுடன் செயல்படுங்கள்.
  • விக்கிபீடியா நடையை அறிந்துக்கொள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளை வாசியுங்கள்.
  • புதுப்பயனரான தாங்கள் வார்ப்புருக்களை கையாள்வதில் அதிக கவனம் தேவை ஏனெனில் அது மென்பொருள் சம்பந்தப்பட்டதாகும்.
  • நீங்கள் தேர்ந்தெடுக்கும் தலைப்புகளில் வேறொரு அல்லது, வேறுபெயரில் அதே கட்டுரை விக்கிபீடியாவில் இருக்கலாம் மேலேயுள்ள தேடல் பெட்டகத்தில் உங்கள் கட்டுரையின் தலைப்பினையிட்டு உறுதிசெய்ய மறவாதீர்கள்.
  • உங்கள் கட்டுரையை நீக்காமல் இருக்க முக்கிய மூன்று முறைகளை கடைபிடிப்பது அவசியம், 1 → தக்க மேற்கோள்களை சேர்ப்பது, 2 → விக்கி நடையில் தொகுப்பது, மற்றும் 3 → தகுந்த பகுப்புகளை இணைப்பது.
  • தங்கள் எழுதும் தங்கிலிஷ் சொற்களை தவிர்த்திடுங்கள் எ. கா: பஸ், கார், பைக் போன்றவைகள்.
  • நீங்கள் தொடங்கிய கட்டுரையில் பகுப்புகளோ, தரவுகளோ மற்றும் வார்ப்புருக்களில் பிழை ஏற்ப்பட்டாலோ அக்கட்டுரையின் உரையாடல் பக்கத்திலோ, அல்லது ஒத்தாசை பக்கத்திலோ தெரிவியுங்கள் மூத்த விக்கிபீடியர்கள் உதவிக்கு வருவார்கள்.
  • இயன்றவரை தொடர்ந்து பங்குபற்றுங்கள் பிழைகள் நேர்ந்திடுமோ என அஞ்சவேண்டாம்.
தமிழ் ஆசிரியரான தாங்கள், தமிழ் விக்கிபீடியாவிலுள்ள கட்டுரைகளை பிழைத்திருத்தம் செய்து தொண்டாற்ற அன்போடு அழைக்கிறோம். மறுமொழி இருப்பின் தெரியப்படுத்தவும் நன்றிகள்.--அன்பு♥முனுசாமிᗔ

உறவாடுகᗖᗗஉரையாடுக! : 07:00, 12 சூலை 2017 (UTC) Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:TNSE_PAASAPARAVAI_ARY&oldid=2366265" இலிருந்து மீள்விக்கப்பட்டது