பரம்ஜித் கௌர் லாண்ட்ரன்
பரம்ஜித் கௌர் லாண்ட்ரன் (Paramjit Kaur Landran)[3] ( பஞ்சாபி மொழி: ਪਰਮਜੀਤ ਕੌਰ ਲਾਂਡਰਾਂ ) (பிறப்பு 29 செப்டம்பர் 1971) ஓர் வழக்கறிஞரும், சிரோமணி அகாலி தளத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மொகாலி சிரோமணி குருத்வாரா பிரபந்த செயற்குழு உறுப்பினருமாவார். 18 செப்டம்பர் 2011 அன்று சிரோமணி குருத்வாரா பிரபந்தக் குழுவின் செயற்குழுவிற்கு நடைபெற்ற தேர்தலில் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4] இவர் பஞ்சாப் மாநில மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவியும், [5] இந்திய அரசால் நிதியளிக்கப்படும் ஒரு திட்டமான பேரூராட்சி மகளிர் சக்தி சங்கத்தின் பஞ்சாபின் தலைவரும் ஆவார். இவர் சிரோமணி அகாலி தளத்தின் (பெண்கள் பிரிவு) பத்திரிகை மற்றும் அலுவலக செயலாளர் பதவியை வகித்தார். 2008 முதல் 2013 வரை கரார் பேரூராட்சியின் துணைத் தலைவராகவும் பணியாற்றினார்.
பரம்ஜித் கௌர் லாண்ட்ரன் | |
---|---|
பரம்ஜித் கௌர் லாண்ட்ரன் | |
பஞ்சாப் மாநில மகளிர் ஆணியத்தின் தலைவர்[1][2] | |
பதவியில் 2013–2018 | |
முன்னையவர் | குருதேவ் கௌர் சங்கா |
பின்னவர் | மணிஷா குலாதி |
சிரோமணி குருத்வாரா பிரபந்த செயற்குழு உறுப்பினர் | |
பதவியில் 2011 – பதவியில் | |
தொகுதி | மொகாலி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 29 செப்டம்பர் 1971 லாண்ட்ரன், பஞ்சாப், இந்தியா |
அரசியல் கட்சி | சிரோமணி அகாலி தளம் |
துணைவர் | திருமணமாகதவர் |
வாழிடம்(s) | லாண்ட்ரன், பஞ்சாப், இந்தியா |
முன்னாள் கல்லூரி | பஞ்சாபி பல்கலைக்கழகம், பட்டியாலா |
தொழில் | வழக்கறிஞர் |
As of 1 January, 2013 |
சொந்த வாழ்க்கை
தொகுபரம்ஜித் கௌர் லாண்ட்ரன், தில்பாக் சிங் கில் என்பவருக்கும் இலாப் கௌருக்கும் 29 செப்டம்பர் 1971இல் லாண்ட்ரனில் பிறந்தார். இவர் லாண்ட்ரானிலிருந்து தனது ஆரம்ப பள்ளிப் படிப்பை முடித்தார். பின்னர், சண்டிகர், அரசுப் பெண்கள் கல்லூரியில் தனது முதுகலைப் பட்டம் பெற்றார்.[6] பஞ்சாப் பல்கலைக்கழகத்தில், சட்டம் பயின்று, ஒரு வழக்கறிஞராக மொகாலியின் மாவட்ட நீதிமன்றங்களில் 1996 முதல் பணிபுரிந்தார். சனவரி 2013இல் பஞ்சாப் மாநில மகளிர் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
அரசியல் வாழ்க்கை
தொகு1998ஆம் ஆண்டில் தனது 27வது வயதில் தனது சொந்த கிராமமான லாண்டரனில் கிராமத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநிலத்திலேயே இவ்வாறு தேர்தெடுக்கப்பட்ட கிராமத் தலைவர்களில் மிகவும் இளையவராக இருந்தார். 2008ஆம் ஆண்டில் இவர் கரார் பேரூராட்சி சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், அதன் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2011இல் மொகாலியிலிருந்து சிரோமணி குருத்வாரா பிரபந்தக் குழுவின் செயற்குழுவிற்கு சிரோமணி அகாலிதளம் வேட்பாளராக இருந்தார்.[7] செப்டம்பர் 18 அன்று நடைபெற்ற தேர்தலில் இவர் தனது போட்டியாளரை 3182 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[8] இவர் சிரோமணி அகாலி தளத்தின் (பெண்கள் பிரிவு) பத்திரிகை மற்றும் அலுவலக செயலாளர் பதவியை வகித்தார்.
சாதனைகள்
தொகுகிராமப்புற மற்றும் நகர்ப்புற தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை உள்ளடக்கிய தேசிய அளவிலான 11 உறுப்பினர்களின் குழுவில் உறுப்பினராக 2000ஆம் ஆண்டில் ஜெர்மனிக்கு சென்றார். மேலும், அங்கு உள்ளூர் அரசாங்க நிறுவனங்களின் ஒப்பீட்டு ஆய்வையும் மேற்கொண்டார். இந்திய பஞ்சாப் அரசின் கூட்டுறவுத் துறையின் மாநில ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக இருந்தார். மொகாலியின் மாவட்ட குறைகள் குறைதீர்க்கும் குழு உறுப்பினர், மொகாலியின் மாவட்ட கல்வி ஆலோசனைக் குழு உறுப்பினர் போன்ற பதவிகளையும் வகித்தார்.லூதியானாவின் குரு அங்கத் தேவ் கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழக மேலாண்மை வாரியத்தின் உறுப்பினராக பஞ்சாப் ஆளுநர் சிவ்ராஜ் பாட்டீல் மூலம் 2012இல் பரிந்துரைக்கப்பட்டார்.[9] [10]. பாக்கித்தானில் 29 செப்டம்பர் 2012 முதல் அக்டோபர் 3 2012 வரை நடைபெற்ற இந்திய-பாக்கித்தான் நல்லிணக்கத்திற்கான நீதிபதிகள் பங்கு பற்றிய சர்வதேச மாநாட்டிலும் இவர் பங்கேற்றார்.
3 ஜனவரி 2013 அன்று முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் தலைமையிலான பஞ்சாப் அரசு இவரை பஞ்சாப் மாநில மகளிர் ஆணையத்தின் தலைவராக நியமித்தது.[12] [13] [14] [15] தலைவர் பதவியில் பணியாற்றிய போது, இவர் 11 மார்ச் 2013 அன்று பாட்டியாலா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெண் கைதிகளைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து, அவர்களின் அடிப்படை மனித உரிமைகள் பறிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்ய சிறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.[16] பின்னர், இவர் பாட்டியாலா மற்றும் பதேகர் சாஹிப் மாவட்டங்களின் மாவட்ட காவல்துறை அதிகாரிகளின் சந்திப்பையும், பதேகர் சாஹிப்பில் உள்ள மகளிர் காவல் நிலையத்தையும் ஆய்வு செய்தார்.[17] [18] 8 மே 2013 அன்று பஞ்சாப் மாநில மகளிர் ஆணையம் மாநிலத்தின் அனைத்து மகளிர் கலங்களின் உயர் மட்டக் கூட்டத்தை நடத்தியது. கூட்டத்திற்கு தலைமை வகித்த இவர், பெண்கள் தொடர்பான முக்கிய பிரச்சினைகளை முன்னுரிமை அடிப்படையில் தீர்க்குமாறு மாநிலத்தில் உள்ள பெண் அதிகாரிகளின் காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.[19] [20]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Archived copy". Archived from the original on 14 August 2013. பார்க்கப்பட்ட நாள் 3 January 2013.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "Archived copy". Archived from the original on 23 November 2016. பார்க்கப்பட்ட நாள் 3 January 2013.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ https://www.facebook.com/ParamjitKaurGill
- ↑ "The Tribune, Chandigarh, India - Chandigarh Stories".
- ↑ "Archived copy". Archived from the original on 23 November 2016. பார்க்கப்பட்ட நாள் 3 January 2013.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-03-25. பார்க்கப்பட்ட நாள் 2021-09-03.
- ↑ "SAD releases list of 33 more candidates for SGPC elections Punjab New…". Archived from the original on 2013-01-31. பார்க்கப்பட்ட நாள் 2021-09-03.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ "The Tribune, Chandigarh, India - Chandigarh Stories".
- ↑ http://www.gadvasu.in/
- ↑ "Archived copy". Archived from the original on 24 March 2018. பார்க்கப்பட்ட நாள் 2 January 2013.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "Archived copy". Archived from the original on 22 March 2014. பார்க்கப்பட்ட நாள் 3 January 2013.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ Paramjit Kaur Landran is new chairperson of Punjab State Women’s Commission பரணிடப்பட்டது 27 மார்ச்சு 2019 at the வந்தவழி இயந்திரம் – YesPunjab
- ↑ "Landran to head Punjab Women Commission Punjab News | Breaking News |…". Archived from the original on 2013-02-16. பார்க்கப்பட்ட நாள் 2021-09-03.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ Hindustan Times
- ↑ Hindustan Times
- ↑ https://www.facebook.com/photo.php?fbid=423933341028209&set=a.423662081055335.1073741825.100002346408319&type=3&theater
- ↑ https://www.facebook.com/photo.php?fbid=423933284361548&set=a.423662081055335.1073741825.100002346408319&type=3&theater
- ↑ https://www.facebook.com/photo.php?fbid=423933404361536&set=a.423662081055335.1073741825.100002346408319&type=3&theater
- ↑ Govt Machinery needs to be sensitized on Crime against Women : Paramjeet Kaur Landran பரணிடப்பட்டது 27 மார்ச்சு 2019 at the வந்தவழி இயந்திரம் – YesPunjab
- ↑ "Archived copy". Archived from the original on 22 March 2014. பார்க்கப்பட்ட நாள் 4 June 2013.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)