பரம்ஜித் சிங் சித்து

இந்திய பஞ்சாபி பாடகர், பாடலாசிரியர் மற்றும் பாட்டியாலாவைச் சேர்ந்த பாங்க்ரா நடனக் கலைஞர்

பரம்ஜித் சிங் சித்து, தொழில் ரீதியாக பாமி பாய் என்று அழைக்கப்படும், இவர் ஒரு இந்திய பஞ்சாபி பாடகர், பாடலாசிரியர் மற்றும் பாட்டியாலாவைச் சேர்ந்த பாங்க்ரா நடனக் கலைஞர் ஆவார். [1] அவர் தனது பிரபலமான புன்னகை மற்றும் பாரம்பரிய பஞ்சாபி நாட்டுப்புற இசை, நடனம் மற்றும் வண்ணமயமான ஆடைகளை ஊக்குவிப்பதற்காக மிகவும் பிரபலமானவர்.

பாமி பாய்
இயற்பெயர்பரம்ஜித் சிங் சித்து
பிற பெயர்கள்பாங்க்ராவின் ராஜா
பிறப்புஜகேபால், சங்குரூர், பஞ்சாப், இந்தியா
இசை வடிவங்கள்பஞ்சாபி இசை
பாங்கரா
நாட்டுப்புற இசை
தொழில்(கள்)பாடகர்
இசையமைப்பாளர்
நடன இயக்குனர் - பாங்க்ரா
இசைத்துறையில்1980 ம் ஆண்டு முதல்
வெளியீட்டு நிறுவனங்கள்நாட்டுப்புற ஸ்டுடியோ
இணையதளம்http://www.pammibai.com

பஞ்சாபி இசை உலகில், பஞ்சாபியின் பாங்க்ரா எனப்படும் பாரம்பரிய நாட்டுப்புற நடனத்தில் நிபுணத்துவம் பெற்ற குறிப்பிடத்தக்க நபர்களில் ஒருவராக அவர் கருதப்படுகிறார்; [2] 1987 ம் ஆண்டு மறைந்த நரிந்தர் பிபாவுடன் இணைந்து வெளியிட்டுள்ள அவரது முதல் ஒலிப்பேழையில் வெளியான  "அஷ்கே" பாடலின் மூலம் தேசிய இசை உலகத்தின் கவனத்தைப் பெற்றார். அதன்பிறகு, அவர் 12 இசைத்தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்., [3] மேலும் அவரது இசைக்குழுவுடன் இணைந்து சர்வதேச அளவில் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். [4] [5] பஞ்சாபி நாட்டுப்புற இசை உலகில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக அவருக்கு 4 அக்டோபர் 2016 அன்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியால் புது டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் சங்கீத நாடக அகாடமி விருது வழங்கப்பட்டது.

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

அவர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் சங்ரூர் மாவட்டத்தில் உள்ள ஜாக்பெல் கிராமத்தில் பிரபல சுதந்திர போராட்ட வீரரான மறைந்த சர்தார் பர்தாப் சிங் பாகிக்கு மகனாகப் பிறந்தார். அவரது குழந்தைப் பருவத்தில், பஞ்சாபின் நாட்டுப்புற நடனமான பாங்க்ராவின் மீதான அவரது நாட்டம் அதிகரித்து, பல்வேறு பள்ளி விழாக்களில் பங்கேற்கத் தொடங்கினார். பின்னர் அவர் தனது கல்லூரி நாட்களில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான நிகழ்ச்சிகளில் பங்கேற்றார், மேலும் பாங்க்ராவின் நடன இயக்குனராக ஆனார். [6] பஞ்சாபி இலக்கியம் மற்றும் பொது நிர்வாகத்தில் எம்.ஏ படித்துக் கொண்டிருக்கும் போதே பொழுதுபோக்காக நாட்டுப்புற பாடலைப் பாட ஆரம்பித்தார். 1982 இல் அவர் தனது முதல் பாடலான நச்டி ஜவானியை பதிவு செய்தார். அதற்க்கு பின்பான ஆண்டுகளில், அவர் பாங்க்ரா நடனக் கலைஞராகவும், நாட்டுப்புறப் பாடகராகவும் இருபதிற்கும் மேற்பட்ட நாடுகளுக்குச் சென்றார். [7] அவர் பல்வேறு பஞ்சாபி நாடகங்களிலும் ஈடுபட்டார் மற்றும் ஓய்வு நேரத்தில் நகைச்சுவை கலைஞராக ராம் லில்லா மேடைகளில் நடித்தார்.

இசை வாழ்க்கை

தொகு

அவர் தனது முதல் ஒலிப்பேழையை 1987 இல் மறைந்த நரிந்தர் பிபாவுடன் இணைந்து பதிவு செய்தார். பின்னர் அவர் பிரபல தொலைக்காட்சி மற்றும் வானொலி கலைஞரான சுரிந்தர் கவுருடன் மற்றொரு ஒலிப்பேழையை  பதிவு செய்தார். 1991 இல் வெளியிடப்பட்ட அவரது ஒலிப்பேழையில் ஜக்ஜித் சிங் ஒரு பாடலைப் பதிவு செய்தார். அவருடைய இரண்டு பாடல்களை மியூசிக் டுடே வெளியிட்டது.. சுரிந்தர் பச்சன், சரஞ்சித் அஹுஜா, பண்டிட் ஜவாலா பர்ஷாத் மற்றும் வேத் சேத்தி போன்ற பிரபல இசை அமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார். இருப்பினும், '''ஜி நே ஜான் நு கர்தா''', '''ரங்லி துனியா டன்''' ஆகியவற்றின் வெளியீட்டில் தான் அவருக்கு உண்மையான வெற்றி கிடைத்தது. அவரது ஆல்பமான நச் பவுனி தமல் 2005 இல் வெளியிடப்பட்டது, அதைத் தொடர்ந்து அமன் ஹேயர் 2009 இல் பஞ்சாபனைத் தயாரித்தார். பஞ்சாபியன் டி பல்லே பல்லே என்ற ஆல்பத்தின் தலைப்புப் பாடலில் பஞ்சாபில் தோன்றிய ஒளிச்சித்திரம் இடம்பெற்றுள்ளது [8] அவர் ஜுக்னி மற்றும் டயமண்ட் சோஹ்னியே (2015) என்ற இசைத்தொகுப்பை வெளியிட்டார். [1]

சுற்றுப்பயணங்கள்

தொகு

ஜூமர், மல்வாய் கித்தா அல்லது தண்டாஸ் போன்ற வளமான பஞ்சாபிய கலை வடிவங்களை மக்களிடையே கொண்டு செல்வதையே தன் குறிக்கோளாக கொண்டுள்ள பாமி பாய், 1989 ஆம் ஆண்டில், இந்திய சுதந்திர தினத்தன்று தனது முதல் கலாச்சார நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார், அடுத்தடுத்த ஆண்டுகளில் அவர் பல ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றார். [9] 2004 இல் பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்ற உலக பஞ்சாபி மாநாட்டில் கலாச்சார விளக்கக்காட்சியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தச் சென்ற பிரதிநிதிகளில் இவரும் ஒருவர். [7] [10] பின்னர் 2007 இல் அவர் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளுக்காக அமெரிக்காவிற்குச் சென்றார். 2009 ஆம் ஆண்டு டொராண்டோவில் நடைபெற்ற உலக பஞ்சாபி நாட்டுப்புற நடனப் போட்டிகளில் முதன்மை நடுவராகப் பணியாற்றிய பிறகு, 2014 ஆம் ஆண்டு மீண்டும் நிகழ்ச்சி நடத்த அழைக்கப்பட்டார் [11]

இசை பாணி மற்றும் கருவிகள்

தொகு

பாமி பாய் பஞ்சாபி நாட்டுப்புற இசையில் மிகவும் திறமையானவர் மற்றும் அவரது பாடல்களில் டூம்பா, அல்கோசா, டூம்பி, சாரங்கி, வஞ்சிலி, புக்டு, பீ, தாத், தோல்கி, தோல், கரா, சிம்தா, டாஃப்லி மற்றும் தோரு போன்ற பல்வேறு பாரம்பரிய இசைக்கருவிகளை பயன்படுத்தி பாடியுள்ளார். [6] [12] அவரது பாடல்களில் ஜூமர், மல்வாய், கித்தா, தண்டாஸ் போன்ற பல்வேறு பாங்க்ரா வடிவங்கள் அடங்கும். மேற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கம் அதிகமாக உள்ள பஞ்சாபி இசைத் துறையில், அவர் பழைய பஞ்சாபி கலாச்சாரத்தின் பாதுகாவலராகவும், தாய் மொழியான பஞ்சாபியாகவும் பரவலாக அறியப்படுகிறார், [12] ஒரு புகழ்பெற்ற நாட்டுப்புற நடனக் கலைஞராக இருந்து, பம்மி இப்போது முன்னணி நாட்டுப்புற பாடகர்களில் ஒருவராக தனது அடையாளத்தை நிறுவியுள்ளார்

இசைத்தொகுப்புகளின் பட்டியல்

தொகு
ஆண்டு ஆல்பம் பதிவு லேபிள் தகவல் இசை
1987 அங்கி ஷேர் பஞ்சாப் தே சிம்ரன் வீடியோ தடங்கள் 8 வேத் சேத்தி
1989 அம்ரித் பாஜா வாலே டா சிம்ரன் வீடியோ தடங்கள் 8 ஜ்வாலா பிரசாத்
1993 ஜவானி அவஸான் மார்டி கேட்ராக் சண்டிகர் தடங்கள் 8 வரீந்தர் பச்சன்
1994 மஜ்ஜே மால்வே துவாபே சாகா டெல்லி தடங்கள் 8 சரஞ்சித் அஹுஜா
2000 பம்மி பாயுடன் நடனம் எச்.எம்.வி தடங்கள் 8 சரஞ்சித் அஹுஜா
2002 நச் நச் பவுனி தம்மல் எச்.எம்.வி தடங்கள் 8 குல்ஜித் சிங்
2003 கித்தா மால்வையன் டா டி-சீரிஸ் தடங்கள் 8 குல்ஜித் சிங்
2005 நச்தே பஞ்சாபி ஃபைன் டச் தடங்கள் 8 குல்ஜித் சிங்
2006 புட் பஞ்சாபி – பஞ்சாபின் மகன் [13] ஃபிராங்க்ஃபின் தடங்கள் 10 குல்ஜித் சிங்
2007 தோல் தே தாமலன் [14] ஃபிராங்க்ஃபின் தடங்கள் 10 குல்ஜித் சிங்
2009 பஞ்சாபியன் டி-சீரிஸ் தடங்கள் 8 அமன் ஹேயர்
2011 பஞ்சாபியன் டி பல்லே பலே வாழி பதிவுகள் தடங்கள் 8 குல்ஜித் சிங் /ஹர்ஜீத் குடு
2013 ஜுக்னி லைவ் ஃபோக் ஸ்டுடியோ தடங்கள் 10 பாப்சி/குல்ஜித் சிங்/ஹர்ஜீத் குடு
2015 வைர சோஹ்னியே ஜாஸ் ரெக்கார்ட்ஸ் தடங்கள் 11 குர்மீத் சிங்
2017 பம்மி பாயின் 37வது அத்தியாயம் டி-சீரிஸ் தடங்கள் 12 குர்மீத் சிங், அமன் ஹேயர், ஜெய்தேவ் குமார் & ரூபின் கஹ்லோன்

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Desi Beats". The Indian Express. 5 March 2012. பார்க்கப்பட்ட நாள் 2 June 2015.
  2. Singh, Jasmine (2012). "Singer of the soil". The Tribune. பார்க்கப்பட்ட நாள் 2 June 2015.
  3. "Revival of boliyan". Hindustan Times. 26 July 2012. பார்க்கப்பட்ட நாள் February 22, 2023.
  4. Chaudhry, Amrita (5 June 2007). "Singer Pammi Bai recently returned from a tour of 14 American cities". Express India. பார்க்கப்பட்ட நாள் 2 December 2010.[தொடர்பிழந்த இணைப்பு]
  5. "Pammi Bai-Bhangre da Sher". pammibai.com. Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 2 June 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. 6.0 6.1 "The Tribune, Chandigarh, India – The Tribune Lifestyle". The Tribune. பார்க்கப்பட்ட நாள் 2 June 2015.
  7. 7.0 7.1 "World Punjabi Conference from today". sikhmatrimonials.com. பார்க்கப்பட்ட நாள் 2 June 2015.
  8. "Gravesham mayor in Punjabi pop video". BBC News. பார்க்கப்பட்ட நாள் 2 June 2015.
  9. "Punjab Online: Discussions: Bhangra". punjabonline.com. Archived from the original on 23 January 2016. பார்க்கப்பட்ட நாள் 2 June 2015.
  10. "Delegates leave for World Punjabi Conference in Lahore". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2 June 2015.
  11. "Pammi Bai Live in Surrey, Canada on 5th July 2014". singh.com.au. பார்க்கப்பட்ட நாள் 2 June 2015.
  12. 12.0 12.1 "Punjab Day special: 'People should love, respect their mother tongue'". hindustantimes.com/. பார்க்கப்பட்ட நாள் February 22, 2023.
  13. "The Tribune, Chandigarh, India – Ludhiana Stories". The Tribune. பார்க்கப்பட்ட நாள் 2 June 2015.
  14. "Dhol Te Dhamaalan". AllMusic. பார்க்கப்பட்ட நாள் 2 December 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரம்ஜித்_சிங்_சித்து&oldid=3667931" இலிருந்து மீள்விக்கப்பட்டது