பரூக்நகர் இந்தியாவின் ஹரியானா மாநிலத்தின் குர்கான் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது 21 கிலோமீட்டர்கள் (13 mi) தொலைவில் அமைந்துள்ள குர்கான் மாவட்டத்தின் ஒன்பது நிர்வாகத் தொகுதிகளில் ஒன்றாகும். குர்கானில் இருந்து ஜாஜ்ஜர் மாவட்டத்துடன் அதன் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. இது அஹிர்வால் பிராந்தியத்தின் ஒரு பகுதியாகும்.

1732 ஆம் ஆண்டில் பரூக்நகரின் முதல் நவாப் மற்றும் முகலாய பேரரசர் பரூக்சியாரின் ஆளுநரான பவுஜ்தார் கான் என்பவரால் நிறுவப்பட்ட பரூக்நகர் அதன் உப்பு வர்த்தகம் காரணமாக 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை செழித்து வளர்ந்தது. இன்று, முகலாயர் கால நினைவுச் சின்னங்களான சீஷ் மகால், பாவ்லி மற்றும் பவுஜ்தார் கான் கட்டிய ஜமா மஸ்ஜித் ஆகியவை பார்வையாளர்களை ஈர்க்கின்றன. இந்த நகரம் குர்கானுக்கு தெற்கே உள்ள கர்ஹி ஹர்சருவுடன் இரயில் பாதை மூலம் இணைக்கப்பட்டுள்ளது. சுல்தான்பூர் தேசிய பூங்கா குர்கான் சாலையில் உள்ள பரூக்நகர் பகுதியில் அமைந்துள்ளது. நகரத்திலிருந்து 12 கிலோமீட்டர்கள் (7.5 mi) தொலைவில் பட்டெளதி அரண்மனை உள்ளது.

வரலாறு தொகு

பவுஜ்தார் கான் வரும் வரை பலூச் இன மக்கள் ஆட்சியாளர்களாக இப்பகுதியைக் கட்டுப்படுத்தினர்.[1]

முகலாய சகாப்தம் தொகு

1732 ஆம் ஆண்டில் பரூக்நகரின் முதல் நவாப் மற்றும் முகலாய பேரரசர் பரூக்சியாரின் ஆளுநரான பவுஜ்தார் கான் என்பவரால் நிறுவப்பட்டு, பல ஆண்டுகளாக உப்பு வர்த்தகம் காரணமாக பரூக்நகர் செழித்தது.

கான் எண்கோண நகரத்தைச் சுற்றியுள்ள கோட்டைகளைக் கட்டினார். ஐந்து நுழைவாயில்கள் கொண்ட அவரது அரண்மனை சீஷ் மகால் என்று அழைக்கப்படுகிறது. இது 1761 ஆம் ஆண்டில் முகலாய கட்டிடக்கலையில் குறிப்பிடத்தக்க கட்டமைப்பில் கட்டப்பட்டது. மேலும் ஜமா மஸ்ஜித் மற்றும் தில்லி தர்வாசா (டெல்லி கேட்) ஆகியவற்றையும் கட்டினார். 70 ஆண்டுகளுக்கும் மேலாக அடுத்தடுத்த நவாப்கள் இப்பகுதியில் ஒரு பெரிய நிலப்பரப்பை ஆண்டனர். [2]

ஜாட் சகாப்தம் தொகு

இதற்கிடையில், 1757 ஆம் ஆண்டில் ஜாட் இனத்தின் பரத்பூரைச் சேர்ந்த சூரஜ் மல் என்பவரால் காம்கரின் மகன் மூசா கானை தோற்கடித்தது பரூக்நகரைக் கைப்பற்றினார். 1763 இல் மகாராஜா சூரஜ் மல் இறந்த பிறகு, 1771இல் மூசா கான் பரூக்நகரை மீட்டெடுத்தார்.

பிரித்தானியப் பேரரசு தொகு

பிரித்தானியப் பேரரசுடன் இணைந்த பின்னர், நகர் நவாப்களின் தலைமையில் இருந்தது. ஆனால் பரூக்நகரின் நவாப் அகமது அலி கான், 1857 ஆம் ஆண்டில் இந்திய கிளர்ச்சியில் பங்கேற்றார்.ஜகஜ்ஜரின் நவாப்கள், ரேவாரியின் ராவ் துலா ராம் மற்றும் பல்லப்காரின் ராஜா நஹர் சிங், ஹிசார் மற்றும் சிர்சாவின் பட்டி தலைவர்கள், மற்றும் மியோ பழங்குடியினரின் நிலங்கள் 1858 இல் பறிமுதல் செய்யப்பட்டு பேரரசின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டது. கிளர்ச்சியின் போது, அவர்களின் ஒருங்கிணைந்த படைகள், பிரித்தானியப் படைகளிடமிருந்து ரோத்தக்கை முழுவதுமாகக் கைப்பற்றியதுடன், உள்நாட்டு நிலையத்தைத் தாக்கி சூறையாடி, அனைத்து உத்தியோகப்பூர்வ பதிவுகளையும் எரித்தது. கிளர்ச்சி தோல்வியடைந்த பின்னர், பஞ்சாப் வரிவிதிப்புப் படைகள், பகதூர்கரைச் சேர்ந்த ராஜா நஹர் சிங் மற்றும் ஜகஜ்ஜாரின் நவாப் அப்துர் ரகுமான் கான் ஆகியோர் பிடிக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படு, டெல்லியில் தூக்கிலிடப்பட்டனர். மற்றவர்கள் லாகூருக்கு நாடுகடத்தப்பட்ட தண்டனையுடன் தப்பினர்.[3] [4]

1857 கிளர்ச்சியில் பங்கேற்றதற்காக, ஹரியானாவின் மூன்று முக்கிய தலைவர்கள் பழைய தில்லியின் சந்தானி சவுக்கில் உள்ள கோட்வாலியில் தூக்கிலிடப்பட்டனர். பல்லப்கரின் ராஜாவான நஹர் சிங் 1958 ஜனவரி 9 அன்று தூக்கிலிடப்பட்டார். ஜகஜ்ஜார் நவாப் அப்துர் ரகுமான் ஜனவரி 23, 1858 ல் தூக்கிலிடப்பட்டார். பரூக்நகரின் நவாப் அகமது அலி 1858 ஜனவரி 23 அன்று தூக்கிலிடப்பட்டார். நகரில் கிளர்ச்சியின் தியாகிகளை நினைவுகூரும் வகையில் சமீபத்தில் ஒரு நினைவுச்சின்னம் எழுப்பப்பட்டது. [5] [6] [7]

குறிப்புகள் தொகு

  1. Dr. Shikha Jain and Radhika Sewak (10 December 2003). "Sheesh Mahal, Farrukh Nagar". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. http://timesofindia.indiatimes.com/city/delhi/Sheesh-Mahal-Farrukh-Nagar/articleshow/350703.cms. 
  2. Haryana: Past and Present. https://books.google.com/books?id=VE71IqAC0YYC&pg=RA1-PA89. 
  3. "Farrukhnagar". The Imperial Gazetteer of India. 1909. p. 73.
  4. "Population". The Imperial Gazetteer of India. p. 313, v. 21.
  5. "Republic Day Celebrations". The Tribune. 28 January 2008.
  6. "Myth, metaphor and event". The New Indian Express. 6 March 1999. Archived from the original on 16 July 2011.
  7. Yadav, Kripal Chandra (1977). The revolt of 1857 in Haryana. Manohar Book Service. பக். 93. https://archive.org/details/dli.ministry.22029. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரூக்நகர்&oldid=3582923" இலிருந்து மீள்விக்கப்பட்டது