சாந்தினி சவுக்

இந்தியாவின் வடக்கு டில்லிக்கு அருகாமையில் உள்ள வணிக வளாகம்

சாந்தினி சவுக் (நிலவு ஒளி சதுக்கம்) (The Chandni Chowk) (Moonlight Square), இந்தியாவின் தலைநகரமான் தில்லிப் பெருநகரத்தின் பழைய தில்லியில் செங்கோட்டைக்கு எதிரே அமைந்த பெரிய வணிக மையமாகும். [1][2]இப்பகுதியில் செங்கோட்டை ஜும்மா பள்ளிவாசல், சிஸ் கஞ்ச் சாகிப் குருத்துவார் மற்றும் திகம்பர சமணக் கோயில் அமைந்துள்ளது.

சாந்தினி சௌக்
چاندنی چوک
ਚਾਂਦਨੀ ਚੌਕ
चाँदनी चौक
Neighbourhood
சாந்தினி சௌக் is located in டெல்லி
சாந்தினி சௌக்
சாந்தினி சௌக்
இந்தியாவின் பழைய தில்லியில் சாந்தினி சவுக் பகுதியின் அமைவிடம்
சாந்தினி சௌக் is located in இந்தியா
சாந்தினி சௌக்
சாந்தினி சௌக்
சாந்தினி சௌக் (இந்தியா)
ஆள்கூறுகள்: 28°39′22″N 77°13′52″E / 28.656°N 77.231°E / 28.656; 77.231
நாடுஇந்தியா
மாநிலம்தில்லி
மாவட்டம்மத்திய தில்லி மாவட்டம்
பெருநகரம்சாந்தினி சவுக்
மொழிகள்
 • அலுவல் மொழிகள்இந்தி, உருது, பஞ்சாபி, ஆங்கிலம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்110 006
நகரமைப்பு திட்டக் குழுமம்தில்லி மாநகராட்சி

வரலாறு தொகு

 
சாந்தினி சவுக் பகுதியில் இறுதி முகலாய மன்னர் பகதூர் ஷாவின் ஊர்வலம், 1843
 
சுனேரி மசூதி, சாந்தினிசவுக், 1850
 
1860ல் சாந்தினி சவுக் வணிக மையம்
 
தில்லி அரசவை மண்டபத்திற்கு எழுந்தருள, ஊர்வலமாக வரும் ஐக்கிய இராச்சியத்தின் மன்னர் ஏழாம் எட்வர்டு மற்றும் இராணி அலெக்சாண்டிரா, ஆண்டு 1903

முகலாயப் பேரரசர் ஷாஜகான், யமுனை ஆற்றின் கரையில் பழைய தில்லியில் பேரரசின் தலைநகரை நிறுவ செங்கோட்டை மற்றும் ஜும்மா பள்ளிவாசலைக் கட்டினார். புதிய நகரத்திற்கு ஷாஜகானாபாத் எனப் பெயரிட்டார்.

ஷாஜகான் தனது மகள் இளவரசி ஜெகன்னரா பேகத்தின் திட்டப்படி, செங்கோட்டை எதிரே உள்ள பகுதியில் நிலவு ஒளி சதுக்கம் எனப் பொருள் படி, சாந்தினி சவுக் எனும் பெரிய வணிக வளாகத்தை கிபி 1650ல் நிறுவினார். சாந்தினி சவுக் வணிக வளாகம் 1520 கெஜம் நீளம், 40 கெஜம் அகலத்துடன் 1,560 கடைகளுடன் அமைக்கப்பட்டது.[3]

இந்திய வணிக மையங்களில் சாந்தினி சவுக் வணிக வளாகம் பழமையானதும், புகழ் பெற்றதாகும்.[4] முகலாய மன்னர்கள் சாந்தினி சவுக் வழியாக நகர் ஊர்வலம் செல்வது வழக்கமானதாகும். பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள், சாந்தினி சவுக் போன்று, தில்லி நகரச் சதுக்கம் பகுதியை 1863ல் நிறுவினர்.

சாந்தினி சவுக் பகுதி, மதில் சுவர்களால் சூழப்பட்ட பழைய தில்லியின் நடுவில், செங்கோட்டையின் லாகூரி கேட் பகுதியிலிருந்து துவங்கி, பதேபுரி மசூதி வரை நீள்கிறது.[5]

படக்காட்சிகள் தொகு

இதனையும் காண்க தொகு

மேலும் படிக்க தொகு

  • Delhi, the emperor's city: rediscovering Chandni Chowk and its environs, by Vijay Goel. Lustre Press, 2003. ISBN 81-7436-240-1.

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Chandni Chowk
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாந்தினி_சவுக்&oldid=3777331" இருந்து மீள்விக்கப்பட்டது