திகம்பர சமணக் கோயில்
திகம்பர சமணக் கோயில் (Shri Digambar Jain Lal Mandir) (இந்தி: श्री दिगंबर जैन लाल मंदिर Śrī Digambar Jain Lāl Mandir), சமண சமயத்தின் 23வது தீர்த்தங்கரரான பார்சுவநாதருக்கு அர்பணிக்கப்பட்டது. இந்தியாவின் தலைநகரமான பழைய தில்லியின் சாந்தினி சௌக் பகுதியில், செங்கோட்டைக்கு எதிரில் அமைந்துள்ளது.
திகம்பர சமணக் கோயில், சாந்தினி சௌக் | |
---|---|
திகம்பர சமணக் கோயில், சாந்தினி சௌக், தில்லி | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | சாந்தினி சௌக், தில்லி |
புவியியல் ஆள்கூறுகள் | 28°39′20.8″N 77°14′10.6″E / 28.655778°N 77.236278°E |
சமயம் | சமணம் |
இக்கோயில் பின்புறம் பறவைகளுக்கான மருத்துவ மனை செயல்படுகிறது. [1][2]
இக்கோயில் செந்நிற மணற்கல்லால் 1658ம் ஆண்டில் நிறுவப்பட்டது.[3]
வரலாறு
தொகுமுகாலயப் பேரரசர் சாசகான் ஆட்சியின் போது (1628–1658) செங்கோட்டை, சாந்தினி சவுக் பகுதிகளுடன் பழைய தில்லி நகரம் நிறுவப்பட்ட போது, சமண சமய வணிகர்களை அழைத்து[4]தில்லி நகரப் பகுதிகளில் வணிகம் செய்ய கேட்டுக் கொண்டார். சமணர்கள் இப்பகுதியில் சிறு கோயில் கட்டி, பார்சுவநாருக்கு அர்ப்பணித்தனர்.
1800 - 1807ல் பிரித்தானிய இந்தியா அரசில் அதிகாரியாக இருந்த இராஜா ஹர்சுக் இராய் என்பவர், பழைய கோயிலை சீரமைத்து, கோபுரங்களுடன் புதிய கோயிலை நிறுவினார்.
இச்சமணர் கோயிலுக்கு அருகில் உள்ள கௌரி சங்கர் கோயிலை, மராத்தியப் பேரரசின் தில்லி ஆளுநராக இருந்த சிந்தியா குல அப்பா கங்காதரர் என்பவர் 1761ல் கட்டினார்.
கோயில் வளாகம்
தொகுமூலவர் பார்சுவநாதருடன் மகாவீரர், ரிசபநாதர் போன்ற தீர்த்தங்கரர்களின் சன்னதிகள் உள்ளது. இக்கோயிலின் பின்புறத்தில் பறவைகளுக்கான மருத்துவ மனை உள்ளது. [5]
இக்கோயில் வளாகத்தில் 1957ல் நிறுவப்பட்ட பறவைகள் மருத்துவ மனையில் ஆண்டிற்கு 15,000 பறவைகளுக்கு மருத்துவம் பார்க்கப்படுகிறது.[6]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Powell Ettinger. "Jainism and the legendary Delhi bird hospital". Wildlifeextra.com.
- ↑ Top 10 Delhi - Dorling Kindersley.
- ↑ Bharat ke Digambar Jain Tirth, Volume 1, Balbhadra Jain, 1974
- ↑ http://www.indiatvnews.com/news/india/india-s-agrawal-community-its-history-and-prominent-personaliti-18629.html?page=4
- ↑ IN OLD DEHLI A HOSPITAL FOR FIGHTING NIGHTINGALES, STEVEN R. WEISMAN, New York Times, April 4, 1986
- ↑ Healing Wings, A hospital for birds in Delhi’s Chandni Chowk, AMRITA PAUL, Caravan,1 January 2013
இதனையும் காண்க
தொகு- Shri Digambar Jain Lal Mandir - Having Birds Hospital பரணிடப்பட்டது 2017-09-14 at the வந்தவழி இயந்திரம்
- Photo and Brief Description பரணிடப்பட்டது 2016-03-08 at the வந்தவழி இயந்திரம்