பரோடா டைனமைட் வழக்கு

இந்திரா காந்தி அரசாங்கத்தால் இந்தியாவில் எதிர்க்கட்சித் தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மற்றும் 24

பரோடா டைனமைட் வழக்கு (Baroda dynamite case) என்பது இந்திரா காந்தி அரசாங்கத்தால் இந்தியாவில் எதிர்க்கட்சித் தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மற்றும் 24 பேருக்கு எதிராக நெருக்கடி நிலைகாலத்தில் தொடரப்பட்ட குற்றவிலயல் வழக்குக்கை குறிக்க பயன்படுத்தப்படும் சொல் ஆகும். [1]

அவசரகால நிலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரசாங்க கட்டடங்களையும், தண்டவாளங்களையும் வெடிவைத்து தகர்ப்பதற்காக ஜார்ஜ் மற்றும் பலர் டைனமைட் வெடிபொருளை கடத்தியதாக நடுவண் புலனாய்வுச் செயலகம் குற்றம் சாட்டியது. அரசாங்கத்தை கவிழ்க்க அரசுக்கு எதிராக போர் தொடுத்ததாகவும் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் 1976 சூன் மாதம் கைது செய்யப்பட்டு தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதில் குற்றம் சாட்டப்பட்ட பிற முக்கிய குற்றவாளிகளில் வீரென் ஜே. ஷா, ஜி. ஜி. பாரிக், சி. ஜி. கே. ரெட்டி, [2] பிரபுதாஸ் பட்வாரி, தேவி குஜ்ஜார், மோதிலால் கனோஜியா ஆகியோர் அடங்குவர். இந்த சம்பவம் நடந்ததாக சொல்லப்பட்ட இடம் பரோடா என்றாலும், இந்த வழக்கில் தேசிய ரீதியான தொடர்பு இருப்பதாக சிபிஐ வாதிட்டதால், இந்த வழக்கு தில்லியில் விசாரிக்கப்பட்டது.

1977 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பீகாரின் முசாபர்பூரில் பெர்னாண்டஸ் போட்டியிட்டார். சிறைவைக்க கைகளில் சங்கிலிகளில் பிணைக்கபட்ட அவரது ஒளிப்படத்துடன் அவரது ஆதரவாளர்கள் பரப்புரை செய்ததனர். அவர் தேர்தலில் வென்றார். 1977 ல் ஆட்சிக்கு வந்த ஜனதா கட்சி அரசு வழக்கை திரும்பப் பெற்றது. மேலும் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர். [3]

இந்திய திரைப்பட நடிகையான சினேகலதா ரெட்டியும் அவரது கணவரும் அவசர நிலை கால எதிர்ப்பு இயக்கத்தில் கலந்து கொண்டனர். [4] சினேலதா ஜார்ஜ் பெர்னாண்டசின் நெருங்கிய நண்பராக இருந்தார். ச்சினேகலதா 1976 மே 2 அன்று கைது செய்யப்பட்டார். பரோடா டைனமைட் வழக்கில் குற்றம் சாட்டபட்டவர்களுக்கு உடந்தையாக இருந்ததற்காக அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் இறுதி குற்றப்பத்திரிக்கையில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மற்றும் பலர் குற்றம் சாட்டப்பட்டனர் என்றாலும் அதில் சினேலதாவின் பெயர் இல்லை. அப்படியிருந்தும், அவர் கைது செய்யப்பட்டு சிறைவைக்கபட்டார். சிறையில் அவர் தொடர்ந்து சித்திரவதை செய்யப்பட்டார். மேலும் பெங்களூரு சிறையில் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டார்.சிறையில் அவரது உடல்நிலை மோசமடைந்தநிலையில் அவர் 1977 சனவரி 15 அன்று பரோலில் விடுவிக்கப்பட்டார். ஆனால் 1977 ஜனவரி 20 அன்று நாள்பட்ட ஆஸ்துமா, நுரையீரல் தொற்று காரணமாக பரோலில் விடுவிக்கப்பட்ட ஐந்து நாட்களுக்குப் பிறகு அவர் இறந்தார், அவசரகாலத்தின் முதல் தியாகிகளில் ஒருவராக ஆனார். [1]

குறிப்புகள்

தொகு

 

  1. 1.0 1.1 "George Fernandes Rebel". livemint.com. https://www.livemint.com/Sundayapp/dxWMisYxo5tz1XfTtA0QdI/George-Fernandes-Rebel-without-a-pause.html. 
  2. "Right to rebel by CGK Reddy". India_Today.
  3. "George Fernandes during emergency". Indian Express. https://indianexpress.com/article/india/india-news-india/george-fernandes-sikh-man-disguise-during-emergency-2848285/. 
  4. "snehalata reddys as mother". The Hindu. https://www.thehindu.com/features/magazine/nandana-reddy-on-mother-snehalata-reddys-incarceration-during-emergency/article7360753.ece. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரோடா_டைனமைட்_வழக்கு&oldid=3158843" இலிருந்து மீள்விக்கப்பட்டது