பர்ணசாலை

ஆந்திராவிலுள்ள ஒரு கிராமம்

பர்ணசாலை (Parnasala) என்பது இந்தியாவின் தெலங்காணாவில் புதிதாக உருவாக்கப்பட்ட பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டத்தில் (முன்னர் கம்மம் மாவட்டம்) தும்முகுடேம் மண்டலத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.[1] இந்த கிராமம் சாலை மற்றும் படகுகள் மூலம் அணுகக்கூடியது. மேலும், கோவில் நகரமான பத்ராசலத்திலிருந்து 32 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

பர்ணசாலை
Parnasala
Parnasala
பர்ணசாலை is located in தெலங்காணா
பர்ணசாலை
பர்ணசாலை
தெலங்காணாவில் பர்ணசாலையின் அமைவிடம்
பர்ணசாலை is located in இந்தியா
பர்ணசாலை
பர்ணசாலை
பர்ணசாலை (இந்தியா)
ஆள்கூறுகள்: 17°55′55″N 80°53′46″E / 17.932°N 80.896°E / 17.932; 80.896
நாடுஇந்தியா
மாநிலம்தெலங்காணா
மாவட்டம்கம்மம்
ஏற்றம்
55 m (180 ft)
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்513
மொழிகள்
 • அலுவல்தெலுங்கு
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
இணையதளம்telangana.gov.in
பர்ணசாலையில் கோதாவரி ஆறு

பத்ராசலம் பகுதியில் இதிகாச இராமாயணத்துடன் தொடர்புடைய பல இந்து கோவில்கள் உள்ளன.[2]

நிலவியல்

தொகு

பர்ணசாலை17°55′55″N 80°53′45″E / 17.93194°N 80.89583°E / 17.93194; 80.89583 இல் [3] அமைந்துள்ளது. சராசரியாக 55 மீட்டர்கள் (183 அடி) உயரத்தில் உள்ளது.

மக்கள்தொகை

தொகு

2001 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பர்ணசாலா கிராமத்தின் மக்கள்தொகை விவரங்கள் பின்வருமாறு: [4]

  • மொத்த மக்கள் தொகை: 116 குடும்பங்களில் 513 பேர்
  • ஆண்கள்: 253
  • பெண்கள்: 260
  • 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள்: 51 (ஆண்கள் - 23 , பெண்கள் - 28)
  • மொத்த கல்வியறிவு பெற்றவர்கள்: 429

புராணம்

தொகு
 
பர்ணசாலை கோவில்

புராணத்தின் படி, இராமன் தனது 14 வருட வனவாசத்தில் சில நாட்களை இந்த இடத்தில் கழித்ததாக கூறப்படுகிறது.[5] இங்குள்ள நீரோடையில் இராமனின் மனைவியான சீதை குளித்து, தனது ஆடைகளை இங்குள்ள ராதாபடித்துறையில் உலர்த்தியதாக உள்ளூர்வாசிகள் நம்புகிறார்கள். அரக்க அரசன் இராவணன் தனது புட்பக விமானத்தை ஆற்றின் எதிர்புறத்தில் உள்ள குன்றின் மீது நிறுத்தி சீதையைக் கடத்திச் சென்றான். சீதையை இலங்கைக்குக் கொண்டு செல்வதற்காக இராவணன் பூமியை அகற்றியபோது ஏற்பட்டதாகக் கூறப்படும் ஒரு மண் பள்ளத்தை இங்கே காணலாம். சீதையை ஏமாற்ற தங்க மான் வேடத்தில் வந்த மாரீசனை இராமன் கொன்ற இடமாக பர்ணசாலை இருந்தது என்று மற்றொரு இந்து புராணம் கூறுகிறது.

சான்றுகள்

தொகு
  1. "Village Code Directory: Andhra Pradesh" (PDF). பார்க்கப்பட்ட நாள் 20 November 2010.
  2. "Welcome to Official Website of Telangana Tourism Corporation".
  3. Parnasala at Fallingrain.com
  4. Parnasala at Our Village India.org
  5. "Heritage Spots in Telangana :: Telangana Tourism".
"https://ta.wikipedia.org/w/index.php?title=பர்ணசாலை&oldid=3816936" இலிருந்து மீள்விக்கப்பட்டது