பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டம்

பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டம் (Bhadradri Kothagudem district) இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் 31 மாவட்டங்களில் ஒன்றாகும். [1] இதன் நிர்வாகத் தலைமையிடம் கொத்தகூடம் நகரத்தில் அமைந்துள்ளது.

தெலங்கானாவின் 31 மாவட்டங்களின் வரைபடம்
பத்ராத்ரி மாவட்டத்தின் வரைபடம்

தெலுங்கான மாவட்டங்களை சீரமைத்து 21 புதிய மாவட்டங்கள துவக்கும் போது, கம்மம் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு அக்டோபர், 2016-இல் பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டம் நிறுவப்பட்டது.[2]

புவியியல்தொகு

பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டம் 8,951 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது.[3] இம்மாவட்டத்தின் வடக்கிலும், வடகிழக்கிலும் சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜப்பூர் மாவட்டம் மற்றும் சுக்மா மாவட்டங்களும், வடமேற்கில் ஜெயசங்கர் மாவட்டமும், கிழக்கில் ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டமும், தெற்கிலும், தென்கிழக்கிலும் கம்மம் மாவட்டம் மற்றும் மேற்கு கோதவாரி மாவட்டங்களும், மேற்கில் மகபூபாபாத் மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் சிங்கரேணி பகுதியில் நிலக்கரிச் சுரங்கங்கள் உள்ளது.

மக்கள் தொகைதொகு

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டத்தின் மக்கள் தொகை 13,04,811 ஆக உள்ளது. [3]

மாவட்ட நிர்வாகம்தொகு

பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டம், பத்ராச்சலம் மற்றும் கொத்தகூடம் என இரண்டு வருவாய் கோட்டங்களைக் கொண்டுள்ளது. இவ்விரண்டு கோட்டங்களை 18 மண்டல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[3][4]

முக்கிய நகரங்கள்தொகு

வழிபாட்டுத் தலங்கள்தொகு

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. "Names of 6 new districts changed" (in en-IN). The Hindu. 22 October 2016. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-telangana/names-of-6-new-districts-changed/article9253888.ece. பார்த்த நாள்: 4 November 2016. 
  2. "Bhadradri district". பார்த்த நாள் 11 October 2016.
  3. 3.0 3.1 3.2 "New districts". Andhra Jyothy.com. 8 October 2016. http://www.andhrajyothy.com/artical?SID=320397. பார்த்த நாள்: 8 October 2016. 
  4. "Clipping of Andhra Jyothy Telugu Daily - Hyderabad". பார்த்த நாள் 8 October 2016.

வெளி இணைப்புகள்தொகு