பாருசு மாகாணம்

(பர்ஸ் மாகாணம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஃபர்ஸ் மாகாணம் (Pars Province (/pɑːrs/; பாரசீக மொழி: استان پارس‎, Ostān-e Pārs, pronounced [ˈpɒː(ɾ)s]பாரஸ் ( Fars) என்றும் அறியப்படுவது  (பாரசீக மொழி: فارس‎, Fārs) அல்லது பெர்சியா (Persia) என்று  கிரேக்க வரலாற்று மூலங்களில் அழைக்கப்படுவது[4]  ஈரானின் முப்பத்தி ஒரு மாகாணங்களில் ஒன்று ஆகும். மேலும் இது நாட்டின் கலாச்சார தலைநகரமாக அறியப்படுகிறது. இது நாட்டின் தென்பகுதியில் இரண்டாம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[5] மாகாணத்தின் தலைநகராக சீராசு நகரம் உள்ளது. இந்த மாகாணத்தின் பரப்பளவானது 122,400 km² ஆகும். 2011ஆம் ஆண்டில் இந்த மாகாணத்தின் மக்கள் தொகையானது 4.6 மில்லியனாக இருந்த‍து. இதில் 67.6% மக்கள் நகரவாசிகள் (நகரம்/புறநகரம்), 32.1% மக்கள் ஊரகங்களில்  (சிறு நகரங்கள்/கிராமங்கள்) வாழ்பவர்களாவர். மேலும் 0.3% மக்கள் நாடோடி பழங்குடியினராவர்.[6]  இந்த மாகாணப் பகுதியை குறிக்கும் பழங்கால பெயரான பாரசீகம் ( Persian) (From Latin Persia, from Ancient Greek ΠερσίςΠερσίς, Persís) என்ற பெயரானது பழங்காலத்தில் ஈரானை குறிக்கும் பண்டைய சொல்லாக பாவிக்கப்பட்டுள்ளது. இது இந்த பிராந்தியத்தின் வரலாற்று முக்கியத்துவத்தை சுட்டுவதாக உள்ளது.[7] பாரசீக மக்களின் உண்மையான தாயகம் ஃபார்ஸ் மாகாணமாகும்.[8]

பர்ஸ் மாகாணம்
Pars Province
استان پارس
Persepolis
Cyrus the great tomb
Firouzabad
Naqshi Rustam
Shiraz Gardens
Arg of Karim khan
மேலிருந்து கடிகாரச் சுற்றில்: பெர்சப்பொலிஸ், அர்தார் அரண்மனை, சீராசு, கரீம் கானின் ஆர், நக்ஷ்-இ ருஸ்டம், பசர்கடே.

ஈரானில் ஃபர்ஸ் மாகாணத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 29°37′N 52°32′E / 29.617°N 52.533°E / 29.617; 52.533
நாடு ஈரான்
வட்டாரம்இரண்டாம் வட்டாரம்
தலைநகரம்சீராசு
மாவட்டங்கள்29
பரப்பளவு
 • மொத்தம்1,22,608 km2 (47,339 sq mi)
மக்கள்தொகை
 (2016)[1]
 • மொத்தம்48,51,274
 • அடர்த்தி40/km2 (100/sq mi)
நேர வலயம்ஒசநே+03:30 (IRST)
 • கோடை (பசேநே)ஒசநே+04:30 (IRST)
இடக் குறியீடு071
மதன்மை மொழிகள்பாரசீகம்
கஷ்ஷாய்
லூரி[2][3]
Dialects of Fars

சொற்பிறப்பு

தொகு

புதிய பாரசீக சொல்லான ஃபாரஸ் ( Fârs , فارسفارس) என்பது முந்தைய பெயர்களில் ஒன்றான பாரஸ் ( Pârs, پارسپارس) என்பதன் அரபு மொழி வடிவமாகும், இது பாரசீகப் பகுதியைக் குறிக்க பயன்படுத்தப்பட்ட பழம் பாரசீகப் பெயரான பாரச  Pârsâ (𐎱𐎠𐎼𐎿𐎱𐎠𐎼𐎿) என்ற பெயரில் இருந்து வந்த‍து ஆகும்.

வரலாறு

தொகு

பெர்சிஸ்

தொகு
 
பெர்சப்பொலிஸ் இடிபாடுகள்
 
முதலாம் அர்சஷீரின் பதவி ஏற்பை சித்தரிக்கும் ஒரு சாசானிய சிற்பம்.
 
சாசானிய அரண்மனை

இப்பகுதியில் கி.மு. 10 ஆம் நூற்றாண்டில் இருந்து பண்டைய பாரசீகர்கள் இருந்தனர்.  கி.மு.  6ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட அகாமனிசியப் பேரரசின் கீழ் உலகம் அதுவரை கண்டிருந்த பேர‍சுகளில் மிகப்பெரிய பேரரசாக  மாறியது. அதன் உச்சநிலையில் அதப் பரப்பளவானது மேற்கில் திரேசு-மக்கெடோனியா, பல்காரியா-பியோனியா மற்றும் கிழக்கு ஐரோப்பா முதல், தூரக் கிழக்கில் சிந்து ஆறு வரை இருந்த‍து.[9] அகாமனிசியப்  பேரரசின் நான்கு தலைநகரங்களில் இரண்டு நகரங்களான பெர்சப்பொலிஸ் மற்றும் பசர்கடீவின் ஆகியவற்றின் இடிபாடுகள், ஃபர்ஸ் மாகாணத்தில் அமைந்துள்ளன.

அகாமனியப் பேரரசை கி.மு. 333இல் அலெக்சாந்தரால் தோற்கடிக்கப்பட்டு, அவரது பேர‍ரசுடன் இணைக்கப்பட்டது. அதன்பிறகு  விரைவில் செலூக்கியப் பேரரசு நிறுவப்பட்டது. முதலாம் அந்தியோக்கசு அல்லது அவரது ஆட்சி காலத்துக்குப் பின்னர், பெர்சியஸ் தன் சொந்த நாணயங்களை வெளியிடுமளவுக்கு ஒரு சுதந்திர நாடாக உருவானது.[10]

கி.மு. 238இல் செலுக்கியப் பேரரசானது பார்த்தியர்களால் தோற்கடிக்கப்பட்டது. ஆனால் கி.மு. 205 ஆம் ஆண்டில், செலுக்கிய அரசரான மூன்றாம் அந்தியோக்கியஸ் தனது அதிகாரத்தை பெர்சியாவரை கொண்டுவந்தார். இதனையடுத்து இதன் இறையண்மை நிலை முடிவுக்கு வந்தது.[11]

கேஹிர் என்ற சிறிய நகரத்தின் ஆட்சியாளராக பாபாக் இருந்தார். அந்த சமயத்தில் உள்ளூர் அதிகாரத்தை விரிவாக்கும் முயற்சியில் பாபாக்கும் அவரது மூத்த மகனான முதலாம் ஷபூரும் ஈடுபட்டனர். இந்த முயற்சிகள் பார்த்தியப் பேரரசின் மன்னரான நான்காம் ஆர்பாபனசின் கவனத்திலிருந்து தப்பியது.

இதன் தொடர்ச்சியாக நடந்த நிகழ்வுகள் வரலாற்றில் தெளிவாக இல்லை. 220இல் பாபாக்கின் மரணமடைந்தார். அந்தக் காலகட்டத்தில்  தாராப்கார்ட்டின் ஆளுநராக இருந்த பாபாக்கின் இளைய மகனான அர்ஷஷிர், அவரது அண்ணன் முதலாம் ஷாபூருடன்  அதிகாரத்திற்கான போராட்டத்தில் ஈடுபட்டார். 222இல் ஒரு கட்டிடத்தின் கூரை இடிந்து விழுந்த்தில் ஷாபூர் கொல்லப்பட்டதாக ஆதாரங்கள் வழியாக தெரியவருகிறது.

இந்த கட்டத்தில், பெர்சிய மன்னரான அர்ஷஷிர் தன் தலைநகரை இன்னும்  தெற்கே தனது தலைநகரத்தை மாற்றினார். மேலும் புதிய தலைநகராக ஆர்டாஷிர்-க்வார்ராவை (முன்னர் குரு, தற்கால ஃபிரோசாபாத்) நிறுவினார்.[12] அர்ஷஷிர் காலத்தில் அவரது சாசானியப் பேரரசானது பெர்சியாவில் விரிவாகப் பரவியது.  

425 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த சாசானியப் பேரரசு முஸ்லீம் படைகளால் வெல்லப்பட்டதால் முடிவுக்கு வந்தது. இதன் பின்னர், பெர்சியர்கள் இஸ்லாமிற்கு மாறத் தொடங்கினர்.

நிர்வாகப் பிரிவுகள்

தொகு

ஈரானின் தெற்கில் ஃபார்ஸ் மாகாணமானது அமைந்துள்ளது.  அண்மைய நிர்வாகப் பிரிவுகளின்படி, இந்த மாகாணத்தில் கீழ்க்கண்ட மாவட்டங்களாக அபதேஷ், சரஸ்வஸ்தன், ஜஹ்ரோம், ஈக்லிட், ரோஸ்டம், எஸ்ட்பன்பன், டராப், நயிரிஸ், பவானட், லாரெஸ்டான், குர்ர் மற்றும் கர்சின், கோர்ராம்பிபிட், லாமெர்ட், கஜெர்யூன், பாசா, ஃபருசாபாத், ஜரிரின் டாஷ், மமாசானி, ஷிராஸ், மார்வாடாஷ், செபீடான், அர்சான்ஜான், பசர்காட், கவார், கோன்ஜ், ஃபராஷ்பேண்ட், கெராஷ், கரேமே, மோர் போன்றவை உள்ளன.

பொருளாதாரம்

தொகு

பர்ஸ் மாகாணத்தின் பொருளாதாரத்தில் வேளாண்மை மிகவும் முக்கிய இடத்தை வகிக்கிறது.[13] இங்கு விளையும் முக்கிய பொருட்களாக தானியங்கள் (கோதுமை மற்றும் பார்லி), சிட்ரஸ் பழங்கள், பேரீச்சை, சர்க்கரை அக்காரக்கிழங்கு போன்றவை ஆகும்.   ஃபர்ஸ் மாகாணத்தில் பெரிய அளவில் பெட்ரோலியத்தைக் கொண்டுள்ளது, மேலும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை,  டயர் தயாரிப்புத் தொழிற்சாலை,  பெரிய மின்னணு தொழிற்சாலை, சர்க்கரை ஆலை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மாகாணத்தில் சுற்றுலாத்துறை ஒரு பெரிய தொழிலாக உள்ளது. 

மக்கள்வகைப்பாடு

தொகு

மாகாணத்தில் உள்ள முக்கிய இனக்குழுவாக பாரசீகர் (லாரெரெனி மக்கள் மற்றும் பாஸ்ஸே உட்பட) உள்ளனர். இவர்களுடன் கஷ்காய், லோர், குர்துகள், அரேபியர்கள், ஜோர்ஜியர்கள் மற்றும் செர்சியர்கள் ஆகியோர் சிறுபான்மையினராக உள்ளனர்.[14]

மேற்கோள்கள்

தொகு
  1. "National census 2016". amar.org.ir. பார்க்கப்பட்ட நாள் 2017-03-14.[]
  2. "پرتال سازمان ميراث فرهنگي، صنایع دستی و گردشگري > استانها > فارس > آداب و رسوم". 11 January 2012. Archived from the original on 11 January 2012.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-10-11. பார்க்கப்பட்ட நாள் 2018-11-19.
  4. Sykes, Percy (1921). A History of Persia. London: Macmillan and Company. p. 43.
  5. "همشهری آنلاین-استان‌های کشور به ۵ منطقه تقسیم شدند (Provinces were divided into 5 regions)" (in Persian). Hamshahri Online. 22 June 2014 இம் மூலத்தில் இருந்து 23 June 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140623191332/http://www.hamshahrionline.ir/details/263382/Iran/-provinces. 
  6. "National Population and Housing Census, 2011".
  7. M. A. Dandamaev (1989). A Political History of the Achaemenid Empire. BRILL. pp. 4–6.
  8. Austin, Peter (1 January 2008). "One Thousand Languages: Living, Endangered, and Lost". University of California Press – via Google Books.
  9. David Sacks, Oswyn Murray, Lisa R. Brody; Oswyn Murray; Lisa R. Brody (2005). Encyclopedia of the ancient Greek world. Infobase Publishing. pp. 256 (at the right portion of the page). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8160-5722-1.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)CS1 maint: Multiple names: authors list (link)
  10. The Cambridge History of Iran, Vol. 3 (1), p. 299
  11. The Cambridge History of Iran, Vol. 3 (1), p. 302
  12. Kaveh Farrokh (2007). Shadows in the Desert: Ancient Persia at War. Osprey Publishing. pp. 176–9.[தொடர்பிழந்த இணைப்பு]
  13. Aref, Farshid (2011). (PDF)Indian Journal of Science and Technology. http://www.indjst.org/index.php/indjst/article/download/29952/25909. பார்த்த நாள்: January 22, 2014. 
  14. "FĀRS vii. Ethnography". 31 May 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாருசு_மாகாணம்&oldid=3653859" இலிருந்து மீள்விக்கப்பட்டது