பறவூர் தா. கி. நாராயண பிள்ளை

இந்திய அரசியல்வாதி

பறவூர் த. கி. நாராயண பிள்ளை (Paravoor T. K. Narayana Pillai) (25 மார்ச் 1890 – சூன் 23 1971) இந்தியாவில் பிரித்தானிய ஆட்சியின் போது ஒரு இந்திய சுதந்திர போராட்ட வீரராகவும், அவர்களின் ஆட்சிக்கு எதிராக போராடிய இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராக இருந்தார். இவர் திருவிதாங்கூரின் கடைசி திவானாகவும், 1949 இல் உருவான திருவிதாங்கூர்-கொச்சியின் முதல் முதல்வராகவும் இருந்தார். அவர் பொதுவாக பறவூர் டி.கே என்று அழைக்கப்பட்டார்.

பறவூர் தா. கி. நாராயண பிள்ளை
திருவாங்கூர்-கொச்சி
ஆளுநர்சித்திரைத் திருநாள் பலராம வர்மன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புவடக்கு பறவூர், திருவிதாங்கூர், பிரித்தானிய இந்தியா
(தற்போது கேரளம், இந்தியா)
இறப்பு23 சூன் 1971(1971-06-23) (அகவை 81)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
உறவினர்கள்சுஜாதா மோகன், இராதிகா திலக் சுவேதா மோகன் (பேத்திகள்)
முன்னாள் கல்லூரிஇயூனியன் கிருத்துவக் கல்லூரி, ஆலுவா

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

இவர், பிரித்தானிய இந்தியாவின் திருவிதாங்கூரில் உள்ள வடக்கு பறவூரில், தாழத்துவீட்டில் மாதவி அம்மாவுக்கும், சேரநல்லூர் கிருட்டிணன் கர்த்தாவுக்கும் மகனாகப் பிறந்தார். ஆலுவாவிலுள்ள இயூனியன் கிறித்துவக் கல்லூரியில் கல்வி கற்ற இவர், 1911இல் இளங்கலை கலை பட்டம் பெற்றார்.{{

அரசியல் வாழ்க்கை தொகு

1924 ஆம் ஆண்டில், இந்திய தேசிய காங்கிரசின் வடக்கு பறவூர் பிரிவின் வட்டத் தலைவரானார். இவர் 1932இல் காங்கிரசின் திருவிதாங்கூர்-கொச்சின் செயலாளராகவும், 1938இல் அதன் தலைவராகவும் இருந்தார். இவர் திருவிதாங்கூர் மாநில காங்கிரசின் நிறுவன உறுப்பினராக இருந்தார். திருவிதாங்கூரின் திவான் சே. ப. இராமசாமி ஐயருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்காக 1939 ஆம் ஆண்டில், பல தலைவர்களுடன் கைது செய்யப்பட்டார். மேலும் இவர்கள் குற்றச்சாட்டுகளை திரும்பப் பெறும் வரை சிறையிலிருந்தனர். [1] 1948 ஆம் ஆண்டில், கொச்சி இராச்சியத்திலுள்ள பொது நூலகங்களை ஊக்குவிக்கும் ஒரு குழுவான ஐக்கிய திருவிதாங்கூர்-கொச்சின் கிரந்தசாலா சங்கத்தின் தலைவராக இருந்தார். [2] :103

திவானாக தொகு

அக்டோபர் 22, 1948 அன்று , திருவிதாங்கூரின் இரண்டாவது மற்றும் கடைசி திவானானார். [3] மாநிலத்தில் பலமடைந்து வந்த பொதுவுடைமை இயக்கத்தை அடக்குவதற்கும் நிலப்பிரபுக்களுக்கு எதிராக கலவரங்களை ஏற்பாடு செய்வதற்கும் இவரது அரசாங்கம் பெரிய அளவிலான நடவடிக்கைகளை எடுத்தது. கொச்சி - திருவிதாங்கூர் மாநிலங்களை இணைப்பதன் மூலம் புதிய மாநிலம் உருவாக்கப்பட்ட பின்னர், அடுத்த ஆண்டு, திருவிதாங்கூர்-கொச்சியின் முதல் முதல்வரானார். திருவிதாங்கூர்-கொச்சி மாநிலத்தில் இவர் பெற்ற வெற்றிகளுக்கு பலர் தீவிர ஆதரவாளர்களாக இருந்தார்கள். அவர்களில் இவரது தனிப்பட்ட செயலாளர், திருவனந்தபுரத்தில் உள்ள கரிக்கக்கோமில் இருந்து பிரபலமான சுதந்திர போராட்ட வீரர், கரிக்காக்கோம் எஸ்.நாராயண பிள்ளை முக்கியமானவர் . காங்கிரசு சட்டமன்றக் கட்சியின் தலைவராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் 1949 சூலை 1 முதல் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.

சி. கேசவன் தலைமையிலான அடுத்த அமைச்சகத்தில் இவர், உணவு, தொழிலாளர் மற்றும் கல்வி அமைச்சரானார்.

இறப்பு தொகு

இவர், அரசியலில் இருந்து ஓய்வு பெற்று தனது நேரத்தை எழுத்துக்காக அர்ப்பணித்தார். தான் இறக்கும் வரை மூட்டழற்சியால் பாதிக்கப்பட்டு சில ஆண்டுகள் படுக்கையில் இருந்தார்.

பின்னணி பாடகி சுஜாதா மோகன், [4] மறைந்த பாடகி இராதிகா திலக் பின்னணி பாடகி சுவேதா மோகன் ஆகியோர் இவரது பேத்திகள்.

குறிப்புகள் தொகு

  1. "Is it Peace or Truce in Travancore? State Withdraws Prosecution Against Memorialists". The Straits Times. 1939-01-14. 
  2. A., Paslithil (2006). United Travancore-Cochin Library Association. Gyan Publishing House. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788178355795. 
  3. . 2005. 
  4. "KGM Brand Ambassadors". சென்னை: KGM Group. Archived from the original on 2014-09-25. பார்க்கப்பட்ட நாள் 2015-05-17.