பலேடியம்(II) குளோரைடு
பலேடியம்(II) குளோரைடு (Palladium(II) chloride) என்பது PdCl2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பலேடியம் டைகுளோரைடு, பலேடசு குளோரைடு பலேடியம் இருகுளோரைடு என்ற பெயர்களாலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. பலேடியம் வேதியியலில் பலேடியம் குளோரைடு ஒரு தொடக்கப் பொருளாக அறியப்படுகிறது. பலேடியம் அடிப்படையிலான வினையூக்கிகள் கரிம தொகுப்பு வினைகளில் குறிப்பிட்ட மதிப்பைக் கொண்டுள்ளன. அதிக வெப்பநிலையில் பலேடியம் உலோகத்துடன் குளோரின் வினைபுரிவதால் பலேடியம்(II) குளோரைடு உருவாகிறது.
![]() | |
![]() | |
![]() | |
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
பலேடியம் டைகுளோரைடு, பலேடசு குளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
7647-10-1 ![]() | |
ChemSpider | 22710 |
EC number | 231-596-2 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image
ஒருமம் |
பப்கெம் | 24290 |
வே.ந.வி.ப எண் | RT3500000 |
| |
UNII | N9214IR8N7 ![]() |
பண்புகள் | |
PdCl2 | |
வாய்ப்பாட்டு எடை | 177.326 கி/மோல் (நீரிலி) 213.357 கி/மோல் (இருநீரேற்று) |
தோற்றம் | அடர் சிவப்பு திண்மம் நீர் உறிஞ்சும் திறன் (நீரிலி) அடர் பழுப்பு படிகங்கள் (இருநீரேற்று) |
அடர்த்தி | 4.0 கி/செ.மீ3 |
உருகுநிலை | 679 °C (1,254 °F; 952 K) (சிதைவடையும்) |
சுவடு அளவில் கரையும், குளிர்ந்த நீரில் நன்கு கரையும் | |
கரைதிறன் | கரைப்பானில் கரையும் HCl அமிலத்தில் விரைவாகக் கரையும் |
−38.0×10−6 செ.மீ3/மோல் | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | சாய்சதுர மணியுரு |
ஒருங்கிணைவு வடிவியல் |
சதுரத் தளம் |
தீங்குகள் | |
Kategorie:Wikipedia:Gefahrstoffkennzeichnung unbekannt ? | |
வார்ப்புரு:PPhrases | |
தீப்பற்றும் வெப்பநிலை | தீப்பற்றாது. |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
2704 மி.கி/கி.கி (எலி, வாய்வழி) |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | பலேடியம்(II) புளோரைடு பலேடியம்(II) புரோமைடு பலேடியம்(II) அயோடைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | நிக்கல்(II) குளோரைடு பிளாட்டினம்(II) குளோரைடு பிளாட்டினம்(II,IV) குளோரைடு பிளாட்டினம்(IV) குளோரைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
கட்டமைப்பு
தொகுPdCl2 சேர்மத்தின் இரண்டு வடிவங்கள் அறியப்படுகின்றன. அவை α மற்றும் β வடிவங்கள் எனக் குறிக்கப்படுகின்றன. இரண்டு வடிவங்களிலும் பலேடியம் மையங்கள் Pd(II) இன் சிறப்பியல்பு கொண்ட சதுர-தள ஒருங்கிணைப்பு வடிவவியலைப் பயன்படுத்துகின்றன. மேலும், இரண்டு வடிவங்களிலும் Pd(II) மையங்கள் μ2-குளோரைடு பாலங்களால் இணைக்கப்பட்டுள்ளன. PdCl2சேர்மத்தின் α-வடிவம் ஒரு பலபடியாகும். இதில் "எல்லையற்ற" அடுக்குகள் அல்லது சங்கிலிகள் உள்ளன. PdCl2சேர்மத்தின் இன் β-வடிவம் மூலக்கூறு ஆகும். இது ஆறு Pd அணுக்கள் கொண்ட ஒரு எண்முகக் கொத்தைக் கொண்டுள்ளது. இந்த எண்முக வடிவத்தின் பன்னிரண்டு விளிம்புகள் ஒவ்வொன்றும் Cl− அயனியால் நீட்டப்பட்டுள்ளது. PtCl2 இதே ஒத்த கட்டமைப்பை ஏற்றுக்கொள்கிறது. அதேசமயம் NiCl2 சேர்மமானது CdCl2 சேர்மத்தின் வடிவ மையக்கருத்தை ஏற்றுக்கொள்கிறது. ஆனால் இதில் Ni(II) ஆறு ஒருங்கிணைப்புகளில் உள்ளது.[1]
α-PdCl2 சேர்மத்தின் படிகக்கட்டமைப்பு பந்து குச்சி மாதிரி |
Pd6Cl12 மூலக்கூறின் வெப்ப நீள்வட்டவுரு β-PdCl2 சேர்மத்தின் படிகக் கட்டமைப்பில் காணப்பட்டது. |
மேலும் இரண்டு வடிவங்கள் γ-PdCl2 மற்றும் δ-PdCl2 ஆகியவை பதிவாகி, எதிர்மறை வெப்ப விரிவாக்கத்தைக் காட்டுகின்றன. உயர்-வெப்பநிலை δ வடிவத்தில் α-PdCl2 போன்ற விளிம்பில் இணைக்கப்பட்ட PdCl4 சதுரங்களின் தள நாடாக்கள் உள்ளன. குறைந்த-வெப்பநிலை γ வடிவத்தில் மூலையில் இணைக்கப்பட்ட PdCl4 சதுரங்களின் நெளிந்த அடுக்குகளைக் கொண்டுள்ளது.[2]
தயாரிப்பு
தொகுபலேடியம் உலோகத்தை இராச திராவகம் அல்லது ஐதரோகுளோரிக் அமிலத்தில் குளோரின் முன்னிலையில் கரைப்பதன் மூலம் பலேடியம்(II) குளோரைடு தயாரிக்கப்படுகிறது. மாற்றாக, 500 °செல்சியசு வெப்பநிலையில் குளோரின் வாயுவுடன் பலேடியம் புரைம உலோகத்தைச் சேர்த்து சூடாக்குவதன் மூலம் தயாரிக்கப்படுகிறது.[3][4][5][6]
வினைகள்
தொகுபலேடியம்(II) குளோரைடு மற்ற பலேடியம் சேர்மங்களின் தயாரிப்பில் பயன்படும் ஒரு பொதுவான தொடக்க புள்ளியாகும். இது குறிப்பாக நீரில் கரையாது அல்லது ஒருங்கிணைக்காத கரைப்பான்களில் கரையாது. எனவே இதன் பயன்பாட்டின் முதல் படி, பிசு(பென்சோநைட்ரைல்)பலேடியம் டைகுளோரைடு மற்றும் பிசு(அசிட்டோ நைட்ரைல்)பலேடியம் டைகுளோரைடு போன்ற அடையாளங்களுடன் ஆனால் கரையக்கூடிய இலூயிசு கார கூட்டுசேர் பொருள்களைத் தயாரிப்பதாகும்.[7] இந்த அணைவுச் சேர்மங்கள் PdCl2 சேர்மத்தை நைட்ரைல்களின் சூடான கரைசல்களுடன் சேர்த்து சூடுபடுத்துவதன் மூலம் தயாரிக்கப்படுகின்றன:
- PdCl2 + 2 RCN → PdCl2(RCN)2
எப்போதாவது பரிந்துரைக்கப்பட்டாலும், அணைவுச் சேர்மத்தை தளத்தில் பயன்படுத்த வேண்டுமானால், மந்த-வாயு நுட்பங்கள் தேவையில்லை. உதாரணமாக, பிசு(டிரைபீனைல்பாசுபீன்)பலேடியம்(II) டைகுளோரைடு சேர்மத்தை பென்சோநைட்ரைலில் உள்ள டிரைபீனைல்பாசுபீனுடன் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் பலேடியம்(II) குளோரைடிலிருந்து தயாரிக்கலாம்: [8]
- PdCl2 + 2 PPh3 → PdCl2(PPh3)2
மேலும் முப்பீனைல் பாசுபீன் முன்னிலையில் மேலும் குறைப்பு வினைக்கு உட்படுத்துவதால் டெட்ராகிசு(டிரைபீனைல்பாசுபீன்)பலேடியம்(0) உருவாகும்; இரண்டாவது வினை இடைநிலை டைகுளோரைடை சுத்திகரிக்காமல் மேற்கொள்ளப்படுகிறது: [9]
மாற்றாக, சோடியம் டெட்ராகுளோரோபலேடேட்டு போன்ற டெட்ராகுளோரோபலேடேட்டு(II) அயனியின் வடிவில் பலேடியம்(II) குளோரைடு கரையக்கூடிய சேர்மமாக்கப்படுகிறது. தண்ணீரில் உள்ள பொருத்தமான கார உலோக குளோரைடுடன் வினைபுரியச் செய்வதன் மூலம் டெட்ராகுளோரோபலேடேட்டு(II) தயாரித்துக் கொள்ளப்படுகிறது.[10] பலேடியம்(II) குளோரைடு நீரில் கரையாது. அதேசமயம் இதிலிருந்து தயாரிக்கப்படும் தயாரிப்பு கரைகிறது:
- PdCl2 + 2 MCl → M2PdCl4
பலேடியம் டைகுளோரைடு சேர்மம் பாசுபீன்களுடன் மேலும் வினைபுரிந்து பலேடியத்தின் பாசுபீன் அணைவுச் சேர்மங்களைக் கொடுக்கிறது.[10]
பலலேடியம் குளோரைடு பன்முக பலலேடியம் வினையூக்கிகளை வழங்கவும் பயன்படுத்தப்படுகிறது. பேரியம் சல்பேட்டில் பலேடியம், கார்பனில் பலேடியம் மற்றும் பல்லேடியம் குளோரைடில் கார்பன் போன்றவை இத்தைய வினையூக்கிகளுக்கு எடுத்துக்காட்டாகும். [11]
பயன்கள்
தொகுகாய்ந்த நிலையிலும் பலேடியம்(II) குளோரைடு துருப்பிடிக்காத எஃகுக்கு மேலாக விரைவாகப் படியும். எனவே, பலேடியம்(II) குளோரைடு கரைசல்கள் சில சமயங்களில் துருப்பிடிக்காத எஃகின் அரிப்பு-எதிர்ப்பைச் சோதிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.[12] பலேடியம்(II) குளோரைடு சில சமயங்களில் கார்பன் மோனாக்சைடு உணரிகளில் பயன்படுத்தப்படுகிறது. கார்பன் மோனாக்சைடு பலேடியம்(II) குளோரைடை பல்லேடியமாக குறைக்கிறது:
- PdCl2 + CO + H2O → Pd + CO2 + 2HCl
எஞ்சியிருக்கும் PdCl2 சிவப்பு நிற PdI2 ஆக மாற்றப்படுகிறது. இதன் செறிவு வண்ண அளவீட்டில் தீர்மானிக்கப்படுகிறது.[13]
- PdCl2 + 2 KI → PdI2 + 2 KCl
பலேடியம்(II) குளோரைடு ஆல்க்கீன்களில் இருந்து ஆல்டிகைடுகள் மற்றும் கீட்டோன்களை உற்பத்தி செய்யப் பயன்படும் வேக்கர் செயல்முறையில் பயன்படுத்தப்படுகிறது.
பலேடியம்(II) குளோரைடு கருவிழிப்படலத்தில் உள்ள அடர்த்தியான வெண்புரையை அழகுபடுத்தும் பச்சை குத்தலுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Holleman, A. F.; Wiberg, E. "Inorganic Chemistry" Academic Press: San Diego, 2001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-352651-5.
- ↑ J. Evers, W. Beck, M. Göbel, S. Jakob, P. Mayer, G. Oehlinger, M. Rotter, T. M. Klapötke (2010). "The Structures of δ-PdCl2 and γ-PdCl2: Phases with Negative Thermal Expansion in One Direction". Angew. Chem. Int. Ed. 49 (33): 5677–5682. doi:10.1002/anie.201000680. பப்மெட்:20602377.
- ↑ Patnaik, Pradyot (2003). "Palladium". Handbook of inorganic chemicals (1 ed.). New York: McGraw-Hill. p. 687. ISBN 978-0-07-049439-8.
- ↑ Patnaik, Pradyot (2003). "Palladium Dichloride". Handbook of inorganic chemicals (1 ed.). New York: McGraw-Hill. pp. 688–689. ISBN 978-0-07-049439-8.
- ↑ Armarego, W. L. F. (2017). "4. Purification of Inorganic and Metal-Organic Chemicals". Purification of laboratory chemicals (Eighth ed.). Amsterdam: Elsevier. p. 687. ISBN 978-0-12-805457-4.
- ↑ Kharasch, Morris S.; Seyler, Ralph C.; Mayo, Frank R. (1938). "Coördination Compounds of Palladous Chloride". J. Am. Chem. Soc. (American Chemical Society) 60 (4): 882–884. doi:10.1021/ja01271a035.
- ↑ Gordon K. Anderson, Minren Lin (2007). "Bis(Benzonitrile)Dichloro Complexes of Palladium and Platinum". Inorganic Syntheses. Vol. 28. pp. 60–63. doi:10.1002/9780470132593.ch13. ISBN 9780470132593.
{{cite book}}
:|journal=
ignored (help) - ↑ Norio Miyaura; Akira Suzuki (chemist) (1993). "Palladium-catalyzed reaction of 1-alkenylboronates with vinylic halides: (1Z,3E)-1-Phenyl-1,3-octadiene". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv8p0532.; Collective Volume, vol. 8, p. 532
- ↑ D. R. Coulson; Satek, L. C.; Grim, S. O. (1972). "Tetrakis(triphenylphosphine)palladium(0)". Inorganic Syntheses. Vol. 13. pp. 121–124. doi:10.1002/9780470132449.ch23. ISBN 9780470132449.
{{cite book}}
:|journal=
ignored (help) - ↑ 10.0 10.1 Daniele Choueiry and Ei-ichi Negishi (2002). "II.2.3 Pd(0) and Pd(II) Complexes Containing Phosphorus and Other Group 15 Atom Ligands" (Google Books excerpt). In Ei-ichi Negishi (ed.). Handbook of Organopalladium Chemistry for Organic Synthesis. John Wiley & Sons, Inc. ISBN 0-471-31506-0.
- ↑ Ralph Mozingo (1955). "Palladium Catalysts". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv3p0685.; Collective Volume, vol. 3, p. 685
- ↑ For example, http://www.marinecare.nl/assets/Uploads/Downloads/Leaflet-Passivation-Test-Kit.pdf[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ T. H. Allen, W. S. Root (1955). "Colorimetric Determination of Carbon Monoxide in Air by an improved Palladium Chloride Method". J. Biol. Chem. 216 (1): 309–317. doi:10.1016/S0021-9258(19)52307-9. பப்மெட்:13252030. http://www.jbc.org/content/216/1/309.