பழஞ்சிரா தேவி கோயில்
பழஞ்சிரா தேவி கோயில் என்பது இந்தியாவின் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் அம்பலத்தாரா மற்றும் பரவன்குன்னு என்னுமிடங்களுக்கு இடையே அமைந்துள்ள ஒரு இந்துக் கோயிலாகும் . இது ஆகும் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலுக்கு தெற்கே சுமார் 3.2 கி.மீ., கோவளம் கடற்கரையிலிருந்து 8 கி.மீ, திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து 4 கி.மீ, திருவனந்தபுரத்தில் இருந்து 3 கி.மீ, ஆட்டுக்கல் கோயிலில் இருந்து 3 கி.மீ. திருவல்லம் பரசுராம கோவிலில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த பாரம்பரியக்கட்டட அமைப்பானது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
சித்தயோகி
தொகுஇக்கோயில் சுமார் 700 ஆண்டுகள் பழமையான கோயிலாகும். தேவியை வழிபட்ட 'சித்த யோகி ' என்பவரால் இக்கோயில் நிறுவப்பட்டு, நாளடைவில் கோயிலாக மாற்றப்பட்டது. கருவறையின் மேற்குப் பகுதியில் யோகிக்கு இடம் தரப்பட்டது.
தெய்வங்கள் மற்றும் துணைத் தெய்வங்கள்
தொகுஇக்கோயிலின் மூலவர் ஆதிபராசக்தியின் அவதாரமான தேவி ஆவார். [1]மகாயிரம் இவரின் நட்சத்திரமாக கருதப்படுகிறது. கோயிலை ஒட்டி யோகீஸ்வரன், கணேஷ், ரேக்தா சாமுண்டி, நாகராஜா, பிரம்ம ராக்கதன், மதன் தம்புரான், நவக்கிரகம் ஆகிய துணைத்தெய்வங்கள் உள்ளன.
நடை திறந்திருக்கும் நேரம்
தொகுஇக்கோயில் காலை - 5.30 முதல் 10.00 வரையிலும், மாலை - 5.00 முதல் 8.00 வரையிலும் வழிபாட்டிற்காகத் திறந்திருக்கும்.
திருவிழாக்கள்
தொகுகோயிலின் திருவிழா மலையாள மாதமான 'மீனம்' மாதத்தில் அன்று மூலவரின் நட்சத்திரமான 'மகாயிரம்' நாளில் தொடங்குகிறது. ஒவ்வொரு பௌர்ணமியின்போதும் 'ஐஸ்வர்ய மகாலட்சுமி பூஜை' மாலை 5 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடத்தப்பெறுகிறது. சமூக லட்சார்ச்சனை, சபரிமலையின் வருடாந்திர உற்சவம் தொடர்பான மண்டல விரதம், விநாயக சதுர்த்தி, பூஜை வைப்பு எனப்படுகின்ற தசரா பண்டிகைக்கு (சரஸ்வதி பூஜை மற்றும் வித்யாரம்பம்) ஒத்த விழா, பால், புஷ்பம் போன்றவற்றை நாகக் கடவுளுக்கு சமர்ப்பிக்கும் ஆயில்ய பூஜை, ஆயில்யம், ராமாயண பாராயணம் மற்றும் பகவதிசேவை உள்ளிட்டவை கொண்டாடப்படுகின்றன.
மேலும் பார்க்கவும்
தொகு- பார்வதி
- தேவி
- அம்பலத்தாரா, திருவனந்தபுரம்
- கேரளாவில் உள்ள இந்து கோவில்களின் பட்டியல்
- கேரளாவின் கோவில்கள்