பழுப்பு மீன்கொத்தி
பழுப்பு மீன்கொத்தி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | தோடிராம்பசு
|
இனம்: | தோ. புனிப்ரிசு
|
இருசொற் பெயரீடு | |
தோடிராம்பசு புனிப்ரிசு போனபர்தே, 1850 |
பழுப்பு மரங்கொத்தி (Sombre kingfisher-தோடிராம்பசு புனிப்ரிசு) என்பது அல்செடினிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது இந்தோனேசியாவின் வடக்கு மலுக்குவில் உள்ள ஹல்மஹேரா தீவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.
சோம்ப்ரே மரங்கொத்தியின் இயற்கை வாழிடம் மிதவெப்ப மண்டல அல்லது வெப்ப மண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள், மிதவெப்ப மண்டல அல்லது வெப்ப மண்டல சதுப்புநிலக் காடுகள், மிதவெப்பமண்டல அல்லது வெப்ப மண்டல சதுப்பு நிலங்கள் மற்றும் தோட்டங்கள் ஆகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.
விளக்கம்
தொகுபழுப்பு மரங்கொத்தி ஒப்பீட்டளவில் பெரிய மீன்கொத்தி போன்று 28 செ.மீ. நீளமுடையது. இது வெள்ளை வயிறு மற்றும் கழுத்துடன் ஆலிவ் முதல் கருப்பு மேல் பகுதிகளுடன் கருமை கலந்த வெண் நிறத்தைக் கொண்டுள்ளது. அலகு அடர் நிறத்திலானது. இதன் ஓசை மெதுவான 'கி-கி-கி'; என மூன்று உரத்த சத்தத் தொடர்களைக் கொண்டதாகும்.[1]
பரவல்
தொகுபழுப்பு மரங்கொத்தி ஹல்மஹேரா மட்டுமே காணப்படுகிறது. இங்கு இது முதன்மைக் காடுகள், சதுப்புநிலக் காடுகள், முதிர்ந்த இரண்டாம் நிலை வனப்பகுதி மற்றும் சதுப்பு நிலங்களுக்கு அருகில் வாழ்கிறது. இது பயிரிடப்பட்ட பகுதிகளுக்கு இரைதேடிச் செல்லலாம்.[1]
காப்பு
தொகுஇந்த சிற்றினம் 1931 முதல் இந்தோனேசியச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுகிறது. பல பாதுகாக்கப்பட்ட பகுதிகளிலிருந்து இவை பயனடைகின்றன. இருப்பினும், இது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில், தற்போது தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 BirdLife International (2022). "Todiramphus funebris". IUCN Red List of Threatened Species 2022: e.T22683387A217398758. https://www.iucnredlist.org/species/22683387/217398758. பார்த்த நாள்: 13 December 2022.