பஹிரா (Bagheera) என்பது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் இந்திய தமிழ் மொழி திகில் திரைப்படமாகும்.[2] இப்படத்தில் பிரபுதேவா, அமேரா தஸ்தர், ரம்யா நம்பீசன், சனனி, காயத்ரி, சோனியா அகர்வால், சஞ்சிதா செட்டி மற்றும் சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர், சாய் குமார் மற்றும் நாசர் ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.[3] இத்திரைப்படத்தை 3 மார்ச் 2023 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது [4]

பஹிரா
இயக்கம்ஆதிக் ரவிச்சந்திரன்
தயாரிப்புஆர்.வி. பரதன்
கதைஆதிக் ரவிச்சந்திரன்
திரைக்கதைஆதிக் ரவிச்சந்திரன்
இசைகணேசன் சேகர்
நடிப்பு
ஒளிப்பதிவுசெல்வ குமார் எஸ்.கே
அபிநந்தன் ராமானுஜம்
படத்தொகுப்புரூபன்
கலையகம்பரதன் பிக்சர்ஸ்
விநியோகம்பரதன் பிக்சர்ஸ்
வெளியீடுமார்ச்சு 3, 2023 (2023-03-03)[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

தயாரிப்பு

தொகு

கோவிட்-19 பெருந்தொற்று முன்பே படத்தின் தயாரிப்பு தொடங்கப்பட்டது. படத்தின் முதல் பார்வை விளம்பர தட்டி 14 பிப்ரவரி 2020 அன்று வெளியிடப்பட்டது [5] தொற்றுநோய் காரணமாக படத்தின் தயாரிப்பு நிறுத்தப்பட்டது, ஆனால் அரசாங்கம் அனுமதி வழங்கிய பிறகு படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது.[6] படத்தின் ஒரு நிமிட நீளம் கொண்ட முன்னோட்டம் 19 பிப்ரவரி 2021 அன்று வெளியிடப்பட்டது. படத்தின் இரண்டு நிமிட நீளம் கொண்ட முன்னோட்டம் 8 அக்டோபர் 2021 அன்று வெளியிடப்பட்டது [7] படம் முதலில் 2022 இல் வெளியிட திட்டமிடப்பட்டது, ஆனால் அது ஒத்திவைக்கப்பட்டது, மேலும் 3 மார்ச் 2023 அன்று திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று பிரபுதேவாவால் இன்ஸ்ட்டாகிராம் இல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது [8]

பஹிரா
ஒலிச்சுவடு
கணேசன் சேகர்
வெளியீடு28 பிப்ரவரி 2023
ஒலிப்பதிவு2020–2021
இசைப் பாணிஒலிச்சுவடு
நீளம்14:39
மொழிதமிழ்
இசைத் தயாரிப்பாளர்கணேசன் சேகர்

இப்படத்தின் இசையமைப்பாளர் கணேசன் சேகர்.[9][10]

 

எண் பாடல் பெயர் பாடல் எழுதியவர் பாடகர்(கள்) நீளம்
1 "சைக்கோ ராஜா" பா. விஜய் ஜி.வி. பிரகாஷ் குமார், மங்லி, சுசித்ரா பாலசுப்ரமணியன், பரத் நாராயண் 3:41
2 ''குச் குச்'' ஆதிக் ரவிச்சந்திரன், ரோகேஷ் தமன் எஸ், கணேசன் சேகர் 3:40
3 "காதலில் பஹிரா" கணேசன் சேகர் டெய்சி யென்சோன் 3:57
4 "உயிர் உயிராய்" பா. விஜய் கணேசன் சேகர், விவேக் 3:21

திரைப்பட வெளியீடு

தொகு

திரையரங்க வெளியீடு

தொகு

இத்திரைப்படம் 3 மார்ச் 2023 அன்று திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

முகப்பு ஊடகம்

தொகு

இத்திரைப்படத்தின் ஒளிபரப்பு உரிமையினை சன் தொலைக்காட்சிக்கும், படத்தின் இணைய வழி ஒளிபரப்பு உரிமையினை சன் நெக்ட்ஸ்க்கும் விற்கப்பட்டது.[11]

மேற்கோள்கள்

தொகு
  1. "Upcoming Tamil Movie Release March 2023: Jayram Ravi's Agilan, Prabhu Deva's Bagheera and more". Zoom TV (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 1 March 2023.
  2. "Second trailer from Prabhudheva's Bagheera is here". The New Indian Express (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 1 March 2023.
  3. "Prabhu Deva-Starrer Bagheera To Release On This Date; Film's Poster Out". News18 (in ஆங்கிலம்). 25 February 2023. பார்க்கப்பட்ட நாள் 1 March 2023.
  4. "Prabhu Deva-starrer movie 'Bagheera' to release on March 3, reveals new poster". The Economic Times. 25 February 2023.
  5. "Prabhudeva gets a wacky look in Adhik's new film". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2 March 2023.
  6. "Amyra Dastur joins the shoot of Prabhudeva's psycho-mystery". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2 March 2023.
  7. "'Bagheera' trailer: The new video from the Prabhu Deva starrer hypes fans for the film's release". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 1 March 2023.
  8. "Prrabhudeva on Instagram: "Watch out for 3rd March .."". Instagram (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 1 March 2023.
  9. "Prabhudeva's Bagheera releasing on March 3rd". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 1 March 2023.
  10. "இணையத்தை ஆக்கிரமிக்கும் 'பஹீரா' பட பாடல்". www.maalaimalar.com. 28 February 2023. பார்க்கப்பட்ட நாள் 1 March 2023.
  11. "Bagheera: THIS platform has bagged the digital rights of Prabhu Deva's film". OTTPlay (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2 March 2023.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பஹிரா&oldid=4104194" இலிருந்து மீள்விக்கப்பட்டது