பாணிமுக்தா

பாணிமுக்தா (வேறு பெயர்கள்:சக்குரும், சக்கர், சக்ரே, சலிக்கர்) என்பது பழங்காலப் போர்க் கருவிகளில் ஒன்றாகும். இது அதிபயங்கர தாக்குதலுக்குப் பயன்பட்ட கருவியாகும். இந்தக் கருவியை எதிரியின்மீது எறிந்து தாக்குவதற்கு வீரர்கள் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. [1][2]

உபயோக முறை

தொகு

குவிந்த அமைப்புடன் தட்டையாக இல்லாமல் மெல்லியதும், வெளிவட்டம் கூர்மையான நுனி உடையதுமாக இந்த ஆயுதம் அமைந்திருக்கும். ஆள்காட்டி விரல் அல்லது கட்டை விரல் கொண்டு அதிவிரைவாக சுழற்றி எறிந்து தாக்க உதவியுள்ளது. பொதுவாக எதிரிகளின் தலை, கை, கால் போன்றவையே இதன் குறியாக இருந்துள்ளது. இது பொதுவாக 40 செமீ முதல் 100 செமீட்டர்கள் வரை பறந்து சென்று எதிரிகளைத் தாக்கும். [3]

தோற்றம்

தொகு

இந்த ஆயுதம் 12 செ.மீ. முதல் 30 செ.மீ. வரையான அளவுடன் அதன் மேல் சித்திர வேலைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இது இரும்பு, அல்லது பித்தளை போன்ற உலோகத்தால் செய்யப்பட்டுள்ளது.

கண்டுபிடிப்பு

தொகு

தமிழகம் மற்றும் பஞ்சாப் மட்டுமின்றி திபெத், மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. 800 ஆண்டுகளுக்கு முன்னரே இந்த ஆயுதத்தை உபயோகித்த வல்லுனர்கள் இருந்துள்ளார்கள்.

மேற்கோள்

தொகு

இவற்றையும் பார்க்கவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாணிமுக்தா&oldid=3360245" இலிருந்து மீள்விக்கப்பட்டது