பானிபட் போர்கள்
விக்கிமீடியப் பக்கவழி நெறிப்படுத்தல் பக்கம்
பானிபட் போர்கள், இந்தியத் துணைக்கண்டத்தில் தங்கள் ஆட்சியை நிறுவுவதற்கும், நிலைநாட்டவும், முகலாயர்கள், இந்துக்கள் மராத்தியர்கள், ஆப்கானியர்கள் தில்லி அருகே உள்ள பானிபட் எனும் இடத்தில் மூன்று பெரிய போர்கள் நடத்தினர். இம்மூன்று பானிபட் போர்கள் இந்தியாவின் வரலாற்றுப் போக்கினை மாற்றி அமைத்தது.[1]
- பாபர் (முகலாய வம்சம்) மற்றும் இப்ராகிம் லோடி (லோதி வம்சம்) ஆகியவற்றுக்கு இடையில் முதல் பானிபட் போர் (1526) நடந்தது. இந்த வெற்றியின் மூலம் பாபா் இந்தியாவில் முகலாய பேரரசை நிறுவினார்.
- தில்லியிலிருந்த முகலாயப் பேரரசு அக்பர் (பைரங்கம் கான் அக்பாின் பிரதிநிதியாகச் செயல்பட்டாா்) மற்றும் வட இந்தியாவின் இந்து ஆட்சியாளரான ஹெமு என்பவருக்கு இடையே இரண்டாம் பானிபட் போர் (1556) நடைபெற்றது. இதில் முகலாய படை வெற்றியைப் பெற்றது.
- சதாசிவ ராவ் தலைமையிலான மராத்திய சாம்ராஜ்யத்திற்கு எதிராக அவத் நவாப், ஷுஜா-உத்-தௌலா உதவியுடன், ஆப்கானிஸ்தானின் துராணிப் பேரரசர் அகமது ஷா துரானி நடத்திய மூன்றாம் பானிபட் போரில் (1761) உறுதியான ஆப்கானியப் படை வெற்றி பெற்றது. போரில் மராத்தியப் பேரரசு தோல்வியடைந்தது. மேலும் இந்தியாவில் கம்பெனி ஆட்சி வலுப்பெற்றது.