பானிபத் மாவட்டம்

(பானிபட் மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பானிபட் மாவட்டம் (Panipat district) ஒலிப்பு (இந்தி:|पानीपत जिला}}) வட இந்தியாவின் அரியானா மாநிலத்தின் இருபத்து ஒன்று மாவட்டங்களில் ஒன்றாகும். இந்த மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் பானிபட் ஆகும். ஹிசார் கோட்டத்தில் உள்ள இம்மாவட்டம் 1966-ஆம் ஆண்டில் துவக்கப்பட்டது

பானிபட் மாவட்டம்
पानीपत जिला
பானிபட்மாவட்டத்தின் இடஅமைவு ஹரியானா
மாநிலம்ஹரியானா, இந்தியா
நிர்வாக பிரிவுகள்ரோதக் கோட்டம்
தலைமையகம்பானிபட்
பரப்பு1,268 km2 (490 sq mi)
மக்கட்தொகை1205437
  • ஆண்கள் = 646,857
  • பெண்கள் = 558,580 (2011)
மக்கள்தொகை அடர்த்தி951/km2 (2,460/sq mi)
நகர்ப்புற மக்கட்தொகை555085
படிப்பறிவு75.94%
  • ஆண்கள் = 83.71%
  • பெண்கள் = 67.00%
பாலின விகிதம்864
வட்டங்கள்பானிபட், சமல்கா, இஸ்ரானா
மக்களவைத்தொகுதிகள்கர்னால் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கைபானிபட் நகரம், பானிபட் கிராமப்புறம், இஸ்ரானா, சமல்கா
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

மத்திய கால வரலாறு தொகு

இம்மாவட்டத்தின் பானிபட் எனுமிடத்தில் முதலாம் பானிபட் போர், இரண்டாம் பானிபட் போர் மற்றும் மூன்றாம் பானிபட் போர்கள் நடைபெற்றதன் மூலம் இந்தியத் துணைக்கண்டத்தில் மொகலாயர் ஆட்சி வேறூன்றியது.

வரலாறு தொகு

கர்னால் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு 1 நவம்பர் 1989-ஆம் ஆண்டில் பானிபட் மாவட்டம் புதிதாக துவக்கப்பட்டது. 24 சூலை 1991-ஆம் ஆண்டில் மீண்டும் கர்னால் மாவட்டத்துடன் இணைக்கப்பட்ட்து. பின்பு சூலை 1991-ஆம் ஆண்டில் மீண்டும் பானிபட் மாவட்டம் புதிதாக இயங்கத் தொடங்கியது.

உட்கோட்டங்களும் வருவாய் வட்டங்களும் தொகு

பானிபட் மாவட்டம் பானிபட், சமல்கா என இரண்டு கோட்டங்களும்; பானிபட், சமல்கா மற்றும் இஸ்ரான என மூன்று வருவாய் வட்டங்களும் கொண்டது.

அரசியல் தொகு

இந்த மாவட்டம் பானிபட் மாவட்டம், பானிபட் கிராமப்புறம், பானிபட் நகரப்புறம் மற்றும் இஸ்ரானா, சமல்கா என நான்கு சட்டமன்ற தொகுதிகளை கொண்டுள்ளது. கர்னால் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் பானிபட் மாவட்டம் உள்ளது.

மக்கள் தொகையியல் தொகு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி பானிபட் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை ஆக 1,205,437 உள்ளது. கிராமப்புறங்களில் 53.95% மக்களும்; நகரப்புறங்களில் 56.05% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 24.60% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 646,857 ஆண்களும் மற்றும் 558,580 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 864 பெண்கள் வீதம் உள்ளனர். 1,268 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 951 மக்கள் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 75.94% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 83.71% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 67.00% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 169,662 ஆக உள்ளது. [1]

சமயம் தொகு

இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 1,083,936 (89.92 %) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 86,622 (7.19 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 2,261 (0.19 %) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 4,647 (0.39 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 289 (0.02 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள் தொகை 25,064 (2.08 %) ஆகவும், பிற சமயத்து மக்கள் தொகை 99 (0.01 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 2,519 (0.21 %) ஆகவும் உள்ளது.

மொழிகள் தொகு

இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், உருது, பஞ்சாபி மற்றும் வட்டார மொழிகளும் பேசப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பானிபத்_மாவட்டம்&oldid=3890665" இலிருந்து மீள்விக்கப்பட்டது