பானோ குத்சியா

பானோ குத்சியா ( Bano Qudsia ; ‎ 28 நவம்பர் 1928 – 4 பிப்ரவரி 2017), பானோ ஆபா என்றும் அழைக்கப்படும் இவர், ஒரு பாக்கித்தானின் புதின ஆசிரியரும், நாடக ஆசிரியரும், ஆன்மீகவாதியுமாவார். இவர் உருது மொழியில் இலக்கியத்தை எழுதினார். புதினங்கள், நாடகங்கள் மற்றும் சிறுகதைகளைத் தயாரித்தார். தனது ராஜா கித் என்ற புதினத்திற்காக சிறந்த அங்கீகாரம் பெற்றவர். மேலும், உருது மற்றும் பஞ்சாபி மொழிகளில் தொலைக்காட்சிகளுக்கும், மேடைகளுக்கும் நாடகங்களை எழுதினார். இவரது ஆதி பாத் என்ற நாடகம் "ஒரு உன்னதமான நாடகம்" என்று அழைக்கப்பட்டது. பானோ குத்சியா லாகூரில் 4 பிப்ரவரி 2017 அன்று இறந்தார். [1]

பானோ குத்சியா
பிறப்புகுத்சியா சத்தா
28 நவம்பர் 1928
ஃபிரோஸ்பூர், பஞ்சாப், பிரித்தானிய இந்தியா
இறப்பு4 பிப்ரவரி 2017
லாகூர், பாக்கித்தான்
தொழில்
  • எழுத்தாளர் • நாடக ஆசிரியர் • அறிவாளி
கல்வி நிலையம்
  • கின்னர்ட் கல்லூரி
  • இலாகூர் அரசுக் கல்லூரி பல்கலைக்கழகம்
கருப்பொருள்
குறிப்பிடத்தக்க படைப்புகள்ராஜா கித் (1981)
துணைவர்அசுபக் அகமது (1925–2004)
பிள்ளைகள்3
இணையதளம்
banoqudsia.org

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

பானோ குத்சியா, 1928 ஆம் ஆண்டு நவம்பர் 28 ஆம் தேதி பிரித்தானிய இந்தியாவின் பிரோஸ்பூரில் ஒரு முஸ்லிம் ஜாட் குடும்பத்தில் குத்சியா சத்தாவாகப் பிறந்தார். [2] இவரது தந்தை விவசாயத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். இவரது சகோதரர் பெர்வைஸ் சத்தா ஒரு ஓவியர். இந்தியப் பிரிவினைக்குப் பிறகு இவர் தனது குடும்பத்துடன் லாகூருக்கு குடிபெயர்ந்தார். 5ஆம் வகுப்பில் படிக்கும் போது சிறுகதைகள் எழுதத் தொடங்கினார். லாகூரில் உள்ள கின்னார்ட் கல்லூரியில் பட்டம் பெற்றார், பின்னர் அரசுக் கல்லூரிப் பல்கலைக்கழகத்தில் (லாகூர்) சேர்ந்து 1951 இல் உருது இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் முடித்தார்.

திருமணம் தொகு

குத்சியா, லாகூர் அரசு கல்லூரியில் தான் சந்தித்த எழுத்தாளர் அஷ்ஃபாக் அகமதுவை மணந்தார். இவர்களுக்கு அனீக், அனீஸ், ஆசீர் ஆகிய மூன்று மகன்கள் இருந்தனர். [3] [4]

சான்றுகள் தொகு

  1. "Bano Qudsia passes away". The Nation. Pakistan. 4 February 2017. பார்க்கப்பட்ட நாள் 5 February 2017.
  2. "Famous writer Bano Qudsia turns 88". The News. 28 November 2016. பார்க்கப்பட்ட நாள் 6 February 2017.
  3. Impact International, Volume 34, Issue 4 – Volume 35, Issue 4. News & Media. 2004. https://books.google.com/books?id=82cxAQAAIAAJ&q=Bano+Qudsia++Sitara-i-Imtiaz. 
  4. "In life, in literature: the Siamese twins". http://www.dawn.com/news/619767. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பானோ_குத்சியா&oldid=3711241" இலிருந்து மீள்விக்கப்பட்டது