பாபி வம்சம்

ஆப்கானிய வம்சம்

பாபி வம்சம் (Babi dynasty) [1] ஓர் ஆப்கானிய வம்சமாகும். இது பிரித்தானிய இந்தியாவின் சமஸ்தானங்களின் ஆளும் அரச குடும்பங்களை உருவாக்கியது. [2] ஆப்கானித்தானின் பஷ்தூன் வம்சாவளியைச் சேர்ந்த இச்சமூகம், பெரும்பாலும் இந்தியாவிலும் பாக்கித்தானின் சில பகுதிகளிலும் வசிக்கின்றனர்.[3] 1654 ஆம் ஆண்டில் சேர்கான்ஜி பாபி என்பவர் வம்சத்தை இநிறுவினார்.[4] பிரித்தானிய இந்திய சமஸ்தானமான ஜூனாகத்தின் கடைசி நவாப், சர் முகம்மது கான்ஜி, இந்தியாவுடன் இணைவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்தியப் பிரிவினைக்குப் பிறகு, ஜூனாகத்தும், பண்டுவ மனவதர் இராச்சியமும் பாக்கித்தானின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டன . 1947 இல். இருப்பினும், இந்தியா இதனை அங்கீகரிக்கவில்லை. பின்னர் சிறிது காலத்திற்குப் பிறகு சுதேச அரசை தன்னுடன் இணைத்துக் கொண்டது .

பிரித்தானிய இந்தியாவில் பாபி வம்சத்தால் ஆளப்பட்ட மன்னர் அரசுகளில் ஒன்றான ரதன்பூர் மாநிலத்தின் சின்னம்.

வரலாறு தொகு

பாபி பழங்குடியினம் என்பது கிழக்கு ஆப்கானித்தான் மற்றும் பாக்கித்தானின் மேற்குப் பகுதிகளிலிருந்து தோன்றிய பஷ்தூன் பழங்குடியினமாகும். பாபி அல்லது பாபாய் (பஷ்தூன்) கோர்காஷ்ட் அல்லது கர்கஷ்டியின் மகனாவார்.[5] முகலாயப் பேரரசர் உமாயூனின் சீடரான உசுமான் கானின் தலைமையில் குராசானிலிருந்து இந்தியா வந்ததாக அவர்கள் கூறுகின்றனர்.[6] உசுமான் கானின் மகன் பகதூர் கான்ஜி பாபி, இந்தியாவிற்கு குடிபெயர்ந்து முகலாயர்களின் கீழ் பணியில் சேர்ந்தார். பாபியின் பரம்பரை பட்டம் (பழங்குடி) 1554 ஆம் ஆண்டில் உமாயூனிடமிருந்து சித்தோகாரின் ராணாவுக்கு எதிரான சேவைகளுக்காக" அவருக்கு வழங்கப்பட்டது.

1654 இல் பாபி வம்சத்தை நிறுவிய சேர்கான்ஜி பாபி, ஷாஜகானின் மகனான கத்தியவாரின் இளவரசர் முராத் பக்சியின் சேவையில் சேர்ந்தார். முகலாய ஆதாரங்களில், பாபி பழங்குடியினரின் உறுப்பினர்கள் "குசராத்திகள்" என அங்கீகரிக்கப்படுகிறார்கள்.[7] அவர்களின் பிராந்திய "குசராத்தி" அடையாளம், கலப்புத் திருமணம் மற்றும் அதன் கலாச்சாரத்துடன் இணைதல் மற்றும் அவர்களின் குலத்தைப் பற்றிய குறிப்பு முக்கியமாக வெவ்வேறு குசராத்தி துணைக்குழுக்களுக்குள் ஒரு சமூகமாக குறிப்பிடப்பட்டது. எடுத்துக்காட்டாக அகமதாபாத்தின் ஷுஜாத் கான் குஜராத்தி.[8] பௌச்தார் குசராத்திகளில் ஒருவரும் பாபி பழங்குடியினத்தைச் சேர்ந்தவருமான சப்தர் கானுக்கு "சப்தர் கான்-இ சானி" என்ற பட்டம் வழங்கப்பட்டதை ஔரங்கசீப் உருகாத்-இ ஆலம்கிரியில் குறிப்பிடுகிறார்.[9] அவர்கள் பெரும்பாலும் நாட்டில் தலைமுறைகளாக வாழ்ந்தவர்கள் அல்லது மதம் மாறியவர்களுடன் அடையாளம் காணப்பட்டனர்.

முகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, பாபிகள் குசராத்தைப் கைப்பற்றுவதற்காக மராட்டியப் பேரரசின் கெய்க்வாட் வம்சத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர் . குசராத் முழுவதையும் கட்டுப்படுத்துவதில் மராத்தியர்கள் வெற்றி பெற்ற நிலையில், ஜூனாகத், ரதன்பூர், பாலசினோர், பண்டுவ மண்வதர், பஜோத் மற்றும் சர்தார்காத் ஆகிய சமஸ்தானங்களின் இறையாண்மையை பாபிகள் தக்க வைத்துக் கொண்டனர்.

இந்த வம்சத்தின் உறுப்பினர்கள் ஜூனாகத், ரதன்பூர் மற்றும் பாலசினோர் ஆகிய சமஸ்தானங்களையும், அதே போல் சிறிய மாநிலங்களான பந்த்வா மனவதர், பஜோத் மற்றும் சர்தார்காத்தையும் ஆட்சி செய்தனர்.

பாபி பழங்குடியினர் வடக்கு குசராத் மற்றும் சௌராட்டிரா முழுவதும் காணப்படுகின்றனர். பிரபல பாலிவுட் நடிகை பர்வீன் பாபி பாபி வம்சாவளியைச் சேர்ந்தவர். ஆனால் பெரும்பாலான சமகால பாபிகள், சுதேச பரம்பரையைச் சேர்ந்தவர்களைத் தவிர, சாதாரணமான சூழ்நிலையில் உள்ளனர். பலர் சிறு நில உரிமையாளர்கள். ஆனால் இவர்கள் மத்தியிலும் குறிப்பிடத்தக்க நகரமயமாக்கல் உள்ளது. பாபிகள் அகமண பாரம்பரியத்தை கடைபிடித்தாலும், சௌகான் மற்றும் பெக்லிம் சமூகங்களுடன் திருமண உறவுகளும் உள்ளன. மேலும் இவர்கள் சேக்குகள் மற்றும் சன்னி போக்ரர்களிடமிருந்து மருமகள்களை ஏற்றுக்கொள்கிறார்கள்.[10]

குறிப்பிடத்தக்கவர்கள் தொகு

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Babi royal family brings their cuisine to Ahmedabad". The Indian Express (in ஆங்கிலம்). 2019-04-01. Archived from the original on 2019-04-02. பார்க்கப்பட்ட நாள் 2020-10-04.
  2. Indian Journal of Secularism. https://books.google.com/books?id=TANuAAAAMAAJ&q=gujarati+muslim+babi. 
  3. "AfghanTribes". afghantribes.com. Archived from the original on 2015-12-22. பார்க்கப்பட்ட நாள் 2015-12-17.
  4. Henry Soszynski. "Junagadh". Members.iinet.net.au. Archived from the original on 2017-05-20. பார்க்கப்பட்ட நாள் 2016-08-07.
  5. Babi, Babi. "Ghorghasht or Gharghashti". Archived from the original on 2018-03-17.
  6. Gujarat State Gazetteers: Banaskantha District. Directorate of Government Print., Stationery and Publications, Gujarat State. 1981. https://books.google.com/books?id=eCMbAAAAIAAJ&q=babi+pathan+gujarat. 
  7. Satish Chandra (1959). Parties And Politics At The Mughal Court. https://archive.org/details/in.ernet.dli.2015.119114/page/n27/mode/2up?q=hindustanis. 
  8. Journal:Volume 9. the New York Public Library. 1923. பக். 266. https://books.google.com/books?id=cOYfZIWh24kC&q=hamid+khan+gujarati. 
  9. Aurangzeb, Emperor of Hindustan, 1618-1707; Jamshedji Hormasji Bilimoriya (1908). Ruka'at-i-Alamgiri; or, Letters of Aurungzebe, with historical and explanatory notes;. University of California Libraries. பக். 41. https://archive.org/details/rukaatialamgirio00aurarich/page/40/mode/2up. 
  10. Muslim Communities in Gujarat by Satish C Misra pages 110-111
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாபி_வம்சம்&oldid=3814865" இலிருந்து மீள்விக்கப்பட்டது