பாரமுல்லா தொடருந்து நிலையம்

பாரமுல்லா தொடருந்து நிலையம் (Baramulla Railway Station) இந்தியாவின் சம்மு காசுமீர் (ஒன்றியப் பகுதி)யில் உள்ள பாரமுல்லா நகரத்திலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில், கடல் மட்டத்திலிருந்து 1593 மீட்டர் (5226 அடி). உயரத்தில் அமைந்துள்ளது.[2] 130 கிலோ மீட்டர் நீளமுள்ள இருப்புப் பாதை மூலம் பாரமுல்லா-பனிஹால் தொடருந்து நிலையங்கள் சிறிநகர் தொடருந்து நிலையம் வழியாக இணைக்கப்பட்டுள்ளது. வடக்கு இரயில்வேயின் ஃபிரோஸ்பூர் இரயில்வே கோட்டத்தில் அமைந்த இத்தொடருந்து நிலையம் 2 நடைமேடைகள் கொண்டது.

தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்பாரமுல்லா, சம்மு காசுமீர் (ஒன்றியப் பகுதி)
இந்தியா
ஆள்கூறுகள்34°13′15″N 74°23′18″E / 34.2208°N 74.3884°E / 34.2208; 74.3884
ஏற்றம்1582.79 m
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்வடக்கு இரயில்வே
தடங்கள்ஜம்மு-பாரமுல்லா இருப்புப் பாதை
நடைமேடை2
இருப்புப் பாதைகள்3
கட்டமைப்பு
தரிப்பிடம்ஆம்
மற்ற தகவல்கள்
நிலைசெயல்பாட்டில்
நிலையக் குறியீடுBRML [1]
மண்டலம்(கள்) வடக்கு இரயில்வே
கோட்டம்(கள்) ஃபிரோஸ்பூர்
வரலாறு
திறக்கப்பட்டது2008
மின்சாரமயம்ஆம்
அமைவிடம்
ஜம்மு காஷ்மீர் இல் அமைவிடம்

ஜம்மு காஷ்மீரின் வடக்கில் உள்ள குப்வாரா நகரத்துடன் பாரமுல்லா தொடருந்து நிலையத்தை இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.[3]

பாரமுல்லா தொடருந்து நிலையத்திலிருந்து சிறிநகர், பட்காம், பனிஹால், இராம்பன் (சங்கல்தன்), நகரங்களுக்கு தொடருந்துகள் செல்கிறது. [4]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Indian Railway Official Website". பார்க்கப்பட்ட நாள் 30 October 2014.
  2. "Reduced Level of Baramulla railway station". பார்க்கப்பட்ட நாள் 30 October 2014.
  3. "Centre approves Baramulla-Kupwara rail link". Economic Times. பார்க்கப்பட்ட நாள் 17 March 2020.
  4. Departures from BRML/Baramula