சிறிநகர் தொடருந்து நிலையம்
சிறிநகர் தொடருந்து நிலையம் (Srinagar railway station), இந்தியாவின் சம்மு காசுமீர் (ஒன்றியப் பகுதி)யின் தலைநகரான சிறிநகரில் அமைந்துள்ளது. இது ஜம்மு-பாரமுல்லா செல்லும் ஒற்றை அகல இருப்புப் பாதையில் உள்ளது. ஃபிரோஸ்பூர் இரயில்வே கோட்டத்தில் அமைந்த இத்தொடருந்து நிலையம் இது மூன்று நடைமேடைகள் கொண்டது. இந்த இருப்புப் பாதை முற்றிலும் மின்சாரமயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையம் தால் ஏரி அருகே உள்ள லால் சௌக்கிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஜம்மு-பாரமுல்லா இருப்புப் பாதைப் பணிகள் முடிவடைந்த பிறகு சிறிநகர் தொடருந்து நிலையம், ஜம்மு, தில்லி, சண்டிகர் போன்ற நகரங்களுடன் இணைக்கப்படும்.
சிறிநகர் தொடருந்து நிலையம் | |||||
---|---|---|---|---|---|
தொடருந்து நிலையம் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | சிறிநகர், சம்மு காசுமீர் (ஒன்றியப் பகுதி) இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 34°01′25″N 74°50′50″E / 34.02355489244968°N 74.84712886729015°E | ||||
ஏற்றம் | 1,591 m | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
தடங்கள் | சம்மு-பாரமுல்லா இருப்புப் பாதை | ||||
நடைமேடை | 3 | ||||
இருப்புப் பாதைகள் | 4 | ||||
கட்டமைப்பு | |||||
தரிப்பிடம் | Yes | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலை | செயல்பாட்டில் | ||||
நிலையக் குறியீடு | SINA | ||||
மண்டலம்(கள்) | வடக்கு இரயில்வே | ||||
கோட்டம்(கள்) | ஃபிரோஸ்பூர் | ||||
வரலாறு | |||||
திறக்கப்பட்டது | 2008 | ||||
மின்சாரமயம் | Yes | ||||
|
தொடருந்து வகைகள்
தொகுசிறிநகர் தொடருந்து நிலையத்திலிருந்து 2 மெயில்\விரைவு வண்டிகள், 1 மெமு ரயில் மற்றும் 18 DMU இரயில்கள் செல்கிறது.
செல்லும் நகரங்கள்
தொகுபாரமுல்லா, அனந்தநாக், பட்காம், பனிஹால், இராம்பன் (சங்கல்தன்), உதம்பூர் நகரங்களுக்கு செல்லும் தொடருந்துகள் சிறிநகர் வழியாக இயக்கப்படுகிறது.[1]