பார்துமான் சிங் பிரார்
பார்துமான் சிங் பிரார் (Parduman Singh Brar) என்பவர் ஓர் இந்தியத் தடகள வீரராவார். 15 அக்டோபர் 1927 முதல் 22 மார்ச்சு 2007 வரையில் வாழ்ந்த இவர், குண்டு எறிதல், வட்டு எறிதல் போன்ற தடகள விளையாட்டுகளில் சிறப்புப் பெற்றிருந்தார். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்[1] ஒன்றுக்கு மேபட்ட பிரிவுகளில் பதக்கம் வென்ற ஒரு சில வீரர்களுள் இவரும் ஒருவராவார்.
தனித் தகவல்கள் | |||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
தேசியம் | இந்தியன் | ||||||||||||||||||||||||||
பிறந்த நாள் | 15 அக்டோபர் 1927 | ||||||||||||||||||||||||||
பிறந்த இடம் | பாக்தா பாய், பட்டிண்டா பஞ்சாப் மாகாணம், பிரித்தானிய இந்தியா | ||||||||||||||||||||||||||
இறந்த நாள் | 22 மார்ச்சு 2007 | (அகவை 79)||||||||||||||||||||||||||
இறந்த இடம் | பாக்தா பாய், பட்டிண்டா,பஞ்சாப், இந்தியா | ||||||||||||||||||||||||||
விளையாட்டு | |||||||||||||||||||||||||||
நாடு | இந்தியா | ||||||||||||||||||||||||||
விளையாட்டு | தடகள விளையாட்டு | ||||||||||||||||||||||||||
நிகழ்வு(கள்) | குண்டு எறிதல், வட்டெறிதல் | ||||||||||||||||||||||||||
சங்கம் | பொதுத்துறை | ||||||||||||||||||||||||||
|
வாழ்க்கை
தொகு1950 களில் குண்டு எறிதல், வட்டு எறிதல் போன்ற தடகள விளையாட்டுகளில் இந்தியாவின் தேசிய சாம்பியனாக பார்துமான் சிங் பிரார் விளங்கினார். 1958 ஆம் ஆண்டில் முதன்முதலாக சென்னையில் நடைபெற்ற தேசிய குண்டு எறிதல் போட்டியில் வெற்றி பெற்ற இவர் 1954,1958 மற்றும் 1959 ஆம் ஆண்டுகளில் தேசிய வட்டு எறிதல் போட்டிகளில் பட்டம் வென்றார். மணிலாவில் 1954 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் குண்டு எறிதல் மற்றும் வட்டு எறிதல் ஆகிய இரு பிரிவுகளிலும் தங்கப் பதக்கத்தை வென்றார். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இரண்டு பிரிவுகளில் தங்கப் பதக்கம் வென்ற முதலாவது ஆசியர் என்ற பெருமை இவருக்குக் கிடைத்தது. 1958 டோக்கியோ ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் குண்டு எறிதலில் தங்கப் பதக்கம் மற்றும் வட்டு எறிதலில் வெண்கலப் பதக்கம் என இவருடைய சாதனை தொடர்ந்தது. கடைசியாக 1962 ஆம் ஆண்டு சகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் வட்டு எறிதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் பெற்றதுடன் இவருடைய பதக்க வேட்டை முடிவுக்கு வந்தது. மூன்று ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஐந்து பதக்கங்கள் வென்றது இவருடைய சாதனையாகும். இந்திய விளையாட்டுக்கு பார்துமான் சிங் பிரார் அளித்த பங்களிப்பைப் பாராட்டி கௌரவிக்கும் வகையில் 1999 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் அவருக்கு அர்ச்சுனா விருது|அருச்சுனா விருதை]] அளித்து சிறப்பித்தது[2].
இறப்பு
தொகு1980 களில் ஏற்பட்ட ஒரு விபத்துக்குப் பின்னர் பார்துமான் சிங் பிரார் முடங்கிப் போனார். நீண்ட காலம் நோயோடு போராடிய இவர்[2] 2007 ஆம் ஆண்டு மார்ச்சு 22 ஆம் நாள் இறந்து போனார். மரணத்தின்போது நோயுடன் வறுமையிலும் துன்புற்றார்.[3][4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Parduman battles for life with little financial help coming". The Indian Express. 27 February 2007. பார்க்கப்பட்ட நாள் 15 August 2013.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|publisher=
(help) - ↑ 2.0 2.1 "Parduman Singh dead". The Hindu. 23 March 2007 இம் மூலத்தில் இருந்து 31 மார்ச் 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070331044622/http://www.hindu.com/2007/03/23/stories/2007032310571900.htm. பார்த்த நாள்: 15 August 2013.
- ↑ "Parduman’s case raises many questions". tribuneindia. 22 May 1999. http://www.tribuneindia.com/1999/99may22/spr-trib.htm#1. பார்த்த நாள்: 15 August 2013.
- ↑ "From the Editor". Business Today. 13 May 2012. பார்க்கப்பட்ட நாள் 15 August 2013.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|publisher=
(help)