பார்வதி கோஷ்

பார்வதி கோஷ் (Parbati Ghose) (பிறப்பு சபாலா நாயக் ; 28 மார்ச் 1933 - 11 பிப்ரவரி 2018) [1] ஓர் இந்திய நடிகையும், திரைப்பட இயக்குனரும், திரைப்பட தயாரிப்பாளரும்ன் ஆவார். [2] [3] இவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த முதல் பெண் திரைப்பட தயாரிப்பாளராக இருந்தார்.

பார்வதி கோஷ்
பிறப்புசபாலா நாயக்
(1933-03-28)28 மார்ச்சு 1933
கட்டக் மாவட்டம், ஒடிசா, பிரித்தானிய இந்தியா
இறப்பு11 பெப்ரவரி 2018(2018-02-11) (அகவை 84)
புவனேசுவரம், ஒடிசா, இந்தியா
தேசியம்இந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்சனத் நளினி மகளிர் உயர்நிலைப்பள்ளி, கட்டக்
பணி
செயற்பாட்டுக்
காலம்
1949–1998
அறியப்படுவதுஒடிசாவின் முதல் பெண் திரைப்படத் தயாரிப்பாளர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்
  • இலட்சுமி (1962)
  • கா (1965)
  • ஸ்திரீ (1968)
வாழ்க்கைத்
துணை
கௌர் பிரசாத் கோஷ்

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

எட்டு உடன்பிறந்தவர்களில் ஒருவரான இவர், பிரித்தானிய இந்தியாவில் ஒடிசாவின் கட்டாக் மாவட்டத்தில் உள்ள மனசிங்கபட்டானாவில் 28 மார்ச் 1933 அன்று சபாலா நாயகராகப் பிறந்தார்.[4] [5] [6] இவரது தந்தை, வாசுதேவ் நாயக், , ஒரு முக்கிய புத்தக வெளியீட்டு நிறுவனமான மன்மோகன் அச்சகத்தை நடத்தி வந்தார். இவர், சனத் நளினி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். இவர் கேளுச்சரண மகோபாத்திரா, தயாள் சர்மா, சுரேஷ் ரௌத்ரே ஆகியோரின் கீழ் நடனக் கலைஞராகவும் பயிற்சி பெற்றார்.[7]

தொழில் தொகு

பார்வதி, திரையில் நடிகையாக மாறுவதற்கு முன்பு அனைத்திந்திய வானொலியில் ஒரு குழந்தைக் குரல் நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் 1949ஆம் ஆண்டு ஸ்ரீ ஜெகன்னாத் என்ற திரைப்படத்தில் நீலா மாதவ் கதாபாத்திரத்தின் குழந்தைக் கலைஞராக அறிமுகமானார். இவரது பெரிய வெற்றி 1953இல் வெளியான திரைப்படமான அமரி கான் ஜுவா என்ற படத்தின் மூலம் ( எங்கள் கிராமத்துப் பெண் ) வந்தது. அதில் இவர் முன்னணி பெண் நடிகையாக நடித்திருந்தார். சிறுவர் திருமணத்தின் சர்ச்சைக்குரிய நடைமுறையை ஆராய்ந்த இப்படம் இவருக்கு நேர்மறையான விமர்சனங்களையும் பெற்றுத் தந்தது.[8] [9]

1956 ஆம் ஆண்டில், இவர் வெற்றிகரமான பாய் பாய், என்ற ஒடியா மொழி திரைப்படத்தில் தனது வருங்கால கணவர், கௌர் பிரசாத் கோஷுடன் நடித்திருந்தார். கௌர் பிரசாத் இப்படத்தின் தயாரிப்பாளராகவும் இருந்தார். முன்னணி நடிகையாக இவரது திறமையை வெளிப்படுத்திய பாய் பாய், இந்திய திரைப்படத் துறையில் இவரது புகழை பெரிதும் அதிகரித்தது. இது திரைப்பட இயக்கம் மற்றும் தயாரிப்பில் இவருக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது. அதன் பின்னர் தனது கண்வர் தயாரிப்பில் 1959 இல் வெளியான மா என்ற படத்தில் தோன்றினார்.[10]

இவரும் இவரது கணவரும் சேர்ந்து இலட்சுமி (1962), கா (1965), ஸ்த்ரீ(1968) ஆகிய படங்களை தயாரித்தும், இணை இயக்குநராக இருந்தும், நடித்தும் இருந்தனர். இந்த மூன்று படங்களும் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கான பணிக்காக இவர்களுக்கு மூன்று தேசிய திரைப்பட விருதுகளை பெற்றுத் தந்தது. சில வருடங்கள் கழித்து, இவர் 1986ஆம் ஆண்டில் சா மன அத குந்தா[11] [12] என்ற படத்தை இயக்கியும் தயாரித்தும் இருந்தார். இவர் இந்தி மற்றும் பெங்காலி மொழியில் 'பிரஷ்னா' , 'சோபன்' போன்ற தொலைக்காட்சிப் படங்களிலும் பணியாற்றினார்.[13] மேலும் 1971இல் சன்சார் என்ற படத்திலும் தோன்றினார்.[14] [15] [16]

இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் இருந்து 1998இல் வெளியான சலபேகா என்ற படம் இவரது கடைசித் திரைப்படமாகும்.[17]

சொந்த வாழ்க்கை தொகு

1959 ஆம் ஆண்டில், இவர் கௌர் பிரசாத் கோஷ் என்பவரை மணந்தார். மேலும், இவரது புதிய மாமியாரால் வழங்கப்பட்ட பார்வதி என்ற பெயரை ஏற்றுக்கொண்டார்.[18]

பார்வதி 11 பிப்ரவரி 2018 அன்று தனது 84 வயதில் புவனேசுவரில் இறந்தார். இவரது இறுதிச் சடங்கை ஒடிசா மாநில அரசு, அரசு மரியாதையுடன் நடத்தியது.[19] [20] தேசிய திரைப்படத் துறைக்கு இவர் செய்த பங்களிப்புகளுக்காக ஒடிசாவின் முதல்வர் நவீன் பட்நாய்க் இறுதி அஞ்சலி செலுத்தினார்: "ஒடியா சினிமாவுக்கான இவரது பங்களிப்பிற்காக அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார். " [21] [22]

மேற்கோள்கள் தொகு

  1. "Parbati Ghosh | FlatNews" (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2018-09-27. பார்க்கப்பட்ட நாள் 2019-02-28.
  2. "Actress Parbati Ghosh passes away - Times of India". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2019-02-28.
  3. "Hubby helped, not industry: Filmmaker". www.telegraphindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-02-01.
  4. "Renowned Odia actress Parbati Ghosh passes away in Bhubaneswar". www.indiatvnews.com (in ஆங்கிலம்). 2018-02-12. பார்க்கப்பட்ட நாள் 2019-02-28.
  5. Bureau, Odisha Sun Times (2018-02-12). "Veteran Odisha film actress Parbati Ghosh no more | OdishaSunTimes.com" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-02-28.
  6. Pioneer, The. "Actress Parbati Ghosh passes away". The Pioneer (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-02-28.
  7. Bureau, Odisha Sun Times (2018-02-12). "Parbati Ghose: The actor who dazzled on and off camera in Odisha film industry | OdishaSunTimes.com" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-02-28.
  8. "Parbati Ghose, first female filmmaker of Odisha passes away". Jagranjosh.com. 2018-02-13. பார்க்கப்பட்ட நாள் 2019-02-28.
  9. PTI. "Veteran Odia cine actress Parbati Ghosh dies". Khaleej Times. பார்க்கப்பட்ட நாள் 2019-02-28.
  10. "4 Iconic Indian Women Who May Have Gone but Will Never Be Forgotten!". The Better India (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-03-08. பார்க்கப்பட்ட நாள் 2019-02-28.
  11. "Veteran Ollywood actress Parbati Ghosh passes away | OTV" (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-02-12. Archived from the original on 2019-03-01. பார்க்கப்பட்ட நாள் 2019-02-28.
  12. kanungo_bbsr. "Odisha's first female filmmaker Parbati Ghose passes away, condolences pour in | Odisha Samachar" (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2019-03-01. பார்க்கப்பட்ட நாள் 2019-02-28.
  13. Pioneer, The. "Parbati Ghose's 1st death anniv today". The Pioneer (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-02-28.
  14. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  15. "First Odia woman director Parvati Ghosh dead". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2019-02-28.
  16. bureau, Odisha Diary (2018-02-12). "Veteran Odia cine actress Parbati Ghosh passed away, CM Naveen Patnaik, Dharmendra Pradhan condole her death". OdishaDiary (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-02-28.
  17. Ambaly, Anwesha (2018-02-13). "Fraternity mourns actress". தி டெலிகிராஃப். https://www.telegraphindia.com/states/odisha/fraternity-mourns-actress-208113. 
  18. "Veteran Ollywood Actress Parbati Ghosh dies at 85, CM Naveen condoles". KalingaTV (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-02-12. பார்க்கப்பட்ட நாள் 2019-02-28.
  19. "Veteran Odia film actress Parbati Ghosh no more". Pragativadi: Leading Odia Dailly (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-02-12. Archived from the original on 2019-03-01. பார்க்கப்பட்ட நாள் 2019-02-28.
  20. "Veteran Odia actress-director Parbati Ghosh dies at 85 | FlatNews" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-02-28.[தொடர்பிழந்த இணைப்பு]
  21. "Veteran Odia actress Parbati Ghosh dead". 2018-02-12. https://www.business-standard.com/article/news-ians/veteran-odia-actress-parbati-ghosh-dead-118021200331_1.html. 
  22. "I Lost My Mother Again: Kuna Tripathy". Mycitylinks- Bhubaneswar | Cuttack | Puri (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-02-28.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்வதி_கோஷ்&oldid=3890471" இலிருந்து மீள்விக்கப்பட்டது