பாலசுப்ரமணியம் நாச்சியப்பன்
பாலசுப்ரமணியம் நாச்சியப்பன் (ஆங்கிலம்: Balasubramaniam Nachiappan; மலாய்: Balasubramaniam a/l Nachiappan; சீனம்: 巴拉苏拉马尼亚姆) என்பவர் மலேசிய இசுலாமிய கட்சி ஆதரவாளர்கள் மன்றத்தின் (மலாய்: Dewan Himpunan Penyokong PAS) (DHPP) ஆங்கிலம்: Central PAS Supporters Assembly) தலைவர் ஆகும்.
பாலசுப்ரமணியம் நாச்சியப்பன் Yang Berbahagia Senator Balasubramaniam Nachiappan | |
---|---|
மலேசியாவின் மேலவை உறுப்பினர் | |
நியமனம்: மலேசிய மாமன்னர் | |
தலைவர் மலேசிய இசுலாமிய கட்சி ஆதரவாளர்கள் மன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 23 மே 2010 | |
Deputy | லிம் குவான் செங் (Lim Guan Seng) |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | Balasubramaniam a/l Nachiappan |
அரசியல் கட்சி | மலேசிய இசுலாமிய கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | பெரிக்காத்தான் (2020 - தற்போது வரையில்) |
வேலை | அரசியல்வாதி |
இருப்பிடம் | T391-55, தாமான் புக்கிட் பெடா, 27000 செராண்டுட் பகாங் |
மலேசிய இசுலாமிய கட்சி ஆதரவாளர்கள் மன்றம் என்பது மலேசிய இசுலாமிய கட்சியின் தலைமைப் பிரிவுகளில் ஒன்றாகும். மலேசிய இசுலாமிய கட்சியின் இசுலாமிய மதம் சாரா உறுப்பினர்களைக் கொண்டது. அந்த மன்றத்தின் தலைவராக பாலசுப்ரமணியம் நாச்சியப்பன் உள்ளார். மே 23, 2010-க்கு முன்னர் அந்த மன்றம் மலேசிய இசுலாமிய கட்சியின் ஆதரவாளர்கள் கூடலகம் (PAS Supporters Club) என்று அழைக்கப்பட்டது.
பொது
தொகுஇவர் மலேசிய நாடாளுமன்றத்தின் 14-ஆவது மேலவையின் உறுப்பினர் (Dewan Negara) ஆகும்.[1]
இவர் மலேசிய மாமன்னர் அவர்களால்; 2020 சூன் 16-ஆம் தேதி மலேசிய மேலவையின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.[2]
மலேசிய மத்திய கூட்டரசு அரசாங்கத்திலும்; மலேசிய மாநில அரசு நிர்வாகங்களிலும்; மலேசிய இசுலாமிய கட்சியின் ஆதரவாளர்கள் பலர், பற்பல பதவிகளில் பிரதிநிதிகளாகச் சேவையாற்றி வருகின்றனர்.
தேர்தல் முடிவுகள்
தொகுஆண்டு | தரவரிசை | பகுதி | தனிநபர் | வாக்குகள் | போட்டியாளர் | வாக்குகள் | பெரும்பான்மை |
---|---|---|---|---|---|---|---|
பகாங் சிறீ செத்தியா இடைத்தேர்தல் 2018 | மலேசிய நாடாளுமன்றம் | P89 பெந்தோங் | பாலசுப்ரமணியம் நாச்சியப்பன் (மலேசிய இசுலாமிய கட்சி) | 5,706 | லியோவ் தியோங் லாய் (Liow Tiong Lai) (பாரிசான் - மலேசிய சீனர் சங்கம்) |
23,684 | 2,032 |
ஓங் தெக் (Wong Tack) (பாக்காத்தான் - ஜனநாயக செயல் கட்சி) |
25,716 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Official Portal of The Parliament of Malaysia - Senator's Profile". www.parlimen.gov.my. பார்க்கப்பட்ட நாள் 26 April 2023.
- ↑ Balasubramaniam wakil pertama DHPP dalam Dewan Negara