மலேசிய இசுலாமிய கட்சி ஆதரவாளர்கள் மன்றம்

மலேசிய இசுலாமிய கட்சி ஆதரவாளர்கள் மன்றம் (ஆங்கிலம்: PAS Supporter's Assembly; மலாய்: Dewan Himpunan Penyokong PAS; சீனம்:不是支持者大会 சாவி எழுத்துமுறை: ديوان همڤونن ڤندوکوڠ ڤاس ) என்பது மலேசிய இசுலாமிய கட்சியின் தலைமைப் பிரிவுகளில் ஒன்றாகும். மலேசிய இசுலாமிய கட்சியின் இசுலாமிய மதம் சாரா உறுப்பினர்களைக் கொண்டது.

மலேசிய இசுலாமிய கட்சி ஆதரவாளர்கள் மன்றம்
Dewan Himpunan Penyokong PAS
PAS Supporter's Assembly
சுருக்கம்DHPP
உருவாக்கம்23 மே 2010 (14 ஆண்டுகள் முன்னர்) (2010-05-23)
தலைமையகம்PAS Headquarters, No. 318-A, Jalan Raja Laut, 50350 Kuala Lumpur.
ஆள்கூறுகள்3°9′37.656″N 101°41′42.7416″E / 3.16046000°N 101.695206000°E / 3.16046000; 101.695206000
தலைவர்
பாலசுப்ரமணியம் நாச்சியப்பன்
துணைத் தலைவர்
லிம் குவான் செங்
Lim Guan Seng
இளைஞர் தலைவர்
பலேந்திரன் பாலசுப்ரமணியம்
மகளிர் தலைவி
குமுதா ராமன்
மைய அமைப்பு
மலேசிய இசுலாமிய கட்சி
முன்னாள் பெயர்
மலேசிய இசுலாமிய கட்சி ஆதரவாளர்கள் மன்றம் (2004-2010)
Kelab Penyokong PAS (2004-2010)

தற்போது பாலசுப்ரமணியம் நாச்சியப்பன் (Balasubramaniam Nachiappan) என்பவர் இந்த மலேசிய இசுலாமிய கட்சி ஆதரவாளர்கள் மன்றப் பேரவையின் (Central PAS Supporters Assembly) தலைவராக உள்ளார். முன்பு மலேசிய இசுலாமிய கட்சியின் ஆதரவாளர்கள் கூடலகம் (PAS Supporters Club) என்று அழைக்கப்பட்டது. மே 23, 2010 முதல் ஆதரவாளர்கள் மன்றம் (Assembly Hall) என தரம் உயர்த்தப்பட்டு உள்ளது.

பொது

தொகு

அரசாங்கத்தில் ஈடுபாடு

தொகு

மலேசிய நடுவண் அரசாங்கத்திலும்; மலேசிய மாநில அரசு நிர்வாகங்களிலும்; பல பதவிகளில் மலேசிய இசுலாமிய கட்சியின் ஆதரவாளர்கள் பலர், மன்றப் பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

# பெயர் நிலை காலம் குறிப்பு
1 பாலசுப்ரமணியம் நாச்சியப்பன்
செனட்டர்
14-ஆவது மேலவை உறுப்பினர் 2020-2023 மலேசிய இசுலாமிய கட்சியின் (PAS) முதல் முசுலிம் அல்லாத மேலவை உறுப்பினர்
2 லாவ் சின் சுவா கிளாந்தான் மந்திரி பெசார் அலுவலகம்; முசுலிம் அல்லாதவர் விவகாரங்களுக்கான சிறப்பு அதிகாரி 2018 - இன்று வரையில்
3 டாக்டர் பாலச்சந்திரன் கோபால கிருஷ்ணன் திராங்கானு மந்திரி பெசார் அலுவலகம்; முசுலிம் அல்லாதவர் விவகாரங்களுக்கான சிறப்பு அதிகாரி 2018 - இன்று வரையில்
4 குமரேசன் பேபி காளிதாசன் கெடா மந்திரி பெசார் அலுவலகம்; இந்தியர் சமூக விவகாரங்களுக்கான சிறப்பு அதிகாரி 2020 - இன்று வரையில்
5 குவான் கோக் சியாங் கெடா மந்திரி பெசார் அலுவலகம்; சீனர், மலேசிய சயாமியர் சமூக விவகாரங்களுக்கான சிறப்பு அதிகாரி 2020 - இன்று வரையில்
6 யோகன் மகாலிங்கம் ஈப்போ மாநகராட்சி, பேராக் 2020 சூலை 15, 2020-இல் பதவியில் இருக்கும் போது காலமானார்
7 செப்ரி சுவா சுவா கிம் உவாட் கோலா திராங்கானு நாடாளுமன்ற உறுப்பினர் சேவை மையத்தில் முசுலிம் அல்லாதவர் விவகாரங்களுக்கான சிறப்பு அதிகாரி 2018 - இன்று வரையில்
8 குமுதா ராமன்[1] மலேசிய மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சரின் சிறப்பு அதிகாரி. 2020 - 13 சூலை 2021
9 எர்மான் ஒபி[2] சபா சட்டமன்ற உறுப்பினர் அலி அக்பர் குலாசன்; இனங்களுக்கு இடையிலான உறவுகள் சிறப்பு அதிகாரி. 2020 - இன்று வரையில்

தேர்தல் பங்கேற்பு

தொகு

மலேசியப் பொதுத் தேர்தல், 2008 முதல், மலேசிய இசுலாமிய கட்சியின் சார்பில் முசுலிம் அல்லாத பிரதிநிதிகள் போட்டியிட்டனர். கட்சியின் அரசியலமைப்பின் கட்டுப்பாடுகள் காரணமாக, அந்த நேரத்தில் மாற்று பாரிசான் (Barisan Alternatif) கூட்டணியின் சக கட்சியான மக்கள் நீதிக் கட்சியின் கீழ் போட்டியிடுவதற்கு மலேசிய இசுலாமிய கட்சி அனுமதித்தது.

மலேசியப் பொதுத் தேர்தல், 2013 முதல் இப்போது வரை, மலேசிய இசுலாமிய கட்சியின் ஆதரவாளர்கள் மன்ற உறுப்பினர்கள், தங்கள் சொந்த மலேசிய இசுலாமிய கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார்கள்.

ஆண்டு வகை தொகுதி மாநிலம் வேட்பாளர் குறிப்பு
2018 மலேசியப் பொதுத் தேர்தல், 2018 பத்து காவான் (மக்களவை தொகுதி) பினாங்கு செய் குமார் பாலகிருஷ்ணா[3]
கம்பார் (மக்களவை தொகுதி) பேராக் யோகன் மகாலிங்கம்[4]
பெந்தோங் (மக்களவை தொகுதி) பகாங் பாலசுப்ரமணியம் நாச்சியப்பன்[5]
புக்கிட் தம்புன் சட்டமன்றம் பினாங்கு குமரவேலு ஆறுமுகம்[3]
பத்து உபான் சட்டமன்றம் பினாங்கு டத்தோ விக்கினேசுவரன் முனியாண்டி[3]
பாசீர் பெடாமார் சட்டமன்றம் பேராக் குமரேசன் சண்முகம்[4]
சுங்கை சட்டமன்றம் பேராக் அப்பளசாமி சிதக்கியா[4]
தானா ராத்தா சட்டமன்றம் பகாங் டத்தோ குமார் சிலம்பரன்[5] புதிய தலைமுறை கட்சியின் தலைவர்
திராசு சட்டமன்றம் பகாங் சின் சோய் கீ[6]
ரவாங் சட்டமன்றம் சிலாங்கூர் காங் தக் வா[7]
செந்தோசா சட்டமன்றம் சிலாங்கூர் ராஜன் மாணிக்கசுவரன்[7]
தெமியாங் சட்டமன்றம் நெகிரி செம்பிலான் யாவ் கோன் செங்
ஜொகூர் ஜெயா சட்டமன்றம் ஜொகூர் குமுதா ராமன்[8]
கெடாமாயான் சட்டமன்றம் சபா Satail Majungkat[9]
2016 மலேசியப் பொதுத் தேர்தல், 2016 காக்குசு சட்டமன்றம் சரவாக் Clement Bayang
2013 மலேசியப் பொதுத் தேர்தல், 2013 ஆயர் ஈத்தாம் (மக்களவை தொகுதி) ஜொகூர் Hu Pang Chaw[10]
திராம் சட்டமன்றம் ஜொகூர் குமுதா ராமன்[10][8]
அசகான் சட்டமன்றம் மலாக்கா Wong Chee Chew
2008 மலேசியப் பொதுத் தேர்தல், 2008 திராம் சட்டமன்றம் ஜொகூர் குமுதா ராமன்[11] மக்கள் நீதிக் கட்சி சின்னத்தில் போட்டியிட்டார்

மேற்கோள்கள்

தொகு
  1. Dewan Muslimat PAS Negeri Selangor (12 August 2020). "Ucapan Tahniah Diatas Perlantikan Sebagai Pegawai Khas Timbalan Menteri Pembangunan Wanita, Keluarga dan Masyarakat". Berita PAS.
  2. "Pelantikan Pegawai Khas (Hubungan Antara Kaum)". Harakahdaily. 11 October 2020.
  3. 3.0 3.1 3.2 https://www.hmetro.com.my/mutakhir/2018/04/334247/pas-pp-umum-calon-dhpp-gagasan-sejahtera
  4. 4.0 4.1 4.2 https://www.hmetro.com.my/mutakhir/2018/04/332170/pas-perak-pertaruh-3-calon-india
  5. 5.0 5.1 https://www.bharian.com.my/berita/nasional/2018/04/414399/bekas-setiausaha-agung-mic-antara-calon-pas-di-pahang
  6. https://www.malaymail.com/news/malaysia/2018/04/24/ge14-ex-raub-dap-vice-chairman-choy-hee-to-run-under-pas-ticket-in-tras/1623717
  7. 7.0 7.1 https://www.hmetro.com.my/mutakhir/2018/04/332175/3-ustaz-popular-calon-pas-selangor
  8. 8.0 8.1 "salinan arkib". Archived from the original on 2019-04-25. பார்க்கப்பட்ட நாள் 2019-04-25.
  9. https://says.com/my/news/a-non-muslim-man-will-be-representing-pas-in-sabah-for-ge14
  10. 10.0 10.1 http://www.astroawani.com/berita-pilihanraya/dua-calon-bukan-islam-diumum-bertanding-tiket-pas-12157
  11. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-04-25. பார்க்கப்பட்ட நாள் 2023-04-26.

மேலும் காண்க

தொகு