பா. கா. மூக்கைய்யாத்தேவர்

இந்திய அரசியல்வாதி

பா. கா. மூக்கையாத்தேவர் (P. K. Mookiah Thevar, ஏப்ரல் 4 , 1923 - செப்டம்பர் 6 , 1979) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகவும் மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு, 1957, 1962, 1967, 1971 மற்றும் 1977 ஆகிய ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு கட்சியின் சார்பாக உசிலம்பட்டி தொகுதியிலிருந்து தொடர்ச்சியாக ஐந்துமுறையும், இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு, இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியிலிருந்தும் ஒருமுறையும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது மகன் எம். பசும்பொன் ஆவார்.[1]

பா. கா. மூக்கையாத்தேவர்
பிறப்புஏப்ரல் 4, 1923
பாப்பாபட்டி, உசிலம்பட்டி, மதுரை மாவட்டம், தமிழ்நாடு
இறப்புசெப்டம்பர் 6, 1979(1979-09-06) (அகவை 56)
தேசியம்இந்தியர்
பணிஅரசியல்வாதி
அரசியல் கட்சிஅனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு
சமயம்இந்து

வாழ்க்கை வரலாறு தொகு

இவர் காட்டமுத்து ஒச்சாத்தேவர் - செவனம்மாள் தம்பதிகளுக்கு 1923ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4 ஆம் நாள் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகாவில் உள்ள பாப்பாபட்டி என்ற வருவாய் கிராமத்தில் பிறந்தார்.[2] இவர் 1979ஆம் ஆண்டு செப்டம்பர் ஆறாம் நாள் மறைந்தார். இவரின் சமாதி உசிலம்பட்டியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கதேவர் கல்லூரியில் உள்ளது.

இவர் 1963-இல் இவர் அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1971இல் இவர் அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியின் தலைவரானார்.

இவரது முயற்சியால் உசிலம்பட்டி, மேநீலிதநல்லூர் மற்றும் கமுதி ஆகிய இடங்களில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரில் கலைக் கல்லூரிகள் நிறுவப்பட்டது.

இவரது நினைவைப் போற்றும் வகையில் மதுரை நகரத்தில் அரசரடி பகுதியில் 1990-ஆம் ஆண்டில், இவரது சிலை நிறுவப்பட்டது.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "VCK fields Mookiah Thevar's son". The Hindu (September 30, 2011)
  2. இதே நாளில் அன்று. தினமலர் நாளிதழ். செப் 05,2019. https://m.dinamalar.com/detail.php?id=2360263. "பா.கா.மூக்கையா தேவர்: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா, பாப்பாபட்டி என்ற கிராமத்தில், காட்டமுத்து ஒச்சாத்தேவர் -- -செவனம்மாள் தம்பதிக்கு மகனாக, 1923 ஏப்., 4ல் பிறந்தார்."