பிண்டன் பிண்டன் சேரநாட்டு குறுநில மன்னர்கள் வம்சத்தில் வந்தவன். இவனுடைய நாடு எதுவெனத் தகவல் இல்லை. ஆனால் இவன் கொண்கானத்து நன்னன் என்ற பக்கத்து நாட்டு மன்னனால் வெல்லப்பட்டான் [1] என்பதால் இவன் நாடு சேரநாட்டெல்லைக்கு உட்பட்டிருந்ததை அறியலாம். இப்பிண்டன் படைவலிமை மிக்கவனாகவும், போர்வெறி உள்ளவனாகவும் அகப்பாடலில் குறிப்பிடப்பெறுகிறான்.

இவனது வலிமை ஓர் உவமையால் விளக்கப்பட்டுள்ளது. சோழ அரசன் தித்தன் மகன் தித்தன் வெளியன். இவனது மரக்கலங்கள் கானலம்பெருந்துறைப் பகுதிக்குச் செல்வ வளத்துடன் வரும்போது சிறிய அளவினதாய இறால் மீனின் பெருங்கூட்டம் தாக்கிச் சாய்ப்பது போல இவனை தாக்கி அழிக்க வல்லவன். எனினும் இவன் படை சிதைக்கப்பட்டது. சிதைத்தவன் பாரம் என்னும் ஊரில் இருந்துகொண்டு, சந்தன மரத்தைக் காவல் மரமாகக் கொண்டு, ஏழில் மலையை அடுத்த பாழிச்சிலம்பு நாட்டை ஆண்டுவந்த நன்னன். [2]

அடிக்குறிப்பு

தொகு
  1. அகம் 152
  2. தித்தன் வெளியன் ... கானலம்பெருந்துறைத் தனம் தரும் நன்கலம் சிதையத் தாக்கும் சிறு வெள் இறவின் குப்பை அன்ன உரு பகை தரூஉம் மொய்ம்பூசு பிண்டன் முனை முரண் உடையக் கடந்த வென்வேல் ... பாரத்துத் தலைவன் ஆர நன்னன் ஏழில் நெடுவரைப் பாழிச் சிலம்பு - அகம் 152
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிண்டன்&oldid=1209187" இலிருந்து மீள்விக்கப்பட்டது