பிரவீன் ஜயவிக்கிரம

பிரவீன் ஜயவிக்கிரம (Praveen Jayawickrama; பிறப்பு: 30 செப்டம்பர் 1998) இலங்கைத் துடுப்பாட்ட வீரர் ஆவார். 2021 ஏப்ரலில் இவர் தனது முதலாவது பன்னாட்டுப் போட்டியில் இலங்கை அணிக்காக விளையாடினார்.[1]

பிரவீன் ஜயவிக்கிரம
Praveen Jayawickrama
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு30 செப்டம்பர் 1998 (1998-09-30) (அகவை 26)
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைமெதுவான இடது-கை வழமைச் சுழல்
பங்குபந்து வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒரே தேர்வு (தொப்பி 156)29 ஏப்ரல் 2021 எ. வங்காளதேசம்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே மு.த ப.அ இ20
ஆட்டங்கள் 1 11 9 8
ஓட்டங்கள் 3 100 17 7
மட்டையாட்ட சராசரி 38.31 4.25 3.50
100கள்/50கள் 0/0 0/0 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 3* 30* 4* 6*
வீசிய பந்துகள் 384 1,877 385 138
வீழ்த்தல்கள் 11 51 17 9
பந்துவீச்சு சராசரி 16.18 22.76 17.82 11.11
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
2 5 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
1 2 0 0
சிறந்த பந்துவீச்சு 6/92 6/91 4/17 3/14
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 8/– 4/– 4/–
மூலம்: கிரிக்கின்ஃபோ, 3 மே 2021

பிரவீன் தனது முதலாவது முதல்-தரத் துடுப்பாட்டப் போட்டியை கோல்ட்சு துடுப்பாட்ட அணிக்காக 2019 சனவரி 11 இல் 2018–19 பிரீமியர் லீக் போட்டித் தொடரில் விளையாடினார்.[2] முன்னதாக இவர் இலங்கையின் 19-வயதிற்குட்பட்டோருக்கான 2018 உலகக் கிண்ணப் போட்டியில் சேர்க்கப்பட்டார்.[3] இவர் தனது முதலாவது பட்டியல் அ போட்டியை 2019 திசம்பர் 15 இல் மூர்சு விளையாட்டுக் கழகத்திற்காக விளையாடினார்.[4] இவர் தனது முதலாவது இருபது20 போட்டியை 2020 சனவரி 4 இல் மூர்சு விளையாட்டுக் கழகத்திற்காக விளையாடினார்.[5]

2021 ஏப்ரலில், ஜெயவிக்கிரம இலங்கையின் தேர்வு அணியில் சேர்க்கப்பட்டார்.[6] தனது முதலாவது தேர்வுப் போட்டியை வங்காளதேசத்திற்கு எதிராக 2021 ஏப்ரல் 29 இல் விளையாடினார்.[7] அவர் விளையாடிய முதலாவது போட்டியிலேயே முதலாவது இன்னிங்சில் 6 இலக்குகளை 92 ஓட்டங்களுக்குக் கைப்பற்றி முதல் தேர்வுப் போட்டியில் ஐந்து இலக்குகளைக் கைப்பற்றிய ஐந்தாவது இலங்கை ஆட்டக்காரர் என்ற சாதனையைப் புரிந்தார்.[8] இதே போட்டியில் இவர் இரண்டாவது இன்னிங்சில் 86 ஓட்டங்களுக்கு 6 இலக்குகளைக் கைப்பற்றி, தான் விளையாடிய முதலாவது தேர்வுப் போட்டியில் 10 இலக்குகளைக் கைப்பற்றிய முதலாவது இலங்கை வீரர் (உலக அளவில் 16-வது) என்ற சாதனையை ஏற்படுத்தினார்.[9]

மேற்கோள்கள்

தொகு
  1. "Praveen Jayawickrama". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 13 January 2019.
  2. "Group B, Premier League Tournament Tier A at Colombo, Jan 11-13 2019". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 13 January 2019.
  3. "U-19 Cricket: Kamindu to lead Sri Lanka U19s at ICC Youth WC". Sunday Times (Sri Lanka). பார்க்கப்பட்ட நாள் 15 December 2017.
  4. "Group D, SLC Invitation Limited Over Tournament at Panadura, Dec 15 2019". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 15 December 2019.
  5. "Group A, SLC Twenty-20 Tournament at Colombo (PSS), Jan 4 2020". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 4 January 2020.
  6. "Sri Lanka announces 18-man squad for Bangladesh Test series". Cricket Times. பார்க்கப்பட்ட நாள் 17 April 2021.
  7. "2nd Test, Kandy, Apr 29 - May 3 2021, Bangladesh tour of Sri Lanka". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 29 April 2021.
  8. "Sri Lanka vs Bangladesh, 2nd Test Day 3: Sri Lanka still have the edge over Bangladesh". Cricket World. பார்க்கப்பட்ட நாள் 1 May 2021.
  9. "Statistics / Statsguru / Test matches / Bowling records". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 3 May 2021.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரவீன்_ஜயவிக்கிரம&oldid=3141154" இலிருந்து மீள்விக்கப்பட்டது