பில் ஜான்சன்

ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர்

வில்லியம் அராஸ் ஜான்ஸ்டன் (William Arras Johnston 26 பிப்ரவரி 1922 - 25 மே 2007) ஒருமுன்னாள் ஆஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் 1947 முதல் 1955 வரை நாற்பது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார். ஒரு இடது கை விரைவு வீச்சாளராகவும், இடது கை வழமைச் சுழல் பந்துவீச்சாளராகவும் இருந்தார். ஜான்ஸ்டன் டான் பிராட்மேனின் 1948 சுற்றுப்பயண அணியின் முன்னோடியாக அறியப்பட்டார், இது " தி இன்வின்சிபிள்ஸ் " என்று அழைக்கப்படுகிறது. மேலும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் 100 இழப்புகளை வீழ்த்திய கடைசி ஆஸ்திரேலிய வீரர் ஆவார். இவரது பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக, 1949 ஆம் ஆண்டில் விசுடன் சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக பெயரிடப்பட்டார்.1951-52 ஆம் ஆண்டில் 100 தேர்வுத் துடுப்பாட்ட இழப்புகளை விரைவாக வீழ்த்திய பந்துவீச்சாளர் ஆனார். இவர் 24 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 111 இழப்புகளைக் கைப்பற்றினார். இவரின் பந்துவீச்சு சராசரி 19 க்கும் குறைவாக இருந்தது.இதில் 19 போட்டிகளில் ஆத்திரேலிய துடுப்பாட்ட அணி வென்றது.இதில் 2 போட்டிகளில் மட்டுமே தோல்வி அடைந்தது. ஓய்விற்குப் பிறகு,இவர் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் துறையில் பணியாற்றினார், பின்னர் சொந்தமாக தொழில்களைத் துவங்கினார். இவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர், இவர்களில் ஒருவர் துடுப்பாட்ட நிர்வாகியாக ஆனார். ஜான்ஸ்டன் தனது 85 வயதில் மே 25, 2007 அன்று இறந்தார்.[1]

பில் ஜான்ஸ்டன்
ஜான்ஸ்டன் 1950 இல்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்வில்லியம் அராஸ் ஜான்ஸ்டன்
பிறப்பு(1922-02-26)26 பெப்ரவரி 1922
பியாக், விக்டோரியா, ஆத்திரேலியா
இறப்பு25 மே 2007(2007-05-25) (அகவை 85)
மோஸ்மன், நியூசவுத் வேல்சு, ஆத்திரேலியா
பட்டப்பெயர்பிக் பில்
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைஇடதுகை வழமைச் சுழல்
பங்குSpecialist bowler
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1945–1955விக்டோரியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது முதது
ஆட்டங்கள் 40 142
ஓட்டங்கள் 273 1129
மட்டையாட்ட சராசரி 11.37 12.68
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 29 38
வீசிய பந்துகள் 11048 34576
வீழ்த்தல்கள் 160 554
பந்துவீச்சு சராசரி 23.91 23.35
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
7 29
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 6
சிறந்த பந்துவீச்சு 6/44 8/52
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
16/0 52/0
மூலம்: Cricketarchive.com, 29 பெப்ரவரி 2008

ஆரம்ப ஆண்டுகளில்

தொகு

ஜான்ஸ்டன் சிறுவயதிலிருந்தே துடுப்பாட்டத்தினை விளையாடி வந்தார்.தனது மூத்த சகோதரர் ஆலனுடன் ஆண்டு முழுவதும் தனது தந்தைக்கு சொந்தமான குடும்ப பால் பண்ணையில் ஒரு கொல்லைப்புற ஆடுகளத்தில் விளையாடினார்.ஜான்ஸ்டன் தனது பள்ளி ஆசிரியரின் அழைப்பின் பேரில் தனது சகோதரருடன் சேர்ந்து பன்னிரண்டு வயதிலேயே துடுப்பட்டப் போட்டியில் அறிமுகமானார்.அந்தப் போட்டியில் தனது முதல் இழப்பினைக் கைப்பற்றினார்.கோலாக் உயர்நிலைப் பள்ளியில் சகோதரர்கள் கல்வி பயின்றனர்.அங்கு பில் துடுப்பாட்டம் மற்றும் கால்பந்து அணிகளின் தலைவராகவும் இருந்தார். 1939 ஆம் ஆண்டில் ஜான்ஸ்டன் பதினாறாம் வயதில் பள்ளியை விட்டு வெளியேறினார். பின்னர் இவர் கோலாக்கில் பணிபுரிந்தார். மூன்றாம் லெவன் போட்டியில் ரிச்மண்ட் துடுப்பாட்ட அணிக்காக 16 ஓட்டங்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 6 இழப்புகளைக் கைப்பற்றினார்.பின்னர் இவர் இரண்டாம் லெவன் அணி சார்பாக வினையாடினார். 1939-40 ஆம் ஆ டின் கடைசி ஆட்டத்தில் தனது முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். அடுத்த ஆண்டில், தனது பத்தொன்பதாம் வயதில், குயின்ஸ்லாந்துக்கு எதிரான விக்டோரியாவின் ஷெஃபீல்ட் ஷீல்ட் போட்டிக்காக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார், ஆனால் பேர்ள் ஹார்பர் தாக்குதல்ககளினால் போட்டி ரத்து செய்ய நிர்பந்திக்கப்பட்டன.ஜான்ஸ்டன் தனது சகோதரருடன் ராயல் ஆஸ்திரேலிய விமானப்படையில் சேர்ந்தார், வடக்கு ஆஸ்திரேலியாவில் ரேடார் தொழில்நுட்ப வல்லுநராக நான்கு ஆண்டுகள் பணியாற்றினார். பயிற்சி முகாமில் தான் இவர் முதலில் கீத் மில்லரை சந்தித்தார். அயர்லாந்தில் விமான விபத்தில் இவரது சகோதரர் இறந்தார்.[2]

முதல் வகுப்பு மற்றும் டெஸ்ட் அறிமுக

தொகு

1945-46 ஆம் ஆண்டில் இவர் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் அறிமுகமானார். தனது முதல் போட்டியில் குயீசுலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் விளையாடினார்.

சான்றுகள்

தொகு
  1. "Bill Johnston Obit (photos)". AAP இம் மூலத்தில் இருந்து 14 டிசம்பர் 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191214175343/https://photos.aap.com.au/. பார்த்த நாள்: 4 December 2013. 
  2. "Wisden 1949 – William Johnston". Wisden. 1949. பார்க்கப்பட்ட நாள் 25 May 2007.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பில்_ஜான்சன்&oldid=3986779" இலிருந்து மீள்விக்கப்பட்டது