பிளாட்டினம்(IV) குளோரைடு

வேதிச் சேர்மம்

பிளாட்டினம்(IV) குளோரைடு (Platinum(IV) chloride) என்பது PtCl4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பிளாட்டினமும் குளோரினும் சேர்ந்து உருவாகும் இச்சேர்மத்தில் பிளாட்டினம் +4 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் உள்ளது. பிளாட்டினம்(IV) குளோரைடு பழுப்பு நிறத்தில் திண்மமாகக் காணப்படுகிறது.

பிளாட்டினம்(IV) குளோரைடு
பிளாட்டினம்(IV) குளோரைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பிளாட்டினம் டெட்ராகுளோரைடு
வேறு பெயர்கள்
பிளாட்டினம்(IV) குளோரைடு
இனங்காட்டிகள்
13454-96-1 Y
ChemSpider 19957150
EC number 236-645-1
InChI
  • InChI=1/4ClH.2Pt/h4*1H;;/q;;;;2*+2/p-4
    Key: KBPRWZWTZAMEIF-XBHQNQODAX
யேமல் -3D படிமங்கள் Image

அயன ஒருமம்
Image ஒருங்கிணைப்பு ஒருமம்
Image ஒருங்கிணைப்புப் பலபடி

பப்கெம் 26031
வே.ந.வி.ப எண் TP2275500
  • [Pt+4].[Cl-].[Cl-].[Cl-].[Cl-] அயன ஒருமம்
  • Cl[Pt](Cl)(Cl)Cl ஒருங்கிணைப்பு ஒருமம்
  • Cl[Pt-]1(Cl)(Cl)(Cl)[Cl+][Pt-2]2([Cl+]1)(Cl)(Cl)[Cl+][Pt-2]1([Cl+]2)(Cl)(Cl)[Cl+][Pt-2]2([Cl+]1)(Cl)(Cl)[Cl+][Pt-2]1([Cl+]2)(Cl)(Cl)[Cl+][Pt-2]2([Cl+]1)(Cl)(Cl)[Cl+][Pt-2]1([Cl+]2)(Cl)(Cl)[Cl+][Pt-2]2([Cl+]1)(Cl)(Cl)[Cl+][Pt-2]1([Cl+]2)(Cl)(Cl)[Cl+][Pt-]([Cl+]1)(Cl)(Cl)(Cl)Cl ஒருங்கிணைப்புப் பலபடி
UNII W3YUG71TU2 Y
பண்புகள்
PtCl4
வாய்ப்பாட்டு எடை 336.89 கி/மோல்
தோற்றம் பழுப்பு-சிவப்பு தூள்
அடர்த்தி 4.303 கி/செ.மீ3 (நீரிலி)
2.43 கி/செ.மீ3 (ஐந்து நீரேற்று)
உருகுநிலை 370 °C (698 °F; 643 K) (சிதைவடையும்)
58.7 கி/100 மி.லிட்டர் (நீரிலி)
(ஐந்து நீரேற்று) நன்றாகக் கரையும்
கரைதிறன் நீரிலி
அசிட்டோன் கரைப்பானில் கரையும்
எத்தனாலில் சிறிதளவு கரையும்
டை எத்தில் ஈதரில் கரையாது
ஐந்து நீரேற்று
எத்தனால், டை எத்தில் ஈதர் ஆகியவற்றில் கரையும்
−93.0·10−6 செ.மீ3/மோல்
கட்டமைப்பு
மூலக்கூறு வடிவம்
தீங்குகள்
GHS pictograms The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H290, H301, H314, H317, H334
P234, P260, P261, P264, P270, P272, P280, P285, P301+310, P301+330+331, P302+352, P303+361+353, P304+340, P304+341
Lethal dose or concentration (LD, LC):
276 மி.கி/கி.கி (எலி, வாய்வழி)
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் பிளாட்டினம்(IV) புரோமைடு
பிளாட்டினம் டெட்ராபுளோரைடு
பிளாட்டினம் டைசல்பைடு
ஏனைய நேர் மின்அயனிகள் இரிடியம் டெட்ராகுளோரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

கட்டமைப்பு

தொகு

P(IV) உலோக மையங்கள் ஓர் எண்முக ஒருங்கிணைப்பு வடிவவியலைப் பயன்படுத்துகின்றன, {PtCl6} இந்த வடிவவியலானது பலபடியை உருவாக்குவதன் மூலம் அடையப்படுகிறது. இதில் பாதி குளோரைடு ஈந்தணைவிகள் பிளாட்டினம் மையங்களுக்கு இடையே பாலமாக இருக்கும். இதன் பலபடிக் கட்டமைப்பின் காரணமாக, PtCl4 சேர்மம் குளோரைடு பால ஈந்தணைவிகளை உடைத்தால் மட்டுமே கரைகிறது. எனவே, HCl சேர்மத்தைச் சேர்ப்பது H2PtCl6 சேர்மத்தைக் கொடுக்கிறது. பிளாட்டினம்(IV) குளோரைடின் சிசு-PtCl4L2 வகை இலூயிசு கார கூட்டுசேர் பொருட்கள் அறியப்படுகின்றன. ஆனால் இவை Pt(II) தனிமத்தின் ஆக்சிசனேற்ற வழிப்பெறுதிகளாகவே தயாரிக்கப்படுகின்றன.[2]

 
பிளாட்டினம்(IV) குளோரைடின் படிகக் கட்டமைப்பில் (PtCl4) சங்கிலியின் ஒரு பகுதி

தயாரிப்பு

தொகு

PtCl4 முக்கியமாக குளோரோபிளாட்டினிக் அமிலத்திலிருந்து உருவாக்கப்படுகிறது. இது Pt உலோகத்தை இராச திராவகத்தில் கரைப்பதன் மூலம் பெறப்படுகிறது. H2PtCl6 சேர்மத்தை 220 °செல்சியசு வெப்பநிலை வரை சூடாக்குவதால் தூய்மையற்ற PtCl4 உருவாகும்:[3]

H2PtCl6 → PtCl4 + 2 HCl

250 பாகை செல்சியசு வெப்பநிலையில் குளோரின் வாயுவின் கீழ் சூடாக்குவதன் மூலம் தூய்மையான பிளாட்டினம்(IV) குளோரைடை உருவாக்க முடியும்.[4]

அதிகப்படியான அமிலங்கள் அகற்றப்பட்டால், PtCl4 ஆனது PtCl4·5(H2O) என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட ஐந்து நீரேற்றாக பெரிய சிவப்பு படிகங்களில் உள்ள நீரிய கரைசல்களிலிருந்து படிகமாகிறது.[5] உலர் குளோரின் பாய்ச்சலில் சுமார் 300 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு வெப்பப்படுத்துவதன் மூலம் நீரிழப்பு செய்யப்படுகிறது. ஐந்துநீரேற்று நிலையானது என்பதால் பிளாட்டினம்(IV) குளோரைடின் வணிக வடிவமாகப் பயன்படுத்தப்படுகிறது.

வினைகள்

தொகு

பிளாட்டினம்(IV) குளோரைடை நீரிய காரத்துடன் சேர்த்து சூடுபடுத்தினால் [Pt(OH)6]2− அயனியைக் கொடுக்கிறது. மெத்தில் கிரிக்னார்ட்டு வினையாக்கிகளுடன் சேற்த்து பகுதி நீராற்பகுப்புக்கு உட்படுத்தினால் PtCl4 கனசதுரக் கொத்தாக மாறுகிறது [Pt(CH3)3(OH)]4[6] Upon heating PtCl4 evolves chlorine to give PtCl2:

PtCl4 → PtCl2 + Cl2

பிளாட்டினத்தின் கனமான ஆலைடுகளான பிளாட்டினம்(IV) புரோமைடும் பிளாட்டினம்(IV) அயோடைடும் அறியப்படுகின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. "Platinum tetrachloride". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 27 December 2021.
  2. M. F. Pilbrow (1972). "Crystal structure of platinum tetrachloride" (in en). Journal of the Chemical Society, Chemical Communications (5): 270-271. doi:10.1039/C39720000270. 
  3. A. E. Schweizer; G. T. Kerr (1978). "Thermal decomposition of hexachloroplatinic acid" (in en). Inorganic Chemistry 17 (8): 2326–2327. doi:10.1021/ic50186a067. 
  4. Handbuch der präparativen anorganischen Chemie. 1 (3., umgearb. Aufl ed.). Stuttgart: Enke. 1975. p. 1709. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-432-02328-1.
  5. George Samuel Newth (1920). A text-book of inorganic chemistry. Longmans, Green, and co. p. 694.
  6. Greenwood, N. N.; & Earnshaw, A. (1997). Chemistry of the Elements (2nd Edn.), Oxford:Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7506-3365-4.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளாட்டினம்(IV)_குளோரைடு&oldid=4184953" இலிருந்து மீள்விக்கப்பட்டது