பிஸ்வநாத் சார்யாலி
பிசுவநாத் சார்யாலி (Biswanath Chariali), வடகிழக்கு இந்தியாவில் உள்ள அசாம் மாநிலத்தின் மேல் அசாம் கோட்டத்தில் உள்ள பிசுவநாத் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது கவுகாத்திக்கு வடகிழக்கே 229.2 கிலோ மீட்டர் தொலைவிலும்; தேச்சுபூருக்கு வடகிழக்கில் 62.5 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இந்நகரத்தில் பிரம்மபுத்திரா ஆறு பாய்கிறது
பிசுவநாத் சார்யாலி | |
---|---|
நகரம் | |
அசாம் மாநிலத்தின் பிசுவநாத் சார்யாலி நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 26°43′40″N 93°09′06″E / 26.72778°N 93.15167°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | அசாம் |
மாவட்டம் | பிசுவநாத் மாவட்டம் |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | பிசுவநாத் சார்யாலி நகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 6.02 km2 (2.32 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 19,145 |
• அடர்த்தி | 3,200/km2 (8,200/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | அசாமிய மொழி, ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
தொலைபேசி குறியீடு | +91 - (0) 3 - XX XX XXX |
வாகனப் பதிவு | AS-32 |
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 8 வார்டுகளும், 4,454 வீடுகளும் கொண்ட பிசுவநாத் சார்யாலி நகரத்தின் மக்கள் தொகை 19,145 ஆகும். அதில் ஆண்கள் 9,771 மற்றும் பெண்கள் 9,374 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 959 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 9.69% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 90.88% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 89.37%, இசுலாமியர் 9.41%, பௌத்தர்கள் , சமணர்கள் 0.29%, சீக்கியர்கள் 0.30%, கிறித்தவர்கள் 0.34% மற்றும் பிறர் 0.29% ஆகவுள்ளனர். [1]
மொழிகள்
தொகுஇந்நகரத்தில் அசாமிய மொழி 49.57%, வங்காள மொழி 26.96%, இந்தி மொழி 17.94% மற்றும் பிற மொழிகள் 5.53% மக்களால் பேசப்படுகிறது.
நீர்வழிப் போக்குவரத்து மையம்
தொகுகடல் மாலை திட்டம் மற்றும் பாரத்மாலா திட்டங்களின் பகுதியான பிரம்மபுத்திரா ஆறு தேசிய நீர்வழிச்சாலை எண் 2-இன் மையமாக பிசுவநாத் சார்யாலி நகரம் செயல்படுகிறது.[2] தேசிய நீர்வழிச்சாலை எண் 2, வடகிழக்கு இந்தியாவுடன் தேசிய நீர்வழிச்சாலை எண் 19 இணைக்கிறது.
-
Sivadoul at Biswanath
-
Bhaluk Gosai
போக்குவரத்து
தொகுதேசிய நெடுஞ்சாலை எண் 15 தேச்சுபூர் நகரத்துடன் பிசுவநாத் சார்யாலியை இணைக்கிறது. பிசுவநாத் சார்யாலி தொடருந்து நிலையம்[3]கவுகாத்தி, கொல்கத்தா, சென்னை நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. அருகில் உள்ள வானூர்தி நிலையம் தேச்சுபூரில் உள்ளது.