பீகார் வடக்கு கிராம வங்கி
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
பீகார் வடக்கு கிராம வங்கி (Uttar Bihar Gramin Bank, உத்தர் பீகார் கிராமின் வங்கி) என்பது இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு மண்டல ஊரக வங்கி ஆகும்.[1] இது இந்திய அரசின் நிதி அமைச்சகத்துக்குச் |சொந்தமான வங்கி. கிளை வலையமைப்பு, பணியாளர்கள் எண்ணிக்கை மற்றும் செயல்பாட்டுப் பரப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவிலுள்ள மிகப்பெரிய மண்டல ஊரக வங்கிகளில் இதுவும் ஒன்றாகும்.[2][3]
வகை | மண்டல ஊரக வங்கி |
---|---|
தலைமையகம் | முசாபர்பூர், இந்தியா |
சேவை வழங்கும் பகுதி | அக்ராரியா, தர்பங்கா, கிழக்கு சம்பாரண், கோபால்கஞ்ச், கட்டிஹார், கிசன்கஞ்சு, மாதேபுரம், மதுபனி, முசாபர்பூர், பூர்ணியா, சகார்சா, சரண், சேஹார், சீதாமரி, சீவான், சுபால், மேற்கு சம்பாரண் & வைசாலி. |
உரிமையாளர்கள் | இந்திய அரசு (50%) பீகார் அரசு (15%) இந்திய மத்திய வங்கி (35%) |
தாய் நிறுவனம் | நிதி அமைச்சகம் (இந்தியா) , இந்திய அரசு |
இணையத்தளம் | ubgb |
மண்டல ஊரக வங்கிச் சட்டம், 1976 (21-ன் 1976) 23 ஏ பிரிவின் துணைப் பிரிவு (1)-ன் கீழ் இந்திய நிதி அமைச்சகம் அரசிதழில் 1976ஆம் ஆண்டில் வெளியிட்ட அறிவிப்பின்படி, உத்தர பீகார் க்ஷேத்ரிய கிராமின் வங்கி மற்றும் கோசி க்ஷேத்ரிய கிராமின் வங்கி (பிராந்திய கிராமப்புற வங்கிகளை மாற்றுதல்) ஆகியவற்றை இணைத்து இந்த வங்கியை இந்திய அரசு உருவாக்கியது.[4] இது பீகார் மாநிலத்தில் உள்ள இந்திய மத்திய வங்கியால், இப்பகுதியின் ஒரே மண்டல ஊரக வங்கி என்ற வகையில் நிதிநல்கை செய்யப்படுகிறது.[1][5] உத்தர பீகார் கிராமின் வங்கியின் தலைமையகம் முசாபர்பூரில் செயல்படுகிறது.[6][7]
2023 ஆகத்து திங்களின்படி பீகார் வடக்கு கிராம வங்கியின் தலைவர் சோஹைல் அகமது ஆவார்.[1]
வட்டார அலுவலகம்
தொகுபீகார் வடக்கு கிராம வங்கி 14 வட்டார அலுவலகங்களைக் கொண்டுள்ளது.[8]
- அராரியா, ஏடிபி சௌக், அராரியா.
- பெட்டியா, சந்தை நிலையம்பெட்டியா.
- சப்ரா, தஹியவன், சப்ரா.
- தர்பங்கா, தேவேந்திர லோக், லஹ்ரியாசரை, தர்பங்கா.
- கோபால்கஞ்ச், வைபவ் உணவக வளாகம், கோபால்கஞ்ச்.
- ஹாஜிப்பூர், ஹாஜிபூர்.
- ஜஞ்சர்பூர், கிராந்தி பவன், ஜஞ்சர்பூர், மதுபானி.
- மதுபானி, பரிஷத் பஜார், மதுபானி.
- மோதிஹரி, நாராயண் வளாகம், பாலுவா தால், மோதிஹரி.
- முசாபர்பூர், ராம்ரேகா வளாகம், முசாபர்பூர்.
- பூர்ணியா, ஸ்ரீ நகர் ஹடா, பூர்ணியா.
- சகார்சா, டிபி சாலை, சஹர்சா.
- சீதாமரி, தும்ரா சாலை, சீதாமரி.
- சீவான், ராஜ்வான்சி நகர், சிவன்.
செயல்படும் பகுதிகள்
தொகுபீகார் வடக்கு கிராம வங்கி பீகார் மாநிலத்தில் 18 மாவட்டங்களில் 1032 கிளைகளின் ஒருங்கிணைப்பு மூலம் செயல்படுகிறது.[9][10]
- அராரியா
- தர்பங்கா
- கிழக்கு சம்பாரண்
- கோபால்கஞ்ச்
- கதிஹார்
- கிஷன்கஞ்ச்
- மாதேபுரா
- மதுபானி
- முசாபர்பூர்
- பூர்ணியா
- சஹர்சா
- சரண்
- ஷியோஹர்
- சீதாமர்ஹி
- சீவான்
- சுபால்
- மேற்கு சம்பாரண்
- வைஷாலி
உத்தர பீகார் கிராமின் வங்கியின் இந்திய நிதிசார் முறைமைக் குறியீடு (IFSC):CBIN0R10001 [11]
விருது
தொகுவேளாண்மைக்கும் ஊர்ப்புற வளர்ச்சிக்குமான தேசிய வங்கி ஏற்பாடு செய்த மாநில கடன் கருத்தரங்கில், மண்டல ஊரகப் பிரிவில் சுய உதவிக் குழுக்களை வங்கியுடன் இணைத்த வகையில் சிறந்த செயல்பாட்டிற்காக வங்கிக்கு விருது வழங்கப்பட்டது.[12]
ஆட்சேர்ப்பு
தொகுஒவ்வொரு ஆண்டும் வங்கி பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பொது எழுத்துத் தேர்வு மூலம் வங்கி அதிகாரிகள் நியமனம் செய்யப்படுகின்றனர்.[13]
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "State wise list of Regional Rural Banks" (PDF). பார்க்கப்பட்ட நாள் 19 September 2013.
- ↑ "Central Bank of India and Wipro Sign 5 Year Strategic Partnership". பார்க்கப்பட்ட நாள் 2013-09-19.
- ↑ Dr. N K Thingalaya. "Banking Spread: Gramin Banks versus Other Banks". பார்க்கப்பட்ட நாள் 2013-09-19.
- ↑ "About Us". பார்க்கப்பட்ட நாள் 19 September 2013.
- ↑ "Central Bank of India" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2013-09-19.
- ↑ "Uttar Bihar Gramin Bank Facts: Uttar Bihar Gramin Bank is a Gramin Bank and its Headquarters is situated in Muzzafarpur". பார்க்கப்பட்ட நாள் 19 September 2013.
- ↑ "Uttar Bihar Gramin Bank". பார்க்கப்பட்ட நாள் 19 September 2013.
- ↑ "Regional Offices". பார்க்கப்பட்ட நாள் 19 September 2013.
- ↑ "Financial inclusion plan for 40 banks". Archived from the original on 21 September 2013. பார்க்கப்பட்ட நாள் 2013-09-19.
- ↑ "Central Bank of India and Wipro Sign 5 Year Strategic Partnership". பார்க்கப்பட்ட நாள் 2013-09-19.
- ↑ "Central Bank Of India, Uttar Bihar Gramin Bank Muzaffarpur branch - IFSC, MICR Code, Address, Contact Details, etc". பார்க்கப்பட்ட நாள் 2020-10-02.
- ↑ Vithika Salomi. "Nabard puts Bihar's credit potential in priority sector at Rs 40,829 crore". The Times of India. Archived from the original on 2013-09-21. பார்க்கப்பட்ட நாள் 2013-09-19.
- ↑ "Common Written Examination". பார்க்கப்பட்ட நாள் 2013-09-19.